4ம் திகதி முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

April 02, 2022


மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சானது அதிபர்களுக்கு விஷேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 


அதாவது இம்மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பாடசாலைக்கு மாணவர்களை பரீட்சை மற்றும் அத்தியாவசிய விடயங்களுக்காக மாத்திரம் அழைப்பதற்கு அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏனைய மாணவர்களை பாடசாலைக்கு அழைக்காமல் இருக்கலாம். 

 

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்சார பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு முதலாம் தவணை விடுமுறையை இம் மாதம் 4ஆம் திகதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சிபாரிசு செய்தமை குறிப்பிடத்தக்கது.

4ம் திகதி முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் 4ம் திகதி முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on April 02, 2022 Rating: 5
Powered by Blogger.