Results for Life

உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

September 20, 2021
 

தற்போதைய டிஜிட்டல் பொருளாதார உலகில் தரவுகள் என்பது முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. ஒவ்வொருவரினதும் இப்படிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது. 
 
எனவே பொருளாதார கருமங்களுக்கு இப்படிப்பட்ட சகல தரவுகள், தகவல்கள் முக்கியமாக தேவைப்படுவதால் தற்போது இது தகவல் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. 
 
 
எது தனிப்பட்ட தரவுகள்? 

நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் எம்மைப் பற்றி ஏதோ ஒரு சில தரவுகளை அவை பெற்றுக் கொள்கின்றன. சில தளங்கள் நாம் எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிக்கிறோம்? எந்த நேரத்தில் இணையத்தை பயன்படுத்துகிறோம்? எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறோம்? என்ற பொதுவான விடயங்களை பெற்றுக் கொள்கின்றன. 
 
இன்னும் சில இணையதளங்கள் இதற்கு மேலதிகமாக எமது பெயர், முகவரி, வயது, இமெயில், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களையும் பெற்றுக் கொள்கின்றன. 
 
பொதுவான தரவுகளை பெற்றுக்கொள்வது பிரச்சினை அல்ல. ஆனால் குறித்த தரவுகளை வைத்து நபர் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்றால் அவை தனிப்பட்ட தரவுகளாக கருதப்படும். இவ்வாறான தகவல்களை பெறுவது தனிநபர் உரிமை மீறலாகும். 
 
 
கவனமாக இருப்பது எப்படி? 
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் தேவைக்கு அதிகமான தகவல்களை வழங்க கூடாது. இதனால் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று, எம்மைப் பற்றிய அதிக தகவல்கள் மூன்றாம் நபருக்கு செல்கின்றன. மற்றையது, எம்மை அவர்களது தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வைப்பதற்கான வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். உதாரணமாக, குறித்த தளம் ஒன்றில் மின்னஞ்சல் முகவரி கேட்கப்படாவிட்டால் நாம் அதை வழங்கக்கூடாது. ஆனால் கட்டாயம் மின்னஞ்சல் வழங்க வேண்டுமென்றால் 

இப்படிப்பட்ட பொதுவான விடயங்களுக்காக வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தனிப்பட்ட எமது மின்னஞ்சல் முகவரியை வழங்கக்கூடாது. எனவே பொதுவான விடையங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட விடயங்களுக்கு ஒன்றும் என குறைந்தது இரு மின்னஞ்சல் முகவரிகளை பேணுவது சிறந்தது. 
 
 
VPN பாவிப்பவர்கள் நினைப்பதுண்டு எம்மைப் பற்றிய தரவுகளை வலைத்தளங்களுக்கு பெறமுடியாது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் விபிஎன் பாவிக்கும் போது எமக்கு இணைய சேவை வசதி வழங்கும் நிறுவனங்களுக்குதான் அது தெரியாமல் போகும். ஆனால் நாம் செல்லும் வலைத்தளங்கள் எமது தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. எனவே விபிஎன் பயன்படுத்தும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். 
 
 
சில மென்பொருள்கள் அல்லது செயலிகளை நாம் குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கென தற்காலிகமான தரவுகளை மட்டும் நாம் வழங்குவது போதுமாகும். 
 
சமூக ஊடக மென்பொருள் அல்லது செயலிகளை பதிவிறக்கம்(Download) செய்யும் போது நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
 
 
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் எமது தனிப்பட்ட தரவுகளை அதில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். 
 
 
ஒரு மென்பொருள் அல்லது செயலியை நாம் பயன்படுத்த விரும்பினால் அது தொடர்பான தனிநபர் கொள்கை (Privacy Policy) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) மூன்றாம் தரப்பு மதிப்பாய்வு (Review) போன்றவற்றை அவசியம் பரிசோதித்தே முடிவெடுக்க வேண்டும். 
 
 
எமது தரவுகளை வழங்குவதால் என்ன நேர்ந்து விடப்போகிறது என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வணிகர்களால் தகவலாகவும் பயன்படுத்தப்படலாம். தவறாகவும் பயன்படுத்தப்படலாம். எமது தனிநபர் உரிமை குறித்து முதலில் நாமே கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்!

June 13, 2021

உலகிலேயே வாழ்வதற்கு உகந்த நகரங்களில் (most liveable cities) நியூஸிலாந்தின் ஒக்லாந்து (Auckland) நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
Economist Intelligence Unit (EIU) இன் வருடாந்த தரவரிசையில் இது வெளியிடப்பட்டுள்ளது. நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றின் நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. 
நியூஸிலாந்தின் கொரோனா முடக்கநிலை நடவடிக்கைகள் அதன் எல்லைகளுக்குள் COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளன. எனவே ஒக்லாந்து போன்ற நகரங்களில் உள்ள மக்களால் தொற்றுக்கு முந்தைய வாழ்க்கைமுறையை அனுபவிக்க முடிந்தது என்று EIU தெரிவித்துள்ளது.
வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்! வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: உலகிலேயே முதலிடம் இதற்குத்தான்! Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா?

April 11, 2021

அதிகமாக ஸ்மார்ட் போன்களை பாவிப்பது பல்வேறு நீண்ட நாள் நோய்களுக்கு வழிவகுக்கும் என குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய், ஆண்மை குறைவு ஏற்படுத்தல், மூளை தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய், குழந்தைகளில் கவனம் குறைதல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். எனவே இதை முறையாக அளவோடு பாவிக்க பழகிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

Smart Phones பாவிப்பதில் இலங்கைக்கு கிடைத்த இடம்...

April 01, 2021

தென்னாசியாவில் அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளை (Smart Phones) பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 2ம் இடத்தை அடைந்துள்ளது. 
சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில்படி நாட்டில் 
60% னோர் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
69 வீதமானோர் பயன்படுத்தும் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. நேபாளத்தில் 53%மும் பாகிஸ்தானில் 51 வீதமானோரும் ஸ்மார்ட்போன் பாதிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தென்னாசியாவில் குறைந்தளவில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகிறது. அங்கு 41 வீதமானேரே ஸ்மார்ட்போன்களை பாவிப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Smart Phones பாவிப்பதில் இலங்கைக்கு கிடைத்த இடம்... Smart Phones பாவிப்பதில் இலங்கைக்கு கிடைத்த இடம்... Reviewed by irumbuthirai on April 01, 2021 Rating: 5

இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்...

March 09, 2021

உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
இலங்கையில் 83% மான மரணங்கள் தொற்றா நோயால் ஏற்படுகின்றன. அவற்றில் 34% மானவை 
இருதய மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களினால் ஏற்படுகின்றன. அதாவது, இந்த மரணங்கள் இருதயநோய், பக்கவாதம், அதி உயர் குருதி அழுத்தம் போன்றவற்றினால் இடம்பெறுகின்றன. 
 இவற்றுள் மிகவும் அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், அதி உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம், உணவில் அதிகமாக உப்பை பயன் பயன்படுத்துவதாகும். 
ஒருவர் நாளொன்றிற்கு எடுக்க வேண்டிய உப்பின் அளவு 5 கிராம் (ஒரு தேக்கரண்டி அளவு) என்பதாக உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இலங்கையில் ஒருவர் நாளொன்றிற்கு 9 கிராம் தொடக்கம் 12 கிராம் வரையிலான அதிகளவான உப்பை பயன்படுத்துகின்றனர். 
இதேவேளை உப்பு பாவனையைக் குறைப்பதனால் ஒரு ஆண்டில் உலகில் ஏற்படுகின்ற மரணங்களில், 2.5 மில்லியன் மரணங்களை குறைக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்... இலங்கை மக்களின் உப்பு பாவனை.... அதிரவைக்கும் தகவல்... Reviewed by irumbuthirai on March 09, 2021 Rating: 5

பெண்கள் டுவிட்டரை (Twitter) எதற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர்? ஆய்வில் வெளியான தகவல்...

March 07, 2021

பெண்கள் டுவிட்டரில் (twitter) எதைப்பற்றியெல்லாம் பதிவுகளை செய்கிறார்கள் என்பது குறித்த சுவாரசிய தகவல்கள் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன. 
 இதற்காக 700 பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 2019 ஜனவரி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 10 நகரங்களில் 
பெண்கள் வெளியிட்ட 5 லட்சத்து 22 ஆயிரத்து 992 பதிவுகளும் ஆராயப்பட்டன. 
இதில் பெண்கள் டுவிட்டரில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவது தெரியவந்துள்ளது. பெண்களின் டுவிட்டர் பதிவுகள் 9 பொருளை பிரதானமாக கொண்டுள்ளன. 
அதாவது பெண்களின் டுவிட்டர் பதிவுகளில் 24.9% பேஷன், புத்தகங்கள், அழகு குறிப்புகள், பொழுதுபோக்கு அம்சங்கள், சாப்பாடு பற்றி அமைந்துள்ளன. 
நாட்டு நடப்புகள் பற்றி 20.8% பதிவுகள் அமைந்திருக்கின்றன. 
கொண்டாட்ட தருணங்கள் தொடர்பாக 14.5% பதிவுகள் செய்யப்படுகின்றன. 
சமூகம் தொடர்பாக 11.7% பதிவுகளும், 
சமூக மாற்றங்கள் குறித்து 8.7% பதிவுகளும் உள்ளன. 
டுவிட்டரை பொறுத்தமட்டில் அன்றாட உரையாடல்கள், கொண்டாட்ட தருணங்கள்தான் அதிகபட்ச லைக்குகளையும், பதில்களையும் பெறுகின்றன. 
நகரங்களில் சென்னை நகரத்தில்தான் கொண்டாட்ட தருணங்கள் பற்றி அதிகமாக பெண்களால் டுவிட்டர் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. 
சமூகம், சமூக மாற்றம் பற்றி பெங்களூரு பெண்கள் பதிவுகளை வெளியிடுகின்றனர். 
கவுகாத்தி பெண்கள் பேஷன் பற்றியும், விருப்பங்கள் குறித்தும், நாட்டு நடப்பு பற்றியும் பதிவுகளை வெளியிடுகிறார்கள் என ஆய்வு முடிவில் தகவல் வந்துள்ளது என ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
பெண்கள் டுவிட்டரை (Twitter) எதற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர்? ஆய்வில் வெளியான தகவல்... பெண்கள் டுவிட்டரை (Twitter) எதற்கெல்லாம் பயன்படுத்துகின்றனர்? ஆய்வில் வெளியான தகவல்... Reviewed by irumbuthirai on March 07, 2021 Rating: 5

அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில:

January 12, 2021

அல்குர்ஆனை தான் 02 முறை முழுமையாக வாசித்ததாகவும் எந்த ஒரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியையும் அதற்கு அமைச்சர் வழங்கிய பதிலையும் இங்கு தருகிறோம்... 
ஊடகவியலாளர்:- அமைச்சராகிய நீங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அல்குர்ஆன் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை ஆய்வு செய்தா முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தீர்கள்? இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், 
அல்குர்ஆனை முழுமையாக படித்த பின்னே நான் கருத்து தெரிவித்தேன். அல்குர்ஆனை நான் 2 முறை வாசித்தேன். அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடவில்லை. அல்குர்ஆன்; தொடர்பில் நான் விசேட நிபுணர் அல்ல. விசேட நிபுணர் யாராயினும் நான் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். 
குர்ஆனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி நான் இதனை தெரிவித்தேன். குர்ஆனில் இந்த சடல அடக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்குமாயின், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால் இது குறித்து எவரும் பதிலளிக்கவில்லை. 
சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக குர்ஆன் குறித்து தகவல்கள் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் எதிலும் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை. அதேவேளை தகனம் செய்வது தடைசெய்யப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் செல்லப்பட்டும் இல்லை. 
நான் அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் பேச்சாளராகவே வந்துள்ளேன். எனது தனிப்பட்ட, கட்சி தொடர்பான கேள்விகள் கேட்க விரும்பினால் அவை தொடர்பில் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டிலே வினவ வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
(அரசாங்க தகவல் திணைக்களம்)
அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: அல்குர்ஆனை இரண்டு முறை வாசித்தேன்: எங்கும் அவ்வாறு இல்லை: சவால் விட்ட கம்மன்பில: Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை:

January 10, 2021

வட்ஸ்அப் (WhatsApp) சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளினால் பாவனையாளர்கள் பாரிய அளவிலான அதிர்ச்சி, அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பாவனையாளர்களின் 
தகவல்கள், தொலைபேசி இலக்கம், அவர்கள் செல்லும் இடங்கள் என்பன பற்றிய தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி, பெற்றுக் கொள்ள வட்ஸ்எப் ற்கு முடியும். அதேவேளை
பாவனையாளர்களின் சகல தகவல்களையும் ஏனைய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வட்ஸ்அப் நிறுவனத்திற்கு கிடைக்கும். 
இந்த நிலையில்  WhatsAppன் இந்த புதிய நிபந்தனைகள் காரணமாக 
டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 தற்போதைய நிலையில் உலகின் முதலாவது பணக்காரராக இருக்கும் எலன் மஸ்க் போன்றவர்கள் வட்ஸ் அப் சமூக வலைத்தளத்திற்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை: வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை: Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

பிறப்பை விட இறப்பு அதிகரித்த நாடு

January 04, 2021

ஏற்கனவே உலகில் குறைந்த அளவு பிறப்பு வீதத்தைக் கொண்ட தென்கொரியாவில் கடந்த வருடம் (2020) பிறப்புக்களின் எண்ணிக்கையை விட இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 
அதாவது கடந்த வருடம் 
275,800 பிறப்புக்களும் 307,764 இறப்புகளும் அங்கு நிகழ்ந்துள்ளன. எனவே 
இந்நிலைமை காரணமாக நாட்டில் குறைவடையும் இளைஞர் தொகையால் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழி ஏற்படுவதுடன் நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிறப்பை விட இறப்பு அதிகரித்த நாடு பிறப்பை விட இறப்பு அதிகரித்த நாடு Reviewed by irumbuthirai on January 04, 2021 Rating: 5

ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்...

October 26, 2020

சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை பலி கொண்டு வருகிறது.  
இதற்கு பொலிஸ் ஊரடங்கு மூலம் வீட்டிலேயே முடங்குதல் ஒன்றே சிறந்த வழியாக பல நாடுகள் இன்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.  
வாழ்நாளில் முதல் முறையாக எதிர்கொண்ட இந்த சர்வதேச முடக்கம் முதலில் மக்களுக்கு அசௌகரியங்களை கொடுத்தாலும், பின்னர் அதற்கேற்ப வாழ தங்களை அவர்கள் அமைத்துக்கொண்டனர். 
அந்தவகையில் இந்த ஊரடங்கால் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் லூசியானா பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் மக்களிடம் ஆய்வு நடத்தினர். 
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து மற்றும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 7,754 பேரிடம் ஆய்வு நடத்தி, 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளனர்.
உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்களிடம் அவர்களது வாழ்க்கை முறை மாற்றம் குறித்து முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வருமாறு..
  • ஆரோக்கியமான உணவு பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறைந்த அளவில் அடிக்கடி உண்பதால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
  • அதிக நொறுக்குத்தீனி, குறைவான உடற்பயிற்சி, தாமதமாக படுக்கைக்கு செல்தல், குறைவான தூக்கம், கவலைகள் இரட்டிப்பு போன்றவற்றுக்கு இந்த ஊரடங்கு காரணமாகி இருக்கிறது. 
  • உடல் பருமன் கொண்டவர்களை பொறுத்தவரை இந்த ஊரடங்கு நாட்களில் அவர்களுக்கு மேலும் எடை அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர்.
  • உடல் பருமன் கொண்டவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாட்டை மேலும் அதிகரித்து இருக்கிறார்கள். அதேநேரம் அவர்களது மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக இந்த ஊரடங்கு நாட்கள் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பதாக ஆய்வாளர்கள் 'ஒபீசிட்டி' என்ற மருத்துவ இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... ஊரடங்கில் நடத்தப்பட்ட ஆய்வு... வெளியான தகவல்கள்... Reviewed by irumbuthirai on October 26, 2020 Rating: 5

திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

July 06, 2020

இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு: 
வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு ( மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு , இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. இதே போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அ.த.தி)
திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by irumbuthirai on July 06, 2020 Rating: 5

பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம்

June 11, 2020


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு என்பது தொடர்பாக அறிவுறுத்தல்களை இலங்கை வக்பு சபை வெளியிட்டுள்ளது. 
அந்தவகையில் திறப்பதற்கு முன்னர் பொது சுகாதார அதிகாரியின் (PHI) எழுத்துமூல அனுமதியைப் பெற வேண்டும். 
சுகாதார அதிகாரிகள் கூட்டுத் தொழுகைக்கு/ கூட்டு நடவடிக்கைகளுக்கு இன்னும் அனுமதி வழங்காமையினால் ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை மற்றும் நிகாஹ் மஜ்லிஸ் நடத்த முடியாது. 
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை முழுமையாக கீழே காணலாம்.


பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் பள்ளிவாசல்களை மீள திறப்பது எவ்வாறு? இலங்கை வக்பு சபையின் விளக்கம் Reviewed by irumbuthirai on June 11, 2020 Rating: 5

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ...

June 10, 2020

தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் மற்றும் மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்: 
01. மதவழிபாட்டுத் தலங்கள்: 
மத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது. 
சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. • இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத் தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும். 
02. தனியார் வகுப்புக்கள்: 
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. 
சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில் அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். 
இந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.
(அ.த.தி)

தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... தனியார் வகுப்புகள் மற்றும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு: நிபந்தனைகள் இதோ... Reviewed by irumbuthirai on June 10, 2020 Rating: 5

விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை...

June 09, 2020


பொது போக்குவரத்தின் போது பயணசீட்டுக்காக பணத்தை செலுத்துவதற்கு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் முறை எதிர்வரும் ஜூலை இறுதி முதல் பாவனைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாட்டை போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ளது.
பயணச்சீட்டுக்கான பணத்தை பயன்படுத்தும் பொழுது அதில் கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாயம் இருப்பதனால் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முற்கொடுப்பனவு ஸ்மார்ட் அட்டையை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்யும்படி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரயில் மற்றும் அரச, தனியார் பேருந்துகளிலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதேவேளை தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களின் சம்பளத்துக்கு மேலதிகமாக கொடுப்பணவொன்றை வழங்கும் வகையில் பஸ் உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஆணைக்குழுவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... விரைவில் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் அட்டை... Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு

June 07, 2020


முகக் கவசம் அணிவது பற்றி உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் எல்லோரும் முகக் கவசம் அணிவது கொரோனா பரவலை குறைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
நோயற்ற ஒருவர் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதற்கான எவ்விதமான ஆதாரமும் இல்லை என இதற்கு முன்னர் WHO தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு முகக் கவசம் அணிவது பற்றி WHO இன் புதிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 07, 2020 Rating: 5

இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து

May 23, 2020


ஹிஜ்ரி 1441 ஆம் வருடத்திற்குரிய ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று இலங்கையில் தென்பட்டதால் நாளை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 
எனவே நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் இரும்புத்திரை நியூஸ் இணையத்தளம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோன்று உலகளாவிய ரீதியில் வாழும் சுமார் 1.8 பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக்!! 
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அனைவரும் வீட்டில் இருப்போம்! பாதுகாப்பாக இருப்போம்!!
ஈத் முபாரக்!!

இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

முடக்க நிலையால் மதுபானம் மற்றும் புகையிலை பாவனையில் உண்டான மாற்றம்

May 17, 2020

கொரோனா வைரஸ் பரவல் (கொவிட்-19) காரணமாக அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக, இலங்கையில் மதுபான மற்றும் புகையிலை பயன்பாடு வீழ்ச்சி கண்டுள்ளது. 
இலங்கை மதுபான மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுத் தகவல் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகள் இதனை புலப்படுத்தியுள்ளன. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், மதுபான நுகர்ச்சி 80 சதவீதத்தாலும், புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாடு 48 சதவீதத்தாலும் குறைந்திருக்கிறது. 
இந்த முடக்கநிலை காரணமாக இருபது சதவீதமானவர்கள் புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டில் இருந்து முற்றாக விலகியிருக்கிறார்கள் என்பது ஆய்வின்மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
(அ.த.தி)

முடக்க நிலையால் மதுபானம் மற்றும் புகையிலை பாவனையில் உண்டான மாற்றம் முடக்க நிலையால் மதுபானம் மற்றும் புகையிலை பாவனையில் உண்டான மாற்றம் Reviewed by irumbuthirai on May 17, 2020 Rating: 5

Parenting newborns

October 10, 2019


After many months of pregnancy and perhaps hours of labour or the rigours of a Caesarean section, a newborn baby arrives. Parents of a new baby have a huge responsibility which would last a lifetime. The mother has to deal with so many things, all in a day’s work. Although newborn care is important, quite unfortunately,


it is a job for which young women undergo very little training. You learn mothering skills by taking care of your baby. Nobody, male or female, knows instinctively how to change a diaper.
Click here for the full article;


parenting
Parenting newborns Parenting newborns Reviewed by irumbuthirai on October 10, 2019 Rating: 5
Powered by Blogger.