சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்:

April 08, 2022

2021 ற்கான சாதாரண தர பரீட்சை இந்த வருடம் நடைபெறுகிறது. இதற்காக விடைத்தாள் திருத்தம் பணிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
விண்ணப்பங்கள் யாவும் Online முறையிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

விண்ணப்பிக்கும் பாடத்தில் பட்டமோ டிப்ளோமா பயிற்சியோ பெற்றிருத்தல் வேண்டும். மேலும் குறித்த வகுப்புகளில் கற்பிப்பவராகவோ அல்லது அந்த பாடத்திற்குரிய அதிகாரியாகவோ இருத்தல் வேண்டும். 
 
விண்ணப்பங்கள் யாவற்றையும் பாடசாலை அதிபர் Online முறையிலேயே சிபாரிசு செய்ய வேண்டும். 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 20-04-2022.
 
Online விண்ணப்பம் தொடர்பான அறிவுறுத்தல்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்: சா. தர பரீட்சை - 2021(2022): விடைத்தாள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்கள் கோரல்: Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம்

April 08, 2022

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
புலமைப்பரிசில் வழங்கப்படும் விடயங்கள்: 
1) க.பொ.த. (உ/தரம்) 
2) பட்டக் கற்கை நெறிகள் 
3) தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப கற்கைநெறிகள். 

தகைமைகள்
1) சா. தர அல்லது உ.தரத்தில் சித்தி. 
2) 25 வயதிற்கு குறைவாக இருத்தல். 
 
விண்ணப்ப படிவங்களை பெறும் இடங்கள்: 
இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகம் 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
Honorary Secretary. 
CEWET. 
c/o: High Commission of India. 
P.O. Box: 882, 
Colombo - 03. 
 
துணை தூதரக முகவரி: 
Assistant High Commission of India. 
01A, Mahamaya Mawatha, 
P.O. Box: 47. 
Kandy. 
 
விண்ணப்ப முடிவுத் திகதி: 
29-04-2022. 
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைநெறி (NAITA - Jaffna)

April 08, 2022

தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயது: 16 - 25.

கட்டணம்: இலவசம்

 விண்ணப்ப முடிவு திகதி: 25-04-2022

இது தொடர்பான பத்திரிகை அறிவித்தலைக் கீழே காணலாம்.

 


 
தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைநெறி (NAITA - Jaffna) தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைநெறி  (NAITA - Jaffna) Reviewed by Irumbu Thirai News on April 08, 2022 Rating: 5

சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!

April 06, 2022

சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 8ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படுவதாகவே ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இன்றுடன் கல்வி நடவடிக்கைகளை நிறைவுறுத்தப்பட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. 
 
எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டுக்குரிய முதலாம் தவணை ஏற்கனவே அறிவித்ததன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவுக்கு கடந்த திங்கட்கிழமை முதலே தவணை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on April 06, 2022 Rating: 5

28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

April 06, 2022

28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 28.03.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on April 06, 2022 Rating: 5

01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-04-2022

April 05, 2022

01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
  
01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-04-2022 01-04-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-04-2022 Reviewed by Irumbu Thirai News on April 05, 2022 Rating: 5
Powered by Blogger.