புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள்


நாளை மறுதினம்(22) புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் முக்கியமான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன வழங்கியுள்ளார். 
 
இன்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 
 
அவர் தெரிவித்ததாவது, 
 
பரீட்சை நெருங்கும் இந்த தருணத்தில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் வகையிலோ அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலோ பெற்றோர்கள் நடந்து கொள்ளக்கூடாது. 
 
முக்கியமாக 190 க்கும் அதிகமான புள்ளிகளை பெற வேண்டுமென மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க கூடாது. 
 
மேலும் பரீட்சை தினம் அன்று காலை வேளை அதிகமாக உண்ணக் கொடுக்க வேண்டாம். அவ்வாறு அதிகமாக உண்ணக் கொடுக்கும் பட்சத்தில் மாணவர்கள் உரிய முறையில் பரீட்சை எழுத முடியாமல் நித்திரை அல்லது வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம். 
 
அதேவேளை தண்ணீர் போத்தல், அடிமட்டம், பென்சில், தொற்று நீக்கி திரவம் (Sanitizer) உள்ளிட்ட முக்கியமான பொருட்களை கட்டாயம் கொடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் பரீட்சை மேற்பார்வையாளரிடம் கூறி வேறு மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களை பெறும் போது நேரம் வீணாவதோடு தேவையற்ற அசௌகரியங்களும் ஏற்படலாம். 
 
மேலும் சகலரும் உரிய சுகாதார விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பரீட்சை ஆணையாளரின் அறிவுறுத்தல்கள் Reviewed by Irumbu Thirai News on January 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.