பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்!
Irumbu Thirai News
January 22, 2022
பரீட்சை சான்றிதழ்களை ஒரு நாள் சேவை மூலம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி மாதம் ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சைக்காக அதிகளவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ள காரணத்தினாலேயே இது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் சான்றிதழ்களை பெறுவதற்காக இணையத்தின் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சுக்கோ அல்லது விண்ணப்பதாரியின் தனிப்பட்ட முகவரிக்கோ விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்!
 Reviewed by Irumbu Thirai News
        on 
        
January 22, 2022
 
        Rating:
 
        Reviewed by Irumbu Thirai News
        on 
        
January 22, 2022
 
        Rating: 
 
 
 
