இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை!


நடைபெறவுள்ள பரீட்சைகளை முன்னிட்டு அதற்குரிய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் இணைய வழியில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன தெரிவித்துள்ளார். 
 
தடையை மீறி இணைய வழியில் கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படுவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ஆம் திகதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகள் உட்பட அது தொடர்பான சகல விடயங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகள் உட்பட மாதிரி வினாப்பத்திரங்களை வெளியிடல் அச்சிடல் போன்ற சகல விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை! இணைய வழியில் கற்பித்தாலும் சட்ட நடவடிக்கை! Reviewed by Irumbu Thirai News on January 19, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.