Vacancies (Employees' Trust Fund - ETF)

November 06, 2021


Vacancies (Employees' Trust Fund - ETF)

Posts:

1. Assistant General Manager (Finance)

2. Investment Analyst 


Closing date: 15-11-2021.

Source: Sunday Observer.

 

ஏனைய தொழில் வாய்ப்பு தொடர்பான தகவல்களை பார்வையிட...

https://www.irumbuthirainews.com/search/label/Vacancy?&max-results=7&m=1 


Vacancies (Employees' Trust Fund - ETF) Vacancies (Employees' Trust Fund - ETF) Reviewed by Irumbu Thirai News on November 06, 2021 Rating: 5

வருடாந்த இடமாற்றங்கள் (இணைந்த சேவைகள்) - 2022

November 06, 2021

பின்வரும் இணைந்த சேவைகளின் வருடாந்த இடமாற்ற பெயர்ப் பட்டியலை அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அரசாங்க மொழி பெயர்ப்பாளர் சேவை 
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை 
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை 
இலங்கை அரச நூலகர் சேவை 
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சேவை 
இணைந்த சாரதிகள் சேவை 
அலுவலக பணியாளர் சேவை 
 
இது தொடர்பான மேன் முறையீடுகளை சமர்பிப்பதற்கான இறுதித் தினம்: 15-11-2021. 
 
கீழ்வரும் லிங்குகளை கிளிக் செய்து ஒவ்வொரு சேவையிதும் இடமாற்ற பட்டியலை பார்வையிடலாம். 

 

 

 

இது தொடர்பான முகப்புக் கடிதத்தைக் கீழே காணலாம்.

வருடாந்த இடமாற்றங்கள் (இணைந்த சேவைகள்) - 2022 வருடாந்த இடமாற்றங்கள் (இணைந்த சேவைகள்) - 2022 Reviewed by Irumbu Thirai News on November 06, 2021 Rating: 5

திறந்த பல்கலைக்கழகத்தின் PGDE தெரிவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

November 06, 2021

திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (Postgraduate Diploma in Education - PGDE) தெரிவு பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
பெறுபேறுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
திறந்த பல்கலைக்கழகத்தின் PGDE தெரிவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! திறந்த பல்கலைக்கழகத்தின் PGDE தெரிவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின! Reviewed by Irumbu Thirai News on November 06, 2021 Rating: 5

Vacancies (Sri Lanka Law College)

November 06, 2021


Vacancies (Sri Lanka Law College) 

Deputy Director - Examination.

Librarian.

Closing date: 15-11-2021.



 Source: Sunday Observer

Vacancies (Sri Lanka Law College) Vacancies (Sri Lanka Law College) Reviewed by Irumbu Thirai News on November 06, 2021 Rating: 5

Vacancies (State Bank of India)

November 05, 2021

Vacancies (State Bank of India) 
 
Posts
System Support Officer. 
Security Cum Liaison Officer. 
Subordinate Staff on Contract Basis 
 
Closing date: 10-11-2021. 

 
Vacancies (State Bank of India) Vacancies (State Bank of India) Reviewed by Irumbu Thirai News on November 05, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021

November 05, 2021


கொவிட் - 19 தொற்றுப் பரவல் நிலைமையின் கீழ் சுகாதார பாதுகாப்புடன் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் கையேட்டை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், உளவள ஆலோசனை வழங்கும் ஆசிரியர், அதிபர், பெற்றோர், போக்குவரத்து சேவை வழங்குவோர் போன்ற சகல தரப்பினருக்குமான வழிகாட்டல் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.

 

பாடசாலை ஆரம்பம் -: 
2021 ஒக்டோபர் 21ஆந் திகதியிலிருந்து 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படுகிறது.
 
கட்டம் 01: மொத்த மாணவர் தொகை 200க்கு குறைவான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள். 
 
கட்டம் 02: மொத்த மாணவர் தொகை 200க்கு அதிகமான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் மற்றும் மாணவர் தொகை 100க்கு குறைவான பாடசாலைகளின் சகல வகுப்புகள்.
 
கட்டம் 03: சகல பாடசாலைகளினதும் தரம் 10,11,12,13 மற்றும் மாணவர் தொகை 200 க்கு குறைந்த பாடசாலைகளின் சகல வகுப்புகள்.
 
கட்டம் 04: ஏனைய தரங்களை ஆரம்பித்தல்.
 
 
கற்றல் கற்பித்தல் செயற்பாடு மற்றும் வகுப்பறை முகாமைத்துவம்: 
கற்றல் கற்பித்தல் செயன்முறை மற்றும் வகுப்பறை முகாமைத்துவத்தின்போது கவனத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாக அமைவது மாணவர்களிடையே சமூக இடைவெளியைப் பேணுவது மற்றும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்தலாகும். 
 

 மட்டுப்படுத்தப்பட்ட மாணவர் தொகுதியினரோடு கூடிய வகுப்பை நடாத்துவதற்கு ஏற்றவாறு நேரசூசியை தயாரித்துக்கொள்ளல். 
 
 இடைவெளியோடு கூடியதாக மாணவர்களை வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக பாடசாலையிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தல். 
 
 மேலும், பாடசாலையில் பொது இடங்களைத் தெரிவு செய்து (பிரதான மண்டபம்/மாநாட்டு மண்டபம்) பரிந்துரைக்கப்பட்ட இடைவெளி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட நேரசூசியின் அடிப்படையில் அதிகமான மாணவர் எண்ணிக்கைக்கு ஒரே தடவையில் கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தல். 
 
 வகுப்பறைகளை எப்போதும் நன்கு காற்றோட்டம் பெறும் வகையில் அமைத்துக் கொள்ளல் மற்றும் திறந்தவெளிகளில் கற்பிப்பதற்கு ஆசிரியர்களை ஈடுபடுத்தல்.
 
 மாணவர்கள் நேருக்கு நேர் முகம் நோக்கி இல்லாதவாறு வகுப்பறையில் அமரச் செய்வதற்கான முறையைத் திட்டமிடுதல்.  

பாடசாலை சிற்றுண்டிச்சாலை: 
மீள் அறிவித்தல்வரை பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளைத் மூடி வைத்திருத்தல். 
 
 
இடைவேளை: 
 பாடசாலை இடைவேளையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காத வகையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிபரின் விருப்பின் அடிப்படையில் மற்றும் பாடசாலைக்குப் பொருந்தும் வகையில் தயார் செய்து கொள்ளமுடியும். 
 
 உணவு உண்ணும்போது முகக் கவசத்தை கழற்றுவதால் உணவு இடைவேளைக்கான நேரத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை செய்தல். 
 
 எப்பொழுதும் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உண்பதற்கு ஊக்குவிப்பதோடு, பாடசாலைக்கு வரும் வழியில் உணவு வாங்குவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தல் வழங்கி, அதுதொடர்பாக மேற்பார்வை செய்யப்படல் வேண்டும். 
 
 பாடசாலை இடைவேளையின்போது, மாணவர்களுக்கிடையே இடைவெளியைப் பேணுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் ஒருவரையொருவர் ஸ்பரிசம் செய்யும் விதத்திலான ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும். 

இணைப்பாடவிதான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்: 
 ஒருவரை ஒருவர் தொடாத விதமாக மற்றும் பொருட்களை பரிமாற்றம் செய்யாத தூரத்தைப் பேணும் விதத்தில் விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல். இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் உடல் மற்றும் உள அபிவிருத்திக்கு உறுதுணையாக இருக்கும். 
 
 ஏனைய பாடசாலை விளையாட்டுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்வது குறித்து எதிர்காலத்தில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
 
போக்குவரத்து செய்யவேண்டிய முறை: 
 நடந்து செல்லும் தூரம், துவிச்சக்கர வண்டியில் செல்லும் தூரம் அல்லது பெற்றோருடன் மோட்டார் சைக்கிலில் செல்லும் தூரத்தில் இருப்பின் நடந்து/ துவிச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிலில் பாடசாலைக்குச் செல்வது பாதுகாப்பானது. 
 
 தனிப்பட்ட வாகனத்தை பயன்படுத்துவதாயின் வாகன நெரிசல் ஏற்படாதவாறு பயன்படுத்துதல். 
 
 பொதுப் போக்குவரத்து அல்லது பாடசாலை பேரூந்து/ வேன் போக்குவரத்து சேவையினைப் பயன்படுத்துவதாயின், ஆசன எண்ணிக்கையில் மட்டும் பயணிக்கவும். 
 
 பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது, வாகனத்திற்குள் ஏறும்போது மற்றும் இறங்கிய பின்னர் கிருமி நீக்கித் திரவங்களைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொள்ளல். வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதைத் தவிர்த்தல். 
 
 வாகனத்தில் குளிரூட்டியை (Air Condition) பயன்படுத்தாது, ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக வைத்திருங்கள். 
 
 வாகனத்திற்குள் முகக்கவசத்தைக் நீக்குதல் மற்றும் உணவு வகைகள் பரிமாற்றம் செய்வதைத் தவிர்க்கவும். 
 
 வாகனத்தில் ஏறிய பின்னர் உங்களுக்கு உரிய ஆசனத்தில் அமர்வதோடு, வாகனத்திற்குள் தேவையற்ற விதத்தில் நடமாடுவதைத் தவிர்த்தல். 
 
 
 
ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்கள்:
 பாடசாலை ஆரம்பிக்கப்படும் முதல் நாளில் மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தவும், கொவிட் 19 இன் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் வகையிலும் ஒரு அன்பான வரவேற்பினை அளித்தல். 
 
 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் யாவும் சகல ஆசிரியர்களுக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் செல்லுபடியாகும் அதேவேளை, கைகளைக் கழுவுதல், உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியன அவர்களுக்கும் கட்டாயமானதாகும். 
 
 அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பாடசாலை சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான ஆசிரியரினால் நடைமுறைப்படுத்தப்படும் மேற்பார்வை வேலைத்திட்டத்திற்கு சகல ஆசிரியர்களும் முனைப்புடன் பங்குபற்றிப் பொறுப்பேற்க வேண்டும். 
 
 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் உளநல ஆரோக்கியம் தொடர்பாகவும் கவனம் செலுத்தி, சமூக இடைவெளியைப் பேணி உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். 
 
 பாடசாலைகயில் இருக்கும் காலப்பகுதியில் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், மாணவர்களின் முகக் கவசம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துதல். 
 
 விசேட தேவையுடைய மாணவர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துதல். 
 
 கிருமிநீக்கி கரைசல்களை பயன்படுத்தும்போது அவற்றை பாதுகாப்பாக கையாளுவது பற்றி மாணவர்களை தெளிவூட்டுதல். 
 
 தொலைக்கல்வியோடு ஒப்படும்போது நேரடி பாடசாலைக் கல்வியூடாக நல்ல பெறுபெறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை பெற்றோருக்கு தெளிவூட்டுவது ஆசிரியர்களின் பொறுப்பாகும். 
 
 
உளவள ஆலோசனை வழங்கும் ஆசிரியர்க்கான அறிவுறுத்தல்கள்:
 நீண்ட காலம் வீட்டிலிருந்து மன அழுத்தத்துக்குள்ளாகி வரும் மாணவர்களை கனிவுடன் வரவேற்பதற்காக பாடசாலை அதிபர் மற்றும் சக ஆசிரியர்களுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை தயாரித்தல் 
 
 பாடசாலை மாணவர்களின் உளவியல் சமூக நன்னடத்தையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள உளவியல் சமூக செயற்பாடுள் கையேட்டுக்கு அமைய நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தல் 
 
 அந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு சமாந்திரமாக பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் உளவியல் சமூக அபிவிருத்திக்கான நிலைபேரான திட்டமொன்றை செய்தல். 
 
 பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் பாடசாலைக்கு வரும் மாணவர்களை இனங்கண்டு தேவையான தலையீடுகளை செய்தல். 
 
 ஆபத்தான சுபாவம்கொண்ட பிள்ளைகளை இனங்கண்டு அவர்களை நேர்வழிபடுத்துவதற்குத் ஆலோசனை ரீதியான தலையீட்டினை செய்வதுடன் தேவையானபோது நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளல். 
 
 போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டிருக்கும் மாணவர்களை இனங்காண்பதற்கு பொருத்தமான திட்டமொன்றை தயாரித்தல். அவர்களை அந்நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கல். மேலும் தேவையானபோது நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ளல் 
 
 மாணவர்களின் பிரச்சினைகளை உளவில் விஞ்ஞான முறைமை ரீதியில் அணுகுவது தொடர்பாக சக ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாக அது தொடர்பில் அவர்களது கவனத்தை திருப்புதல் 
 
 பாடசாலையில் ஆலோசனை பிரிவை திட்டமிட்ட அடிப்படையில் நடாத்திச் செல்லல் மற்றும் பிரச்சினையுள்ள மாணவர்கள் தன்னை நோக்கி வரும்விதமான திட்டமொன்றை தயாரித்துக்கொள்ளல்.
 
 
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்: 
 பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போது, சவர்க்காரம் இட்டுக் கைகளைக் கழுவுதல் மற்றும் பாதணிகளைக் கிருமித் தொற்றுநீக்கத்திற்கு உட்படுத்துதல்.
 
 சமூக இடைவெளியைப் பேணுதல். 
 
 புத்தகங்கள், பேனைகள் போன்றவற்றைப் பகிர்வதைத் தவிர்த்தல். 
 
 பாடசாலையில் இருக்கும்போது, முகக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும். மேலும் மேலதிக முகக்கவசம் ஒன்றை புத்தகப்பையில் வைத்திருத்தல். 
 
 உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் தற்காலிகமாக முகக் கவசத்தைக் அகற்றி சுத்தமான பையொன்றில் வைத்தல் அல்லது அணிந்திருக்கும் சீருடையில் வைத்திருத்தல். 
 
 முகக்கவசங்களை ஒருபோதும் பொது இடங்களில் வைக்கக்கூடாது. 
 
 உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் தற்காலிகமாக முகக் கவசத்தைக் அகற்றிய பின்னர் மீண்டும் அணிய முன்னர் கைகளை நன்கு சுத்தமாக்கிக் கொள்ளல். மேலும் பிறரின் முகக்கவசங்களை ஒருபோதும் அணியக்கூடாது. 
 
 வகுப்பறையிலிருந்து சென்று மீண்டும் வரும்போது அல்லது மேற்பரப்பு ஒன்றை தொட்ட பின்னர் கைகளை நன்கு கழுவிக்கொள்ளல் வேண்டும். 
 
 உணவு மற்றும் தண்ணீர் போத்தலை பகிரக்கூடாது 
 
 பாடசாலையினுள் அல்லது பாடசாலைக்கு வெளியே ஒன்றுகூடுவதை தவிர்த்தல் 
 
 பாடசாலை விட்டவுடன் உடனடியாக வீடு நோக்கி விரைதல் 
 
 பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்தல். 
 
 தான் பயன்படுத்தும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வகுப்பாசிரியருக்கு வழங்குதல் 
 
 தங்களுக்கு ஏதேனும் நோய், காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படின், அந்நிலை குணமாகும் வரை பாடசாலைக்கு வருவதைத் தவிர்த்தல். 
 
 தங்கள் வீட்டில் யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் 19 நோயாளியுடன் தொடர்புபட்டிருந்தால் சுகாதார அறிவுறுத்தல்களின் படி மீள அறிவிப்பு வரும்வரை பாடசாலைக்கு வராதிருத்தல். 
 
 பாடசாலையில் அல்லது அதற்கு வெளியில் தேவையற்றவிதத்தில் எப்பொருளையும் தொடுவதைத் தவிர்த்தல். 
 
 
அதிபருக்கான அறிவுறுத்தல்கள்:
 பாடசாலை அதிபரினால் பாடசாலை முன்னாயத்த செயற்பாடுகள் ஆலோசனைக் கோவையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டு அது பற்றி சம்பவத்திரட்டில் குறிப்பிடப்படல். 
 
 கொவிட் 19 பரவலைத் தவிர்ப்பதற்காக அதிபரின் தலைமையில் பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுக் குழுவை முனைப்பாக முன்னெடுத்தல் மற்றும் சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்துக்குப் பொறுப்பான பிரதி அதிபர்/ ஆசிரியரொருவரின் தலைமையில் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல். 
 
 கொவிட் 19 பரவலைத் தவிர்க்கும் வேலைத்திட்டத்துக்காக கல்வி அமைச்சின் தலையீட்டில் பெற்றுக்கொடுக்கப்பட்ட நிதி, பொருட்கள் அல்லது உபகரணங்கள் தொடர்பாக மற்றும் பாடசாலையை பாதுகப்பாக ஆரம்பித்தல் தொடர்பில் பெற்றுக் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக உரியவாறு பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களை அறியச் செய்வதினூடாக அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தல். 
 
 பாடசாலையை ஆரம்பிக்க முன்னர் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வதற்காக மேற்கொண்ட ஆவணங்களைப் பூர்த்திசெய்து அதிபரின் கையொப்பத்துடன் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைப்பதுடன் அதன் பிரதிகளைப் பாடசாலையில் வைத்திருத்தல்.  
 
 கொவிட் 19 நோய்யறிகுறி காணப்படும் பிள்ளையொன்று இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியூடாக வலய மட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பிள்ளை நோய்/ சரும நோய் தொடர்பான வைத்திய நிபுணரிடத்தில் காண்பித்தல் வேண்டும்.  பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவை என உணரும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும். 
 
 பாடசாலையை ஆரம்பித்த பின்னர் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொண்ட மதிப்பீட்டு ஆவணங்களை அன்றாடம் பூர்த்தி செய்யும் பணியை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து வாரத்துக்கு ஒரு தடவை அதிபரின் கையொப்பத்துடன் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்குதலும் பிரதிகளைப் பாடசாலையில் வைத்துக்கொள்ளலும்.  
 
 மாணவர்களை சுகாதாரப் பாதுகாப்புடன் பாடசாலைக்கு அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகப் பெற்றோர்களை தெளிவூட்டுவதற்கு திட்டமொன்றை உருவாக்குதல் 
 
 இருமல், தடிமன் அல்லது காய்ச்சல் போன்ற நோயறிகுறிகள் இருக்குமாயின் அல்லது வீட்டில் வேறொரு உறுப்பினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் அல்லது குடும்ப உறுப்பினரின் அல்லது பிள்ளையின் பி.சீ.ஆர் பரிசோதனை/ துரித பிறபொருளெதிரிப் பரிசோதனை (Rapid Antigen Test) மேற்கொள்ளப்பட்டிருப்பின் அந்த அறிக்கைக்கு அமைய சுகாதார அறிவுறுத்தல் பெற்றுக் கொள்ளப்படும் வரை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமெனப் பெற்றோர்களை அறிவுறுத்தல் 
 
 சுகயீன நிலை காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக அன்றாட கல்வி நடவடிக்கைகள் தவறவிடப்படாதவாறு முறைமையொன்றைத் தயார் செய்வதினூடாக பிள்ளையை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்யப் பெற்றோர்களைத் தூண்டுதல் 
 
 பாடசாலைக்கு மாணவர்கள் வரும் வண்டிகள் மற்றும் வேன்கள் தொடர்பாக தகவல்களைச் சேகரித்துக்கொள்வதற்கான திட்டமொன்றைத் தயார்செய்தல் 
 
 அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களைத் தொற்றுநீக்கம் செய்தல், கைப்பிடிகள், கதவுத் திருகிகள் என்பவற்றை அடிக்கடி தொற்றுநீக்கம் செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
 
 
 
பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்கள்: 
 இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 வீட்டில் வேறு யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் தங்கள் பி;ள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 வீட்டிலுள்ள ஒருவர் அல்லது பிள்ளைக்கு பீ.சீ.ஆர் (PCR) பரிசோதனை/ துரித பிறபொருளெதிரி சோதனை (Rapid Antigen Test) செய்யப்பட்டிருந்தால் அவ் அறிக்கையின்படி சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரை பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல். 
 
 தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பாதிருத்தல். 
 
 தங்கள் பிள்ளை பயன்படுத்தும் உபகரணங்கள் (பாடசாலைப் பை/ தண்ணீர்ப் போத்தல்/ சாப்பாட்டுப் பெட்டி/ புத்தகங்கள் போன்றன) சுத்தப்படுத்துதல் அல்லது வெயிலில் இட்டு உலர்த்துதல். 
 
 தினந்தோறும் பிள்ளையின் ஆடைகள் மற்றும் பாதணிகளைச் சுத்தம் செய்தல். 
 
 பாடசாலைக்குச் சென்று திரும்பியதும் பிள்ளையின் கைககளைக் கழுவுதல் மற்றும் பிள்ளையைச் சுத்தமாக இருக்கச் செய்தல். 
 
 பாடசாலை விட்டு வந்ததும் காலணிகளை வெளியே கழற்றிவிட்டு உள்ளே வருதல்  பாவித்த முகக் கவசங்களை எரித்தல் 
 
 வீட்டில் சமைத்த உணவுகளை மாத்திரம் பிள்ளைக்குக் கொடுப்பதோடு, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிள்ளை பயன்படுத்தும் பொருட்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களை வழங்குதல். 
 
 பாடசாலை விட்டதும் பிள்ளையை வீட்டிற்கு வரும்படி அறிவுறுத்தல் வழங்குதல்/ அழைத்துக்கொண்டு வருதல். 
 
 பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்குச் செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்துச் சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்குதல். 
 
 தங்கள் பிரதேசத்தில் சுகாதாரம் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால் அது தொடர்பாக அதிபருக்கு அறிவிப்பதன் மூலம் பாடசாலைக்கு எற்படக்கூடிய பாதகமான விளைவுகளைக் குறைக்க உதவுதல். 
 
 
 
மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்குபவர்களுக்கான அறிவுரைகள்: 
 இருவர் அமரும் ஆசனங்களில் எப்போதும் இருவரை மாத்திரம் அமரச்செய்தல் மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கமைவாக மாத்திரம் மாணவர்களை அழைத்து வருதல். 
 
 பாடசாலை வாகனங்களில் மாணவர்கள் ஏறும் போதும் இறங்கும்போதும் கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக தொற்றுநீக்கி திரவங்களை வைத்தல். 
 
 முற்றிலும் குளிரூட்டப்பட்ட வாகனமாயின் மாணவர்களை அழைத்து வரும் போது குளிரூட்டியை நிறுத்தி யன்னல்களை திறந்து காற்றோட்டம் கிடைக்கப்பெறச் செய்தல். 
 
 மாணவர்கள் வாகனத்தினுள் முகக்கவசங்களை அகற்றல், உணவுகளை பரிமாறல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடாதிருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல். 
 
 தினமும் ஒரே மாணவர் குழுவினை அழைத்துவருதல். ஒரே பாடசாலை மாணவர்களை ஒரு வாகனத்தில் அழைத்துவருதல். 
 
 வாகனத்தில் தினமும் வருகை தரும் மாணவர்களின் தகவல்களைப் பேணிவருதல். 
 
 தினமும் வருகை தரும் மாணவர்களை பதிவு செய்யும் இடாப்பு ஒன்றை பேணுதல். 
 
 பாடசாலை மாணவர்கள் வரும் வாகனங்களில் வெளி ஆட்களை அழைத்துவராதிருத்தல். 
 
 காலையில் மாணவர்கள் வாகனத்தில் ஏறும் போது அவர்களுக்கு ஏதேனும் சுகவீன நிலைமை இருக்கின்றதா என கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளல். 
 
 தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருக்கும் மாணவர்களை அழைத்துவராதிருத்தல். 
 
 காலையில் மாணவர்கள் வாகனத்திலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர் வெளி ஆட்களை வாகனங்களில் ஏற்றாதிருத்தல். 
 
 வாகன சாரதி மற்றும் நடாத்துனர் எப்போதும் முகக்கவசங்களை அணிந்திருத்தல். 
 
 தினமும் காலையில் மாணவர்கள் வாகனத்தில் ஏறும் முன்னரும் மாலையில் ஏறும் முன்னரும் அடிக்கடி தொடுகைக்கு உட்படும் இடங்களை முறையாக சுத்தப்படுத்தல். 
 
 அவசர நிலைமைகளின் போது அழைப்பதற்கான தொலைபேசி இலக்கங்களை வாகனங்களில் காட்சிப்படுத்தல். 
 
 கோரோனா நோய் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களிலிருப்பவர்களை பணியில் அமர்த்தாதிருத்தல். 
 
 இயன்றவரையில் ஒரே சாரதி மற்றும் நடாத்துனரைக் கொண்டு சேவையை வழங்குதல். 
 
 சரியான தகவல்களை வழங்காத பணியாளர்களை வேலைக்கமர்த்தாதிருத்தல். 
 
 தினமும் பணியாளர்களை மாற்றாதிருத்தல். 
 
 சாரதி அல்லது நடாத்துனர் சுகயீனமுற்றிருப்பின் அவர்களை பணிக்கமர்த்தாதிருத்தல். 
 
 சாரதி, நடாத்துனர் காலையில் வாகனத்தில் ஏறும் முன்னர் அவர்களது உடல் வெப்பநிலையை பரீட்சிப்பதற்கான நடைமுறையை உருவாக்கல். 
 
 சாரதி மற்றும் நடாத்துனர் வெற்றிலை மெல்லுவதற்காக முகக்கவசங்களை அகற்றாதிருப்பதற்கான அறிவுரைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல். 
 
 முச்சக்கர வண்டிகளில் சமூக இடைவெளி பேணத்தக்க முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான மாணவர்களை மாத்திரம் அழைத்து வருதல். 
 
 சேவையில் ஈடுபடும் பாடசாலை போக்குவரத்துச் சேவை சாரதிகள் மற்றும் நடாத்துனர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருத்தல் வேண்டும்.
 
 
பாடசாலை ஆரம்பித்ததன் பின்னர் சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலையை நடாத்துதல்:
 நீண்ட நாட்களுக்கு பின்னர் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களை இனிதாக வரவேற்பதுடன், அவர்களின் உளவியல் நிலைய உயர்த்துவதற்கு உளவியல் சுகாதார செயற்பாடுகளை முன்னெடுத்தல். 
 
 வீட்டில் இருந்த காலப்பகுதியில் நிகழ்நிலை கற்றல் தொடர்பாக மாணவர்களை வினவாதிருத்தல். இலகுவான மட்டத்திலிருந்து கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு சகல ஆசிரியர்களையும் அறிவுறுத்தல். 
 
 எப்போதும் மாணவர்கள் மத்தியில் சாந்தமான மனநிலையைப் பேணுவதை உறுதி செய்வதற்காக உளவிழிப்புணர்வு அபிவிருத்தி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல். 
 
 பாடசாலைக்கு வரும்போதும், பாடசாலையில் இருக்கும்போதும் மற்றும் பாடசாலையிலிருந்து வெளிச்செல்லும் வழியில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தல். 
 
 பாடசாலைக்குள் நுழையும் போது சகல மாணவர்களதும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் வகுப்பறையில் உடல் வெப்பநிலையை மீண்டும் பரீட்சித்தல். 
 
 மாணவர்கள் பாடசாலையினுள் நுழையும்போது கைகளைக் கழுவுவதை கட்டாயப்படுத்தல் மற்றும் அச்செயற்பாடு சரியாக மேற்கொள்ளப்படுகின்றதா என தினமும் மேற்பார்வை செய்தல். 
 
 மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளி பேணுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். 
 
 மாணவர்கள் ஒன்றுகூடுவதை; தடுப்பதற்காக வகுப்பு மட்டத்தில் பொருத்தமான நேரத்தில் இடைவேளை வழங்குதல். 
 
 வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவு, நீர் மற்றும் ஏனைய உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தடுத்தல். 
 
 உணவுவேளையின்போது முகக்கவசத்தை கழற்றுவதால் மாணவர்கள் மத்தியில் இடைவெளியைப் பேணுதல். உணவு இடைவேளை நேரத்தைக் குறைத்தல். 
 
 ஒருவருக்கொருவர் ஸ்பரிசம் செய்யும்படியான விளையாட்டுக்களில் ஈடுபடுவதனை தவித்தல் மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளை சமூக இடைவெளி பேணி நடாத்துதல். 
 
 அவசர நிலைமையின் போது தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து அலுவலகத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக ஊழியர்களை தெறியப்படுத்தல். 
 
 கொவிட் 19 நோய்யறிகுறி காணப்படும் பிள்ளையொன்று இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியூடாக வலய மட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பிள்ளை நோய்/ சரும நோய் தொடர்பான வைத்திய நிபுணரிடத்தில் காண்பித்தல் வேண்டும் பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவை என உணரும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும். 
 
 சகல கல்வி வலயத்துக்கும் சிறுவர் நோய் விஷேட வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு சிறுவர்நோய் விஷேட வைத்தியர்களின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையால், அவர்களைத் தொடர்புகொண்டு தேவையான தயவல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளை காண்பித்தல் வேண்டும். மேலும் குறித்த வைத்தியர்களின் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்தல் வேண்டும். 
 
 பாடசாலை அதிபரின் தலைமையில் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டுக் குழுவை செயற்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் ஊழியர்களுக்கு பொறுப்புக்களை வழங்குதல். 
 
 பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பன இடமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பெற்றோர், பாடசாலை சமூகத்தின் மத்தியில் அதுதொடர்பான நம்பிக்கையை கட்டியெழுப்புதல். 
 
 பாடசாலைகளை நடாத்திச் செல்லும்போது சுகாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்யும் மதிப்பீட்டு ஆவணங்களை சரியாக பேணிவருதல்.  
 
 காய்ச்சல், மூச்சுக்கோளாறுகள் காணப்படும் பிள்ளைகள்/தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள்/ கொவிட் நோய் பரிசோதனை செய்யப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளை சுகாதார வழிகாட்டல்கள் கிடைக்கும்வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரை அறிவுறுத்தல். 
 
 மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல். 
 
 கொவிட் 19 வைரஸ் தொடர்பான ஏதேனும் ஒரு நிலைமை காரணமாக வீட்டில் தங்கியிருக்கும் மாணவர்களின் அன்றாட கற்றல் நடவடிக்கைகளில் தடையின்றி ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தல். 
 
 மாணவர்களை உயிர் பாதுகாப்பு குமிழி முறைமைக்கு அமைய பாடசாலைக்கு அழைத்தல் வேண்டும். (ஒரே மாணவர் குழு ஒரே நாளில் சந்திக்குமாறு அழைத்தல்) 
 
 மாணவர்களை எப்போதும் பாராட்டுவதினூடாக அவர்களை உளரீதியாக வலுவூட்டுதல் 

 விசேட சந்தர்ப்பத்தில் 1390 க்கு அழைத்து தேவையான அறிவுரைகளைப் பெறுதல்.
 
Source: Ministry of Education.

 
இவை மாத்திரமன்றி இன்னும் பல விடயங்களும் விளக்கமாக தரப்பட்டுள்ளன. எனவே இந்த கையேட்டை முழுமையாக இங்கே பார்வையிடலாம். 

 
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021 பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல் - 2021 Reviewed by Irumbu Thirai News on November 05, 2021 Rating: 5

Vacancy (University of Peradeniya)

November 04, 2021


University of Peradeniya. 

Postgraduate Institute of Agriculture 

Post: Course Coordinator (Full Time) 

Remuneration: 54,600/- + Cost of living allowance 

Closing date: 15-11-2021 


 Source: Sunday Observer

Vacancy (University of Peradeniya) Vacancy (University of Peradeniya) Reviewed by Irumbu Thirai News on November 04, 2021 Rating: 5

Vacancy (People's Bank)

November 04, 2021

Vacancy (People's Bank) 
Post: Store Keeper 
Age Limit: 40 - 56 
Closing date: 15-11-2021.

 source: Sunday Observer
Vacancy (People's Bank) Vacancy (People's Bank) Reviewed by Irumbu Thirai News on November 04, 2021 Rating: 5

வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் (கிழக்கு மாகாணம்) - 2022

November 03, 2021

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
விண்ணப்ப முடிவு திகதி: 15-11-2021. 
 
இடமாற்றம் தொடர்பான விபரங்கள் அடங்கிய கடிதத்தைப் பார்வையிடவும் பிதிவிறக்கம் செய்யவும்.. 

 
விண்ணப்பத்தைப் பார்வையிடவும் பிதிவிறக்கம் செய்யவும்..

வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் (கிழக்கு மாகாணம்) - 2022 வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் (கிழக்கு மாகாணம்) - 2022 Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

November 03, 2021

01-11-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 01.11.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

வட மாகாண பாடசாலைகளுக்கும் தீபாவளி விசேட விடுமுறை!

November 03, 2021

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட மாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(5) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். 
 
ஏற்கனவே மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் நாளை மறுதினம் வழங்கப்படும் விசேட விடுமுறைக்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண பாடசாலைகளுக்கும் தீபாவளி விசேட விடுமுறை! வட மாகாண பாடசாலைகளுக்கும் தீபாவளி விசேட விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!

November 03, 2021

பேஸ்புக்கானது அதன் கூட்டு நிறுவனத்தின் பெயரை META என்று அண்மையில் மாற்றியது. தற்போது பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம் இடம்பெற்றுள்ளது. 
 
அதாவது  பேஸ்புக்கில் உள்ள Facial Recognition என்ற வசதியை தடை செய்வதற்கு META நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

META வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FB யில் உள்ள Facial Recognition தொழில்நுட்பம் காரணமாக பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டிருந்தன.   

எனவே குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த வசதி நீக்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!  ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள்!

November 03, 2021

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(5) விசேட விடுமுறை வழங்க அந்த மாகாண ஆளுநர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டே இந்த விசேட விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எவ்வாறாயினும் நாளை மறுதினம் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்காக 

பிறிதொரு தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன. 
 
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பிரிவு முதல் கட்டத்திலும் 200 மாணவர்களுக்கு கூடிய ஆரம்ப பிரிவு இரண்டாம் கட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தரம் 10 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களை ஆரம்பிக்கும் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 8ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
தரம் 10 - 13 வரையான வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான சுற்றுநிருபம் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. முழுவிபரம்..
வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள்! வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்!

November 03, 2021

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திட்டத்தின்கீழ் 3வது கட்ட ஆரம்பத்திற்கான அறிவிப்பும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான சுற்றறிக்கையும் வெளியாகியுள்ளது. 
 
அந்த வகையில் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 

எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
எனவே தரம் 10 தொடக்கம் 13 வரையிலான வகுப்புகளுக்குரிய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான கல்விசார் ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். 
 
மேலும் சகல கல்விசாரா ஊழியர்களும் சேவைக்கு அழைக்கப்பட வேண்டும். 
 
வகுப்பறை முகாமைத்துவ முறையின் கீழ் உரிய முறையைப் பயன்படுத்தி மாணவ-மாணவியர்கள் அழைக்கப்படுவதோடு (பகுதி பகுதியாக) இணையவழி கற்றல் முறையை பயன்படுத்தி, 

பாடசாலைக்கு சமூகமளிக்காத மேற்படி தரங்களை சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு குறித்த பாடப்பகுதி நிறைவு செய்யப்பட வேண்டும். இதற்கு தேவைப்படும் வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 09/2021 மற்றும் 09/2021 (1) என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிதி ஒதுக்கீடுகளை பயன்படுத்தலாம். 
 
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் ஒரு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் உள்ள உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிப்பது கட்டாயமில்லை என்பதுடன் வேறு நோய்த் தாக்கத்திற்குள்ளானவர்களை அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் சேவைக்கு அழைக்கலாம். எவ்வாறாயினும் இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் வேண்டுகோள் கடிதத்தையும் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். 
 
பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் பாடசாலை சீருடை கட்டாயமாக்கப்படவில்லை. அதனடிப்படையில் பொருத்தமான 

உடையில் பாடசாலைக்கு வருவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்! தரம் 10 - 13 வரையான தரங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக வெளியான சுற்றுநிருபம்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தில் பெற்றுக்கொள்ளல்...

November 02, 2021

வாக்காளர்கள் தமக்கு தேவையான வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். 
 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்ததளத்திற்குள் பிரவேசித்து இலவசமாக இதனைப் பெறலாம். 
 
குறித்த இணையத்ததளத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தில் பெற்றுக்கொள்ளல்... வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தில் பெற்றுக்கொள்ளல்... Reviewed by Irumbu Thirai News on November 02, 2021 Rating: 5
Powered by Blogger.