மழை காலங்களில் கூந்தலையும் , சருமத்தையும் பராமரிக்க சில டிப்ஸ்!
Tamil One
November 17, 2018
மழை காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பதனை பார்க்கலாம்.
1. முடி உதிர்வை தடுப்பது எப்படி?
குளிர் காலத்தில் தலை குளித்த பின்னர் முடியை நன்றாக உலரத்தி விட்டு
( முடியை உலர வைக்க டிரையர் உள்ளிட்டவைகள் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்கவும் .)
வாரம் ஒருமுறை முடியினை ஆயில் மசாஜ் செய்வது நல்லது.
ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கிறது .
புரதச்சத்து,இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான முடியினை பெறலாம் மற்றும் கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது .
2. உண்ணும் உணவில் கவனம்:
மழை காலத்திங்களில் முதலில் சருமம்தான் வரட்சியாகும். அவைகளை கட்டுபடுத்த நாம் உண்ணும்
உணவில் கவனமாக இருத்தல் அவசியமாகும் . ஏனெனில் உடலில் உள்ள சருமத்தை
புத்துணர்ச்சி பெறச் செய்ய, சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவது முக்கியம்.
ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமாகும் .
நீர் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.
3. உதடுகள் பத்திரம்:
குளிர் காலத்தில் வழமையாக உதடுகள் உலர்ந்து தோற்றமளிக்கும். உதடுகளில் வெடிப்புகள்
உண்டாகும். அப்படி இருக்கும் போது உதட்டின் தோலைக் கடிக்காதீர்கள். அப்படிச் செய்வதால்,
உதட்டின் நிறம் கறுப்பாக மாற வாய்ப்பிருக்கிறது.
இதைத்தடுக்க நெய் மற்றும் ஆலிவ் ஆயிலை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையடையும்
4. சருமத்தை ஈரளிப்பாக வைத்திருத்தல் வேண்டும்:
குளிர் காலத்தில் சருமத்தை ஈரபதமாக வைத்திருக்க மாய்ஸ்ட்ரைசர் கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.
உங்கள் தோலுக்கு ஏற்ற கிரீம்களை பூசுங்கள் மற்றும் தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தங்கள் . வீட்டில் எளிதாக கிடைக்ககூடிவைகள் ஆன தயிர் அல்லது பால் கொண்டு சருமத்தை ஈரபதமாக வைத்திருக்கலாம்.
5. நெல்லிகாய் நல்லது:
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல்’ நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு
சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. பொதுவாகவே வைட்டமின் சி
அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வைத்
தடுக்கும், முதிர்ச்சியான தோற்றம் வராது. குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் வரும் சிறு சிறு குளிர்கால
நோய்கள் வராமல் தடுக்கும்

Reviewed by Tamil One
on
November 17, 2018
Rating:
Reviewed by Tamil One
on
November 17, 2018
Rating: