நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று(30) வெளியிட்டுள்ளார்.
அவற்றை ஒவ்வொன்றாக கீழே தருகிறோம்.
(01) வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டோர்:
தொழில் நிமித்தம், மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் வெளியேறலாம்.
(02) கூட்டங்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள்:
இணையவழியில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் அக்டோபர் 15 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 25 பேர் வரை சேரலாம்.
அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தில் ஒன்று சேரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையில் 25 வீதம் நிரம்பும் வகையில் உச்சமாக 50 பேர் வரை சேரலாம்.
(03) விழாக்கள், கொண்டாட்டங்கள், ஒன்றுகூடல்கள்:
இவற்றுக்கு வீடுகளிலும் அனுமதி இல்லை. வெளியிடங்களிலும் அனுமதி இல்லை.
(04) பொருளாதார மத்திய நிலையங்கள்:
மொத்த வியாபாரத்திற்காக அனுமதி உண்டு. அதேவேளை பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்படவேண்டும்.
(05) திறந்த வியாபார நிலையம் / வாராந்த சந்தை:
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டும்.
(06) Restaurant (dining in):
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை மொத்த இருக்கைகளின் 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை எடுக்கலாம். புகைத்தல், மதுபானம் என்பவற்றுக்கு தடை. திறந்த வெளியில் நடத்தப்படுவதாக இருந்தால் 60 பேர் வரை அனுமதிக்கலாம்.
(07) Restaurant (Take away / Delivery):
அனுமதி உண்டு.
(08) நடமாடும் வியாபாரம்:
பிரதேச குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும்.
(09) சில்லறை கடை, ஃபார்மசி, சிறப்பு சந்தை (Super market), வீட்டுத் தளபாடங்கள் நிலையங்கள்:
அக்டோபர் 15 வரை வியாபார நிலையத்தின் 10 வீதமான இடம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம். உள்ளே எடுக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்த வேண்டும். அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 20 வீதம் நிரம்பும் அளவுக்கு நபர்களை உள்ளே எடுக்கலாம்.
(10) வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்:
5 பேர் வரை மாத்திரமே உள்ளே அனுமதிக்கலாம் ஏனையவர்கள் இடைவெளி விட்டு வெளியே நிற்க வேண்டும்.
(11) கட்டுமான பணிகள்:
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மேற்கொள்ள வேண்டும்.
(12) விவசாயம்:
அனுமதி உண்டு.
(13) சிகை அலங்கார நிலையங்கள்:
ஏற்கனவே நேரத்தை ஒதுக்கி செல்ல வேண்டும்.
(14) பாடசாலைகள்:
கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமைய முதலாம் கட்டத்திற்குரிய பாடசாலைகளை திறக்கலாம்.
(15) பராமரிப்பு நிலையங்கள் - Day Care Centres:
அனுமதி உண்டு
(16) பாலர் பாடசாலை:
பிள்ளைகளின் எண்ணிக்கையில் 50 வீதம் வரை எடுக்கலாம்.
(17) பல்கலைக்கழகம் உட்பட ஏனைய உயர் கல்வி நிலையங்கள்:
வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாக செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம். (இணையவழி முறைமைகளுக்கு முக்கியம் அளிக்கவேண்டும்)
(18) தொழில்சார் பயிற்சி நிலையங்கள்:
50 வீதமான நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படலாம்.
(19) நீதிமன்றம்:
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கு அமையவும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாகவும் செயற்படவேண்டும்.
(20) திரையரங்குகள்:
அனுமதி இல்லை.
(21) உடற்பயிற்சி நிலையம்:
அக்டோபர் 15 வரை ஐந்து நபர்கள் மாத்திரமே ஒரே நேரத்தில் அனுமதிக்கலாம். ஏனையவர்கள் பாவித்த உபகரணங்களை இன்னொருவர் பாவிக்க கூடாது. அக்டோபர் 16 முதல் 31 வரை 30 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 10 நபர்கள் வரை உள்ளே அனுமதிக்கலாம்.
(22) விளையாட்டுப் போட்டிகள்:
அக்டோபர் 15 வரை அனுமதி இல்லை. 16 முதல் 31 வரை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக்களுக்கு மாத்திரம் அனுமதி உண்டு. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
(23) உடற்பயிற்சிக்கான நடைபாதை மற்றும் கடற்கரை:
அனுமதி உண்டு.
(24) திருமண நிகழ்வுகள்:
அக்டோபர் 15 வரை திருமண பதிவுகளுக்கு பத்து பேருக்கு மாத்திரமே அனுமதி. அக்டோபர் 16 முதல் 31 வரை இடத்தின் அளவில் 25 வீதம் நிரம்பும் அளவுக்கு உச்சமாக 50 பேர் வரை அனுமதிக்கலாம். மதுபானங்களுக்கு அனுமதி இல்லை.
(25) மரணச் சடங்கு:
கொரோனா இல்லாத மரணங்களுக்கு மாத்திரம் அக்டோபர் 15 வரை 10 பேர் வரை செல்லலாம். அக்டோபர் 16 முதல் 31 வரை 15 பேருக்கு மாத்திரம் அனுமதி உண்டு.
(26) மத வழிபாட்டுத் தலங்கள்:
கூட்டாக இடம்பெறும் வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை.
(27) கண்காட்சி மற்றும் சம்மேளனம்:
அனுமதி இல்லை.
(28) பரீட்சைகள்:
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும்.
(29) மேலதிக வகுப்புக்கள்:
அனுமதி இல்லை.
(30) கைத்தொழில் நடவடிக்கை:
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இடம் பெறவேண்டும்.
நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
September 30, 2021
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
September 30, 2021
Rating:

No comments: