தொழில்கள்தான் பட்டதாரிகளைத் தேடி வரவேண்டும்... உபவேந்தர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனை...

May 16, 2020


பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும். பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது. பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக 

தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும் என்று ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார். 
நேற்று (15) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக உபவேந்தர்களுடன்  சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். 
வெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொவிட் நோய்த்தொற்று பரவலுடன் நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், இவ்வளவு அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல என்றும் குறிப்பிட்டார். ' இவர்களது கல்விக்காக அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு செல்கின்றது. 
பிள்ளைகள் தம்மை விட்டும் தூரமாகியிருப்பது பெற்றோருக்கு அழுத்தத்தை தருவதாக உள்ளது. இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் பல்கலைக்கழக கல்வி பல்வகைப்படுத்தப்பட வேண்டும். 
தொடர்பாடல் தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய தொழிநுட்ப அறிவு, தாதி தொழில், சுற்றுலா, ஆசிரியர் தொழில் போன்ற துறைகளில் பட்டப் பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்' என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


தொழில்கள்தான் பட்டதாரிகளைத் தேடி வரவேண்டும்... உபவேந்தர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனை... தொழில்கள்தான் பட்டதாரிகளைத் தேடி வரவேண்டும்... உபவேந்தர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனை... Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

உயர்கல்விக்கான வட்டியில்லா கடன்: நீடிக்கப்பட்ட விண்ணப்ப முடிவு திகதி:

May 16, 2020

2016 , 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் கல்வி கா.பொ.தராதர (உ/த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்காக உயர்கல்வி , தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால்  மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 4ஆவது தொகுதி மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இணையதளம் மூலம்


விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன். இதற்கான இறுதி தினமாக 2020.03.23 திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக இதன் இறுதி தினம் காலவரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் இதன் இறுதி திகதி 2020 மே மாதம் 20ஆம் திகதி என மாணவர் கடன் பிரிவு தெரிவித்திருந்தததை இதன் மூலம் அறியத்தருகின்றோம். 
இந்த விண்ணப்பத்தாரர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடவடிக்கைகள் தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலையை கவனத்தில் கொண்டு மென்பொருள் மூலம் 2020 ஜுன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான முழுமையான விபரங்கள் விண்ணப்பத்தாரர்களின் மின்னஞ்சல் முகவரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று உயர்கல்வி அமைச்சு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(அ.த.தி)

உயர்கல்விக்கான வட்டியில்லா கடன்: நீடிக்கப்பட்ட விண்ணப்ப முடிவு திகதி: உயர்கல்விக்கான வட்டியில்லா கடன்: நீடிக்கப்பட்ட விண்ணப்ப முடிவு திகதி: Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Dancing (Bharata) (பரத நாட்டியம்) - 2019 (New Syllabus)

May 16, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Dancing (Bharata) (பரத நாட்டியம்) 
Language: Tamil. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for Dancing (Bharata) (பரத நாட்டியம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Dancing (Bharata) (பரத நாட்டியம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Dancing (Indigenous - Kandyan) - 2019 (New Syllabus)

May 16, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Dancing (Indigenous - Kandyan) 
Language: Sinhala 

Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Dancing (Indigenous - Kandyan) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Dancing (Indigenous - Kandyan) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Art (சித்திரக் கலை) - 2019 (New Syllabus in 2 Languages)

May 16, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Art (சித்திரக் கலை) 
 Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Art (சித்திரக் கலை) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Art (சித்திரக் கலை) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Christian Civilization (கிறிஸ்தவ நாகரிகம்) - 2019 (New Syllabus in 2 Languages)

May 16, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Christian Civilization (கிறிஸ்தவ நாகரிகம்)  
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Christian Civilization (கிறிஸ்தவ நாகரிகம்) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Christian Civilization (கிறிஸ்தவ நாகரிகம்) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Greek & Rooman Civilization - 2019 (New Syllabus)

May 16, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Greek & Rooman Civilization 
Language: English. 
Click the link below for English medium scheme


English medium

G.C.E.(A/L) Marking Scheme for Greek & Rooman Civilization - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Greek & Rooman Civilization - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 16, 2020 Rating: 5

வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் சம்பந்தமான அறிவித்தல்

May 15, 2020

இணைய தள கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் மாகாண பிரதேச அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வாகனத்திற்கான வருமான உத்தரவூப்பத்திரத்தை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் இடம்பெறாது என்று இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றின் காரணமாக அலுவலக பணிகள் இடம்பெறாமையினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்தமையே இதற்குக் காரணமாகும். 
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் உத்தரவூப்பத்திரங்களை வழங்கும் பணி இடம்பெறும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ..த.தி)

வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் சம்பந்தமான அறிவித்தல் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் சம்பந்தமான அறிவித்தல் Reviewed by irumbuthirai on May 15, 2020 Rating: 5

13-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 15, 2020

13-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


13-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 13-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 15, 2020 Rating: 5

மின்கட்டணத்தை செலுத்துவதற்கான சலுகை காலம்..

May 14, 2020

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) ஆகியவை பாவனையாளர்களுக்கான மாதாந்த மின்சார கட்டணபட்டியலை வழங்கவும், கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு எடுத்துள்ளன. 
ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் மின் பட்டியல்களை தயாரித்தல் கணக்கிடுதல் போன்றவை தொடர்பான பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு:
(அ.த.தி)


மின்கட்டணத்தை செலுத்துவதற்கான சலுகை காலம்.. மின்கட்டணத்தை செலுத்துவதற்கான சலுகை காலம்.. Reviewed by irumbuthirai on May 14, 2020 Rating: 5

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி

May 14, 2020

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் தனது 3 மாத சம்பள தொகையான ரூபா: 292500.00 ஐ கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். இதுவரை இந்நிதியத்திற்கு ரூபா: 900 மில். ற்கும் மேற்பட்ட தொகை சேர்ந்துள்ளது. 
இந்த நிதியத்தின் முகாமைத்துவ குழு மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் அவர்களின் தலைமையில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(newswire)

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி Reviewed by irumbuthirai on May 14, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்கள் (14.5.2020)

May 14, 2020

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதாவது,

கம்பஹா மற்றும் கொழும்பு   ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். 

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16, சனி வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும். 

மே 17, ஞாயிறு நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். 

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 18, திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மே 23 சனிக் கிழமை வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும். 

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11 திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 16 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு மே 18 திங்கள் முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும். 

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. 

மொஹான் சமரநாயக்க 
பணிப்பாளர் நாயகம் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2020.05.14
(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்கள் (14.5.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்கள் (14.5.2020) Reviewed by irumbuthirai on May 14, 2020 Rating: 5

பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டை...

May 13, 2020

சகல பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராயும் கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. ஜபயோ-மெட்ரிக் டிஜிடல் அடையாள அட்டைகளின் தேவை குறித்து னாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது முன்மொழியப்பட்டிருந்தது. அதன் ஆரம்ப திட்டம் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அடையாள அட்டைகளை தயாரிக்கும் பணி நிபுணர் குழுவொன்றின் கீழ் தகவல், தொழிநுட்ப நிறுவனத்தின் முழுமையான வழிகாட்டலின் கீழும் ஜனாதிபதி செயலணியொன்றின் கண்காணிப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டை... பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டை... Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) காலம் நீடிப்பு

May 13, 2020

ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டிருப்பதாக வெளியான ஊடக அறிக்கை வருமாறு: 

2019 ஆம் ஆண்டுக்கென வழங்கப்பட்ட ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் 

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை 2020 ஆம் ஆண்டுக்காக விண்ணப்பித்த ஊடகவியலாளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக இதுவரையில் அடையாள அட்டை கிடைக்கப்பெறாத ஊடகவியலாளர்களுக்கு தமது கடமைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக தொடர்ந்தும் வசதிகளை செய்துதவுமாறு தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லையாயின் 2019 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் (Media Accreditation) 2020 ஜுலை மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகிறோம் என்று அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)

ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation) காலம் நீடிப்பு ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation)  காலம் நீடிப்பு Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

தேசிய அடையாள அட்டை விநியோகம் சம்பந்தமாக ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்கள்

May 13, 2020

தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை இடை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவசர அடையாள அட்டை விநியோக சேவை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பொது மக்களுக்கான அறிவிப்பு
கொரோனா வைரசு தொற்று பரவும் நிலையில் பொது மக்களைப் பாதுகாப்பதற்காக அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தல் மற்றும் அவசர அடையாள அட்டைகளை துரிதமாக விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் 
01. நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் திகதி தொடக்கம் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த தொற்று அனர்த்த நிலை முழுமையாக முடிவடையவில்லை என்பதுடன் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடும் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் ஒரு நாள் விநியோக சேவையை தொடர்ந்தும் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

02. இருப்பினும் பரீட்சை நடவடிக்கைகள், நேர்முகப் பரீட்சை நடவடிக்கைகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல், கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளல் போன்ற அத்தியாவசிய நடவடிக்கைளின் காரணமாக தேசிய அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்வதற்கான தேவையைக் கொண்ட பயனாளிகளுக்காக அடையாள அட்டையை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று பிரதேச செயலகத்தின் ஊடாக தற்பொழுது முன்னெடுப்பதற்கான ஒழுஙகுகள் செய்யப்பட்டுள்ளன. 

03. இதற்கமைவாக, இந்த விண்ணப்பத்தாரர்களின் தேவையை கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உறுதி செய்து அவர்களது விண்ணப்பத்தை பிரதேச செயலகத்தில் அடையாள பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்;. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் அந்த அலுவலகத்தில் சேவையில் உள்ள அதிகாரியினால் ஆட்பதிவு திணைக்களத்தின் பதிவை மேற்கொள்ளும் தரவு கட்டமைப்புக்குள் சேர்க்கப்படுவதுடன்; அதற்கான அடையாள அட்டை விரைவாக தயாரிக்கப்பட்டு பதிவு தபாலில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

04. மேலும், மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக


விண்ணப்பங்களை தயார் செய்த அனைத்து விண்ணப்பதாரர்கள் தனது விண்ணப்பங்களை தமது பொறுப்பில் வைத்திருக்காது பிரதேச செயலகத்தில் உள்ள அடையாள அட்டைப் பிரிவிற்கு அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

05. இதற்கு மேலதிகமாக வழமையான சேவையின் கீழ் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் கிராம உத்தியோகத்தர் மூலம் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க முடிவதுடன் , அதற்கான தேசிய அடையாள அட்டைகளை ஆகக் குறைந்த காலப்பகுதிக்குள் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

06. இதே போன்று ஒவ்வொரு வருடத்தைப் போன்று இந்த வருடத்திலும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் க.பொ.த. (சா ஃ தர) பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரையில் இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தவறிய அனைத்து பாடசாலைகளும் அந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு , மாகாண அலுவலகங்களுக்கு அல்லது பிரதான அலுவலகத்திற்கு விரைவாக சமர்ப்பிக்க வேண்டும். 

பி.வி.குணதிலக்க 
ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம்.

(அ.த.தி)

தேசிய அடையாள அட்டை விநியோகம் சம்பந்தமாக ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்கள் தேசிய அடையாள அட்டை விநியோகம் சம்பந்தமாக ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்கள் Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்கள்

May 13, 2020


Ayush Scholarship புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2020-21 கல்வியாண்டில் கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன் கீழ் 2020-21 கல்வியாண்டுக்கான ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகள் சார்ந்த UG/PG/PhD கற்கைகளுக்கான இலங்கை மாணவர்களினால் விண்ணப்பிக்க முடியும். இந்தப் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முழுமையான கல்விக்கட்டணம் மற்றும் கற்கைநெறி காலம் வரையிலுமான மாதாந்த வாழ்க்கைச் செலவு ஆகியவை வழங்கப்படுகின்றன. 
அத்துடன் தங்குமிடத்திற்கான கொடுப்பனவு மற்றும் வருடாந்த ஒதுக்கீடு ஆகியவையும் இந்த புலமைப்பரிசில்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு சமாந்தரமாக இந்தியாவிலுள்ள சகல ICCR புலமைப்பரிசில் வெற்றியாளர்களுக்கும் முழுமையான சுகாதார பராமரிப்பு வசதி களும் accommodation allowance and an annual grant. Besides, all ICCR scholars in India are provided full healthcare facilities. உரித்தாகும். 
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 

2020 ஜூன் முதலாம் திகதிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சில் சமர்ப்பிக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் (E-mail- eduwing.colombo@mea.gov.in /0112421605>0112422788 ext-605) தொடர்புகொண்டு விபரங்களை பெறலாம்.
(அ.த.தி)

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவின் புலமைப்பரிசில்கள் Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

கொவிட்-19: அரச, தனியார் பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், பிரிவெனாக்கள் எவ்வாறு தயார்படுத்த வேண்டும்? (தமிழ், சிங்கள சுற்றுநிருபங்கள் இணைப்பு)

May 13, 2020

அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு எவ்வாறு தயார்படுத்த வேண்டுமென கல்வயமைச்சு 11-05-2020 திகதியிடப்பட்ட 15/2020 இலக்கம் கொண்ட சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது. 
அதில்,

பாடசாலை / நிறுவனங்களை ஆரம்பிக்க முன்னர் செய்ய வேண்டியவை ஆரம்பித்த பின்னர் செய்ய வேண்டியவை போன்றன தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. 
இதுமாத்திரமன்றி...
சுகாதார மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்க வேண்டும். 
சகல சந்தர்ப்பங்களிலும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைய செயற்படல். 
அந்தந்த பிரதேச நிலைமைகள், மாணவர் எண்ணிக்கைக்கு அமைய படிமுறையாக பாடசாலை ஆரம்பிக்கப்படும். 
குறித்த பணிகளுக்கான பணத்தை பா.அ.சங்க கணக்கில் இதுவரை பாவிக்காத கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தல். 
விஷேட நிலைமைகளில் 1390ற்கு அழைத்து ஆலோசனைகளைப் பெறல். 
உட்பட இன்னும் பல விடையங்கள் கூறப்பட்டுள்ளன. 
சுற்றுநிருபத்தை தமிழில் முழுமையாகப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க 

சுற்றுநிருபத்தை சிங்களத்தில் முழுமையாகப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


கொவிட்-19: அரச, தனியார் பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், பிரிவெனாக்கள் எவ்வாறு தயார்படுத்த வேண்டும்? (தமிழ், சிங்கள சுற்றுநிருபங்கள் இணைப்பு) கொவிட்-19: அரச, தனியார் பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், பிரிவெனாக்கள் எவ்வாறு தயார்படுத்த வேண்டும்? (தமிழ், சிங்கள சுற்றுநிருபங்கள் இணைப்பு) Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று (13) முதல் ஏற்படும் மாற்றங்கள்

May 13, 2020

அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று முதல் (13) பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஊரடங்கு உத்தரவு அமுலாகும் கொழும்பு கம்பஹா மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச-தனியார் பஸ் வண்டிகளிலும், ரயில் வண்டிகளிலும் இன்று முதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்படவுள்ளது. 
இது தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிக்கையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்றார். அநாவசியமான பயணங்களைத் பொது மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
நேற்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இன்னும் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது..

கடமைக்குத் திரும்பும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி போக்குவரத்துச் சேவைகளை நடத்த முடியும். 
பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவைகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் சேவைகள் மட்டுப்படுத்தப்படும். 
13ம் திகதி தொடக்கம் ரயில் பயணிகளுக்கு அனுமதிப் பத்திரங்களும், பருவச் சீட்டுக்களும் விநியோகிக்கப்படும். அனுமதிப் பத்திரம் பெறும் பயணிகள் தமது நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள ஆள் அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமானது. 
பயணிகள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசங்களை அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று (13) முதல் ஏற்படும் மாற்றங்கள் அரச-தனியார் போக்குவரத்து சேவைகளில் இன்று (13) முதல் ஏற்படும் மாற்றங்கள் Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு...

May 13, 2020

கொவிட்-19 நிவாரணத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதி அளித்துள்ளார். 
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்ற விசேட கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு... பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு... Reviewed by irumbuthirai on May 13, 2020 Rating: 5

சுகாதார அமைச்சு உட்பட ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்

May 12, 2020

சுகாதார அமைச்சு உட்பட ஏழு அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று (11) வெளியிட்ட ஊடக அறிக்கையில் புதிய செயலாளர்களின் பெயரும் உரிய அமைச்சும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதில் சுகாதார அமைச்சுக்கு மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவும் மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே.எஸ். பெரேராவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
புதிய செயலாளர்களின் விபரம் வருமாறு: 
1. திருமதி எஸ்.எம். மொஹம்மட் 
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு 
2. திரு. ஜே.ஜே ரத்னசிறி 
பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு 
3. திரு. எஸ். ஹெட்டியாரச்சி 
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு 
4. திரு. எச்.கே.டீ.டபிள்யு.எம்.என்.பீ. ஹபுஹின்ன 
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு 
5. திருமதி ஜே.எம்.பீ. ஜயவர்த்தன 
உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சு 
6. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே.எஸ். பெரேரா 
மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு 
7. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க 
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு

சுகாதார அமைச்சு உட்பட ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் சுகாதார அமைச்சு உட்பட ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் Reviewed by irumbuthirai on May 12, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்) - 2019 (New Syllabus)

May 12, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்)
 Language: Tamil. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Islam Civilization (இஸ்லாமிய நாகரிகம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 12, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Hindu Civilization (இந்து நாகரிகம்) - 2019 (New Syllabus)

May 12, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Hindu Civilization (இந்து நாகரிகம்) 
Language: Tamil. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for Hindu Civilization (இந்து நாகரிகம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Hindu Civilization (இந்து நாகரிகம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 12, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Buddhist Civilization (பௌத்த நாகரீகம்) - 2019 (New Syllabus)

May 12, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Buddhist Civilization (பௌத்த நாகரீகம்) 
Language: Sinhala 

Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Buddhist Civilization (பௌத்த நாகரீகம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Buddhist Civilization (பௌத்த நாகரீகம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 12, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Islam (இஸ்லாம்) - 2019 (New Syllabus)

May 12, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Islam (இஸ்லாம்) 
 Language: Tamil.

Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for Islam (இஸ்லாம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Islam (இஸ்லாம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 12, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Christianity (கிறிஸ்தவம்) - 2019 (New Syllabus in 3 Languages)

May 12, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Christianity (கிறிஸ்தவம்) 
Language: Tamil, English & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Christianity (கிறிஸ்தவம்) - 2019 (New Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Christianity (கிறிஸ்தவம்) - 2019 (New Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 12, 2020 Rating: 5

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை...

May 11, 2020


குற்றவியல் விசாரணைகளிலிருந்து குறிப்பாக ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க கையடக்க தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. 25000-50000 வரை இவ்வாறு மோசடி கும்பலினால் கப்பம் கோரப்பட்டுள்ளது. 
பொலிஸார் போன்று நடித்து இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக தகவல் தெரிந்தால் 

அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 ற்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 
இவ்வாறான மோசடி கும்பல் மற்றும் அதனுடன் தொடர்பு வைத்துள்ளவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சால் வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை... ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை... Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

உயர்தரத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் புதிய முறையில்..

May 11, 2020

2020 இல் உயர்தரத்தில் அனுமதிபெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை நாளை (12) முதல் புதிய முறையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது Online முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
www.info.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் விண்ணப்பதாரிகள் Online முறையில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரி 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி 12-06-2020 ஆகும். 
விண்ணப்பிக்க வேண்டிய இணையத்தளத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


உயர்தரத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் புதிய முறையில்.. உயர்தரத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் புதிய முறையில்.. Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்..

May 11, 2020

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்தமையினால் செலுத்த முடியாமல் போன, போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பணமின்றி மே மாதம் 

29ஆம் திகதி வரை செலுத்துவதற்கு மேலும் நிவாரணக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடரபாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... இந்த நிவாரண காலத்தில் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்றல் பணி , மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளுக்காக மூடப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் 2020.04.29ஆம் திகதி தொடக்கம் 2020.05.04 வரையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை மற்றும் மேல்மாகாணம் , புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக மூடப்பட்டிருந்த / மூடப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக இது வரையில் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டாததால் 2020.05.02 வரையில் வழங்கப்பட்ட நிவாரணக் காலத்திற்காக மேலதிக நிவாரண காலத்தை 2020.05.11 தொடக்கம் 2020.05.29 திகதி வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக மார்ச் 01 திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்துவதற்கு நிவாரணக் காலம் உரித்தாகும். 
இதேபோன்று 2020.02.16ஆம் திகதி தொடக்கம் 2020.02.29ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல் தண்டப்பண கட்டண ஆவண கட்டணத்தை 28 நாட்களுக்குள் செலுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட தண்டப்பணத்துடன் ; போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்பதற்கு நிவாரண கால அவகாசம் கிடைக்கும். 2020.05.11ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்கள் வழமையான நடவடிக்கைளுக்காக திறக்கப்படும் என்பதினால் இதனை தடையின்றி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்.. நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்.. Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து சமயம்) - 2019 (New Syllabus)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Hinduism (இந்து சமயம்) 
Language: Tamil. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து சமயம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து சமயம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Buddhism (பௌத்த தர்மம்) - 2019 (New Syllabus)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Buddhism (பௌத்த தர்மம்) 
 Language: Sinhala

Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Buddhism (பௌத்த தர்மம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Buddhism (பௌத்த தர்மம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (New Syllabus in 2 Languages)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Accounting (கணக்கீடு) 
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (New Syllabus in 2 Languages)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Business Studies (வணிகக் கல்வி) 
Language: Tamil & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

நாளை (11) திறக்கப்படும் அதிவேக வீதிகள்

May 10, 2020

அதிவேக வீதி கட்டமைப்புகள் சகலதும் நாளை (11) திங்கட்கிழமையிலிருந்து மீள திறக்கப்படவிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க வீதி திங்கட்கிழமை தொடக்கம் திறக்கப்படும் என்றும் கட்டுப்பாடுகளுடனேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
(அ.த.தி)

நாளை (11) திறக்கப்படும் அதிவேக வீதிகள் நாளை (11) திறக்கப்படும் அதிவேக வீதிகள் Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம்

May 10, 2020


மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும விளக்கமளித்துள்ளார். அதாவது கட்டங்கட்டமாகவே இது ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், 
உள்ளுராட்சி மன்றங்களின் உதவியுடன் சகல பாடசாலைகளும் தொற்று நீக்கம் செய்யப்படும். அதன் பின்னர் சுகாதார துறையின் ஆலோசனைக்கமைய 4 நாட்களின் பின்னரே ஏனைய கருமங்கள் மேற்கொள்ளப்படும். அதில் முதல் கட்டமாக அதிபர் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைத்து நேரசூசி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும். இரண்டாம் கட்டமாக 

சா.தர மற்றும் உ.தர மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அதற்கு அடுத்த கட்டத்தில்தால் ஏனைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
பாடசாலை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில்தான் தீர்மானிக்கப்படும். இதமாத்திரமன்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும்படி அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக வெப்பமானிகள் பாடசாலைக்கு வழங்கிவைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விளக்கங்களை வழங்கினார்.

மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை

May 10, 2020


பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கும்படி அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதற்காக 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஒரு வெப்பமானியும் 200-500 மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு 2 உம் 500-1000 வரையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு அதை விட அதிகமாகவும் 1000 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு அதை விட அதிகமாகவும் வெப்பமானிகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

நீடிக்கப்பட்ட வீசா காலம்..

May 10, 2020


கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த வீசாக்களின் கால எல்லையை மே மாதம் 12 ஆம்திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
வீசா காலத்தை நீடிக்க எதிர்பார்த்திருப்போர் ஜூன் 11ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/vs என்ற இணையத்தளத்தில் 

அதற்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
நீடிக்கப்பட்ட வீசா காலம்.. நீடிக்கப்பட்ட வீசா காலம்.. Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5
Powered by Blogger.