Advanced Certificate in Science: Open University of Sri Lanka

December 21, 2019


Science and Engineering Foundation Courses are designed to encourage those without the basic entry qualifications to pursue higher studies in Science and Engineering Technology to achieve such qualifications.

Starting date of issuing applications : 
22nd December 2019

Application closing date :

21st January 2020
Click the link below for more details :

Advanced certificate in science
Advanced Certificate in Science: Open University of Sri Lanka Advanced Certificate in Science: Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 21, 2019 Rating: 5

2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

December 20, 2019


2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில்,

கல்வி அமைச்சிற்குள் சிறப்பு பணிப்பிரிவு ஒன்றை ஸ்தாபித்தல், 
மிலேனியம் சலஞ்சஸ் என்ற அபிவிருத்தி உடன்படிக்கையை மீளாய்வு செய்தல், 
தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்காக 1000 பேருக்கு சந்தர்ப்பம் வழங்கல் 
போன்ற பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ள. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet dec......
2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 2019.12.18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on December 20, 2019 Rating: 5

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்: நேர்முக பரீட்சை திகதி அறிவிப்பு

December 19, 2019


தேசிய பாடசாலைகளில் நிலவும் 278 அதிபர் வெற்றிடங்களுக்காக அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக்குழு உரிய வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றில் தகுதி பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கு அமைவாக உரிய தகுதியைக் கொண்டவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை டிசம்பர் மாதம் 

23 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத்திற்கு அமைவாக பாடசாலைகள் சிலவற்றை குறிப்பிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதிபர் பதவி வழங்கும் பொழுது அவர்களது இந்த விருப்பத்தை கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இந்த நேர்முக பரீட்சை டிசம்பர் மாதம் 23,24,26,27 மற்றும் 

28 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது. இதன் கீழ் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிபர்களாக நியமிப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள்.
(அ.த.தி)
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்: நேர்முக பரீட்சை திகதி அறிவிப்பு தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்: நேர்முக பரீட்சை  திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

MASTER OF EDUCATION @ Open University of Sri Lanka

December 19, 2019

The programme consists of course work only. The course work comprises 3 compulsory courses and one optional course. 
This programme will be conducted in Colombo (Sinhala, Tamil & English), Kandy (Sinhala medium only) and Jaffna (Tamil medium only) regional centers. 
Objectives: 
To expand the opportunities for higher studies in Education for those who are already serving in the field 
To enable personnel already serving in higher educational institutions to obtain specialized knowledge in fields relevant to their professions by offering a variety of new subjects 
To promote research in areas relevant to the development of Education. 
Accepting Online Applications from: 
15th December 2019 
Closing Date for Applications :

15th January 2020 
Selection Test : 26th January 2020 
Click the link below for more details:

M. Ed
MASTER OF EDUCATION @ Open University of Sri Lanka MASTER OF EDUCATION @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி

December 19, 2019

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கை நெறிக்காக 1000 பேருக்கு வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் போது அடுத்த வருடத்தில் இந்த பயிற்சி ஆரம்பிக்கப்படுவதுடன் 2022 ஆம் ஆண்டில் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை 

3000 ஆக அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில் 1,000 பேருக்க பயிற்சி மொரட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவனத்தில்  1,000 பேருக்க பயிற்சி Reviewed by irumbuthirai on December 19, 2019 Rating: 5

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ...

December 18, 2019


இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளும் வெட்டுப்புள்ளிகளும் இதோ...






தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ... தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளும் வெட்டுப் புள்ளிகளும் இதோ... Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka

December 18, 2019


The Diploma in English Language and Literature is a one-year academic programme designed to meet the needs of students who wish to enhance their English language and communication skills.
Issuing Date for Applications: 18th December 2019
Closing Date for Applications:


21st January 2020
Click the link below for more details


Diploma in Eng...
Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka Diploma in English Language and Literature @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு

December 18, 2019

அதிபர் சேவை தரம் - 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் கவனத்திற்கு நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்துள்ளார். குறித்த ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று (18.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சி அமைச்சரிடம் இதுகுறித்து முறையிட்டனர். இதன்போதுஇ நாடளாவிய ரீதியில் சுமார் 610 தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 

167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் மொழிவாரியாக ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்ற ஆட்சேர்ப்பு நியமங்களுக்கு மாறாக ஆட்சேர்ப்பு இடம்பெற்றமையினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர். 
(அ.த.தி)
அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்..

December 18, 2019


ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குவது நீண்டகாலமாகவே இடம்பெற்றுவரும் வழக்கமாகும். இதனால் ஏற்படக்கூடிய பாரதூரமான சுற்றாடல் தாக்கங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி குடிநீர் போத்தல்கள் வழங்கப்படுவதை தடைசெய்வதற்கும் அதற்குப் பதிலாக


கண்ணாடிக் குவளைகளில் நீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். இதனூடாக இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்றுசேர்வது பெருமளவு குறைவடையும். ஏனைய அரச நிறுவனங்களும் இந்த நடைமுறையை வெகுவிரைவில் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை இதனால் சுற்றாடலில் ஒன்றுசேரும் பிளாஸ்டிக் போத்தல்களின் அளவு பெருமளவில் குறைவடையும்.
(அ.த.தி)
ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை

December 17, 2019


2020 இல் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் போது


சகல மாணவர்களுக்கும் பாடநூல்களை விநியோகிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எஞ்சிய பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார். பாடநூல்களை விநியோகிக்கும் நடவடிக்கை சகல மாகாணங்களை உள்ளடங்கிய வகையில் இடம்பெறுகிறது.
ஆயிரத்திற்கும் 500 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் பணி திணைக்களத்தினால் நேரடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஏனைய பாடசாலைகளுக்கு வலய கல்வி காரியாலங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
(அ.த.தி)
மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை Reviewed by irumbuthirai on December 17, 2019 Rating: 5

B.Sc Degree: Open University of Sri Lanka

December 17, 2019


B.Sc. Degree programme is designed to contribute towards raising the general educational standards of the public by providing an opportunity for higher education in Science. This programme facilitates those already employed in the field, and late developers to acquire a B.Sc. degree in their own time at an affordable cost. 

Issuing of Applications : 
15th December 2019 
Closing Date for Applications : 

21st January 2020
Click the link below for more details

B.Sc Degree: Open University of Sri Lanka B.Sc Degree: Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on December 17, 2019 Rating: 5

தரம் 05 (கணிதம்): இலகு முறையில்...

December 16, 2019


தரம் 05 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Maths
தரம் 05 (கணிதம்): இலகு முறையில்... தரம் 05 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 16, 2019 Rating: 5

சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி

December 16, 2019


குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சுற்றுலாத்துறை தொடர்பாக 3 வருட கால பயிற்சியை 

இலவசமாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரீ.யு.ஐ அக்கடமி கல்வி நிறுவனத்தின் ஊடாக இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு ஹவுஹல்ல ஹெரிட்டன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. 150 இளைஞர் யுவதிகளுக்கு 3 வருட காலத்திற்கு சுற்றுலா தொழிற்துறை தொடர்பாக விரிவான பயிற்சியை வழங்குவதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. 
(அ.த.தி)
சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி சுற்றுலாத்துறையில் 3 வருட பயிற்சி Reviewed by irumbuthirai on December 16, 2019 Rating: 5

பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை:

December 15, 2019


பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள. இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களது பிள்ளைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த புலமைப்பரிசில்கள் 

க.பொ.த. உயர்தரம் , பட்டப்படிப்பு கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில் நுட்ப கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானதாகும். க.பொ.த. சாதாரண தரத்தில் குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் 

இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு சான்றிதழ், க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் நிழற் பிரதிகளுடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அல்லது விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 3638, காலி வீதி , கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம் , இல. 31, ரஜபிகில்ல மாவத்தை , கண்டி ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் செயலாளர், CEWET மே/ பா , இந்திய உயர் ஸ்தானிகராலயம் , த.பெ.எண். 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
(அ.த.தி)
பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: Reviewed by irumbuthirai on December 15, 2019 Rating: 5
Powered by Blogger.