Implementation of One day and normal services for issuing results
Irumbu Thirai News
November 27, 2022
பரீட்சை சான்றிதழ்களை விநியோகிக்கும் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விபரங்களை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2001 அல்லது அதற்குப் பின்னரான பரீட்சை சான்றிதழ்களை பெற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்னைய வருடங்களின் பரீட்சை சான்றிதழ்களை பெற நேரடியாக சமூகமளிக்க வேண்டும்.
2022-11-22 ற்கு பின்னர் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறான விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.
பரீட்சை சான்றிதழ்கள் உரியவரிடமே கையளிக்கப்படும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்படும்.
பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் பாடசாலைகள் பரீட்சைகள் கிளையை நாட வேண்டும்.
ஆஸ்திரேலியா விசா பெற்றுக் கொள்வதற்கான சான்றிதழ்களை விநியோகிக்கும் போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பான முழுமையான விபரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Others:
Implementation of One day and normal services for issuing results
Reviewed by Irumbu Thirai News
on
November 27, 2022
Rating: