நான்கு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை பெற்ற வருமானம்...

April 17, 2021

புத்தாண்டு காலப்பகுதியான கடந்த நான்கு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 13 கோடி 50 இலட்சத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது. 
 குறித்த காலப்பகுதியில் ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றன. எதிர்வரும் சில தினங்களிலும் 
அதிகளவான வருமானம் கிடைக்கும் என்றும் அதிவேக நெடுஞ்சாலை வழிநடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது. 
 கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகளவான வாகனங்கள் பயணித்திருக்கின்றன.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
நான்கு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை பெற்ற வருமானம்... நான்கு நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை பெற்ற வருமானம்... Reviewed by irumbuthirai on April 17, 2021 Rating: 5

நடிகர் விவேக் காலமானார்!

April 17, 2021

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (16) காலை சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (17) அதிகாலை 4.35 மணியளவில் உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 59. 
 • 1961ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தார். 
 • 1987ல் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 
 • தலைமைச் செயலக ஊழியராகவும் 1986-92 வரை பணியாற்றியுள்ளார். 
 • கதாநாயகனாக வெள்ளைப்பூக்கள், நான்தான் பாலா போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 • நகைச்சுவையுடன் இணைத்து சமூகக் கருத்துக்களையும் சொல்லி சின்ன கலைவானர் என்ற பெயரையும் பெற்றார். 
 • 2009 ல் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார். 
 • சிறந்த நகைச்சுவை நடிகருக்காக மாநில அரசின் விருதை 5 தடவை பெற்றவர். 

 • இதுவரை 220-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 • இறுதியாக 2020ல் தாராளப் பிரபு என்ற படத்தில் நடித்திருந்தார். 
 • இந்தியன் -2 திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார். 
 • மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தார். 
 • கொரோனா பாதுகாப்பு, பிளாஸ்டிக் இல்லா தமிழகம் போன்ற விழிப்புணர்வு குறும் படங்களிலும் நடித்து சமூகப் பணியாற்றினார். 
மக்களுக்கு விழிப்புணர்வை வழங்குவதற்காக மாரடைப்பு வருவதற்கு முன்னையநாள் தானே முன்வந்து கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
சிறந்த ஒரு கலைஞரை சமூக சேவகரை திரையுலகம் இழந்து நிற்கிறது.
நடிகர் விவேக் காலமானார்! நடிகர் விவேக் காலமானார்! Reviewed by irumbuthirai on April 17, 2021 Rating: 5

தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்....

April 17, 2021

சர்வாதிகாரி போல செயற்படுவாரென எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர். அவர் ஹிட்லர் போல செயற்பட்டால் 
யாரும் குறைகூறமாட்டார்கள். ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செயற்பட விரும்பவில்லை. தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் தெரிவித்திருந்தார். 
இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில் கருத்தொன்றை பதிவிட்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட், 
"ஹிட்லர் ஒருவர் இருந்தால் அது இலங்கைக்கு நன்மைபயக்கும் விடயம் என தெரிவிக்கப்படுவதை அறிந்தேன். இவ்வாறான கருத்தை தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன் – மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும் காரணமானவர் ஹிட்லர். எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் நிச்சயமாக முன்மாதிரியில்லை" என அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்.... தேவைப்பட்டால் கோத்தாபய ஹிட்லராக மாறுவார்... அமைச்சரின் கூற்றுக்கு ஜேர்மன் தூதுவரின் பதில்.... Reviewed by irumbuthirai on April 17, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)

April 16, 2021

Vacancies in the Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) 
Closing date: 30-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Reviewed by irumbuthirai on April 16, 2021 Rating: 5

Vacancies: Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRC)

April 16, 2021

Vacancies: Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRC) 
Closing date: 30-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRC) Vacancies: Telecommunications Regulatory Commission of Sri Lanka (TRC) Reviewed by irumbuthirai on April 16, 2021 Rating: 5

Vacancy in the MAG (Brirish NGO)

April 15, 2021

Vacancy in the Mines Advisory Group (MAG). It is a British NGO. 
Post: Community Liaison Officer  
Deadline: 19-04-2021 04:00PM. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy in the MAG (Brirish NGO) Vacancy in the MAG (Brirish NGO) Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஆமை இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு!

April 15, 2021

சிவப்பு நிற மார்பை கொண்டுள்ள ஆமை இனம் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இந்த ஆமை இனம் அமெரிக்காவிலிருந்து மீன் இறக்குமதியாளர்களால் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த ஆமை இனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் 
உலகின் பல நாடுகள் இதைத் தடை செய்துள்ளன. இந்த ஆமை இனம் நாட்டில் உள்ள பூர்வீக தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்துமென விலங்கு ஆராய்ச்சி அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். 
குறித்த ஆமை இனம் நாட்டினுள் மேலும் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வாளரான கலாநிதி என்சலம்டி சில்வா, வன விலங்கு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஆமை இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு! பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள ஆமை இனம் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

10 பேரை பலியெடுத்த புத்தாண்டு!

April 15, 2021

புத்தாண்டு தினத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் மட்டும் 12 வாகன விபத்துக்கள் உட்பட 121 விபத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் 10 பேர் உயிரிழந்து 74 பேர் காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
10 பேரை பலியெடுத்த புத்தாண்டு! 10 பேரை பலியெடுத்த புத்தாண்டு! Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

சரத் வீரசேகரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு!

April 15, 2021

அடிப்படைவாதங்களுக்கு துணைபோகும் மேலும் பல அமைப்புக்கள் மற்றும் நபர்கள் இருப்பதாகவும் அவையும் விரைவில் தடைசெய்யப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். 
இதேவேளை தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசுவோர், பணம் சேகரிப்போர் 
மற்றும் தீவிரவாதத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்போருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்களைக் கொண்டுவரும் யோசனை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சரத் வீரசேகரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு! சரத் வீரசேகரவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

பாக்குநீரிணையைக் கடந்து சாதனை படைத்த விமானப்படை வீரருக்கு கிடைத்த கௌரவம்...

April 15, 2021

இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான ரொஷான் அபேசுந்தர, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தார். 
தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை நீந்தி மீண்டும் தலைமன்னாரை வந்தடைந்தார். 
 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களை 
இதற்காக எடுத்துக் கொண்டதன் மூலம், புதிய ஆசிய சாதனையையும் இவர் நிலைநாட்டினார். 
எனவே இந்த சாதனையை பாராட்டும் வகையில், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவினால், சிரேஷ்ட விமானப்படை வீரரான ரொஷான் அபேசுந்தர கோப்ரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார். 
 இதுதொடர்பான இந்நிகழ்வு இன்றைய தினம் (15) இலங்கை விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
பாக்குநீரிணையைக் கடந்து சாதனை படைத்த விமானப்படை வீரருக்கு கிடைத்த கௌரவம்... பாக்குநீரிணையைக் கடந்து சாதனை படைத்த விமானப்படை வீரருக்கு கிடைத்த கௌரவம்... Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

அடுத்த வருடம் முதல் 3 தவணைகளிலும் பாடப் புத்தகங்கள்

April 15, 2021

2022 முதல் பாடசாலை மாணவர்களுக்கு 03 தவணைகளிலும் பாட நூல்களை வழங்குவதற்கு கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். 
புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் 3 தவணைகளிலும் பாடப் புத்தகங்கள் அடுத்த வருடம் முதல் 3 தவணைகளிலும் பாடப் புத்தகங்கள் Reviewed by irumbuthirai on April 15, 2021 Rating: 5

தடையாகும் 11 இஸ்லாமிய அமைப்புகளும் தடைக்கான நிபந்தனைகளும்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி: (வர்த்தமானி இணைப்பு)

April 14, 2021


11 இஸ்லாமிய அமைப்புக்களை இலங்கையில் தடை செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (13.04.2021) வெளியிடப்பட்டுள்ளது. 
குறித்த அதிவிஷேட வர்த்தமானியை கீழே காணலாம்.
தடையாகும் 11 இஸ்லாமிய அமைப்புகளும் தடைக்கான நிபந்தனைகளும்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி: (வர்த்தமானி இணைப்பு) தடையாகும் 11 இஸ்லாமிய அமைப்புகளும் தடைக்கான நிபந்தனைகளும்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி: (வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on April 14, 2021 Rating: 5

Vacancy: Sri Jayewerdenapura General Hospital

April 14, 2021

Vacancy: Sri Jayewerdenapura General Hospital. 
Post of Electrician. 
Closing date: 27-04-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancy: Sri Jayewerdenapura General Hospital Vacancy: Sri Jayewerdenapura General Hospital Reviewed by irumbuthirai on April 14, 2021 Rating: 5

Vacancies: Ministry of Agriculture (Smallholder Agribusiness Partnerships Programme)

April 14, 2021

Vacancies: Ministry of Agriculture (Smallholder Agribusiness Partnerships Programme) 
Posts:          MIS (ICT) Officer 
                     Programme Secretary 
Closing date: 14 days from 11-04-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: Ministry of Agriculture (Smallholder Agribusiness Partnerships Programme) Vacancies: Ministry of Agriculture (Smallholder Agribusiness Partnerships Programme) Reviewed by irumbuthirai on April 14, 2021 Rating: 5

Vacancy: Sri Lankan Airlines

April 14, 2021

Vacancy in the Sri Lankan Airlines. 
Post: Chief Commercial Officer. 
Closing date: 21-04-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancy: Sri Lankan Airlines Vacancy: Sri Lankan Airlines Reviewed by irumbuthirai on April 14, 2021 Rating: 5

Vacancies : Ministry of Urban Development and Housing

April 13, 2021

Vacancies : Ministry of Urban Development and Housing. 
Following posts: 
 • Deputy Project Director (Technical) 
 • Senior System Analysist 
 • Project Accountant 
 • Senior Quantity Surveyor. 
 • Assistant Socialogist. 
Closing date: 19-04-2021. 
See the details below.
Source : Sunday Observer.


Vacancies : Ministry of Urban Development and Housing Vacancies : Ministry of Urban Development and Housing Reviewed by irumbuthirai on April 13, 2021 Rating: 5

கஞ்சி விநியோகம் இல்லை... 18 வயதிற்கு குறைந்தோர் பள்ளிவாயல் செல்லமுடியாது... வெளியானது சுகாதார அமைச்சின் புதிய சுற்றறிக்கை:

April 13, 2021

நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை இன்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 
அதில்,
கஞ்சி வினியோகம் இல்லை. 
18 வயதிற்கு குறைந்தோர் பள்ளிவாயில் செல்ல முடியாது. 
பள்ளிவாயலுக்கு வருவோரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். போன்ற விடயங்களில் உள்ளடங்கலாக 30 விதிமுறைகளை சுகாதார அமைச்சு அந்த சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளது. 
குறித்த சுற்று நிருபத்தை கீழே தருகிறோம்.
கஞ்சி விநியோகம் இல்லை... 18 வயதிற்கு குறைந்தோர் பள்ளிவாயல் செல்லமுடியாது... வெளியானது சுகாதார அமைச்சின் புதிய சுற்றறிக்கை: கஞ்சி விநியோகம் இல்லை... 18 வயதிற்கு குறைந்தோர் பள்ளிவாயல் செல்லமுடியாது... வெளியானது சுகாதார அமைச்சின் புதிய சுற்றறிக்கை: Reviewed by irumbuthirai on April 13, 2021 Rating: 5

Vacancies: Uva-Wellassa University

April 12, 2021

Academic Vacancies: Uva-Wellassa University. 
Closing date: 10-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Uva-Wellassa University Vacancies: Uva-Wellassa University Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

சீனாவின் தடுப்பூசிகள் சிறப்பாக இல்லை: முதன்முதலாக ஒப்புக்கொண்டது சீனா:

April 12, 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாகவும் அதிக பாதுகாப்பை வழங்கவில்லை எனவும் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் காவ் ஃபூ தெரிவித்துள்ளார். 
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இதுவரை சீனா 04 கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அதை 
பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த தடுப்பூசிகளை வெளிநாட்டில் பரிசோதனை செய்த போது, சில பரிசோதனைகளில் அதன் செயல் திறன் 50% வரை குறைவாக உள்ளது தெரியவந்தது. 
இதேவேளை கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பல தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்த சீனா ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். 
இத்தனை விவரங்களைக் கூறிய பிறகு, தான் கூறிய கருத்துகளிலிருந்து பின்வாங்கிய காவ் ஃபூ, "உலகம் பூராகவும் தடுப்பூசிகளின் செயல்திறன் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் இருந்திருக்கின்றன" என்று அரச ஊடகத்திற்கு செவ்வி வழங்கியுள்ளார். தான் கூறிய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார். 
சீனாவின் தடுப்பூசிகளில் ஒன்றான சினோவேக் ஐ பிரேசிலில் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதன் செயல்திறன் 50.4% ஆகவே காட்டியது. 
இதேவேளை இலங்கையும் கொரோனா தடுப்பூசிகளை சீனாவிலிருந்து பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தடுப்பூசிகள் சிறப்பாக இல்லை: முதன்முதலாக ஒப்புக்கொண்டது சீனா: சீனாவின் தடுப்பூசிகள் சிறப்பாக இல்லை: முதன்முதலாக ஒப்புக்கொண்டது சீனா: Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

ரயில் பயணிகளுக்காக அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம்

April 12, 2021

ரயில் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவும் ரயில் பயணிகளின் அவசர சந்தர்ப்பங்களின் போதும் பயன்படுத்த 1971 என்ற அவசர தொலைப்பேசி இலக்கம் ரயில்வே திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
இதுமாத்திரமன்றி ரயில்வே திணைக்களத்துடன் தொடர்புடைய சகலவித முறைப்பாடுகளுக்கும் 
இந்த தொலைப்பேசி இலக்கத்தை பயன்படுத்தலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்காக அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம் ரயில் பயணிகளுக்காக அறிமுகமான அவசர தொலைபேசி இலக்கம் Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம்

April 12, 2021

நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார். 
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் சுதந்திர கட்சி எடுத்த முக்கிய தீர்மானம் Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS): இணைப்பு மொழி (ஆங்கிலம் ) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு:

April 12, 2021

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (Sri Lanka Education Administrative Service - SLEAS) 111ம் தரத்திற்குரிய இணைப்பு மொழிப் (ஆங்கிலம்) பரீட்சைக்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேற்படிப்பு பரீட்சையானது எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS): இணைப்பு மொழி (ஆங்கிலம் ) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS): இணைப்பு மொழி (ஆங்கிலம் ) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) போட்டிப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

April 12, 2021

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) 111 ம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குரிய திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
மேற்படி பரீட்சை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை 09 மாகாணங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) போட்டிப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் (SLTES) போட்டிப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 12, 2021 Rating: 5

எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா?

April 11, 2021

அதிகமாக ஸ்மார்ட் போன்களை பாவிப்பது பல்வேறு நீண்ட நாள் நோய்களுக்கு வழிவகுக்கும் என குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய், ஆண்மை குறைவு ஏற்படுத்தல், மூளை தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய், குழந்தைகளில் கவனம் குறைதல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். எனவே இதை முறையாக அளவோடு பாவிக்க பழகிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு:

April 11, 2021

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இந்த பரீட்சையை கொழும்பில் நடாத்த பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

April 11, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
Examinations calendar for the month of May, 2021. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 மே மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

GRADUATES TEACHING APPOINTMENTS IN THE WESTERN PROVINCE - 2021/2022. (பட்டதாரி ஆசிரியர் நியமனம் - 2021/22)

April 11, 2021

OPEN COMPETITIVE EXAMINATION FOR THE RECRUITMENT OF GRADUATES FOR GRADE 1 (A ) OF CLASS 3 VACANCIES OF THE SRI LANKA TEACHERS’ SERVICE IN PROVINCIAL COUNCIL SCHOOLS IN THE WESTERN PROVINCE - 2021/2022 
Age: 18-40. 
Closing date of online applying - 10.05.2021 
Medium: Tamil, Sinhala and English. 
Online application: http://www.psc.wp.gov.lk/ 
Click the link below for more details.
GRADUATES TEACHING APPOINTMENTS IN THE WESTERN PROVINCE - 2021/2022. (பட்டதாரி ஆசிரியர் நியமனம் - 2021/22) GRADUATES TEACHING APPOINTMENTS IN THE WESTERN PROVINCE - 2021/2022. (பட்டதாரி ஆசிரியர் நியமனம் - 2021/22) Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020)

April 11, 2021

Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020) 
Circular Number: 07/2021. 
Circular Date: 2021-04-09. 
Application closing date: 2021-05-10. 

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை - 2019 (2020) 
சுற்றறிக்கையை தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020) Competitive Examination for Promotion to the Supra Grade of Management Services Officers’ Service on Merit - 2019 (2020) Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5
Powered by Blogger.