புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்...



2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் தரம் 5 பாடசாலைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளைப் போன்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய ஒவ்வொரு மாணவருக்கும் உரித்தாகவுள்ள பாடசாலை ஆவணம் கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக 

கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk இணையத்தளத்தின் ஊடாக இந்த விபரங்கைளை அறிந்து கொள்ளமுடியும். இந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதி பெற்றிருந்த போதிலும் அதற்கு அமைவாக கிடைக்க வேண்டிய பாடசாலை கிடைக்கப்பெறாத அல்லது கிடைத்துள்ள பாடசாலையை நியாயமான காரணத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ள தேவை உள்ள மாணவர்களுக்கு 

கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தை பயன்படுத்தி மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும். இதற்கு அமைவாக சரியாக பூர்த்தி செய்யப்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்ப படிவத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். இதற்கான முகவரி கல்வி பணிப்பாளர், பாடசாலை அலுவல்கள் கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(அ.த.தி)
புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்... புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி அடிப்படையிலான பாடசாலை கிடைக்காதோர்க்கான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on December 26, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.