ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை:

February 27, 2021

அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ஜோ பைடன் தனது முதல் இராணுவ நடவடிக்கைக்கான உத்தரவை வழங்கியுள்ளார். 
 அதாவது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக 
சிரியாவில் அதிரடி தாக்குதல் அமெரிக்கா தொடங்கி உள்ளது. 
இந்த மாத ஆரம்பத்தில் ஈராக்கில் நடந்த ஒரு ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமயகமான பென்டகன் கூறியுள்ளது.
ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை: ஜோ பைடனின் அதிரடி: ஆரம்பமானது முதல் இராணுவ நடவடிக்கை: Reviewed by irumbuthirai on February 27, 2021 Rating: 5

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்...

February 27, 2021

உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தைக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த புதன்கிழமை திறந்து வைத்தாா். 
நாட்டு மக்களின் வலிமையையும் நாட்டின் திறமையையும் இந்த கிரிக்கட் அரங்கம் பறைசாற்றுகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மையமாக 
இந்தியா அறியப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா உயா்ந்தநிலையை அடைந்ததைப் போல மற்ற விளையாட்டுகளிலும் முன்னணி பெறும். மற்ற துறைகளிலும் இந்தியா வளா்ச்சி காணும் என்று குடியரசுத் தலைவர் இந்நிகழ்வின் போது தெரிவித்தார். 
இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 1.32 லட்சம் போ் அமா்ந்து கிரிக்கெட் போட்டியைக் காண முடியும். 
இந்த அரங்கம் சா்தாா் படேல் அரங்கம் என்ற பெயரில்தான் முன்னர் இருந்தது. மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, அந்த அரங்கத்தைப் புதுப்பித்து, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமாகப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கத்துக்கு பெயர் மாற்றம்... Reviewed by irumbuthirai on February 27, 2021 Rating: 5

எச்சரிக்கை: வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்கள்...

February 26, 2021

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக சமூக வலைத்தளங்களில் கூறி பலர் நிதி மோசடியில் ஈடுபட்டு 
வருவதாக குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. 
குறித்த விளம்பரங்கள் சட்டரீதியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மின்னணு ஊடகம் மற்றும் பத்திரிக்கைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும். 
எனவே, சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் குறித்த விளம்பரங்களை நம்ப வேண்டாம் பணியகம் பொது மக்களை அறிவுத்தியுள்ளது.
எச்சரிக்கை: வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்கள்... எச்சரிக்கை: வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்கள்... Reviewed by irumbuthirai on February 26, 2021 Rating: 5

பல ஜனாஸாக்களை எரித்த பின்னர் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

February 26, 2021

கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக கொரோனா ஜனாசாக்கள் எரிக்கப்பட்டு வந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் நிலையில் நேற்றைய தினம் (25) இரவு சுகாதார அமைச்சு கொரோனா உடல்களை நல்லடக்கம் அல்லது தகனம் செய்யவும் முடிவு என விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
குறித்த வர்த்தமானியின் முழு வடிவத்தை தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
குறித்த வர்த்தமானியின் முழு வடிவத்தை ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
குறித்த வர்த்தமானியின் முழு வடிவத்தை சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

பல ஜனாஸாக்களை எரித்த பின்னர் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) பல ஜனாஸாக்களை எரித்த பின்னர் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on February 26, 2021 Rating: 5

22-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 24, 2021

22-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
 பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
22-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 22-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 24, 2021 Rating: 5

கொரோனா பரிசோதனையில் அதிரடி திருப்புமுனை...

February 24, 2021

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கான பரிசோதனைகளுக்கும் பாரிய செலவுகளை பல்வேறு நாடுகள் செய்கின்றன. 
இந்த நிலையில், பிரான்சில் தொலைபேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனையில் 90% துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
அதாவது, CORDIAL - 1 என்ற பெயரில் 300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 சதவீதம் துல்லியமாக முடிவுகள் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 
சளி மாதிரியை கண்டறியும் சிறிய கருவியை 
தொலைபேசியில் பொருத்தினால், அதன்மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அடுத்தகட்டமாக 1000 பேருக்கு பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரிசோதனையில் அதிரடி திருப்புமுனை... கொரோனா பரிசோதனையில் அதிரடி திருப்புமுனை... Reviewed by irumbuthirai on February 24, 2021 Rating: 5

புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய நாணயம்

February 24, 2021

இ. ம. வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் அவர்களினால் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 
 இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும். 
நாணயம் 7 பக்க வடிவத்துடன் 
நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
 2021.02.24

(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய நாணயம் புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய நாணயம் Reviewed by irumbuthirai on February 24, 2021 Rating: 5

ஜனாசா எரிப்பு தொடர்பாக கனேடிய பெண் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடு...

February 24, 2021

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஸாஹிட் (Salma Zahid) இலங்கையில் COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றமை தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் நேற்று (23) மனுவொன்று சமர்ப்பித்து உரையாற்றினார். 
சிறுபான்மையினரான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் அடக்கம் செய்யும் மத, கலாசார நடைமுறைக்கு மதிப்பளிக்குமாறும் கட்டாயத் தகனத்தை நிறுத்துமாறும் இலங்கை 
அரசாங்கத்தை கனேடிய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். 
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் எவையும் இல்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கு புறம்பாகவே அச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
கனடாவில் உள்ள இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையொப்பமிட்ட மனுவை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதாக இதன்போது சல்மா ஸஹிட் தெரிவித்துள்ளார்.
ஜனாசா எரிப்பு தொடர்பாக கனேடிய பெண் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடு... ஜனாசா எரிப்பு தொடர்பாக கனேடிய பெண் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடு... Reviewed by irumbuthirai on February 24, 2021 Rating: 5

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு பற்றி ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு

February 24, 2021

100,000 வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். 
 ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள் நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என 
பரவிவரும் வதந்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். 
நேற்று (23) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இவ்வாறானதொரு கருத்து சுகாதார ஊழியர்களுக்கு மத்தியில் பரவிவருவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த வேலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார். 
 ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டம் மிகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முறையான கல்வி அல்லது தொழில்முறை தகுதிகள் அல்லது திறன்கள் இல்லாதவர்கள் மட்டுமே அத்திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள். 
தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களில் தொழிலாளர்கள், துப்புரவு பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்களாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பின்னர், அவர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும். 
இருப்பினும், அவர்கள் சுகாதார சேவையில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2021.02.23

(Source : அரசாங்க தகவல் திணைக்களம்)
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு பற்றி ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு பற்றி ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு Reviewed by irumbuthirai on February 24, 2021 Rating: 5

மூக்குக் கண்ணாடி பாவித்தால் கொரோனா வராதா?

February 23, 2021

இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மூக்குக் கண்ணாடி அணியும் நபர்கள் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. 10-80 வயதுக்குட்பட்ட 304 பேரிடம் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 19% மானோர் தாங்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும், பார்வைக் குறைபாடு காரணமாக தினமும் கண்ணாடி அணிவதாகவும் கூறினர். 
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கண்ணாடி அணியும் நபர்கள் கண்ணாடி அணியாதவர்களை விட 3-4 மடங்கு குறைவாக கோவிட் வைரஸ் பாதிக்கப்படுவார்கள்.

மூக்குக் கண்ணாடி பாவித்தால் கொரோனா வராதா? மூக்குக் கண்ணாடி பாவித்தால் கொரோனா வராதா? Reviewed by irumbuthirai on February 23, 2021 Rating: 5

19-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

February 22, 2021

19-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 19-02-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
19-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 19-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on February 22, 2021 Rating: 5

12-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

February 22, 2021

12-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 12-02-2021 (In three languages) 
இதில்,
 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
12-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 12-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on February 22, 2021 Rating: 5

05-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

February 22, 2021

05-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 05-02-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
05-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 05-02-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on February 22, 2021 Rating: 5

29-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

February 22, 2021

29-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 29-01-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
29-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 29-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.