சாதாரண குடும்பத்தின் மாதாந்த செலவு: பல்கலைக்கழக ஆய்வில் வெளியான தகவல்!
Irumbu Thirai News
August 27, 2022
இலங்கையில் தற்போதைய நிலையின் படி சாதாரண குடும்பம் ஒன்றுக்கான மாதாந்த செலவு தொடர்பிலான ஆய்வொன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்த நுகர்வுக்கான செலவு 110,000/- ரூபவாக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
2019 இல் இந்தத் தொகை 63 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது. எனினும் தற்போது 47 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
நாட்டில் பணவீக்கம் அதிகரித்த மையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண குடும்பத்தின் மாதாந்த செலவு: பல்கலைக்கழக ஆய்வில் வெளியான தகவல்!
Reviewed by Irumbu Thirai News
on
August 27, 2022
Rating: