Results for competitions

அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கக் கலைவிழா - 2024 (Circular & Application)

March 03, 2024


கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் இந்த விழாவின் 2024 ஆம் ஆண்டிற்கான நிபந்தனைகள், ஆலோசனைகள் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய தலைப்புகள், விண்ணப்பங்கள் என்பன இங்கே வழங்கப்படுகின்றன. 
 
  • அரசாங்க பாடசாலைகளின் மாணவர்கள், கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இவ்விழாவில் பங்கு பெற்ற முடியும். 
 
  • நாடகமும் அரங்கியலும் பாடத்தை கற்பிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்விழாவில் பங்குபற்றுவது கண்டிப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. 
 
  • இவ்விழாவில் எந்த பாடசாலையில் இருந்தும் தரம் 1 லிருந்து தரம் 13 வரையான மாணவர்கள் பங்குபற்ற முடியும் என்பதோடு அந்த பாடசாலை விழாவிற்கு விண்ணப்பிக்கும் வருடத்தில் அந்த பாடசாலையில் இருந்து இரண்டாவது முறையாக உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பங்குபெற்ற முடியும். 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதி தினம் 2024.04.30.
 
 
Click the link below for circular and application:




Previous:
 

அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கக் கலைவிழா - 2024 (Circular & Application) அகில இலங்கை பாடசாலை நாடகம் மற்றும் அரங்கக் கலைவிழா - 2024 (Circular & Application) Reviewed by Irumbu Thirai News on March 03, 2024 Rating: 5

அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டிகள் - 2024 (Circular & Application)

March 02, 2024
 

கல்வி அமைச்சின் நெறிப்படுத்துகையுடன் வருடாந்தம் நடாத்தப்படும் மேற்படி போட்டிகளில 2024 ஆம் வருடத்திற்குரிய நிபந்தனைகள், ஆலோசனைகள் மற்றும் ஆக்கங்களை முன்வைக்க வேண்டிய போட்டி நிகழ்ச்சி பிரிவுகள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பம் என்பன தரப்பட்டுள்ளன. 
 
  • தரம் 6 முதல் 13 வரையான மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். 
 
  • போட்டிகள் 05 கட்டங்களாக நடைபெறும். 
 
  • 22-3-2024 ற்கு முன் மாணவர்களின் ஆக்கங்கள் வலய கல்வி அலுவலகங்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும். 
 
Click the link below for circular & application: 
 
 
 
 
Previous:

 
அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டிகள் - 2024 (Circular & Application) அகில இலங்கை பாடசாலை சித்திரப் போட்டிகள் - 2024 (Circular & Application) Reviewed by Irumbu Thirai News on March 02, 2024 Rating: 5

Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024

March 01, 2024

 
அகில இலங்கை தமிழ் மொழி தினப்போட்டிகள் தொடர்பான கல்வி செயலாளரின் 35/2018 இலக்க சுற்று நிருபத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான இணைப்பு. 
 
2024 ஆம் ஆண்டுக்குரிய போட்டிகள் நடத்தப்பட வேண்டிய திகதிகள் பின்வருமாறு: 
 
1) பாடசாலை மட்டப் போட்டிகள் 2024.04.30 ஆம் திகதிக்கு முன்னர் 
 
2) வலய மட்ட போட்டிகள் 2024.7.16ஆம் திகதிக்கு முன்னர் 
 
3) மாகாண மட்டப் போட்டிகள் 2024.8.16ஆம் தேதிக்கு முன்னர் 
 
தேசிய மட்ட போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் 2024.8.23ஆம் திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சின் தமிழ் மொழி அலகிற்கு அனுப்பப்பட வேண்டும். 
 
 
Click the link below for circular:
 
 
 
 
Previous:

Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024 Circular: அகில இலங்கை தமிழ் மொழித் தினம் - 2024 Reviewed by Irumbu Thirai News on March 01, 2024 Rating: 5

Student Ambassador National Programme on Child Protection - 2024

February 24, 2024


The “Student Ambassador National Programme” is a unique programme organized by National Child Protection Authority in collaboration with Ministry of Education to develop knowledge, skills & attitudes of senior school prefects on child protection. 

This programme will prepare school prefects to take the leadership to stabilize child protection in schools with the support of prefect board. National Child Protection Authority wishes to make present Sri Lankan children sensitive on child protection & make them responsible citizens with leadership through this programme. 
 
Closing date: 31-03-2024. 
 
Click the links below for...

 
 
 
 
 
 
 
Previous:
 
 
Student Ambassador National Programme on Child Protection - 2024 Student Ambassador National Programme on Child Protection - 2024 Reviewed by Irumbu Thirai News on February 24, 2024 Rating: 5

All Island Art, Poster and Cartoon Competition - 2024 (National Child Protection Authority)

February 13, 2024


 

National Child Protection Authority 

All Island Art, Poster and Cartoon Competition - 2024 (Sithuvili Siththam) 

(To celebrate the Universal children's day on 1st of October 2024.) 

 

Competition will be held under two main sections: 

1) School section 

2) Open section 

 

1) School section: 

Grade 1 

Grade 2-3 

Grade 4-5 

Grade 6-8 

Grade 9-11 

Grade 12-13 

Special Needs 

 

2) Open section: 

Teachers 

University students 

Professionals

 
Winners:
1) District winners
1st Place - Medals, gifts and certificates.
2nd & 3rd place - Gifts & certificates.
 
2) All Island winners:
1st - Awards, medals, gifts and certificates.
2nd & 3rd- Medals, gifts & certificates.
 
  • Grade 1-5 students can send only arts.
  • Grade 6-13 can send both arts & posters.
  • Special needs can send only arts.
 
Closing date: 10-4-2024.  
 
 
Click the links below for..
 
 
 
 
 
Previous:
 

All Island Art, Poster and Cartoon Competition - 2024 (National Child Protection Authority) All Island Art, Poster and Cartoon Competition - 2024 (National Child Protection Authority) Reviewed by Irumbu Thirai News on February 13, 2024 Rating: 5

Circular: All Island School Muslim Cultural Competition – 2024

January 04, 2024

 
Ministry of education has released the circular for All Island School Muslim Cultural Competition – 2024 
 
Circular No: 47/2023 
 
Date: 13-12-2023. 
 
 
  • This competition will be held annually from 2024. 
  • 3 mail categories and 1 open category (4 categories) 
  • Total 28 events. 
  • One school can apply for only 14 events. 
  • One participant can compete in only 2 events (1 individual and 1 open event) 
 
 
  • 2024 முதல் இந்த போட்டிகள் வருடாந்தம் நடாத்தப்படும். 
  • 3 வயது பிரிவு மற்றும் 1 திறந்த பிரிவு (மொத்தம் 4 பிரிவுகள்) 
  • மொத்தம் 28 நிகழ்ச்சிகள் 
  • ஒரு பாடசாலை 14 நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். 
  • ஒருவர் மொத்தம் 2 நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ளலாம். (தனி 1 திறந்த 1) 
 
Click the link below for circulars (Tamil, English and Sinhala) 
 
 
 
 
 
 
Previous:

Circular: All Island School Muslim Cultural Competition – 2024 Circular: All Island School Muslim Cultural Competition – 2024 Reviewed by Irumbu Thirai News on January 04, 2024 Rating: 5

All Island Essay and Art Competitions for School Children – 2023

September 10, 2023
 

Sri Lanka Diabetes Federation (SLDF), the public arm of the Sri Lanka College of Endocrinologists has decided to conduct Annual Diabetes day competitions for commemoration of the world diabetes day 2023, with the theme of, “Healthy living to prevent Diabetes” 
 
TOPIC: 
HEALTHY LIVING TO PREVENT DIABETES
 
 
Age categories: 
Junior Category: Between 5 and 10 years of age on 01.01.2024 
Intermediate Category: Between 11 and 15 years of age on 01.01.2024 
Senior Category: Between 16 and 18 years of age on 01.01.2024 
 
 
Prizes
1st prize Rs. 25,000 
2nd prize Rs. 15,000 
3rd Prize Rs. 10,000 
 
Certificates and the consolation cash prizes will be awarded for the first 05 places. 
 
 
Closing date: 
30th September 2023
 
 

Click the link below for full details & Application:
 
 
 
 
Previous:
 
All Island Essay and Art Competitions for School Children – 2023 All Island Essay and Art Competitions for School Children – 2023 Reviewed by Irumbu Thirai News on September 10, 2023 Rating: 5

Closing Date Extended: Competition of Single Episode Teledramas and Short Films

September 09, 2023

 
Extension of the closing date for submitting Creations for the Competition of Single Episode Teledramas and Short Films 
 
Age limit: Open 
 
New Closing Date: 30-09-2023. 
 
Click the links below for full details (Announcement, criterias, application, etc..) 

 
 
 
 
Previous:
 
 
Closing Date Extended: Competition of Single Episode Teledramas and Short Films Closing Date Extended: Competition of Single Episode Teledramas and Short Films  Reviewed by Irumbu Thirai News on September 09, 2023 Rating: 5

Selected School List: All Island School Drama and Theatre Festival - 2023 (Sinhala Medium)

August 26, 2023
Selected School List: All Island School Drama and Theatre Festival - 2023 (Sinhala Medium) Selected School List: All Island School Drama and Theatre Festival - 2023 (Sinhala Medium) Reviewed by Irumbu Thirai News on August 26, 2023 Rating: 5

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023

July 30, 2023


2023 October 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு சகல அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே சித்திரம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடாத்துவதற்கான விண்ணப்பங்களை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது. 

சித்திரப் போட்டி 03 குழுக்களாக நடாத்தப்படும். 

கட்டுரைப் போட்டி 02 குழுக்களாக தமிழ், சிங்களம் மொழி மூலங்களில் நடாத்தப்படும். 

பரிசுகள்
1ம் இடம் - ரூ. 15,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

2ம் இடம் - ரூ. 10,000 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

3ம் இடம் - ரூ. 7,500 பணப்பரிசும் கிண்ணமும் சான்றிதழும். 

திறமைக்கான பரிசுகள் - ரூ. 3,000 பெறுமதியான 05 ஆறுதல் பரிசில்களும் சான்றிதழும் 


சகல ஆக்கங்களும் 31-08-2023 ற்கு முன் நேரிலோ தபால் மூலமோ அனுப்ப வேண்டும். 

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் பிள்ளைகள் கலந்து கொள்ள முடியாது. 

வெற்றி பெறுபவர்களுக்கான பரிசில்கள் ஒக்டோபர் 2 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் விஷேட நிகழ்வின் போது வழங்கப்படும். 

விண்ணப்பம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.








Previous:



உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் போட்டிகள் - 2023 Reviewed by Irumbu Thirai News on July 30, 2023 Rating: 5

சுற்றுநிறுபம்: அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி - 2023

May 11, 2023


அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி- 2023 ற்கான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுற்றுநிறுபத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:


சுற்றுநிறுபம்: அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி - 2023 சுற்றுநிறுபம்: அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி - 2023 Reviewed by Irumbu Thirai News on May 11, 2023 Rating: 5

சுற்றுநிறுபம்: அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023

May 11, 2023


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023 என்ற சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

சுற்றுநிறுபத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:



சுற்றுநிறுபம்: அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023 சுற்றுநிறுபம்: அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023 Reviewed by Irumbu Thirai News on May 11, 2023 Rating: 5

Logo Competition (University of Colombo)

July 16, 2022

The Annual Research Symposium (ARS) of the University of Colombo will be held on 16th November 2022. 

The University of Colombo invites staff and students to submit a digital logo that will function as a unique symbol of this event. 
 
Closing date: 1st August 2022, 23.59 PM 
 
Click the link below for full details.
Logo Competition (University of Colombo) Logo Competition (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on July 16, 2022 Rating: 5

National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended)

June 19, 2022

National Level ICT Championship Competition -2022 registration Date extended to 2022.06.30. 
 
All Particpiants Should Register for the Competition by only using the online form. 
 
Click the link below for full details & online application.
National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended) National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended) Reviewed by Irumbu Thirai News on June 19, 2022 Rating: 5

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி

April 13, 2022

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் அகில இலங்கை பல்கலைக்கழக இளம் பட்டதாரிகளுக்கிடையே கட்டுரை போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
எழுத்தாளரின் பெயர், பல்கலைக்கழகம், பீடம், ஆண்டு என்பவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 
 
வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
 
தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் வருடாந்தம் 
 
வெளியிடப்படும் 'அல்இன்ஷிராஹ்' இதழில் பிரசுரமாகும். 
 
ஆக்கங்களை மின்னஞ்சல் மூலமோ அல்லது இணைய படிவத்தில் தரவேற்றுதன் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பலாம். 
 
தலைப்புகள்(ஏதாவது ஒரு தலைப்பில் எழுத வேண்டும்): 
1) ஆன்மீகத்தை வலுவூட்டும் ரமழான். 
2) வாழ்க்கைக்கு வழிகாட்டும் பத்ர் போர். 
3) அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் தக்வாவில் சிறந்தவரே. 
4) அன்றைய மதீனாவின் ரமழானிய இரவொன்று. 

மொழி
தமிழ்மொழி மூலம் மாத்திரமே எழுதப்பட வேண்டும். 
 
சொற்கள்
1000 - 1250. 
 
மின்னஞ்சல் முகவரி: 
peramajlis@gmail.com 
 
இணைய படிவத்தில் பதிவேற்றுவதற்கான லிங்க்: 
 
முகவரி
Muslim Majlis. 
University of Peradeniya. 
Peradeniya. 
 
முடிவுத் திகதி: 
20-04-2022.
 
மேலதிக விபரங்களை கீழே காணலாம்.

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் நடத்தப்படும் கட்டுரை போட்டி Reviewed by Irumbu Thirai News on April 13, 2022 Rating: 5

நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு)

September 30, 2021
 

நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று(30) வெளியிட்டுள்ளார். 
 
அவற்றை ஒவ்வொன்றாக கீழே தருகிறோம். 
 
 
(01) வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டோர்: 
தொழில் நிமித்தம், மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் வெளியேறலாம். 
 
 
(02) கூட்டங்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள்: 
இணையவழியில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அக்டோபர் 15 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 25 பேர் வரை சேரலாம். அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் வகையில் உச்சமாக 50 பேர் வரை சேரலாம். 
 
 
(03) விழாக்கள், கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள்: 
இவற்றுக்கு வீடுகளிலும் அனுமதி இல்லை. வெளியிடங்களிலும் அனுமதி இல்லை. 
 
 
(04) பொருளாதார மத்திய நிலையங்கள்: 
மொத்த வியாபாரத்திற்காக அனுமதி உண்டு. அதேவேளை பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்படவேண்டும். 
 
 
(05) திறந்த வியாபார நிலையம் / வாராந்த சந்தை: 
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டும். 
 
 
(06) Restaurant (dining in): 
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை மொத்த இருக்கைகளின் 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை எடுக்கலாம். புகைத்தல், மதுபானம் என்பவற்றுக்கு தடை. திறந்த வெளியில் நடத்தப்படுவதாக இருந்தால் 60 பேர் வரை அனுமதிக்கலாம். 
 
 
(07) Restaurant (Take away / Delivery):
அனுமதி உண்டு. 
 
 
(08) நடமாடும் வியாபாரம்: 
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும். 
 
(09) சில்லறை கடை, ஃபார்மசி, சிறப்பு சந்தை (Super market), வீட்டுத் தளபாடங்கள் நிலையங்கள்: 
அக்டோபர் 15 வரை வியாபார நிலையத்தின் 10 வீதமான இடம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம். உள்ளே எடுக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்த வேண்டும். அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 20 வீதம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம். 
 
 
(10) வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்: 
5 பேர் வரை மாத்திரமே உள்ளே அனுமதிக்கலாம் ஏனையவர்கள் இடைவெளி விட்டு வெளியே நிற்க வேண்டும். 
 
 
(11) கட்டுமான பணிகள்: 
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். 
 
 
(12) விவசாயம்: 
அனுமதி உண்டு. 
 
 
(13) சிகை அலங்கார நிலையங்கள்: 
ஏற்கனவே நேரத்தை ஒதுக்கி செல்ல வேண்டும். 
 
 
(14) பாடசாலைகள்: 
கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமைய முதலாம் கட்டத்திற்குரிய பாடசாலைகளை திறக்கலாம். 
 
 
(15) பராமரிப்பு நிலையங்கள் - Day Care Centres: 
அனுமதி உண்டு 
 
 
(16) பாலர் பாடசாலை: 
பிள்ளைகளின் எண்ணிக்கையில் 50 வீதம் வரை எடுக்கலாம். 

 
(17) பல்கலைக்கழகம் உட்பட ஏனைய உயர் கல்வி நிலையங்கள்: 
வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாக செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். (இணையவழி முறைமைகளுக்கு முக்கியம் அளிக்கவேண்டும்) 
 
 
(18) தொழில்சார் பயிற்சி நிலையங்கள்: 
50 வீதமான நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படலாம். 
 
 
(19) நீதிமன்றம்: 
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கு அமையவும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாகவும் செயற்படவேண்டும். 
 
 
(20) திரையரங்குகள்: 
அனுமதி இல்லை. 
 
 
(21) உடற்பயிற்சி நிலையம்: 
அக்டோபர் 15 வரை ஐந்து நபர்கள் மாத்திரமே ஒரே நேரத்தில் அனுமதிக்கலாம். ஏனையவர்கள் பாவித்த உபகரணங்களை இன்னொருவர் பாவிக்க கூடாது. அக்டோபர் 16 முதல் 31 வரை 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 10 நபர்கள் வரை உள்ளே அனுமதிக்கலாம். 
 
 
(22) விளையாட்டுப் போட்டிகள்: 
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக்களுக்கு மாத்திரம் அனுமதி உண்டு. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. 
 
 
(23) உடற்பயிற்சிக்கான நடைபாதை மற்றும் கடற்கரை: 
அனுமதி உண்டு. 
 
 
(24) திருமண நிகழ்வுகள்: 
அக்டோபர் 15 வரை திருமண பதிவுகளுக்கு பத்து பேருக்கு மாத்திரமே அனுமதி. அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானங்களுக்கு அனுமதி இல்லை. 

 
(25) மரணச் சடங்கு: 
கொரோனா இல்லாத மரணங்களுக்கு மாத்திரம் அக்டோபர் 15 வரை 10 பேர் வரை செல்லலாம். அக்டோபர் 16 முதல் 31 வரை 15 பேருக்கு மாத்திரம் அனுமதி உண்டு. 
 
 
(26) மத வழிபாட்டுத் தலங்கள்: 
கூட்டாக இடம்பெறும் வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை. 
 
 
(27) கண்காட்சி மற்றும் சம்மேளனம்: 
அனுமதி இல்லை. 
 
 
(28) பரீட்சைகள்: 
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும். 
 
(29) மேலதிக வகுப்புக்கள்: 
அனுமதி இல்லை. 
 
(30) கைத்தொழில் நடவடிக்கை: 
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும்.
நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு) நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகள்

August 23, 2021

தொழில் வழிகாட்டல் வாரத்தை (ஒக்டோபர் 04-10) முன்னிட்டு மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

விண்ணப்பிக்க கூடிய காலப்பகுதி: 23/08/2021 - 12/09/2021 (இரவு 8 மணி) வரை. 

விண்ணப்பங்கள் Online முறையில் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தனித்தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 

பரிசுகள்:
1. பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

2. மாவட்ட மட்ட வெற்றியாளர்களுக்கான பரிசுகள்:
1 - 5000/-
2 - 3000/-
3 - 2000/-

3. தேசிய மட்ட வெற்றியாளர்களுக்கான பரிசுகள்:

1 - 25,000/-
2 - 15,000/-
3 - 10,000/-


மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது.


மாணவர்களுக்கான போட்டிகள்: 

தகுதியானவர்கள்: தரம் 9, 10, 11 இல் கற்பவர்கள் மட்டும். 

போட்டிகள்: சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் வினா-விடை போட்டிகள். 

சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதைகளுக்கு பின்வரும் ஏதோ ஒரு தலைப்பை தெரிவு செய்யலாம். 
1. இலங்கையின் எதிர்கால தொழில் உலகை வெல்ல தொழில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம். 

2. 21ம் நூற்றாண்டு மற்றும் தொழில் வழிகாட்டல். 

3. கனவு காண்போம. திட்டமிடுவோம். வேலை உலகத்தை வடிவமைப்போம். 

4. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகத்தின் பங்களிப்பு. 

5. நாட்டிற்கு தொழில் வழிகாட்டல் சேவையின் முக்கியத்துவம். 

வினா விடை போட்டி: 

தொழில் வழிகாட்டல் என்ற தலைப்பில் கேள்விகள் கேட்கப்படும். 

Online மூலம் 25 கேள்விகள் அடங்கிய பல்தேர்வு வினாத்தாள் வழங்கப்படும். 

காலம் 30 நிமிடங்கள். 

பெரியவர்களுக்கான போட்டி (கட்டுரைப் போட்டி மாத்திரம்) 


இதில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கலந்து கொள்ளலாம். 

கீழ்வரும் தலைப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து 750 -1000 வரையான சொற்களைக் கொண்டதாக கட்டுரை அமைய வேண்டும். 

1. சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை. 

2. தொழில் முயற்சியாண்மை மூலம் பொருளாதாரத்தை வெல்லுங்கள். 

3. முயற்சியாண்மை கலாசாரத்தை உருவாக்குதல்.


ஒவ்வொரு போட்டி தொடர்பான மேலதிக விளக்கங்களை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Online விண்ணப்பத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகள் தொழில் வழிகாட்டல் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்படும் போட்டிகள் Reviewed by irumbuthirai on August 23, 2021 Rating: 5

Short Film Competition / குறுந்திரைப்பட போட்டி - 2021

August 08, 2021

அக்டோபர் 1 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தொழில் திணைக்களத்தினால் நடத்தப்படும் இந்தப் போட்டி தொடர்பான விபரங்கள்: 

கருப்பொருள்: குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் (Let's Eliminate Child Labour) 

நேரம்: கூடியது 05 நிமிடங்கள். 

மொழி மூலம்: தமிழ் / சிங்களம் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) 

தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது. 
முதலாம் பரிசு: 50,000/- 
இரண்டாம் பரிசு: 40,000/- 
மூன்றாம் பரிசு: 30,000/- 
10 திறமை பரிசுகள்: தலா 10,000/- 

குறித்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட சகல ஆக்கங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். 

ஆக்கங்களை சமர்ப்பிக்கவேண்டிய இறுதித் தினம்: 17-09-2021. 

பதிவு செய்ய வேண்டிய இறுதித் தினம்: 20-08-2021. 

பதிவு செய்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆக்கங்களை சமர்ப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Short Film Competition / குறுந்திரைப்பட போட்டி - 2021 Short Film Competition / குறுந்திரைப்பட போட்டி - 2021 Reviewed by irumbuthirai on August 08, 2021 Rating: 5

அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு)

August 03, 2021

All Island Art, Poster & Cartoon Competition - 2021
 
National child protection authority is planning a drawing, poster & cartoon competition to celebrate universal children's day. 

ஒக்டோபர் 1ம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிப்பு செய்வது தொடர்பாக அகில இலங்கை ரீதியில் சித்திரம், சுவரொட்டிகள் மற்றும் கார்ட்டூன் போட்டிகள் நடத்துவதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது. 
பாடசாலை பிரிவு, திறந்த பிரிவு என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். 

பாடசாலை பிரிவு:
பாடசாலை பிரிவில் அரச பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 

திறந்த பிரிவு:
திறந்த பிரிவு வகை 1, வகை 2 என்ற அடிப்படையில் நடத்தப்படும். 

வகை1: அரச பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள், முன்பள்ளிகள், மறைக் கல்வி பாடசாலை மற்றும் பிரிவெனாக்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். 

வகை2: பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்வாண்மை மிக்கவர்கள் மற்றும் ஏனையவர்கள் கலந்து கொள்ளலாம். 

விண்ணப்ப முடிவு திகதி: 31-08-2021. 

விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு) அகில இலங்கை சித்திரம், சுவரொட்டி மற்றும் கார்ட்டூன் போட்டிகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 03, 2021 Rating: 5

மாணவர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பை வழங்கும் போட்டி (விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்கள் இணைப்பு)

June 28, 2021

ஜப்பானின் Kao Corporation சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே வருடாவருடம் நடத்தும் Kao International Painting Contest for Children என்ற போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இந்த போட்டி 2010 ஆம் ஆண்டு முதல் வருடாவருடம் நடத்தப்படுகிறது. 

வயது எல்லை: 06-15 (31-08-2021ற்கு) 

கருப்பொருள்: Let's Make Our Environment Sustainable Together (எமது சூழலை ஒன்றாக நிலைநிறுத்துவோம்)

அளவு: 392MM x 542 MM. 

வர்ண வகை: எந்த ஒரு வகையான வர்ணத்தையும் பயன்படுத்தலாம். (Pencil colour, water colour, oil paint, etc..) 

ஒருவருக்கு ஒரு சித்திரத்தை மாத்திரமே அனுப்பலாம். 
பரிசளிப்பு: ஜப்பானின் டோக்கியோ நகரில் 

வெற்றிபெறும் மாணவருடன் செல்வதற்கு இன்னொருவருக்கும் வாய்ப்பு. (போய் வருவதற்கான செலவுகள் முற்றிலும் இலவசம்) 

ஆக்கங்களை தனியாகவோ குழுவாகவோ சமர்ப்பிக்கலாம். 

முடிவு திகதி: 06 - 09- 2021. 

அனுப்ப வேண்டிய முகவரி: 
Kao International Environment Painting Contest for Children.  
8-3-29 Tajima, 
Sakura - Ku, 
Saltama 338-0837. 
JAPAN. 

இது தொடர்பான முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் என்பவற்றை பெற்றுக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

Join our WhatsApp Groups.

Join our Telegram Channel:

Like our FB Page:



மாணவர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பை வழங்கும் போட்டி (விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்கள் இணைப்பு) மாணவர்களுக்கு ஜப்பான் செல்லும் வாய்ப்பை வழங்கும் போட்டி (விண்ணப்பம் மற்றும் முழுமையான விபரங்கள் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 28, 2021 Rating: 5
Powered by Blogger.