கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல்

April 04, 2020


கொரோனாவுக்காக கூகிள் நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்தவுள்ளது. கொவிட்-19 தொற்றை அடுத்துஇ பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. 
இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகிள் நிறுவனத்தின் நோக்கமாகும். உலகெங்கிலும் 131 நாடுகளில் பயனர்களின் நகர்வுகள் பற்றிய அறிக்கைகள் பிரத்யேக இணையத்தளமொன்றில் பகிரங்கப்படுத்தப்படும் என கூகிள் நிறவனம் அறிவித்துள்ளது. 
பூங்காக்கள், கடைகள், வீடுகள், வேலைத் தளங்கள் போன்றவற்றுக்கு பயனர்கள் செல்வது குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதை கூகிள் நிறுவனம் பகிரங்கப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல் கொரோனாவுக்காக Location Data வை பகிரங்கப்படுத்தும் கூகுல் Reviewed by irumbuthirai on April 04, 2020 Rating: 5

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன்

April 04, 2020

இலங்கை சேமிப்பு வங்கி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க  முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பு வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 
இலங்கை முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசங்க ஸ்ரீ நாத் மற்றும் சேமிப்பு வங்கியின் தலைவர் திருமதி கேசிலா ஜயவர்தன ஆகியோர் இதுதொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடன் Reviewed by irumbuthirai on April 04, 2020 Rating: 5

கொரோனாவால் வபாத்தானவரின் ஜனாஸா தொழுகை (படங்கள்)

April 04, 2020


கொரோனா வைரஸ் தொற்று (Covid-19) காரணமாக இலங்கையில் இடம்பெற்ற மூன்றாவது மரணம் மரதானையைச் சேர்ந்த நபராகும். இவரது ஜனாஸா தொழுகைக்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. Covid-19 இனால் மரணிக்கும் முஸ்லிம்களை எரிக்க வேண்டாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபன விதிமுறைகளுக்கமைய புதைக்கிறோம் என பல்வேறு முஸ்லிம் தரப்புகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை. 
இதன் சாத்தியப்பாடுகள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டும் முடிவுகள் எட்டப்படவில்லை. இருப்பினும் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தொழிநுட்பக் குழுவை நியமிப்பதென இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
தமது இறுதிக்கிரியைகள் இவ்வாறு நடந்துவிடக்கூடாது என நினைப்பவர்கள் நோயை மறைக்கலாம் எனவும் அதற்கிடையில் இது பலருக்கும் பரவும் அபாய நிலை உருவாகும் எனவும் ஆகவே அரசாங்கம் சாதக பதிலையளித்தால் இது தொடர்பில் ஏற்படும் பயங்கர நிலையை தவிர்க்கலாம் எனவும் மேற்படி கூட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த ஜனாஸா தொழுகை தொடர்பான படங்களை கீழே காணலாம்.












கொரோனாவால் வபாத்தானவரின் ஜனாஸா தொழுகை (படங்கள்) கொரோனாவால் வபாத்தானவரின் ஜனாஸா தொழுகை (படங்கள்) Reviewed by irumbuthirai on April 04, 2020 Rating: 5

க.பொ.த. (உ/த) வணிகக் கல்வி (Business Studies) : இலகு முறையில்...

April 03, 2020


க.பொ.த. (உ/த) புதிய பாடத்திட்டத்தின்படி வணிகக் கல்வி (Business Studies) என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ/த) வணிகக் கல்வி (Business Studies) : இலகு முறையில்... க.பொ.த. (உ/த) வணிகக் கல்வி (Business Studies) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 03, 2020 Rating: 5

க.பொ.த. (உ/த) கணக்கீடு (Accounting) : இலகு முறையில்...

April 03, 2020


க.பொ.த. (உ/த) பாடத்திட்டத்தின்படி கணக்கீடு (Accounting) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சி வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ/த) கணக்கீடு (Accounting) : இலகு முறையில்... க.பொ.த. (உ/த) கணக்கீடு (Accounting) : இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 03, 2020 Rating: 5

க.பொ.த. (உ/த) பொருளியல்: இலகு முறையில்...

April 03, 2020

க.பொ.த. (உ/த) பாடத்திட்டத்தின்படி பொருளியல் (Economics) என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  
பாடத்திட்டம் (புதிய) இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சி வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

க.பொ.த. (உ/த) பொருளியல்: இலகு முறையில்... க.பொ.த. (உ/த) பொருளியல்: இலகு முறையில்... Reviewed by irumbuthirai on April 03, 2020 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

April 01, 2020


அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமாகி, இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
இன்று (1) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(அ.த.தி)

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

2020 க.பொ.த. (உ.தர) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக...

April 01, 2020


2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள தினத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட்வில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 

நடைபெறவுள்ள இந்த பரீட்சை ஒத்திவைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
(அ.த.தி)
2020 க.பொ.த. (உ.தர) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக... 2020 க.பொ.த. (உ.தர) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக... Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

தனிமைப்படுத்தலுக்காக 2913 பேர் பதிவு

April 01, 2020


இன்று நண்பகல் வரையில் கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்காக,  2913 பேர் பதிவு செய்திருப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். மார்ச் மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள இன்று (01) நண்பகல் வரை பாதுகாப்பு பிரிவினாரால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. 
இதற்கமைய இவர்கள் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படும் வரை இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அவர் தெரிவித்தார். 
இதேவேளை தனிமைப்படுத்தலில் இருந்து இடைவிலகியோர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளிலிருந்து கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் இலங்கைக்கு வருகை தந்தவர்களை பதிவு செய்வதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததோடு பதிவு செய்யாதவர்கள் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி.)

தனிமைப்படுத்தலுக்காக 2913 பேர் பதிவு தனிமைப்படுத்தலுக்காக  2913 பேர் பதிவு Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு

April 01, 2020


கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து  நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான இறுதி தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
இவர்கள் 1933 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 
(அ.த.தி)
பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

காணொளி முறை மூலம் மருத்துவ சேவை

April 01, 2020


வைத்தியசாலைகளில் (கிளினிக்- Clinic ) மருத்துவ சேவையை காணொளி (Video) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது. இதன் மூலம் 

தற்போதைய கொரோனா நோய் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளுக்கு வெளிநோயாளர் பிரிவிற்கு வருகை தருவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளர்கள் வீட்டிலிருந்தவாறே தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளக் கூடியவகையில் இந்த வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. 0770773333 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் oDoc app கையடக் தொலைபேசி யில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இதுதொடர்பான தகவல்களை அறியலாம். 
(அ.த.தி.)
காணொளி முறை மூலம் மருத்துவ சேவை காணொளி முறை மூலம் மருத்துவ சேவை Reviewed by irumbuthirai on April 01, 2020 Rating: 5

கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண்.

March 30, 2020


உலகில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா-வைரஸிற்குப் பலியான முதல் சம்பவம் பதிவாகியுள்ளது. ஸ்பெயின் இளவரசி மரியா தெரேஸாவே இவ்வாறு கொரோனா-வைரஸ் தொற்றி உயிரிழந்துள்ளார். இறக்கும்போது இளவரசிக்கு 86 வயது. இதுவரை இறப்பு எண்ணிக்கையில் 2ம் இடத்தில் ஸ்பெய்னும் முதலிடத்தில் இத்தாலியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண். கொரோனா பலியெடுத்த முதல் அரச குடும்ப பெண். Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்...

March 30, 2020


Covid-19 (கொரோனா வைரசு தொற்று) நோயாளர்கள் மத்தியில் இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு இன்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிசெய்துள்ளார். இவருக்கு 64 வயது. ஆண் நோயாளி. கொச்சிக்கடை பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர். 
இன்றைய தினம் தனியார் வைத்தியசாலையில் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இந்த நோயாளி கொரோனா வைரசு தொற்று நோயாளர் என்பது இன்றைய தினமே உறுதிசெய்யப்பட்டது. இதுமாத்திரமன்றி இவர் இருதய நோயினால் பீடிக்கப்பட்டிருந்தவர் என்றும் நீண்டகாலமாக சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி.)

இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்... இலங்கையில் இரண்டாவது உயிர் இழப்பு... நோய் உறுதிசெய்யப்பட்டதும் இன்றுதான்... Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை

March 30, 2020


பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரசு தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை தொடர்பாக அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 

அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு 
 ஊடக அறிக்கை 

2020.03.29
நாலக கலுவேவ அவர்கள்,
பணிப்பாளர் நாயகம்,
அரசாங்க தகவல் திணைக்களம்

 தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா வைரசு தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு இணைத்துக் கொள்ளல் 

 தற்போது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் சேவைக்காக சமூகமளித்துள்ள பதிவுசெய்துள்ள பட்டதாரி பயிற்சியாளர்களில் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு மே மாதம் வரையில் தாமதம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய கொரோனா வைரசு நோய் தொற்று நிலையை கட்டுப்படுத்துவதில் இவர்களின் ஒத்துழைப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இந்த காரியாலயங்களுக்கு தற்காலிகமாக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதினால் இவர்களுக்கு சேவைக்கு சமூகமளிப்பதற்கு சிரமம் என்பதினால் நாளைய (2020.03.30) தினத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஃ பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியமல்ல என்பதுடன் இது தொடர்பில் குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்படும்.

எஸ். ஹெட்டியாராச்சி 
செயலாளர் 
அரச நிர்வாகம் , உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு

(அ.த.தி.)

கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை கொரோனா ஒழிப்புக்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பாக வெளியான அறிக்கை Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5

2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்...

March 30, 2020


2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் 

30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 
பெறுபேறுகளை கணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்... 2019 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்... Reviewed by irumbuthirai on March 30, 2020 Rating: 5
Powered by Blogger.