பல்கலைக்கழகங்களிற்கு தெரிவு செய்யப்பட்டோர் கற்கைநெறிக்காக இணைய வழியில் பதிவு செய்தல் - 2020/ 2021
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 05
தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும்.
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04
தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும்.
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 03
தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும்.
(11) ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா?
ஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும்.
(12) கடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா? கட்டாய சேவைக்காலம் அவசியமா?
ஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது.
(13) யாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
உத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும்.
(14) தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா?
ஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர்.
(15) இடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா?
ஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அத்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும்.
தொடரும்...
ஏனைய பாகங்களுக்கு செல்ல...
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 02
தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும்.
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 01
தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன.
தடையாகும் 11 இஸ்லாமிய அமைப்புகளும் தடைக்கான நிபந்தனைகளும்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி: (வர்த்தமானி இணைப்பு)
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-12-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 63ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- நாளை (7) தொடக்கம் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில வீதிகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம். அவ்வாறு செயற்படும் பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
- காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (07) தொடக்கம் 03 தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
- மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் இதுவரையில் இனம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு. சிறைச்சாலை கொத்தணியில்
- கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
- களனி, சபுகஸ்கந்த பிரதேசத்தில் விகாரையொன்றுக்கு தானம் வழங்கிய நபரொருவருக்கு Covid-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த விகாரையின் தேரர்கள் உள்ளிட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாகொல பொது சுகாதார பரிசோதகர் எஸ்.பெரேரா தெரிவித்தார்.
- நாளை (7) அதிகாலை 05 மணி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் கொம்பனித்தெரு காவல்துறை அதிகார பிரசேதத்தில் ஹூனுப்பிட்டிய கிராம சேவகர் பகுதியும், கறுவாத்தோட்ட காவற்துறை அதிகார பிரிவில் 60ம் தோட்டமும் வெள்ளவத்தை காவற்துறை அதிகார பிரிவில் கோகிலா வீதியும் தனிமைப்படுத்தப்படவுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வத்தளை காவற்துறை அதிகார பிரிவின் கெரவலப்பிட்டி, ஹேக்கித்தை, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிக்கடை முல்ல ஆகிய பகுதிகள் நாளை அதிகாலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் பேலியாகொடை காவற்துறை அதிகார பிரதேசத்தில் பேலியாகொடை வத்த, பேலியாகொரட - கங்கபட, மீகஹவத்த மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இதுதவிர, கிரிபத்கொடை காவற்துறை அதிகார பகுதியின் வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
- கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில இடங்கள் நாளை அதிகாலை 05 மணியுடன் விடுவிக்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் புளுமெண்டல் காவற்துறை அதிகார பிரதேசங்களும், வெல்லம்பிட்டி காவற்துறை அதிகார பிரதேசத்தின் விஜயபுர கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. அதேநேரம், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொம்பனித்தெரு காவற்துறை அதிகார பிரதேசத்தில் வேகந்த கிராம சேவகர் பிரிவும், பொளை காவற்துறை அதிகார பிரதேசத்தில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி காவற்துறை காவற்துறை அதிகார பிரதேசத்தில் சால முல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு தொகுதி என்பன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
- நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றும், ஆசிரியை ஒருவருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை (7) முதல் காலவரையறையின்றி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி. கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 649 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-12-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 62ம் நாள் அதாவது சனிக்கிழமை (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- இவ்வருடம் வெளியான 5ம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு 6ம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபரிம் கையளிக்க வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- சகல சிறைச்சாலைகளிலும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
- ஹட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தின் மேல் பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேற முடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
- Covid-19 தொற்று பரவல் தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலேயே இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளரான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
- நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 30 வீதமான மக்கள், எந்தவித நோய் அறிகுறியும் இன்றி கொரோனா தொற்றுறுடன் இருக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது..
- காலி, பத்தேகம கிறிஸ்தவ மகளீர் வித்தியாலயத்தில் தரம் 12 மாணவி ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இதன் காரணமாக குறித்த மாணவியுடன் நெருங்கிப் பழகிய மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 51 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்தேகம பொது சுகாதார பரிசோதகர் கே.பி.நவரத்ன தெரிவித்தார்.
- சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படாத நபர்கள் வசிக்கும் அடலுகம போன்ற பிரதேசங்களுக்கு தற்காலிகமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
- சிறைக்கைதிகள் உட்பட மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு. பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 91 வயதுடைய ஆண் ஒருவரும், தெமடகொட பிரசேத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வெல்லம்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் 53 மற்றும் 66 வயதுடைய சிறைக் கைதிகள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 669 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் இலங்கையின் மொத்த தொற்றாளர்கள் 27,228 ஆக அதிகரிப்பு.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 04-12-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 61ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோட்டன், கினிகத்தேனை, மஸ்கெலியா பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் இனங்காணப்பட்டதன் காரணமாக ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள 02 பாடசாலைககளுக்கு கொரோனா தொற்று பிரதேச மாணவர்களுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனவும் ஏனைய மாணவர்களும் ஆசிரியர்களும் வருகை தருவார்கள் எனவும் ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
- அட்டுளுகமவில் சுகாதார தரப்பினருக்கு இடையூறை ஏற்படுத்தி எச்சிலை உமிழ்ந்ததாக கூறப்படும் நபரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- அடலுகம பிரதேச மக்கள் சுகாதார பிரிவினருக்கு ஆதரவளித்து அவர்களின் பிரதேசங்களை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பல நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
- கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணை பகுதியில் உள்ள 5 பாடசாலைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
- மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,005 ஆக அதிகரித்துள்ளது.
- தம்புள்ள விஷேட பொருளாதார மத்திய நிலையத்தில் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்ட 4 ஆவது கொரோனா தொற்றாளர் இவராவார்.
- விமான நிலையத்தை திறந்து சுற்றலா துறையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து சுகாதார நடைமுறைகளை தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
- Covid-19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என்பதோடு, முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
- அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பினை நல்கினால் கொரோனா பரவலை எதிர்வரும் இரண்டு வாரங்களில் கட்டுப்படுத்த முடியும் என தொற்று நோயியல் ஆய்வு பிரிவு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
- மேலும் ஒரு கொரோனா மரணம். பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண். (IDH வைத்தியசாலையில் மரணம்) மொத்த மரணம் 130 ஆக அதிகரிப்பு.
- இன்றைய தினம் மாத்திரம் 521 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 03-12-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 60ம் நாள் அதாவது வியாழக்கிழமை (03) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- Covid-19 பரவல் காரணமாக பிற்போடப்பட்ட கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப்பரீட்சையை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
- றாகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அங்கிருந்து நேற்றிரவு தப்பி சென்ற மஹர சிறைக் கைதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
- நாணயத்தாள்களை வெப்பமான பகுதியில் வைத்திருப்பதன் மூலம் கொரோனா பரவலை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதோடு, சூரிய ஒளி படுகைக்குரிய இடத்தில் நாணயத்தாள்களை வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- வட்டவல சுகாதார பரிசோதகர் பிரிவின் வெலிஒய தடகெலே கீழ் பிரிவு மற்றும் கினிகத்ஹேன சுகாதார பரிசோதகர் பிரிவின் கெனில்வர்த் தோட்டம் பிளக்வோடர் கீழ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மீள அறிவிக்கும் வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு. கொலன்னாவையைச் சேர்ந்த பெண். கொழும்பு 2,10, 12 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு ஆண்கள். அந்தவகையில் மொத்த மரணங்கள் 129 ஆக உயர்வு.
- இன்றைய தினம் மாத்திரம் 628 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 02-12-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 59ம் நாள் அதாவது புதன்கிழமை (02) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக தனியார் பேருந்துகளுக்காக டிசம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்கான லொக் சீட் மற்றும் பிரவேச பத்திர கட்டணங்கள் அறவிடப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
- மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 11 கைதிகளில் 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
- கேகாலை பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்றைய தினம் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் கொரோனா தொற்றுக்குள்ளான 50 தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
- கொலன்னாவை தபால் அலுவலகத்தின் ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொலன்னாவை தபால் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06 உப தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. 1) *சிலாபம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண். 2) *கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 878 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 01-12-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 58ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- திட்டமிட்டபடி உரிய திகதியில் சாதாரணதரப் பரீட்சை நடைபெறாது எனவும் பரீட்சை நடைபெறுவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் உரிய திகதி அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
- க.பொ.த. உயர் தர பரீட்சைக்குரிய விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம். எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை. அந்தவகையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்கவதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஆகும் போது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
- மஹர சிறைச்சாலை அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை குடும்ப அங்கத்தவர்கள் பொறுப்பேற்காத பட்சத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்கான செலவீனங்களை அரசாங்கமே பொறுப்பேற்பதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- மேலும் 04 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. மரணமானவர்கள் கொழும்பு-10,12, கொலன்னாவ மற்றும் ராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இத்துடன் மொத்த மரணங்கள் 122 ஆக உயர்வு.
- இன்றைய தினம் மாத்திரம் 545 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-11-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 57ம் நாள் அதாவது திங்கட்கிழமை (30) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- இன்று (30) முதல் ஒரு வார காலத்திற்கு அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கனங்கே சிறி பெரகும்ப மத்திய மஹா வித்தியாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 28 ஆம் திகதி அப்பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
- மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு சிறை அதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
- அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தற்பொழுது இந்த பிரதேசத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- கொவிட் - 19 நிலைமையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அரசாங்க தகவல் திணைக்கள வளவில் உள்ள அரச வெளியீட்டு அலுவலகம் உரிய சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை (01) தொடக்கம் மீண்டும் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மினுவங்கொட - பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,124 ஆக அதிகரித்துள்ளது.
- சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளேவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார சேவை தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
- மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் குற்றப்புனாய்வு திணைக்களத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
- மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வெஹரஹெர அலுவலகங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ள விஷேட இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 24 மணித்தியாலயங்களும் இயங்கக்கூடிய 0112 67 78 77 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
- கொவிட் 19 தொற்றாளர்களை உடனடியாக அடையாளம் காண பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் அனைத்து முன்னணி வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஆய்வக சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
- மஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 48 பேரில், 26 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
- மேலும் இரு கொரோனா மரணங்கள் அறிவிப்பு. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, கலஹா பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், அடலுகம பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு.
- இன்றைய தினம் மாத்திரம் 503 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 29-11-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 56ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்களுக்காகவும், அடுக்குமாடி குடியிருப்புக்களில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் நடத்தப்படும் இலவச நடமாடும் கிளினிக்குகள் அடுத்த மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை, கொழும்பு கரையோரம் என்பனவும், கம்பஹா மாவட்டத்தின் இராகமை, நீர்கொழும்பு என்பனவும் நாளை காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மட்டக்குளியில் உள்ள ரந்திய உயன, ஃபேர்கசன் வீதியின் தெற்கு பகுதி என்பனவும், வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன தொடர்குடியிருப்பு, சாலமுல்ல, விஜயபுர என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக தொடர்ந்தும் பேணப்படவுள்ளன.
- தற்போது அக்கறைப்பற்றில் நடைமுறையில் இருக்கின்ற தனிமைப்படுத்தல் விதிகளை எவ்வாறு தளர்த்துவது என்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவிப்பு.
- கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 178 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று உறுதி.
- தம்புள்ளை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30) முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என தம்புள்ளை நகர மேயர் தெரிவித்துள்ளார்.
- பேருவளை மற்றும் களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் அவர்களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினரின் சேவையை அனுகியுள்ளனர். அதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இவர்கள் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- நாளை காலை முதல் புறக்கோட்டை பகுதியில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட போதிலும் கொழும்பு மெனிங் சந்தை, 4ஆம் மற்றும் 5 ஆம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தொடர்ந்து உயிரிழந்த நிலையில் நான்கு கைதிகளின் சடலங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காயமடைந்த 24 கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் றாகம மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- மேலும் 7 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. *கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண். *கொதட்டுவ பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண். *மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 73 வயது ஆண். *சிலாபம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண். *அகுருஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண். *கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண். *மருதானை பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண். இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 496 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-11-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 55ம் நாள் அதாவது சனிக்கிழமை (28) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்நத மற்றும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட வீடுகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க தேவையில்லை என தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டினுள் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
- எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
- ருவன்வெல்ல - அங்குருவெல்ல நகரில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற மருத்துவர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனையடுத்து அவரிடம் சிகிச்சைகளுக்காக சென்ற 500க்கும் மேற்பட்டடோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- இதற்குமுன்னர் கொவிட் நோயாளர்கள் அடையாளங் காணப்படாத பொலன்னறுவை சிறைச்சாலையிலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
- கண்டி - தேசிய மருத்துவமனையின் கண் மற்றும் காது தொடர்பான சிகிச்சை பிரிவில் சேவையாற்றும் இரண்டு தாதியர்களுடன் தொடர்பை பேணிய மேலும் 17 பேருக்கு Covid-19 தொற்றுறுதியானது.
- சிறைச்சாலைகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
- கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அல்லது தனிமைப்படுத்தியுள்ளவர்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
- கொரோனா சந்தேகத்தில் மரணிப்பவர்களுக்காக PCR மேற்கொள்ளப்படும் போது நெகட்டிவ் வந்தால், 24 மணித்தியாலத்திற்குள் அவர்களின் உடல்களை உறவினர்களிடம் கையளிக்க, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி உறுதியளித்துள்ளார்.
- மேலும் 02 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. கொழும்பைச் சேர்ந்த 76 வயது ஆண் மற்றும் 96 வயது பெண். அந்தவகையில் மொத்த மரணம் 109 ஆக அதிகரிப்பு.
- இன்றைய தினம் மாத்திரம் 487 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 27-11-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 54ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டம், பொகவந்தலாவ பொகவான தோட்டம், பொகவந்தலாவ மோர ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52, 32, 21, 26 வயதுடையவர்கள். எனவே குறித்த பகுதியிலுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- கண்டி தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- வார இறுதியில் புகையிரதங்களின் சேவை மிக குறைந்த மட்டத்தில் காணப்படும் என புகையிரதங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
- கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல், ஊரடங்கு உத்தரவு மற்றும் நடமாட்டக் கட்டுபாட்டு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் உணவுப்பொதிகள் என்பன தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
- தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
- கேகாலை பொது மருத்துவமனையின் 2ம் இலக்க சிகிச்சை அறையில் சேவையாற்றிய தாதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
- கேகாலை - ருவன்வெல்லை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்று மூடப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் தரம் 13ல் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தாய்க்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- எஹெலியகொட - திவுரும்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் நேற்று 44 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. இந்தநிலையில் எஹெலியகொடை கல்வி வலயத்தின் பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டன.
- பூசா சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 473 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 26-11-2020 நடந்தவை...
திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 53ம் நாள் அதாவது வியாழக்கிழமை (26) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
- தொற்றா நோய் கிளினிக் சிகிச்சைக்கான மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலயமும்; செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த சூழ்நிலையில் நாம் இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம். இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மருந்து பட்டியலை WhatsApp, Viber மூலமாக அனுப்பி வைத்தால் நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.
- கொள்ளுபிட்டிய பொலிஸ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
- வீதிகளில் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் சாரதிகள் 30 பேர் தொடர்பில் தற்போதைய நிலையில், மோட்டார் வாகன சட்டம் மற்றும் சாலைகள் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக கொவிட் வைரஸ் பரவும் அவதானம் காணப்படுவதாக குறிப்பிடப்படவுள்ளது.
- சில நபர்களை PCR பரிசோதனைகாக அழைத்திருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அவ்வாறான நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு கீழ் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- COVID-19 நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு உசிதமான பரிசோதனை PCR முறைமையே என்று அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரெபிட் எண்டிஜென் என்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனை முறைமை, PCR பரிசோதனைக்கு மாற்றீடாக அமையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கல்முனை கல்வி வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
- ஒருகொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் அண்மையில் சென்று வந்த வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் இம்மாணவர் நேற்று (25) பாடசாலைக்குச் சென்றுள்ளார். எனினும், பாடசாலை நிர்வாகத்தினரால் அவர் திருப்பி அனுப்பட்டுள்ளார்.
- கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
- 03 மணித்தியாலங்களுக்குள் PCR முடிவுகளை பெற்றுக்கொள்ளகூடிய PCR பரிசோதனை கருவிகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான தளத்தில் பொருத்துவதற்கு சுவிட்ஸர்லாந்து உதவியளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் நாளொன்றுக்கு 1300 PCR பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும்.
- அடுத்த வருடம் ஜனவாரி மாதம் வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் காணப்படும் அச்சுறுத்தலான நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- கடந்த இரண்டு வாரங்களில் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து சிலாபம் காவற்துறை பிரிவுக்குற்பட்ட 5 கிராம சேவக பிரிவுகளுக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகொடவத்த கடற்கரை,வடக்கு கடற்கரை,தென் கடற்கரை,குருசபாடுவ மற்றும் வெரலபட ஆகிய பகுதிகளுக்கு கிராம சேவக பிரிவுகளுக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு. 80 மற்றும் 87 வயதுடைய ஆண் இருவர் மற்றும் 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.
- இன்றைய தினம் மாத்திரம் 559 பேருக்கு கொரோனா உறுதியானது.
- Irumbuthirainews