உயர்தர பரீட்சை - 2023: நடைபெற்று முடிந்த வினாப் பத்திரம் ரத்து! பரீட்சை திணைக்களம் விசேட அறிவிப்பு!
Irumbu Thirai News
January 12, 2024
தற்போது நடைபெறும் 2023 க்கான உயர் தர பரீட்சையில், கடந்த ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற விவசாய விஞ்ஞானம் (Agricultural Science) பகுதி - 11 ரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
குறித்த வினா பத்திரமானது பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சையின் மீள் பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை - 2023: நடைபெற்று முடிந்த வினாப் பத்திரம் ரத்து! பரீட்சை திணைக்களம் விசேட அறிவிப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
January 12, 2024
Rating: