புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் மாற்றம்...

December 28, 2019


புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு இதுவரையில் மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதில் நிலவிய பிரச்சினைகள் மற்றும் தாமதங்களைக் கருத்திற்கொண்டு,  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கான


புலமைப்பரிசில் நிதி 'ஒன்லைன்' மூலமாகச் செலுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனஞ் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, அடுத்த மாதம் தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும், பிரிவெனாக்களுக்கும், தனியார் மற்றும் அரச நிதியைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலைகளுக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான இந்நிதி இம்முறையின் கீழ் வழங்கப்படவுள்ளது. 
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான நிதியைச் செலுத்துவதை, செயற்றிறன்மிக்கதாக முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தற்போது நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக, இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நிதியைப் பெற்றுக் கொள்ள தகுதியான மாணவர்களின் தகவல்கள் அடங்கிய கட்டமைப்பொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி இம் மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் புதிய முறை மூலம் வைப்பீடுகள் மேற்கொள்ளப்படும். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒவ்வொரு வருடமும்


3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களுள் குறைந்த வருமானத்தைக் கொண்ட 20 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. மாதாந்தம் 750 ரூபா புலமைப்பரிசில் நிதியாக வழங்கப்படுகிறது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 90 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் மாற்றம்... புலமைப்பரிசில் நிதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் மாற்றம்... Reviewed by irumbuthirai on December 28, 2019 Rating: 5

வெளியானது உயர் தர பரீட்சை பெறுபேறு: பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது...

December 27, 2019
2019 நடைபெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகளை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பெற்றுக்கொள்க.
Results
வெளியானது உயர் தர பரீட்சை பெறுபேறு: பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... வெளியானது உயர் தர பரீட்சை பெறுபேறு: பார்வையிடுவதற்கான லிங்க் இணைக்கப்பட்டுள்ளது... Reviewed by irumbuthirai on December 27, 2019 Rating: 5

தரம் 05 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது...

December 27, 2019


தரம் 05 பாடத்திட்டத்தின்படி ஆங்கிலம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சொற்களுக்கான விளக்கங்கள் படங்கள் மூலமும் Animation முறையிலும் காட்டப்பட்டுள்ளது.
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 05 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... தரம் 05 (ஆங்கிலம்): இலகு முறையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது... Reviewed by irumbuthirai on December 27, 2019 Rating: 5

Master of Science in Structural Engineering @ Open University of Sri Lanka

December 26, 2019


The ‘Master of Science in Structural Engineering’ programme provides an innovative approach to manage complex problems with an integrated perspective. The proposed curriculum hopes to train Civil Engineers to apply their technical understanding of systems in engineering, design, and implementation to develop strategies to make economical, healthy, and sustainable environments. 
Closing Date for Applications: 

31st December 2019
Click the link below for more details:

M. Sc in struc....
Master of Science in Structural Engineering @ Open University of Sri Lanka Master of Science in Structural Engineering @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 26, 2019 Rating: 5

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்...

December 26, 2019


2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் தரம் 5 பாடசாலைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளைப் போன்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய ஒவ்வொரு மாணவருக்கும் உரித்தாகவுள்ள பாடசாலை ஆவணம் கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக 

கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk இணையத்தளத்தின் ஊடாக இந்த விபரங்கைளை அறிந்து கொள்ளமுடியும். இந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்றிருந்த போதிலும் அதற்கு அமைவாக கிடைக்க வேண்டிய பாடசாலை கிடைக்கப்பெறாத அல்லது கிடைத்துள்ள பாடசாலையை நியாயமான காரணத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ள தேவை உள்ள மாணவர்களுக்கு 

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும். இதற்கு அமைவாக சரியாக பூர்த்தி செய்யப்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்ப படிவத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். இதற்கான முகவரி கல்வி பணிப்பாளர், பாடசாலை அலுவல்கள் கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(அ.த.தி)
புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்... புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on December 26, 2019 Rating: 5

2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்...

December 25, 2019


2019 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் 

ஈடுபடவுள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது. அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.
(அ.த.தி)
2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்... 2019 சா. தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள்... Reviewed by irumbuthirai on December 25, 2019 Rating: 5

2019 உயர்தர பரீட்சை பெறுபேறு...

December 25, 2019


2019 ஆம்ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
(அ.த.தி)
2019 உயர்தர பரீட்சை பெறுபேறு... 2019 உயர்தர பரீட்சை பெறுபேறு... Reviewed by irumbuthirai on December 25, 2019 Rating: 5

தரம் 05 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

December 24, 2019


தரம் 05 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Environmental st...

தரம் 05 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 05 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்):  இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 24, 2019 Rating: 5

20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

December 23, 2019


20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதில், 

அரச வேலைவாய்ப்பு, 
தொழில்நுட்ப கல்லூரி பாடநெறிகளுக்கான விண்ணப்பம் 
உட்பட ஏனைய தகவல்களும் அடங்கியுள்ள. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 20.12.2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on December 23, 2019 Rating: 5

சா.தரம் சித்தியடையாதோர் உட்பட 1 இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு

December 23, 2019


100,000  தொழில் வாய்ப்பு  வறிய குடும்பங்களைச் சேர்ந்த  இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலை நோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் கீழ் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்த தவறிய 15 தொடக்கம்


30 வயதிற்கும் இடைப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவைப் பெறும் இளைஞர் யுவதிகள் தொழிலில் அமர்த்தப்பட்டவுள்ளனர். இவர்கள் 30 ஆயிரத்திற்கும் 35 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட சம்பளத்துடன் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதுடன், நிரந்தர சேவையில் அமர்த்தப்படுவார்கள்.
இவர்கள் ஓய்வூதிய கொடுப்பனவைக் கொண்டிருக்க மாட்டார்கள், ஆயினும் ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட தொழில் ரீதியிலான உரிமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இவர்களுக்கு தனியார் மற்றும் அரசாங்க துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகளின் பின்னர் டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சிவில் பாதுகாப்பு படை போன்ற துறைகளில் தொழிலில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
(அ.த.தி)
சா.தரம் சித்தியடையாதோர் உட்பட 1 இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு சா.தரம் சித்தியடையாதோர் உட்பட 1 இலட்சம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு Reviewed by irumbuthirai on December 23, 2019 Rating: 5
Powered by Blogger.