Results for Technology

விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை...

June 09, 2020


பொது போக்குவரத்தின் போது பயணசீட்டுக்காக பணத்தை செலுத்துவதற்கு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் முறை எதிர்வரும் ஜூலை இறுதி முதல் பாவனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ளது.
பயணச்சீட்டுக்கான பணத்தை பயன்படுத்தும் பொழுது அதில் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதனால் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முற்கொடுப்பனவு ஸ்மார்ட் அட்டையை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்யும்படி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரயில் மற்றும் அரச, தனியார் பேருந்துகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதேவேளை தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பணவொன்றை வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆணைக்குழுவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு

June 09, 2020

தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பில் முதல் முறையாக தொழில்நுட்ப பீடமொன்று ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இந்த தொழில்நுட்ப பீடம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா வைபவத்தில் உயர் கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகதுறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Bachelor of Engineering Technology, Bachelor of Bio-Systems Technology, Bachelor of Information and Communication Technology போன்ற மூன்று திணைக்களங்களை உள்ளடக்கியதாகவும் சுமார் 300 மாணவர்கள் கற்க கூடிய வசதிகளை கொண்டதாகவும்   இந்த பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப பீடம் திறப்பு Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல்

May 31, 2020


02 அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு நேற்று  அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது. 
இது குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது. 
 பாதுகாப்பு அமைச்சு

அ.த.தி.

இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் இரு அரசு இணையதளங்களுக்கு சைபர் தாக்குதல் Reviewed by irumbuthirai on May 31, 2020 Rating: 5

கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல்

April 04, 2020


கொரோனாவுக்காக கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்துஇ பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. 
இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகிள் நிறுவனத்தின் நோக்கமாகும். உலகெங்கிலும் 131 நாடுகளில் பயனர்களின் நகர்வுகள் பற்றிய அறிக்கைகள் பிரத்யேக இணையத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்படும் என கூகிள் நிறவனம் அறிவித்துள்ளது. 
பூங்காக்கள், கடைகள், வீடுகள், வேலைத் தளங்கள் போன்றவற்றுக்கு பயனர்கள் செல்வது குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதை கூகிள் நிறுவனம் பகிரங்கப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல் கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல் Reviewed by irumbuthirai on April 04, 2020 Rating: 5
Powered by Blogger.