திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-11-2020 நடந்தவை...


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 55ம் நாள் அதாவது சனிக்கிழமை (28) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தை சேர்நத மற்றும் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட வீடுகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க தேவையில்லை என தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். கொரோனா அச்சத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
  • கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டினுள் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 
  • எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 
  • ருவன்வெல்ல - அங்குருவெல்ல நகரில் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடாத்திச் சென்ற மருத்துவர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானது. இதனையடுத்து அவரிடம் சிகிச்சைகளுக்காக சென்ற 500க்கும் மேற்பட்டடோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
  • இதற்குமுன்னர் கொவிட் நோயாளர்கள் அடையாளங் காணப்படாத பொலன்னறுவை சிறைச்சாலையிலும் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • கண்டி - தேசிய மருத்துவமனையின் கண் மற்றும் காது தொடர்பான சிகிச்சை பிரிவில் சேவையாற்றும் இரண்டு தாதியர்களுடன் தொடர்பை பேணிய மேலும் 17 பேருக்கு Covid-19 தொற்றுறுதியானது. 
  • சிறைச்சாலைகளில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 
  • கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அல்லது தனிமைப்படுத்தியுள்ளவர்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. 
  • கொரோனா சந்தேகத்தில் மரணிப்பவர்களுக்காக PCR மேற்கொள்ளப்படும் போது நெகட்டிவ் வந்தால், 24 மணித்தியாலத்திற்குள் அவர்களின் உடல்களை உறவினர்களிடம் கையளிக்க, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி உறுதியளித்துள்ளார். 
  • மேலும் 02 கொரோனா மரணங்கள் அறிவிப்பு. கொழும்பைச் சேர்ந்த 76 வயது ஆண் மற்றும் 96 வயது பெண். அந்தவகையில் மொத்த மரணம் 109 ஆக அதிகரிப்பு. 
  • இன்றைய தினம் மாத்திரம் 487 பேருக்கு கொரோனா உறுதியானது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-11-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 28-11-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on December 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.