28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-07-2023

July 29, 2023

 
28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (29-07-2023 - 11:00PM) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 

 
Click the link below for Gazettes.

 



Previous:
 
 
 
28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-07-2023 28-07-2023 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 28-07-2023 Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள்

July 29, 2023


வெளிநாடு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்புகள் தொழிற்பயிற்சி அதிகார சபையினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. 

50 வீதத்திற்கும் அதிகமான பாடநெறிகள் ஒவ்வொரு நிலையத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள 206 தொழிற் பயிற்சி நிலையங்களில் 107 நிலையங்கள் இதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஊக்குவிப்பு பணிப்பாளர் சேனாரத்ன தெரிவித்துள்ளார். 4000 பேரை தொழிலில் அமர்த்த வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

குறித்த பயிற்சிப் பாடநெறிகள் மாலை வேளையிலும் வார இறுதி நாட்களிலும் நடைபெறுவதால், தொழிலுக்கு செல்வோர் கூட இதில் பங்கேற்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை 0117 277 888 மற்றும் 0117 270 270 போன்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous:



வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள் Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!

July 29, 2023


இலங்கையில் அரச துறையில் பணியாற்றும் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. 

இது தொடர்பாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. 

இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம், இது தொடர்பான மனித வள அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து 611 மில்லியன் ரூபா மானியமும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous:
அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு! அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு! Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5

24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

July 29, 2023

 
24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை இங்கு தருகிறோம். 
 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் 24-07-2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் Reviewed by Irumbu Thirai News on July 29, 2023 Rating: 5
Powered by Blogger.