திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-10-2020 நடந்தவை...

October 10, 2020

 


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 5ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பவற்றை திறக்க இன்று (9) முதல் அனுமதி. 
  • இம்முறை புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக சுகாதார பாதுகாப்புடன் கூடிய விசேட ரயில் பெட்டிகளை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவிப்பு. 
  • கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 5 மாத குழந்தையின் தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தை கடந்த ஆகஸ்ட் முதல் அங்கே சிகிச்சை பெற்று வருகிறது. எனினும் தாய்க்கும் பிள்ளைக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கண்டியைச் சேர்ந்த இவர்கள் தற்காலிகமாக கொடிகாவத்த பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் மற்றும் 9 ஆம் வார்டுகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தாதியரின் கணவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும் அவருக்கும் மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவிப்பு. 

  • கம்பஹா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிப்பு. 
  • நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அவதானம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பு. 
  • உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் அனர்த்த நிலையினால் ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்பாட்டு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சை திணைக்களம், முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரை இணைத்து இந்த மத்திய நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் துரித தொலைபேசி இலக்கமான 117 மற்றும் பரீட்சை திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் இக் காலப்பகுதியில் 24 மணித்தியாலமும் செயற்படும். பரீட்சைகள் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளையும் இந்த தொலைபேசியூடாக அறிவிக்க முடியும் என தெரிவிப்பு. 
  • கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ட் (Next) ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக Covid-19 செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் அங்கு பணிபுரியும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. குறித்த பெண் சீதுவ பிரதேசத்தை சேர்ந்தவர். 
  • பா.உ. ஹரீன் பெனாண்டோவின் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அவரது பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நெகட்டிவ் (Negative) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கடந்த புதன்கிழமை தனியார் வைத்தியசாலையில் இந்த பரிசோதனையை மேற்கொண்டார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் முகமாக தாமாகவே முன்வந்து இந்த பரிசோதனையை செய்திருந்தார். 
  • கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து கடந்த 29ஆம் திகதி முதல் 04ம் திகதி வரை கதிர்காம பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற கம்பளை, உடகல்பாய என்ற இடத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பளை வைத்தியசாலையில் வைத்து இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரம் தொடர்பில் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, தமது பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என பொலிஸார் அறிவிப்பு. 
  • தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக பிரத்தியேக பரீட்சை நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகார பிரிவுகளில் பரீட்சைகளுக்கு தோன்றும் மாணவர்களுக்கு விசேட பரீட்சை மத்திய மத்திய நிலையங்களை ஏற்படுத்தி கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • நேற்றைய தினம் (08) தற்காலிகமான மூடப்பட்ட மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் பணிகள் இன்றைய தினம் (09) மீண்டும் வேறு உத்தியோகத்தர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 85 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
  • covid-19 தீவிரமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்தில் தபால் சேவைகளை முன்னெடுக்கும் பணிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தற்காலிக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார் . அதேபோல், கொழும்பு டி ஆர் விஜயவர்த்தன மாவத்தை மத்திய தபால் பரிமாறல் வாடிக்கையாளர் சேவையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்படுகிறது. 
  • வடமேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடமேல் மாகாண பிரதம செயலாளர் பி.பீ.எம். சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். 
  • ஒக்டோபர் 12, 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும் பிராந்திய அலுவலகத்திற்கும் பொது மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 1083 ஆக அதிகரிப்பு. அந்த வகையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9-10-2020 இரவு 9.15 ஆகும்பொழுது 4,523 ஆக அதிகரித்தது. 
  • irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 09-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 10, 2020 Rating: 5

09-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

October 10, 2020

09-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 09-10-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette.
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
09-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 09-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on October 10, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-10-2020 நடந்தவை...

October 09, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 4ம் நாள் அதாவது வியாழக்கிழமை (08) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான யங் ஜீச்சி அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரமுள்ள சீனத் தூதுக்குழுவினர் 8 ஆந் திகதியாகிய இன்று கொழும்பை வந்தடைந்தனர். உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர், தெற்காசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் சீனாவின் முதலாவது விஜயமாக இது அமைகிறது. எனினும் இலங்கையின் தற்போதைய சூழலில் இவ்வாறான பயண அனுமதியை இலங்கை அரசு ஏன் வழங்கியது? தற்போது இந்த விஜயம் தேவைதானா? வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையா? என்றெல்லாம் சமூக ஊடகங்களில் மாத்திரமன்றி பாராளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. 
  • கந்தளாய் வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு கந்தளாய், தெஹிஅத்தகண்டிய, மஹா ஒய வலயங்களில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் இது பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை. 
  • மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் இருந்து வவுனியாவிற்கு சிலர் சென்றதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து வவுனியா தோணிக்கல், தேக்கவத்த ஆகிய பிரதேசங்களில் சில குடும்பங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை. 
  • நிலைமை மோசம்... கொரோனா மரணங்கள் அதிகரிக்கலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு. 

  • சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரான் பிரஜை ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை, நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதியானது. குறித்த ஈரான் பிரஜை, உமா ஓயா திட்டத்தில் பணியாற்றியவர் எனத் தெரிவிப்பு. 
  • கடந்த 22ம் திகதி இந்தியாவின் விசாகப்பட்டிணத்தில் இருந்து, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 60 ஊழியர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது குறித்து விளக்கமளித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ப்ரெண்டிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய இலங்கையர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவவதற்காக, விசாகப்பட்டிணத்தில் இருந்து 3 விமான சேவைகள் இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவ்வாறு நாடுதிரும்பிய அனைவரும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின்கீழ், மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டதாக ப்ரெண்டிக்ஸ் நிறுவனம் தெரிவிப்பு. கடந்த மாதம் 22ஆம் திகதி இந்தியாவில் இருந்து விமானத்தின் மூலம் சிலர் வந்ததாகவும் அவர்களுக்கு சுகாதாரத்துறையினரின் உரிய வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன என்றும் மிஹின் லங்கா அறிக்கை வெளியிட்டது. 
  • சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாத மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றிய ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 0113456548 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய இடங்களுக்கு செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. 
  • கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள ICBT Campus இன் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த 4 ஆம் திகதி அந்நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணையை ஆரம்பிக்குமாறு தொழில் ஆணையாளருக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தரவு. 
  • தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படவிருந்த கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவிப்பு. நாளை மறுதினம் 10ம் திகதி சனிக்கிழமை முதல் நடாத்தப்படவிருந்த 2014/2015ம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட முதலாம் பருவ கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகளே . தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உதவிப் பதிவாளர் தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சை நடைபெறும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும், உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் தெரிவிப்பு. 
  • கம்பஹா பிரதேசத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக இன்று தொடக்கம் மேலதிகமாக 40 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு. 
  • மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. இவரது மகன் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சகல போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 
  • மறு அறிவித்தல் வரை கம்பனி பதிவாளர் திணைக்களம் மூடப்படுவதாக கம்பனி பதிவாளர் தெரிவிப்பு. 
  • பத்தரமுல்லை, பெலவத்தையிலுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்; ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவிப்பு. இதனால் வெளிநபர்கள் அங்கு பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவிப்பு. 
  • தாதி மாணவர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான தகுதிகளை பரிசோதனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவிப்பு. 
  • நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அவசர நிலைமையின் காரணமாக ஓய்வூதிய செயலூக்க நேர்முகப் பரீட்சைக்காக ஓய்வூதியம் பெறுவோரை அழைப்பது மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக ஓய்வூதிய திணைக்களத்திற்கு வரும் அனைத்து ஓய்வூதியகாரர்களின் வருகை அக்டோபர் மாதம் 08 ஆம், 09 ஆம் மற்றும் 10 ஆம் ஆகிய திகதிகளில் இடைநிறுத்துவதற்கு ஓய்வூதிய திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக அக்டோபர் மாதம் 08ஆம், 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் ஓய்வூதியம் பெறும் எவரும் ஓய்வூதிய திணைக்கள வளாகத்திற்கு வரவேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிப்பு. 
  • மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் கொத்தணி, வெளிநாட்டில் இருந்து வருகைத்தந்தவர் அல்லது குழுவின் கவனயீனத்தால் உருவாகியிருக்கலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சமூகத்தில் உள்ள தொற்றாளர் ஒருவரின் மூலம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று பரவியிருக்க எந்தவித வாய்ப்பும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச வௌியிட்டு பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பணியகம் நாளை (9) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், அரச அச்சிட்டு திணைக்களத்தின் பதிப்பக பகுதியும் மூடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • ஜனாதிபதி செயலக கடிதத் தலைப்பையும் (Letter head) மற்றும் அததெரண லோகோவினையும் (Logo) பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவு தொடர்பான பொய்யான தகவல்களை வௌியிட்ட இளைஞன் கைது. 
  • தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்த வேண்டுமானால் நாடு பூராகவும் குறைந்தது 48 நாட்களாவது Lockdown செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான Dr ராஜித சேனாரத்ன தெரிவிப்பு. அரசு தேவையான அளவு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை எனவும் இங்கு அவர் சுட்டிக்காட்டினார். 
  • இதுவரை அறிவிக்காமல் மறைந்திருக்கும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • சிலாபம் - அபகந்தவில பகுதியில் ஒருவருக்கு இன்று (08) மதியம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் வேறு ஒரு நோய்க்கு சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த 06 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் PCR பரிசோதனை செய்யப்பட்டது. குறித்த நபர் பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் குறித்த தேவாலயத்தின் அருட்தந்தையர்கள் இருவர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர் உள்ளிட்ட குழுவினர் கடந்த தினம் சுற்றுலா ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் குறித்த சுற்றுலாவில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
  • மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வயது 26. இவர் ஜாஎல கப்புவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர். 
  • ஊரடங்கு அமலில் உள்ள பிரதேசங்களில் நாளை (9) முதல் சதோச நிறுவனங்களை திறக்க அரசு தீர்மானம். 
  • திவுலுபிட்டிய கொத்தணியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,053 ஆக அதிகரிப்பு. அந்த வகையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8-10-2020 இரவு 11.30மணி ஆகும் போது 4488 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 08-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 09, 2020 Rating: 5

கொரியாவிற்கு மீண்டும் தொழில் புரிய செல்வோர்...

October 08, 2020

மீண்டும் தாம் முன்னர் கடமையாற்றிய இடங்களிலேயே கடமைக்காக செல்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 1008 ஆவது குழு கொரியாவிற்கு செல்லவுள்ளது. கொரிய விமான சேவைக்கு உட்பட்ட விமானத்தின் மூலம் இவர்கள் செல்லவுள்ளனர். 
இவர்கள் அங்கு செல்வது தொடர்பான நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று காலப்பகுதிக்குள் இவ்வாறு செல்லும் 2 ஆவது குழுவினர் இவர்களாவர். இக் குழுவில் 36 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 4 வருடங்கள் மற்றும் 10 மாத காலத்திற்காக தமது சேவைக்காக ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளனர். இவர்கள் முன்னர் கடமையாற்றிய இடங்களிலேயே ஒப்பந்த காலத்தை நிறைவு செய்யும் வரை கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
 கொரோனா தொற்று காலப்பகுதிக்குள் அதாவது 2020.09.23 ஆம் திகதி 21 இலங்கையர்கள் தென்கொரியாவிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தனர்.தமது உரிய சேவைக் காலப்பகுதிக்குள் (4 வருடம் 10 மாதங்கள்) எந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் கொரியாவில் சட்ட ரீதியில் வெளியேறிய ஊழியர்களுக்கு மீண்டும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. 
 எதேனும் குற்றச்செயல்களிலும் தண்டணை பெற்றுள்ளோர் அல்லது விசா அனுமதி காலத்திற்கு மேலாக கடமையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது.
(அ.த.தி)
கொரியாவிற்கு மீண்டும் தொழில் புரிய செல்வோர்... கொரியாவிற்கு மீண்டும் தொழில் புரிய செல்வோர்... Reviewed by irumbuthirai on October 08, 2020 Rating: 5

Courses from Sri Lanka Universities / கற்கை நெறிகள்: இலங்கை அரச பல்கலைக்கழகங்களில்...

October 08, 2020

Courses from Sri Lanka Universities / 
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பல்வேறு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
Source: 04-10-2020 Sunday Observer. 
See the details below.




Courses from Sri Lanka Universities / கற்கை நெறிகள்: இலங்கை அரச பல்கலைக்கழகங்களில்... Courses from Sri Lanka Universities / கற்கை நெறிகள்: இலங்கை அரச பல்கலைக்கழகங்களில்... Reviewed by irumbuthirai on October 08, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-10-2020 நடந்தவை...

October 08, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 3ம் நாள் அதாவது புதன்கிழமை (07) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கம்பஹா பொலிஸ் பிரிவில் 14 பொலிஸ் எல்லை பகுதிகளுக்கும், களனி பொலிஸ் பிரிவில் 02 பொலிஸ் எல்லைப் பகுதிகளுக்கும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் ஒரு பொலிஸ் எல்லை பகுதிக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
  • முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரிப்பு.
  • கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக செல்லாமல் புறக்கணித்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால், அவ்வாறு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.
  • கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, அவசர சிகிச்சை, கிளினிக் சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வைத்தியசாலைக்கு வருமாறு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். விசேடமாக 14 வயதுக்கும் குறைந்த வயதுடைய சிறுவர்களை அநாவசியமாக வைத்தியசாலைக்கு அழைத்து வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வைத்தியசாலை அதிகாரிகள் கோரியுள்ளனர். 
  • தமது வழக்குகளுக்கான புதிய திகதிகளை அறிந்துகொள்ள ஊரடங்குச் சட்டம் முடிந்ததும் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி உரிய நீதிமன்றங்களுக்கு சென்று அங்கே போடப்பட்டுள்ள அறிவித்தலை பார்த்து புதிய திகதியை அறிந்து கொள்ளலாம் என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவிப்பு. 
  • சீதுவை பொலிஸ் எல்லைப் பகுதிக்கும் உடன் அமுலுக்கு வரும் வரையில் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு. 

  • ராகம வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரின் சிகிச்சை பெற்றுவந்த பேலியகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் வெளிநோயாளர் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 
  • கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களின் அடிப்படையில் மக்கள் நேரடியாக தகவல்களை வழங்க பொலிஸ்மா அதிபர் கட்டுப்பாட்டு அறை மற்றும் பொலிஸ்மா அதிபர் செயற்பாட்டு அறைகள் நிறுவப்பட்டு அதற்கான தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. இதன் நேரடி இலக்கம் - 1993 ஆகும். இதற்கு மேலதிகமாக ஒவ்வொரு பிரிவிற்குமுரிய இலக்கங்களும் வழங்கப்பட்டன. 
  • கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்க போவதில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிப்பு. 
  • மினுவங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றும் கம்பஹா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதியில் தங்கியிருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று (7) மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பிரத்தியேக இடங்களுக்கு அவர்களை வருமாறும் கூறப்பட்டது. 
  • மத்திய, கிழக்கு, தென் மாகாணங்களிலும் மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிப்பு. 
  • கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்ட மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியரான பெண் முதலாவது கொரோனா தொற்றாளர் இல்லை எனவும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் குறித்த தொழிற்சாலை ஊழியர்களுக்குள் சுவாச பிரச்சினைகள் இருந்ததாகவும் அதனடிப்படையில் முதலாவதாக கொரோனா தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட நபருக்கு தொழிற்சாலையினுள் வைத்தே வைரஸ் தொற்றி இருக்கலலாம் எனவும் தொற்று நோய் தடுப்புப் பிரிவு மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவிப்பு. 
  • 400 கட்டில்களுடன் கூடிய மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை கொரோனா சிகிச்சையளிப்பு நிலையமாக பிரகடனம். 
  • இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 1,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு. 
  • இதற்கு வெளியே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணியாளர் ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. 
  • கொழும்பு ஜோசப் கல்லூரி மாணவனின் தந்தைக்கும் கொரோனா உறுதியானதாக அப்பாடசாலை அறிக்கை வெளியிட்டது. 
  • 7ம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை உள்நாட்டு இறைவரி திணைக்களம் மூடப்படுவதாக அறிவிப்பு. 
  • இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் எந்தத் தரப்பினரும் மினுவங்கொடை தொழிற்சாலையை அணுகவில்லை என பிரண்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு. 
  • கம்பஹா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் தான் நடத்திவந்த தனியார் வைத்திய நிலையத்தில் (Dispensary) மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் சிகிச்சை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • தனது மகளுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாய் 10 நிமிடங்களில் மரணமாகியுள்ளார். 64 வயதுடைய இந்த பெண்மணி யக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 
  • மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண், தான் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பலர் அங்கு சுகவீனமுற்றிருந்ததாக அந்தப் பெண் தெரிவிப்பு. எனினும் தொழற்சாலையின் அதிகாரிகள், அதனை சரியாக முகாமை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
  • பள்ளிவாயல்களில் ஆகக்கூடியது 50 பேருக்கு மாத்திரமே தொழலாம் என்பதோடு இன்னும் பல விதிமுறைகளையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டது. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிச்சாலை மூலம் ஏற்பட்டுள்ள கொரோனா நோய் தொற்று பரவலில் நோய் தொற்றுக்குள்ளானோர் மத்தியில் உள்ள வைரஸ் இதற்கு முன்னர் பதிவான நோயாளர்களின் வைரஸிலும் பார்க்க கூடுதலான செறிவில் (Concentrations) அமைந்திருப்பதாகவும் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் தலைமை அதிகாரி விசேட வைத்தியர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார். 
  • 08 ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு. 
  • பிரதான புகையிரத பாதையில் பட்டுவத்தயில் இருந்து யத்தல்கொட வரையிலான 18 புகையிரத நிலையங்களில் இன்று (7) நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. பிரதான புகையிரத பாதையின் கொழும்பு முதல் அம்பேபுஸ்ஸ வரையிலான 15 புகையிரதங்கள் (30 பயணங்கள்) தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் புத்தளம் வீதியில் பேரலந்தயில் இருந்து குரண வரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என தெரிவிப்பு. இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7-10-2020 இரவு 7.40 ஆகும்போது 4459 ஆக உயர்வு. irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 07-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 08, 2020 Rating: 5

National Diploma in Technology: University of Moratuwa

October 07, 2020

University of Moratuwa. 
National Diploma in Technology  
Closing Date: 13-11-2020. 
See the details below.


National Diploma in Technology: University of Moratuwa National Diploma in Technology: University of Moratuwa Reviewed by irumbuthirai on October 07, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-10-2020 நடந்தவை...

October 07, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 2ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 832 ஆக அதிகரிப்பு. 
  • 06.10.2020 இரவு 9.40 மணிக்கு உள்ள தகவல்களின் படி இலங்கையில் இதுவரை மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 252 என பதிவானது. 
  • இலங்கையில் இதுவரை ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்கள் என்ற நிலை அன்றைய தினம் பதிவானது. 
  • 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் பொதுமக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 
  • கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட திவுலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பகுதிகளில் தொடர்ந்து அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் சகல குடும்ப உறுப்பினர்களும் எக்காரணம் கொண்டும் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருக்குமாறு இராணுவத்தளபதி அவசர வேண்டுகோள். 

  • கம்பஹாவில் இருந்து வெயாங்கொட வரையிலான எந்த புகையிரத நிலையங்களிலும் புகையிரதம் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிவிப்பு. 
  • 07,08, 09 ஆம் திகதிகளில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கும், பிராந்திய அலுவலகங்களுக்கும் பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு. அதன்படி, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்துபசாரங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்கள் உட்பட அனைத்து விதமான ஊர்வலங்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடாக தூர பிரதேச பேருந்துகளுக்கு பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. எனினும், குறித்த பிரதேசங்களில் பேருந்தை நிறுத்துதல், பயணிகளை இறக்குதல் அல்லது ஏற்றுதல் இடம்பெறக்கூடாது என பொலிஸார் அறிவிப்பு. 
  • கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் 101 மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிப்பு. 
  • 7, 8, 9 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகம் மற்றும் வேரஹெர அலுவலகம் பொதுமக்களுக்காக திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு. 
  • குறித்து ஆடைத் தொழிற்சாலை தற்போதைய நிலைமை தொடர்பில் புதிய அறிக்கையை வெளியிட்டது. 
  • திவுலபிடிய, மினுவங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்கள் தாம் தங்கியுள்ள இருப்பிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள். 
  • யாருக்கேனும் காய்ச்சல் உட்பட ஏனைய அறிகுறிகள் ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு. 
  • மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் சகல தனியார் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிப்பு. 
  • கொழும்பு வொல்கட் மாவத்தையில் அமைந்துள்ள பிரதி காவல் துறை மா அலுவலகத்தில் இயங்கிய காவல் துறை சான்றுப்படுத்தல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் அலுவலகம் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 06-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 07, 2020 Rating: 5

05-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 06, 2020

05-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
05-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 05-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 06, 2020 Rating: 5

02-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

October 06, 2020

02-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 02-10-2020 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
02-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 02-10-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on October 06, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-10-2020 நடந்தவை...

October 06, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக திங்கள் (05) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம்.
  • திவ்லபிடிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண் பணிபுரியும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களிடம் பீ.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. 
  • குறித்த பெண்ணின் மகளுக்கும் கொரோனா இருந்ததால் அவர் படிக்கும் பாடசாலையில் உள்ளவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டது. 

  • 1500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 
  • யாழ்ப்பாணம், குருநாகல், மொனராகலை, மினுவங்கொடை, கட்டான, சீதுவ, ஜா-எல, திவுலபிடிய, மீரிகம, மஹர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் குறித்த ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள்.
  • மறு அறிவித்தல் வரை பரீட்சை திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் வழமையான சேவை கரும பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை பிற்போடுவதற்கு இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். 
  • ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்கள் ஊடாக வாகனங்கள் மூலம் பயணிக்க முடிந்த போதிலும் அந்த பிரதேசங்களில் வாகனங்களை நிறுத்த முடியாது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
  • நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளை பார்க்க செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். 
  • எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவிருந்த அரச கரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சைகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அரச கரும மொழி ஆணையாளர் நாயகம் பிரின்ஸ் சேனாதீர தெரிவித்துள்ளார்.

  • கொரோனா தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு 24 மணிநேரமும் இயங்கும் 1999 என்ற அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 
  • நாடு பூராகவும் நாளை முதல் ஊரடங்கு சட்டம் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரசு அறிவிப்பு. 
  • தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு சகல பொலிசாரின் விடுமுறை மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 
  • பீ.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை.
  • குறித்த ஆடை தொழிற்சாலையின் கொரோனா பரவல் கொத்தானது (Cluster) வெலிசரை கடற்படை முகாம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் என்பவற்றை விட பாரதூரமானது என தொற்று நோயியல் பிரிவின் பிரதானி தெரிவிப்பு. 
  • ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் பௌத்த தஹம் பாடசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடல்.
Irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 05-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 06, 2020 Rating: 5

பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விஷேட அறிவித்தல்

October 05, 2020

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு விடயங்களை கவனத்தில் கொண்டு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாக வழங்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
பரீட்சை திணைக்களத்திற்கு வரும் பொது மக்கள் கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
மீண்டும் அறிவிக்கும் வரையில் திணைக்களத்தினால் ஒரு நாள் 
மற்றும் வழமையான சேவை கரும பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 இந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விஷேட அறிவித்தல் பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் விஷேட அறிவித்தல் Reviewed by irumbuthirai on October 05, 2020 Rating: 5

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

October 05, 2020

உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டை களில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பின் அதனை அவசரமாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பிரதி பரீட்சைகள் ஆணையாளர் S. பிரணவதாசன் தெரிவித்துள்ளார். 
இதேபோன்று அனுமதி அட்டை இதுவரை கிடைக்கப் பெறாத மாணவர்கள் 
அதிபர் மூலமாக அவசரமாக அறிவிக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது. 
தனிப்பட்ட பரீட்சார்த்திகள், இதற்கான அனுமதி அட்டை இன்றைய தினத்திற்குள் (05) கிடைக்கவில்லையாயின் www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்கள தளத்தில் தரவிறக்கம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on October 05, 2020 Rating: 5

திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும்

October 05, 2020

திவுலபிடிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த தினம் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் குணமாகி வைத்தியசாலையில் இருந்து வௌியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா வைத்தியசாலையின் பணிபுரியும் 15 பேரும் மற்றும் குறித்த பெண் தொழில் புரியும் தனியார் நிறுவனத்தின் சுமார் 40 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
இதனையடுத்து நடைபெற்ற அதிரடி நிகழ்வுகள் வருமாறு: 
  • திவுலபிடிய, மினுவங்கொடை, வெயாங்கொட போன்ற பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிப்பு. 
  • நாட்டிலுள்ள சகல அரச, தனியார், கத்தோலிக்க மற்றும் சர்வதேச பாடசாலைகளும் திங்கள் (05) முதல் மறு அறிவித்தல் வரை மூடல். 
  • கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை தனியார் வகுப்புக்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை. 
  • அனாவசியப் பயணங்களைத் தவிர்த்து கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் இராணுவத்தளபதி வேண்டுகோள். 
  • மகர சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு சிறை கைதிகளை பார்க்க வருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை. 
  •  களனி பல்கலைக்கழகம், நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் கம்பஹாவில் உள்ள விக்ரமராச்சி ஆயுர்வேத நிறுவனம் திங்கள் (05) முதல் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மூடப்படும். மாணவர்களையும் வெளியேறுமாறு அறிவிப்பு. 
  • திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் உள்ள இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென இலங்கை இராணுவம் அறிவிப்பு. 
  • சகல பாலர் பாடசாலைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடல்.
  •  
  • உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கை கேட்பவே பயணிகள் ஏற்றப்பட வேண்டும் என அறிவிப்பு. 
  • அரச நிறுவனங்களில் திங்கட்கிழமைகளில் நடைபெறும் பொது மக்களுக்கான தினம் இந்த வாரம் இடம்பெறமாட்டாது. 
  • பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என புகையிரத திணைக்களம் அறிவிப்பு. 
  • திவுலபிடிய பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கும் கொரோனா தொற்று என அறிவிக்கப்பட்டு IDH வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு. 
  • திவுலபிடிய பெண் பணிபுரிந்த தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 1600 பேருக்கு திங்கட்கிழமை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள திட்டம். 
  • மதரஸாக்களில் தங்கியிருக்கும் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வேண்டுகோள். மற்றும் குர்ஆன் மத்ரஸா, ஹிப்ல் மத்ரஸா, பகுதிநேர மத்ரஸா, மக்தப் மற்றும் அஹதியா பாடசாலை என்பன மறு அறிவித்தல் வரை மூடல். 
  • ஊரடங்கு பிரதேசங்களில் வசிக்கும் துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு திரும்ப வேண்டாம் என அறிவிப்பு.
  • Irumbuthirainews.
திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும் திவுலபிட்டிய கொரோனாவும் அதன் பின்னரான அதிரடி நிகழ்வுகளும் Reviewed by irumbuthirai on October 05, 2020 Rating: 5
Powered by Blogger.