பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு..

January 04, 2020


போதிய கல்வி, பயிற்சியற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் 3 தொடக்கம் 5 வயதிற்குட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்ற கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளதையடுத்து அது தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு...

  மாணவர்களின் ஆரம்ப பராயத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஆரம்ப பாடசாலையின் மூலம் உயர்வான பங்களிப்பை வழங்க முடியும் என்பது அடையளம் காணப்பட்டுள்ளது. இதேபோன்று சில ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் ஃ மகளிர் தொழில் ரீதியிலான திறமை அல்லது போதுமான கல்வி தகுதியை கொண்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பயிற்சி அற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் 3 தொடக்கம் 5 வயதிற்குட்ட மாணவர்களின் வளர்ச்சிக்கு பொருத்தமற்ற கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு புத்திஜீவிகள், அதிகாரிகள் மற்றும் ஆர்வங்கொண்டுள்ள தரப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்ட பின்னர் முறையாக முன்னெடுக்கப்படவுள்ள ஆரம்ப பாடசாலை கல்வி தொடர்பான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(அ.த.தி.)
பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு.. பொருத்தமற்ற முன்பள்ளி ஆசிரியைகள்: அரசின் நிலைப்பாடு.. Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

2020 இல் நீண்ட வாராந்த விடுமுறைகள்...

January 04, 2020

2020 வருடமானது இலங்கை நாட்டில் நீண்ட வராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக உள்ளது.  2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன. இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை தினங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி.)
2020 இல் நீண்ட வாராந்த விடுமுறைகள்... 2020 இல் நீண்ட வாராந்த விடுமுறைகள்... Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

மகிழ்ச்சி...பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சரில் ஏற்படும் மாற்றங்கள்

January 04, 2020


மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகை 525 ரூபாவில் இருந்து 

735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்ட வவுச்சர்களின் பின் புறத்தில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. அரசியல் வாதிகளின் புகைப்படங்களுக்கு பதிலாக மாணவர்களின் புகைப்படங்களை உள்ளவாங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
(அ.த.தி.)
மகிழ்ச்சி...பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சரில் ஏற்படும் மாற்றங்கள் மகிழ்ச்சி...பாடசாலை மாணவர்களின் சீருடை வவுச்சரில் ஏற்படும் மாற்றங்கள் Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

தகுதியற்றவர்களினால் மேற்கொள்ளப்படும் மேலதிக வகுப்புக்கள் பற்றி...

January 04, 2020

தகுதியற்றவர்களினால் நடத்தப்பட்டு வரும் மேலதிக வகுப்புக்கள் (Tution class) தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் நாட்டில் மாணவர்களின் கல்விக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள் மூலம் 5 பில்லியன் 

ரூபா பணப் பரிமாற்றம் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர் இது தொடர்பில் அரசாங்கம் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுவதை ஒழுங்குறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்று சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன... 
நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் முறையான கல்வி வசதியினை ஏற்படுத்துவதற்காக உயர் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் நானும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன் மூலம் தகுதி குறைவான சிலரினால் நடத்தப்பட்டு வரும் மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
சகல மாணவர்களுக்கும் முறையான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் 1000 மும்மொழி தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன. பிரதேசங்கள் தோறும் அமைக்கப்படும் இவ்வாறான பாடசாலைகள் மூலம் முறையான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
(அ.த.தி)
தகுதியற்றவர்களினால் மேற்கொள்ளப்படும் மேலதிக வகுப்புக்கள் பற்றி... தகுதியற்றவர்களினால் மேற்கொள்ளப்படும் மேலதிக வகுப்புக்கள் பற்றி... Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

27-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 04, 2020

27-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதில், 

பதிவாளர் நாயக திணைக்கள வெற்றிடங்கள், 
காதி சபைக்கான உறுப்பினர்கள் தெரிவு, 
கடற்படை வெற்றிடங்கள் உள்ளிட்ட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

27-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 27-12-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தால் 2020 ஜனவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள்

January 04, 2020

பரீட்சைத் திணைக்களத்தால் 2020 ஜனவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் தொடர்பான விபரங்களை இங்கு தருகிறோம்.
இதில்,


Open Competitive Examination for Recruitment to Court Clerk Grade III of Court Management Assistants’ 
Second Efficiency Bar Examination of Development Officers’ Service 
Open Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Administrative Service 
உட்பட பல பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன.
இதன் முழு விபரங்களை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Exams in January
பரீட்சைத் திணைக்களத்தால் 2020 ஜனவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தால் 2020 ஜனவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் Reviewed by irumbuthirai on January 04, 2020 Rating: 5

2020.01.02 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

January 03, 2020


2020.01.02 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 

ஆரம்ப பாடசாலை கல்வி தொடர்பான தேசிய கொள்கை, 
அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக வழங்கப்படும் வட்டியின்றிய கடனை விரிவுபடுத்தல், 
குடிநீரின் தரத்தை பரிசோதித்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் வேலைத்திட்டம், 
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச மற்றும் அரச சார்பு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குதல். 
போன்ற பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

2020.01.02 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 2020.01.02 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 03, 2020 Rating: 5

தரம்-5-புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள்

January 02, 2020


தரம்-5-புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்களை இங்கு தருகிறோம்.
பகுதி 1 & 11 வினாத்தாள்கள் மற்றும் புள்ளி வழங்கும் திட்டம் என்பன தரப்பட்டுள்ளன. 
குறித்த வினாத்தாள்களைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம்-5-புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் தரம்-5-புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் Reviewed by irumbuthirai on January 02, 2020 Rating: 5

பல்கலைக்கழக கல்லூரியாக மாறும் அச்சுத் திணைக்களம்...

January 01, 2020


பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத்தொடரமுடியாத மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டில் 100 பல்கலைக்கழக கல்லுரிகள் University College அமைக்கப்படும் என்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன.தெரிவித்தார். இதற்கமைவாக அரசாங்௧ அச்சுத் திணைக்௧ளம் பல்கலைக்கழக கல்லுரியாக மாற்றியமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதற்குத்தேவையான வளங்கள் அங்கிருப்பதினால் இதற்கான பணியை அரசாங்கத்தின் 100 நாள்


வேலைத்திட்டத்தில் பூர்த்திச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர் எண்ணிக்கையை 25 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் இரண்டு குழுக்களாக மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர் கடந்த வருடம் தகுதிபெற்றிருந்தும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படாதவர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)

பல்கலைக்கழக கல்லூரியாக மாறும் அச்சுத் திணைக்களம்... பல்கலைக்கழக கல்லூரியாக மாறும் அச்சுத் திணைக்களம்... Reviewed by irumbuthirai on January 01, 2020 Rating: 5

தரம் 04 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது...

December 31, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சொற்களுக்கான விளக்கங்கள் படங்கள் மூலமும் Animation முறையிலும் காட்டப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... தரம் 04 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... Reviewed by irumbuthirai on December 31, 2019 Rating: 5

தரம் 04 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

December 31, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக பயிற்சிகளை செய்யவும் அவற்றை தாமே சரி பிழை பார்க்கவும் முடியும்.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 04 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 31, 2019 Rating: 5

தரம் 04 (கணிதம்): இலகு முறையில்...

December 30, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும்  முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (கணிதம்): இலகு முறையில்... தரம் 04 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 30, 2019 Rating: 5

தரம் 04 (தமிழ் மொழி): இலகு முறையில்...

December 29, 2019


தரம் 04 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சிகளை செய்து தாமே சரி பிழை பார்த்துக்கொள்ளலாம்.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 04 (தமிழ் மொழி): இலகு முறையில்... தரம் 04 (தமிழ் மொழி): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5

2019 உயர்தர பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்கள் ஒரே பார்வையில்...

December 29, 2019


2019 நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம்..



புதிய பாடத்திட்டத்தின் படி தோற்றியோர் - 187167.
பழைய பாடத்திட்டத்தின் படி தோற்றியோர் -
94619.
புதிய பாடத்திட்டத்தின் படி பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் -
113637.
பழைய பாடத்திட்டத்தின் படி பல்கலைக்கழக அனுமதி பெறுவோர் -
67489.
புதிய பாடத்திட்டத்தின் படி தோற்றி பெறுபேறு இடைநிறுத்தப்பட்டோர் -
42.
பழைய பாடத்திட்டத்தின் படி தோற்றி பெறுபேறு இடைநிறுத்தப்பட்டோர் -
29.
உள்நாட்டு, வெளிநாட்டு உயர் கல்விக்காக பெறுபேற்று சான்றிதழை பெற தேவைப்படுவோர் 2019.12.30 இலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டிய இ. திகதி:


17.01.2020.
இது தொடர்பான இன்னும் பல தகவல்களை அறிய பரீட்சை திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்வையிடுக.




2019 உயர்தர பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்கள் ஒரே பார்வையில்... 2019 உயர்தர பெறுபேறு தொடர்பான முக்கிய தகவல்கள் ஒரே பார்வையில்... Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5

புதிய நியமனம் தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு

December 29, 2019


சுகாதாரத்துறையின் அவசியத்திற்கு அமைவாக வருடாந்தம் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் புதிய நியமனங்களை வழங்கும்போது, நியமனம் பெறுபவர்களின் 

உளவியல் நிலையில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 (அ.த.தி.)
புதிய நியமனம் தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு புதிய நியமனம் தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5

ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம்

December 29, 2019


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக  தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 
பெறுபேறுகள் வெளியாகி, 

ஒரு வருடகாலம் வரை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த முறையை மறுசீரமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் கூறினார். அடுத்த வருடத்திலிருந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்தாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம் ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம் Reviewed by irumbuthirai on December 29, 2019 Rating: 5
Powered by Blogger.