மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்:

January 30, 2021

வடக்கு , கிழக்கில் 16 வயதிலிருந்து சகல மாணவர்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் எனவும், அவர்களுக்கு தமிழ் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும் போதிய தமிழ் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லையாயின், 
முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்த பணியைச் செய்யச்சொல்லி ஊதியம் வழங்கலாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார். 
எந்த விதத்திலும் சிங்கள மொழியில் மாணவ மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படக் கூடாது. 
அவ்வாறு பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுமாயின், தென்னிந்தியாவில் இருந்து தமிழ் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம் என்றும் கூறியுள்ளார். 
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று சொன்ன கருத்தை தாம் வரவேற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.
மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்: மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்: Reviewed by irumbuthirai on January 30, 2021 Rating: 5

இலங்கைக்கு 10 ஆவது இடம்... சீனா இணைத்துக்கொள்ளப்படவில்லை...

January 28, 2021

Covid-19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகள் தொடர்பில் அவுஸ்திரேலிய கல்வி நிறுவனமான ´லோவி´ நிறுவனத்தினால் 98 நாடுகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த கணக்கெடுப்பிற்காக ஒவ்வொரு நாட்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் கொரொனா பரிசோதனைகளின் திறன் போன்ற பல்வேறு விடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
அதில் இலங்கைக்கு 10 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. நியுசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. 2ம் இடம் வியட்நாமிற்கும், 
3ம் இடம் தாய்வானுக்கும், 4ம் இடம் தாய்லாந்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. 
ஆனால் குறித்த கணக்கெடுப்பிற்கு சீனாவை இணைத்துக் கொள்ளவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவினால் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் உரிய வகையில் பெற்றுக் கொடுக்கப்படாமையே இதற்கான காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு 10 ஆவது இடம்... சீனா இணைத்துக்கொள்ளப்படவில்லை... இலங்கைக்கு 10 ஆவது இடம்... சீனா இணைத்துக்கொள்ளப்படவில்லை... Reviewed by irumbuthirai on January 28, 2021 Rating: 5

சீனா தயாரித்த Sinopharm இலங்கைக்கு...

January 27, 2021

இலங்கைக்கு சீன அரசாங்கம் 300,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 
Sinopharm என்ற பெயரிலான கொரோனா தடுப்பூசியே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை இந்தியா நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகள் 
நாளைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனா தயாரித்த Sinopharm இலங்கைக்கு... சீனா தயாரித்த Sinopharm இலங்கைக்கு... Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி..

January 27, 2021

இலங்கையில் முதல் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றுடன் சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 
27 ஆம் திகதி சீனப்பெண் ஒருவர் முதல் தொற்றாளராக இங்கு இனம் காணப்பட்டார். 
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மக்களுக்கு விடுத்த அறிவிப்பில், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது. 
 இன்றைய தினம் சரியாக ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், 59,922 தொற்றாளர்கள், 51,046 குணமடைந்தோர், 288 மரணங்கள் என்ற அடிப்படையில் கொரோனாவுக்கு எதிரான போராட்ட பாதையில் இலங்கை பயணித்துக் கொண்டிருக்கிறது.
சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.. சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.. Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்:

January 27, 2021

பேஸ்புக் (Facebook) நிறுவனம் இலங்கையில் இரத்ததான வசதியை அறிமுகம் செய்துள்ளது. 
பேஸ்புக் இந்த வசதியை அறிமுகம் செய்யும் 29ஆவது நாடு இலங்கையாகும். இந்த வசதியின் கீழ் இலங்கையில் உள்ள 
24 இரத்த வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தம்மை பதிவு செய்து இந்த சேவை மூலம் இரத்த தானத்தை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்: இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்: Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்...

January 27, 2021

மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்தை குறைக்க இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. 
அந்த வகையில் கற்கும் பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று தற்காலிகமாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பாக தெரிவிக்கையில், 
ஆசிரியர்களும் மாணவர்களும் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்து மேற்கொள்ளாது தமக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். பாடசாலைகளை திறப்பதற்கு எடுக்கப்பட தீர்மானம் மிகவும் கடினமானதொன்றாகும். எனவே அதன் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள சகலரினதும் ஆதரவு தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்... தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்... Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

ஆரம்பமானது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு: ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது 03 பேர்:

January 25, 2021

பிரதேச செயலக மட்டத்திலிருந்து நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும்  ஆட்சேர்ப்பு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி ஜனவரி - மார்ச் மாதம் வரையில் இந்த ஆட்சேர்ப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், வர்த்தக மற்றும் பொதுச்சேவை பிரிவுகளில் 
காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   
 மேற்படி பிரிவுகளில் இணைந்துக்கொள்ள விரும்பும் தேக ஆரோக்கியமான ஆற்றல் மிக்க இளைஞர் பாதுகாப்பு படைத் தலைமையகங்களுடன் தொடர்புகொள்ள முடியும். 
 மேலும் ஆட்சேர்ப்பு பணிப்பகத்தினால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, மத்திய, கிழக்கு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக மட்டங்களில் 2020 இல் ஆட்சேர்ப்பு பணிகளுக்கான தொடர் விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவதுடன் மேற்படி ஒவ்வொரு பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் பிரிகேட் படைப் பிரிவு தளபதியின் தலைமையில் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுள்ளன. 
 அதன் பிரகாரம், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ், இராணுவ ஆட்சேர்ப்பு பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.ஏ.டி.என்.எஸ்.பி. துனுவில மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பதவி நிலை அதிகாரி - 1 லெப்டினன் கேணல் எம்.எல்.டி.மொல்லிகொட ஆகியோரின் தலைமையில் ஆட்சேர்ப்பு பணிகள் இடம்பெற உள்ள நிலையில் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறைந்த பட்சம் மூன்று இளைஞர்கள் இராணுவத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். எனவே, இராணுவத்தில் இணைந்துகொள்ள விரும்புவோர் அருகிலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தினை தொடர்பு கொண்டு வயதெல்லை, கல்வித் தகைமை என்பவற்றை தெரியப்படுத்தி, சம்பள விவரம், சலுகைக் கொடுப்பனவுகள் மருத்துவ சலுகைகள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும். 
 அல்லது அருகிலுள்ள இராணுவ படைப் பிரிவிற்கு நேரடியாக சென்று அங்கு ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளை சந்தித்து மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளவும் முடியும். 
தொடர்புகளுக்கு: 
தலைமையகம்- யாழ்ப்பாணம் - 011 4056102 / 076 5303715 
தலைமையகம் - வன்னி (வவுனியா) - 076 6907293 
தலைமையகம் – கிழக்கு (வெலிகந்த) - 027 2259128 /076 6907297 
தலைமையகம் – கிளிநொச்சி - 076 4514395 / 070 1918333 
தலைமையகம் – முல்லைத்தீவு - 071 2138268  
தலைமையகம்– மேற்கு (பனாகொடை) - 076 5303721 
தலைமையகம் - மத்திய (தியதலாவை) - 076 6907304 / 0765303719 
பணிப்பாளர் – ஆட்சேர்ப்பு பிரிவு (கொஹவலை) - 011 2815080 / 011 3137553
(Source : அரசாங்க தகவல் திணைக்களம்)
ஆரம்பமானது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு: ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது 03 பேர்: ஆரம்பமானது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு: ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது 03 பேர்: Reviewed by irumbuthirai on January 25, 2021 Rating: 5

அதிகரிக்கப்பட்டன சிசு செரிய பஸ்கள்...

January 25, 2021

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிசு செரிய பஸ்களில் எண்ணிக்கையை இன்று (25) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் தாவன பண்டுக சுவர்ணஹங்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை யாதேனும் பஸ் தேவைப்பாடுகள் ஏற்படுமிடத்து 
அது தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக அதிபர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இதேவேளை பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை இன்று முதல் எழுமாற்றான ரபிட் ஆண்டின் பரிசோதனைக்கு உட்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கப்பட்டன சிசு செரிய பஸ்கள்... அதிகரிக்கப்பட்டன சிசு செரிய பஸ்கள்... Reviewed by irumbuthirai on January 25, 2021 Rating: 5

ஜுலை மாதத்தில் உயர்தர வகுப்புக்கள்...

January 24, 2021

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். 
இதன் பிரகாரம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி 
குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை உயர்தர வகுப்புக்களை ஜூலை மாத்ததில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் கூறினார். 
கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற வேண்டிய கல்விப் பொதுத் தாரதர பத்திர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டிருக்கின்றது. எனினும், எந்தவொரு பாதிப்பும் மாணவர்களுக்கு ஏற்படாத வகையில் பரீட்சைப் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
ஜுலை மாதத்தில் உயர்தர வகுப்புக்கள்... ஜுலை மாதத்தில் உயர்தர வகுப்புக்கள்... Reviewed by irumbuthirai on January 24, 2021 Rating: 5

அரசியல் கட்சிகளைப் பதிவதற்கு புதிய ஏற்பாடுகள்...

January 24, 2021

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 
இந்த புதிய ஏற்பாடுகளை 
வர்த்தமானி மூலம் பிரசுரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினாலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அரசியல் கட்சிகளைப் பதிவதற்கு புதிய ஏற்பாடுகள்... அரசியல் கட்சிகளைப் பதிவதற்கு புதிய ஏற்பாடுகள்... Reviewed by irumbuthirai on January 24, 2021 Rating: 5

தரம் 6 க்கான அனுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு செயலாளரின் விளக்கம்

January 24, 2021

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளுக்கு தரம் 6 ற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். மேலும்,
மாணவர்களின் எண்ணிக்கையையோ பாடசாலை வகுப்பறையின் அளவையோ குறைப்பதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிள்ளைகளுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது. புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகள் கடந்த 05 ஆண்டுகளில் 
பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 
இது தொடர்பிலான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தரம் 6 க்கான அனுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு செயலாளரின் விளக்கம் தரம் 6 க்கான அனுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு செயலாளரின் விளக்கம் Reviewed by irumbuthirai on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.