வெளியானது ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தண்டனை விபரங்கள்!
Irumbu Thirai News
September 22, 2026
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (22) அறிவித்துள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.
அதேவேளை, போதிய சாட்சியங்கள் இன்மையால் 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை, இனவாத கருத்துகளைப் பரப்பியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
269 பேர் உயிரிழந்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இத்தாக்குதல் வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்தன.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாய்கள் மற்றும் நடமாடும் சிசிடிவி வாகனங்கள் அடங்கிய பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர்:
1. மொஹம்மது நௌஃபர் மௌலவி
2. மொஹமட் சரீப் ஆதம் லெப்பை (கபூர் மாமா)
3. ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான்
4. மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
5. மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக்
6. மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான்
7. மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன்
8. அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ்
9. மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித்
10. அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி
11. ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர்
12. மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன்
13. மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ்
14. ராசிக் ரசா ஹுசைன்
15. கச்சி மொஹம்மது மொஹம்மது ஜெம்சித்
குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 பேர்:
1. மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன்
2. மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப்
3.ரஷீட் மொஹமட் இப்ராஹிம்
4. செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம்
5. மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான்
6. மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி
7. மொஹமட் அமீர் மொஹம்மது அயதுல்லா
8. மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி (ஹில்மி)
9. மொஹமட் அக்ரம் அஹ்கம்
(குறிப்பு: வழக்கின் 17ஆவது சந்தேகநபரான யாசிம் பாவா அப்துல் ரவூப் விசாரணைகளின் போதே ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.)
Source: அததெரண.
வெளியானது ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தண்டனை விபரங்கள்!
Reviewed by Irumbu Thirai News
on
September 22, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 22, 2026
Rating:
