கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை

March 21, 2020


கொரோனா தொடர்பில் முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கையை இங்கு தருகிறோம். 
இதில், 

இதுவரையுள்ள நிலைமைகளும் மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளும் தரப்பட்டுள்ளன. 
இதன் முழு செய்தியைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை கொரோனா.... முழு விபரங்களுடன் 21-03-2020 அன்று வெளியான ஊடக அறிக்கை Reviewed by irumbuthirai on March 21, 2020 Rating: 5

18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 19, 2020


18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 18-03-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 19, 2020 Rating: 5

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதமாகலாம்...

March 19, 2020


2019 நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் 28 ஆம் திகதி 

வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதமாகலாம்... சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு தாமதமாகலாம்... Reviewed by irumbuthirai on March 19, 2020 Rating: 5

பரீட்சை ஒத்திவைப்பு

March 19, 2020


நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையின் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து செயற்றிறன் வெட்டுப்புள்ளி பரீட்சைகளும்  பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைகள் நடைபெறும் தினம் 

பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் அமைச்சின் பரீட்சைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஏ.எல்.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
பரீட்சை ஒத்திவைப்பு பரீட்சை ஒத்திவைப்பு Reviewed by irumbuthirai on March 19, 2020 Rating: 5

தபால் மூல வாக்கு விண்ணப்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு

March 17, 2020

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைவாக தபால் மூல வாக்கிற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதித் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனால் எதிர்வரும் தினங்களில் கிடைக்கப்பெறும் தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் இன்றைய தினத்தில் கிடைத்த விண்ணப்பங்களாக கருத்தில் கொண்டு செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)
தபால் மூல வாக்கு விண்ணப்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு தபால் மூல வாக்கு விண்ணப்பம் தொடர்பில் விசேட அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 17, 2020 Rating: 5

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது

March 15, 2020


கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மேற்கொள்வோருக்கும் உடன் தண்டனை வழங்கப்படும். இது தொடர்பாக ஏற்கனவே 23 பேர் கைது செய்யப்பட்டுள்னனர் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
(அ.த.தி)

கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது கொரோனா வைரஸ் தொடர்பில் 23 பேர் கைது Reviewed by irumbuthirai on March 15, 2020 Rating: 5

கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா?

March 15, 2020


கொரோனா வைரஸ் தொற்று கொண்ட அல்லது அந்த விடயம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள ஒரு நபர் தனது நோய் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறானோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டால் 

ஆறு மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும். இவர்கள் எதுவித பிடிவிறாந்தும் இல்லாமல் நேரடியாக கைது செய்யப்படுவர்கள் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
(அ.த.தி)
கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா? கொரோனா வைரஸ் தகவல்களை மறைத்தால் என்ன தண்டனை தெரியுமா? Reviewed by irumbuthirai on March 15, 2020 Rating: 5
Powered by Blogger.