Results for Corona Virus

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!

August 06, 2023


இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இங்கிலாந்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிகமானோர்க்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை பெருமளவான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இது தொடர்பாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டுள்ளது. 

 இந்த வைரஸானது இங்கிலாந்தில் 07 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Eris என்பது கிரேக்க தெய்வத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.



Previous:


இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 06, 2023 Rating: 5

புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!

July 07, 2022


புதிய வகையான N95 முகக் கவசத்தை அமெரிக்காவின் ரென்சீலர் பொலிடெக்னிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை. 


இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. 


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.


புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on July 07, 2022 Rating: 5

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்!

March 06, 2022

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சால் கல்வியமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக, சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது. 
 
இதற்கமைய சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுவதுடன், வகுப்பில் ஒரு மாணவரே ஏனைய சகல மாணவர்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை சுகாதார பாதுகாப்புடன் கொண்டுவந்து கொடுக்க  வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதி: ஒருவரே எல்லோருக்கும் வாங்க வேண்டும்! Reviewed by Irumbu Thirai News on March 06, 2022 Rating: 5

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

February 23, 2022

இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது தமது துறைக்குரிய அனைத்து பாடங்களுக்கான பரீட்சைகளும் நிறைவடைந்திருந்தால் குறித்த மாணவர்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோசைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இது தொடர்பில் தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவிக்கையில், 
 
தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றது. 12 - 16 வயதுக்குட்பட்ட 745,000 மாணவர்களுக்கும் 16 - 19 வயதுக்குட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்கும் தடுப்பூசி எவ்வித பாதிப்பும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. 
 
இம்முறை நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. எனவே அவ்வாறு பரீட்சைகள் நிறைவடைந்த மாணவர்கள் எந்தவொரு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on February 23, 2022 Rating: 5

கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு!

February 12, 2022

கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை எப்போது முடிவுக்கு வரும் என்ற விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பெட்ரஸ் அதனோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். 
 
அதாவது மொத்த உலக மக்கள் தொகையில் 70 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுமாயின் கொரோனாவின் தீவிரத்தன்மை குறையும் என அவர் தெரிவித்துள்ளார். 
 
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு அது அடையப்பட்டால் கொரோனா பரவலின் தீவிரத்தன்மை நிச்சயம் முடிவுக்கு வரும் எனவும் இது எங்கள் கைகளிலேயே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு! கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on February 12, 2022 Rating: 5

கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு!

February 10, 2022

கொரோனா வைரஸ் ஆரம்பமானதிலிருந்து அதன் ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் அதன் தன்மைகள் ஆயுட்காலம் போன்ற பல விடயங்கள் பல்வேறு மட்டங்களில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
எனவே அந்த வகையில் அண்மையில் வெளியான ஆய்வு ஒன்று தொடர்பாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
 
அதாவது கொரோனா பாதிப்புக்குள்ளான ஒருவரின் உடலில் 05 நாட்களுக்கு மட்டுமே வைரஸ் தொழிற்பாட்டில் இருக்கும் என இது தொடர்பாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு! கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியான ஆய்வு! Reviewed by Irumbu Thirai News on February 10, 2022 Rating: 5

நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்!

February 08, 2022

இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் யாருக்காவது நோய் நிலைமைகள் காணப்பட்டால் அவர்கள் அவர்களுக்கு உரித்தான பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
 
தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்லலாம். ஆனால் தொற்றுறுதியானவர்கள் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள விஷேட பரீட்சை நிலையத்திற்கே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார். 
 
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்! நோய் நிலைமை காணப்பட்டால் உரிய பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம்! Reviewed by Irumbu Thirai News on February 08, 2022 Rating: 5

உயர்தர பரீட்சை எழுதும் சிறைக் கைதிகள்!

February 07, 2022

2021 ம் ஆண்டு நடைபெற வேண்டிய கல்வி பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சை கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டு இன்றைய தினம் ஆரம்பமானது. எதிர்வரும் 5ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறும். 
 
2,437 பரீட்சை நிலையங்களில் மொத்தமாக 345,242 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதில் 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். 
 
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவிக்கையில், 
 
பரீட்சை ஆரம்பமாவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு செல்ல வேண்டும். தேசிய அடையாள அட்டை, பரீட்சை அனுமதி அட்டை, பேனா பென்சில் போன்ற எழுதுகருவி பொருட்கள், முக கவசம் (Face Mask), தொற்று நீக்கி திரவம் (Sanitizer) போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். 
 
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக தமது பரீட்சை நிலையத்தில் விசேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு சென்று பரிட்சை எழுத வேண்டும். 
 
மேலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பரீட்சார்த்திகள் வைத்தியசாலையிலிருந்தே பரீட்சைக்கு தோற்ற வேண்டும். அவர்களுக்கு அங்கு பரீட்சை எழுத விஷேட நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களினதும் ஏனையவர்களினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவர்கள் அந்த விஷேட மத்திய நிலையத்தில் பரீட்சை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இதேவேளை பரீட்சார்த்திகள் யாருக்காவது நோய் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் அன்றைய தினம் தமது பரீட்சை நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட இடத்தில் பரீட்சை எழுத வேண்டும். அன்றைய நாள் பரீட்சை முடிவடைந்த பின்னர் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விசேட நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற வேண்டும். 
 
மேலும் பரீட்சை காலங்களில் மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபையிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போதைய மின்சார நெருக்கடியை கருத்திற்கொண்டு எமக்கு இது தொடர்பில் கோரிக்கையை மட்டுமே முன்வைக்கலாம். மின்வெட்டை அமல்படுத்த வேண்டாம் என எந்தவித உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். 
 
இதேவேளை இம்முறை சிறைக்கைதிகள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவது தொடர்பான தகவலையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்த 43 மற்றும் 46 வயதுடைய கைதிகள் இருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 
 
புதிய மகசீன் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலேயே இவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
உயர்தர பரீட்சை எழுதும் சிறைக் கைதிகள்! உயர்தர பரீட்சை எழுதும் சிறைக் கைதிகள்! Reviewed by Irumbu Thirai News on February 07, 2022 Rating: 5

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை!

January 29, 2022

மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் பீடாதிபதி M.I.M. NAWAS தெரிவித்துள்ளார். 
 
தற்போதைய நிலையில் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
எனவே ஆசிரிய மாணவர்களின் மற்றும் பெற்றோரின் விருப்பத்திற்கு அமைய கல்லூரியிலிருந்து வெளியேறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை! மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு சுகயீன விடுமுறை! Reviewed by Irumbu Thirai News on January 29, 2022 Rating: 5

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்..

January 20, 2022

நாளை மறுதினம் நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விவரங்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
வழமைக்கு மாற்றமாக ஞாயிற்றுக்கிழமை அல்லாமல் சனிக்கிழமை இம்முறை பரீட்சை நடைபெறுகிறது. 
 
முதலாவது வினாப்பத்திரம் காலை 9:30 மணியிலிருந்து 10:30 வரை நடைபெறும். இரண்டாவது வினாப்பத்திரம் காலை 11 மணியிலிருந்து 12:15 மணி வரை நடைபெறும். 
 
இம்முறை 2943 பரீட்சை நிலையங்களில் மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் பரிட்சைக்கு தோற்றுகின்றனர். 
 
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பிரத்தியேக பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்காக அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்கள்.. Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள்

January 20, 2022

நாளை மறுதினம்(22) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் முக்கியமான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன வழங்கியுள்ளார். 
 
இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 
 
அவர் தெரிவித்ததாவது, 
 
பரீட்சை நெருங்கும் இந்த தருணத்தில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் வகையிலோ அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலோ பெற்றோர்கள் நடந்து கொள்ளக்கூடாது. 
 
முக்கியமாக 190 க்கும் அதிகமான புள்ளிகளை பெற வேண்டுமென மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க கூடாது. 
 
மேலும் பரீட்சை தினம் அன்று காலை வேளை அதிகமாக உண்ணக் கொடுக்க வேண்டாம். அவ்வாறு அதிகமாக உண்ணக் கொடுக்கும் பட்சத்தில் மாணவர்கள் உரிய முறையில் பரீட்சை எழுத முடியாமல் நித்திரை அல்லது வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். 
 
அதேவேளை தண்ணீர் போத்தல், அடிமட்டம், பென்சில், தொற்று நீக்கி திரவம் (Sanitizer) உள்ளிட்ட முக்கியமான பொருட்களை கட்டாயம் கொடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் பரீட்சை மேற்பார்வையாளரிடம் கூறி வேறு மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களை பெறும் போது நேரம் வீணாவதோடு தேவையற்ற அசௌகரியங்களும் ஏற்படலாம். 
 
மேலும் சகலரும் உரிய சுகாதார விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா!

January 18, 2022

ஒரே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பிரதேச பாடசாலை ஒன்றிலேயே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து குறித்த வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் உயிர் குமிழி (Bio Bubble) முறைமையின் கீழ் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! ஒரே பாடசாலையைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா! Reviewed by Irumbu Thirai News on January 18, 2022 Rating: 5

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு

January 15, 2022

கொரோனா பரவலானது பெரும்பாலும் எல்லா நாடுகளினதும் இயல்பு நிலையை பாதித்துள்ளது. 
 
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 
தடுப்பூசி செலுத்தும் பணிகளை மும்முரமாக செய்துவரும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 
 
இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டொடி ரிஹோ டுடர்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அதாவது தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே 

வரக்கூடாது அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த அறிவித்தலின் படி செயற்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். எனவே அதிகாரிகள் தற்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பான விபரங்களை மும்முரமாக திரட்டி வருகின்றனர். 
 
இதேவேளை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த கூடாது என்ற விடயம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

January 13, 2022

கொரோனா பரவல் காரணமாக கல்வியியற் கல்லூரி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் சில கல்வியற்கல்லூரி கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டன. 
 
இந்நிலையில் கல்வியற் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று(12) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 
 
அந்த வகையில் நாளை மறுதினம்(15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 18ஆம் திகதி முதல் 

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்வியியல் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5

பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி!

January 05, 2022

கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பாடசாலைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பகுதியளவிலேயே பாடசாலைக்கு அழைக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்திச் செல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். 
 
அந்தவகையில் திங்கட்கிழமை முதல் சகல மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்படுவர். பகுதி அளவில் மாணவர்கள் அழைக்கப்படும் பொழுது மாணவர்களின் கல்வி நிலை பாரிய அளவில் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு!

January 04, 2022

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் திரிபானது தற்போது உலகம் பூராவும் பரவிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் இந்த ஓமிக்ரோன் வைரஸ் திரிபை விட அதிக அளவில் பரவும் தன்மை கொண்ட வைரஸ் திரிபை 

பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
மத்திய ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கே முதன்முறையாக இந்த புதிய உருமாறிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் இதே திரிபு கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய திரிபுக்கு I.H.U. B.1.640.2 என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு!

December 18, 2021

தற்போது ஓமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருகின்றது. விசேடமாக ஐரோப்பாவில் இதன் தீவிரம் அதிகரித்திருக்கின்றது. 
 
இந்நிலையில் பூஸ்டர் (செயலூக்கி) தடுப்பூசி தொடர்பான ஆய்வு ஒன்றை பிரித்தானியா ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது. 
 
அதாவது ஓமிக்ரோன் திரிபினால் ஏற்படக்கூடிய 

சுமார் 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை இந்த பூஸ்டர் தடுப்பூசி தடுக்கும் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த செயலூக்கி தடுப்பூசி காரணமாக ஓமிக்ரோன் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவது பாரிய அளவு குறைவடைந்துள்ளதாகவும் அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு! பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான ஆய்வு! Reviewed by Irumbu Thirai News on December 18, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

December 12, 2021

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார். 
 
அதாவது தற்போதைய புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் (ஓமிக்ரோன்) 

பாதிப்பு ஏற்படாவிட்டால் சகல பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
சில பல்கலைக்கழகங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். எனவே அவர்கள் எல்லோரையும் அழைக்கும் பட்சத்தில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இடையே கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. எனவே தற்போதைய வைரஸ் திரிபு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் எதிர்வரும் ஜனவரியில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும். எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் 25 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்!

December 12, 2021
 

தற்போது வேகமாக பரவி வருகின்ற ஓமிக்ரோன் வைரஸ் திரிபிலிருந்து பாதுகாப்பு பெறும் வழியை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. 
 
அதாவது அமெரிக்க தயாரிப்பான பைஸர் தடுப்பூசியை மூன்று முறை பாவித்தால் ஓமிக்ரோன் வைரஸிடமிருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கும் என இஸ்ரேலிய மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
ஒமிக்ரோன் வைரஸ் தொடர்பில் கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றில், 
 
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் ஓமிக்ரோன் திரிபிலிருந்து முக்கிய பாதுகாப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது அந்த விடயத்தை இஸ்ரேல் மருத்துவ ஆய்வாளர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு மேலும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! ஓமிக்ரோனிடமிருந்து பாதுகாப்பு பெறும் வழியைக் கண்டுபிடித்தது இஸ்ரேல்! Reviewed by Irumbu Thirai News on December 12, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

December 10, 2021

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
அந்த வகையில் 16-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக 

அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 10, 2021 Rating: 5
Powered by Blogger.