Results for Local News

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு!

June 03, 2024


நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு நாளைய தினம் செவ்வாய்க்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில அறிவிப்புகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. 
 
அந்த வகையில் களனி மற்றும் கம்பஹா கல்வி வலயம் மற்றும் கடுவெல கோட்டக்கல்வி பிரதேசத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (4) செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மாகாண கல்வி பணிப்பாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை(4) மற்றும் நாளை மறுதினம்(5) புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் பின்வரும் பிரதேச பாடசாலைகளுக்கு நாளைய தினம்(4) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 
நாளைய தினம் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Previous:

 
 
பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள்

June 03, 2024


தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பின்வரும் முறையில் அரச பாடசாலைகள் நாளை (4-6-2024) செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இது தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

நாளைய தினமும் மூடப்படும் பாடசாலைகள்: 
 
1. இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும்
 
2. கேகாலை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
3. காலி மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
4. மாத்தறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
5. களுத்துறை மாவட்டத்தின் சகல பாடசாலைகளும் 
 
6. கொழும்பு மாவட்ட ஹோமாகம வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 

இது தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போல் நடைபெறும். 

குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.





Previous:
 

ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் ஜுன் 4 செவ்வாய்க்கிழமை மூடப்படும் பாடசாலைகள் Reviewed by Irumbu Thirai News on June 03, 2024 Rating: 5

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்!

June 02, 2024

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (3) விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் பாடசாலைகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் காலநிலையை கருத்தில் கொண்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் இதுவரை 06 பேர் மரணித்துள்ளனர். 

அவிஸாவெல்ல, புவக்பிட்டிய, ஹெலிஸ்டன் தோட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேரும் புவக்பிடிய ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயது சிறுமி ஒருவரும் மாத்தறை தெய்யந்தர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து இருவரும் மொத்தமாக ஆறு பேர் மரணித்துள்ளனர். 

மேலும் இதுவரை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு, காலி, நுவரெலியா, கேகாலை, காலி, மாத்தறை,  அம்பாந்தோட்டை குருநாகல் ஆகிய 10 மாவட்டங்களே அவையாகும்.

சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! சகல பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை! தொடர்ந்தும் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்! Reviewed by Irumbu Thirai News on June 02, 2024 Rating: 5

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

April 04, 2024


நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறு மற்றும் சாதாரண தர பரீட்சை நடத்துதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்த விடயங்கள் கல்வி அமைச்சினால் ஊடக அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

க.பொ.த. (சா/த) பரீட்சை எதிர்வரும் மே மாத நடுப் பகுதியில் நடத்துவதற்கு பரீட்சை அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அதேவேளை நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சாதாரண தர பரீடசை ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியிடுவதற்கான முடியுமான சகல முயற்சிகளும் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அதேபோன்று விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கமிட்டியின் அறிக்கை கிடைக்க பெற்றுள்ள அதேவேளை  எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதற்குரிய அனுமதியை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சாதாரண தர மதிப்பீட்டாளர்கள் 35,000 பேர் மற்றும் உயர்தர பரீட்சை மதிப்பீட்டாளர்கள் 19,000 அளவில் இருக்கின்ற அதேவேளை இவர்கள் அனைவருக்கும் பொருத்தமான முறையில் இயலுமானவரை கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, இந்த வருடத்திற்கு சட்டரீதியாக பணம் ஒதுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி தேர்தலுக்குத்தான். பாராளுமன்ற தேர்தலுக்கு அல்ல என்றார். 

குறித்த ஊடக அறிவித்தலின் சிங்கள வடிவத்தை கீழே காணலாம்.





Previous:
 

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on April 04, 2024 Rating: 5

மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு

March 24, 2024


நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 16 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் போஷக்கு உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கும் அதே போன்று 100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலையின் சகலருக்கும் இந்த உணவு வழங்கப்படும். 

இதற்காக 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இவ்வாறு காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஷாக்கு மற்றும் சுகாதாரம் என்பவற்றில் உணவு முறையை உயர்மட்டத்தில் பேணுவதற்கும் கல்வி அமைச்சானது அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த உணவு காலை 7:30 முதல் 8:30 வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 
Previous:

 
மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு Reviewed by Irumbu Thirai News on March 24, 2024 Rating: 5

அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு!

March 15, 2024


அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்ப இறுதி தினம் இன்றுடன்(15) நிறைவடைய இருந்தது. ஆனால் அது எதிர்வரும் 22ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டாம் கட்டத்திற்காக சுமார் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இரண்டாம் கட்டத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

Aswesuma விண்ணப்பம் மற்றும் ஏனைய முழு விபரங்களை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:

அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு! அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 15, 2024 Rating: 5

New Electricity Rates with effect from 4-3-2024 midnight

March 04, 2024


New Electricity Tarrif with effect from 4-3-2024 midnight 

4-3-2024 මධ්‍යම රාත්‍රියේ සිට බලපැවැත්වෙන පරිදි නව විදුලි ගාස්තු 

4-3-2024 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய மின் கட்டணங்கள்.
 
 

 


Click the links below for full details in Tamil, English and Sinhala.
 

 
 
 
 
Previous:

New Electricity Rates with effect from 4-3-2024 midnight New Electricity Rates with effect from 4-3-2024 midnight Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5
Powered by Blogger.