2020 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தாலும் பரீட்சைக்கு தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த கருத்து தெரிவிக்கையில்,
இறுதியாக இடம்பெற்ற சாதாரண தர பரீட்சை தொடர்பாக 4,174 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 3,967 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு ஒருவர் பரீட்சைக்குத் தோற்றியது தொடர்பாக 06 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
மேலும் கையெழுத்து மாற்றம், விடைத்தாள் மாற்றம், கையடக்கத் தொலைபேசியை வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக குறித்த பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் பெறுபேறு மீளாய்வு தொடர்பாக விண்ணப்பம் கோரல் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
September 30, 2021
Rating:

No comments: