பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

January 08, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டடப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சையின் 2ம் கட்டம் உட்பட 08 வகையான பரீட்சைகள் பெப்ரவரி மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.
 
பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on January 08, 2022 Rating: 5

அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்!

January 06, 2022

அடுத்த வருடம் (2023) முதல் நடைபெறும் உயர்தரப் பரீட்சையில் 

கொரிய மொழியும் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 
தென்கொரியாவுக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு பிரதி பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையை தலைநகர் சியோலில் சந்தித்தவேளை இதனை தெரிவித்துள்ளார். 
 
இதன்போது தென்கொரியாவில் பணிபுரியும் 22,000 இலங்கையர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜி எல் பீரிஸ், கொரிய மொழி கற்கைகள் 

இலங்கையில் பிரபல்யம் அடைந்து வருவதை சுட்டிக்காட்டினார். பதிலளித்த பிரதிப் பிரதமர், இலங்கையின் தொழில்சார் கல்வி மற்றும் பயிற்சிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் கொரியா பரிசீலிக்கும் என தெரிவித்தார்.
அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! அடுத்த வருடம் முதல் உயர்தர பரீட்சையில் புதிய பாடம்! Reviewed by Irumbu Thirai News on January 06, 2022 Rating: 5

மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு...

January 06, 2022

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
 
இதில் மத்திய மாகாணத்தில் 4545 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் லலித் யூ கமகேயின் தலைமையில் மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

குறித்த 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கே நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பட்டதாரி பயிலுனர்களாக பாடசாலைகளில் பயிற்சி பெற்றவர்கள் பாடசாலைகளுக்கே நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு செல்ல இங்கே கிளிக் செய்க...
மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு... மத்திய மாகாணம்: 4,545 பேரில் 2,616 பேர் பாடசாலைகளுக்கு... Reviewed by Irumbu Thirai News on January 06, 2022 Rating: 5

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு)

January 05, 2022

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்தல் தொடர்பான சுற்றறிக்கை கடிதம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதாவது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 51,682 பட்டதாரிகள் ஏற்கனவே பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அந்தப் பயிலுனர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரி பயிலுனர்கள் 2022-1-3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 

இணைந்த சேவைக்கும் மாகாண அரச சேவையின் நிரந்தர சேவைக்கும் நியமிப்பதற்கும் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்திராத பட்டதாரி பயிலுனர்களை 2022-04-01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிரந்தர சேவைக்கு நியமிக்கும் வரையில் 2022-01-03 ஆம் திகதி முதல் நிரந்தரமாக புதிய பயிற்சி நிலையங்களில் இணைப்பதற்கும் 2021-09-13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
 
அதற்கமைய தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் இணைக்கப்பட்டுள்ள சேவை நிலையங்களை 2022-1-7 ஆம் திகதி முதல் 

இந்த அமைச்சின் MISCO மென்பொருளில் பிரவேசித்து அறிந்துகொள்ளலாம். 
 
சகல பயிலுனர்களும் அவர்கள் வதியும் மாவட்டத்தில் அல்லது மாகாணத்தினுள்ளேயே சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். 
 
பாடசாலைகளில் பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்தும் 

பாடசாலைகளிலேயே தற்காலிகமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மாதாந்த மொத்த சம்பளம் 41,000 ரூபா எனவும் அறிய முடிகிறது) 
 
குறித்த சுற்றறிக்கை கடிதத்தின் முழு வடிவத்தை கீழே காணலாம்.

பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு) பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் நடைமுறையும் அவர்களுக்கான கொடுப்பனவுகளும் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு)

January 05, 2022
 

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக 2021-8-30 மற்றும் 2022-1-3 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைக்கான புதிய சம்பள அளவு திட்டங்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
03/2016(1V) என்ற இலக்கம் கொண்ட இந்த அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்றைய தினம் (5) வெளியிட்டுள்ளது. 
 
இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022-1-1 ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும். தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு) அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி!

January 05, 2022

கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பாடசாலைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பகுதியளவிலேயே பாடசாலைக்கு அழைக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்திச் செல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். 
 
அந்தவகையில் திங்கட்கிழமை முதல் சகல மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்படுவர். பகுதி அளவில் மாணவர்கள் அழைக்கப்படும் பொழுது மாணவர்களின் கல்வி நிலை பாரிய அளவில் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! பாடசாலைகளை சாதாரண முறையில் நடத்த அனுமதி! Reviewed by Irumbu Thirai News on January 05, 2022 Rating: 5

ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு!

January 04, 2022

தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் திரிபானது தற்போது உலகம் பூராவும் பரவிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் இந்த ஓமிக்ரோன் வைரஸ் திரிபை விட அதிக அளவில் பரவும் தன்மை கொண்ட வைரஸ் திரிபை 

பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
 
மத்திய ஆபிரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கே முதன்முறையாக இந்த புதிய உருமாறிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் இதே திரிபு கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்த புதிய திரிபுக்கு I.H.U. B.1.640.2 என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து 46 பேருக்கு பரவும் தன்மை கொண்டது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! ஓமிக்ரோனை விட ஆபத்தான வைரஸ் கண்டுபிடிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-12-2021

January 04, 2022

Official Government Gazette Released on 31-12-2021. 
 
31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-12-2021 31-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 31-12-2021 Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

January 04, 2022

03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வை நடைமுறைப்படுத்தல் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 03.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5

பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்!

January 04, 2022

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரத்தின் அடிப்படையில் இந்த பதவிநீக்கம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சுக்கு சென்று ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

கேள்வி: என்ன நடந்தது? 
 
பதில்:ஒன்றுமில்லை. என்னை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிந்தேன். இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. நான் அமைச்சர் ஆனது 2000 ஆம் ஆண்டில்... பாராளுமன்றத்திற்கு வந்தவுடனேயே அமைச்சரானேன். மூன்று ஜனாதிபதிகளின் கீழ் வேலை செய்துள்ளேன். எனது தொழில் ஒன்றும் இருக்கிறதே... நாளை முதல் அதற்கு செல்வேன். நீதிமன்றத்திற்கு... 
 
கேள்வி: இது தொடர்பில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? 
 
பதில்: இல்லை. பொதுவாக அப்படி அறிவிப்பது இல்லையே... விலக்கியதை ஊடகங்கள் மூலமாக தான் நாங்கள் தெரிந்து கொள்வது... 
 
கேள்வி: உங்களை விலக்குவதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டதா? 

பதில்: இல்லை. காரணம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு யாரை வேண்டுமென்றாலும் நியமிக்கவோ அல்லது விலக்கவோ முடியும். 
 
கேள்வி: உண்மையில் என்ன நடந்துள்ளது? 
 
பதில்: எனக்கு தெரியாது. ஆனால் நேற்று முன்தினம் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் பச்சை மிளகாய் 1200 ரூபா வரை உயர்ந்துள்ளமை தொடர்பாகவும் ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் சொன்னேன் இது முழுமையாக அரசாங்கத்தின் விவசாய கொள்கையின் தோல்வி (fail) மாதிரியே எமக்கு விளங்குகிறது என்று... மக்களுக்காகத்தான் நாங்கள் பேசியது... 
 
கேள்வி: அரசாங்கத்தில் உள்ளவர்களே அரசாங்கத்தை விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் உங்களுக்கு எதிராகத்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது ஏன்? 
 
பதில்: நேற்று அமைச்சரவை கூட்டத்தின் போதும் ஏதாவது பேசியிருப்பார்கள். துப்புரவு தொழிலாளிக்குரிய தகைமை கூட இல்லாதவர்களுக்கே பாராளுமன்றத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது... அவர்களுக்கு தெரியாது கல்வியின் பெறுமதியை பற்றி... 
 
கேள்வி: உங்களை மாதிரி சிரேஷ்டத்துவமிக்க ஒருவரை விலக்கியிருக்கிறார்களே...? 

பதில்: அரசாங்கத்திற்கு நான் சிரேஷ்டத்துவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டின் அரசியலின் படி எனது பொறுப்புக்களை உரிய முறையில் ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் நிறைவேற்றியுள்ளேன். 
 
கேள்வி: நடந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
 
பதில்: எனது எதிர்கால அரசியலுக்கு ஆசீர்வாதமாகவே இதை நினைக்கிறேன். 
 
கேள்வி: ஜனாதிபதி இப்படி ஒரு தீர்மானத்தை எடுப்பார் என நினைத்தீர்களா? 
 
பதில்: அப்படி தீர்மானம் எடுக்காவிட்டால் தான் பிரச்சினை. ஏனென்றால் பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் போகும் போக்கைப் பார்த்தால் எங்களுக்கு விளங்கிக்கொள்ளலாம் எங்கே செல்கிறது என... அவற்றைப் பற்றி நாம் பேசுவது மக்களுக்காக பேசுவதே ஆகும். எனவே மக்களுக்காக பேசவில்லை என்றால் அரசாங்கம் சரி என்று ஆகிவிடுமே... 
 
கேள்வி: அப்படி என்றால் அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருக்கிறது. அப்படியா..? 

பதில்: அதைப் பற்றி தெரியாது. ஆனால் மக்கள் எம்மை தெரிவு செய்துள்ளார்கள். நாம் அவர்களுக்காக பேசுகிறோம் என்றார். 
 
இதே வேளை அந்த இடத்திற்கு விஜயம் செய்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளைக் கேட்டும் அவர் பதில் எதையும் கூறவில்லை. ஏன் பதில் கூற பயமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, நான் ஏன் பயப்பட வேண்டும்? உங்களுக்கு பற்றவைக்க நெருப்பா தேவைப்படுகிறது? என்று கூறியுள்ளார். 
 
இதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்த தனது உத்தியோகபூர்வ வாகனங்களையும் கையளித்துவிட்டு முச்சக்கரவண்டியிலேயே அவ்விடத்தை விட்டு சென்றார்.

பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்! பதவி நீக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அமைச்சர்! மௌனம் காத்த கல்வி அமைச்சர்! Reviewed by Irumbu Thirai News on January 04, 2022 Rating: 5
Powered by Blogger.