23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

April 24, 2021

23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 23-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 23-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 24, 2021 Rating: 5

525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே:

April 24, 2021

சப்ரகமுவ மாகாணத்திலுள்ள இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் 200 காணப்படுகின்றன. அவற்றில் சுமார் 525ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆனால் அதற்காக 260பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர் என சப்ரகமுவ மாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரட்ன தெரிவித்துள்ளார். 
குருவிட்ட கீரைகலை தமிழ் வித்தியாலயத்தில் 63இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக்கட்டடத்தின் திறப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்க ஆசிரியர் உதவியாளர்களை 
நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே: 525 ஆசிரியர் வெற்றிடங்கள்: விண்ணப்பித்தவர்கள் 260 பேர் மட்டுமே: Reviewed by irumbuthirai on April 24, 2021 Rating: 5

சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம் கட்டம் தொடர்பாக...

April 23, 2021

கடந்த மாதம் (மார்ச்) நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
23 நிலையங்களில் மொத்தமாக 4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம் கட்டம் தொடர்பாக... சா.தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டின் 2ம்  கட்டம் தொடர்பாக... Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு

April 23, 2021

தபால் விநியோகம், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணிகளுக்காக தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். 
கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் 
இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
நிலவும் வெற்றிடத்திற்கமைய அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு தபால் திணைக்களத்திற்கு புதிதாக 3,000 பேர் இணைப்பு Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் திட்டம்

April 23, 2021

விசேட தேவையுடைய சிறுவர்கள் பாடசாலைக் கல்விக்கு உட்படுத்தப்படாதுள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர்களை பாடசாலைகளில் இணைக்கும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சுடன் நவஜீவன அமைப்பு இணைந்து இத்திட்டத்தினை செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் திட்டம் விசேட தேவையுடைய சிறுவர்களை பாடசாலைகளில் இணைக்கும் திட்டம் Reviewed by irumbuthirai on April 23, 2021 Rating: 5

சீன தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல்

April 22, 2021

சீன தூதர் உட்பட சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் தங்கியிருந்த ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ஒரு 
ஹோட்டலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
 எவ்வாறாயினும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் சீன தூதர் ஹோட்டலில் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
சீன தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் சீன தூதர் தங்கியிருந்த ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல் Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

கொரோனா தீவிரம்: IDH வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு:

April 22, 2021

120 நோயாளர்களுக்கு இடவசதி காணப்படும் கொழும்பு IDH வைத்தியசாலையில் தற்போதைய நிலையில் 138 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
அதிதீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ள 08 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. அங்கு சுமார் 20% நோயாளிகளுக்கு 
பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலைமையில் பிராணவாயுவின் தேவை அங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பிறகு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தீவிரம்: IDH வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு: கொரோனா தீவிரம்: IDH வைத்தியசாலையில் ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு:

April 22, 2021

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து இன்று காலை தமக்கு கிடைக்கப் பெற்ற ஆலோசனைக்கமைய, பல்கலைக்கழகங்களை மீள திறப்பதை மேலும் 02 வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இது தொடர்பில் சகல பல்கலைக்கழக உப பீடாதிபதிகளுக்கும் இந்த அறிவித்தலை விடுப்பதோடு, 02 வாரங்களில் நிலைமைகளை அவதானித்ததன் பின்னர் சகல பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இம்மாதம் 27 ஆம் திகதி நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு: தீவிரமடையும் கொரோனா: பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மேலும் இரு வாரங்கள் ஒத்திவைப்பு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம்

April 22, 2021

மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து ஆசிரியர்களுக்கான 03 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. 
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றாடல் குறித்த அறிவை வழங்குவது இதன் நோக்கமாகும். 
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ்.அமரசிங்க அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (22) காலை சுற்றாடல் அதிகார சபையில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் ஆசிரியர்களுக்கு 3 வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித் திட்டம் அறிமுகம் Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை

April 22, 2021

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருந்ததால் மயக்கமடைந்த ஒரு நோயாளி இறந்து விட்டதாக கூறி சவச்சாலைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீர்கொழும்பு மருத்துவமனையில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்றது. 
தற்போது குறித்த மருத்துவர் தற்காலிகமாக புத்தளம் பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை முடியும் வரை இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை உயிருள்ளவரை இறந்ததாக கூறி சவச்சாலைக்கு அனுப்பிய வைத்தியருக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை  Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு:

April 22, 2021

இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
அதன்படி எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த பரீட்சையை கொழும்பில் நடாத்த பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கனவே இந்த பரீட்சை மே 22 சனிக்கிழமை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு: இலங்கை அதிபர் சேவை ஆங்கில மொழித் தேர்ச்சி பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான (SLTES) திறந்த போட்டிப் பரீட்சை

April 22, 2021

மேற்படி போட்டிப் பரீட்சை இம்மாதம் 25ஆம் திகதி கொழும்பு உட்பட பிரதான 09 நகரங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபாலில் அனுப்பப்பட்டுள்ளன. இது கிடைக்காதவர்கள் ஒன்லைன் (Online) மூலமும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் தேசிய அடையாள அட்டையை உட்செலுத்துவதன் மூலம் அனுமதி அட்டையை பெறலாம்.
ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான (SLTES) திறந்த போட்டிப் பரீட்சை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கான (SLTES) திறந்த போட்டிப் பரீட்சை  Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

SELECTED LIST OF STUDENTS FOR COURSES (SLIATE) / இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தில் பாடநெறிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டோர் விபரம்

April 22, 2021

Registration of students for the 2020 academic year is now underway. The lists of students are mentioned below and the next eligible candidates will be given the opportunity to replace the absentees by the time and dates given for registration from each ATI. Therefore, you are advised to go to the relevant ATI on the due date and time and register.
Click the link below for selected list:
SELECTED LIST OF STUDENTS FOR COURSES (SLIATE) / இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தில் பாடநெறிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் SELECTED LIST OF STUDENTS FOR COURSES (SLIATE) / இலங்கை உயர் தொழினுட்பவியல் கல்வி நிறுவகத்தில் பாடநெறிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

2021 மே மாத பரீட்சை நாட்காட்டியின் திருத்தப்பட்ட பதிப்பு / Exam Calendar 2021 May (Amended)

April 22, 2021

2021 மே மாதம் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படவிருக்கும் பரீட்சைகள் தொடர்பான நாட்காட்டியின் (Exam Calendar) திருத்தப்பட்ட அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதனை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க .
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


2021 மே மாத பரீட்சை நாட்காட்டியின் திருத்தப்பட்ட பதிப்பு / Exam Calendar 2021 May (Amended) 2021 மே மாத பரீட்சை நாட்காட்டியின் திருத்தப்பட்ட பதிப்பு / Exam Calendar 2021 May (Amended) Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

தீவிரமடையும் கொரோனா: பாடசாலைகள் மூடப்படுமா? வெளியான அறிவிப்பு

April 22, 2021

நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தீவிரம் அடைவதைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்படுமா என்ற விடயம் தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், 
 பாடசாலைகளை மூடுவது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பாடசாலை மாணவர்களோ ஆசிரியர்களோ கொரோனாவால் பாதிக்கப்பட்டால் ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தில் உள்ளபடியே செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அதாவது பாடசாலை குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி உள்ளடக்கிய குழுவினர் உரிய நடவடிக்கைகளை எடுப்பர் என்று அவர் தெரிவித்தார்.
தீவிரமடையும் கொரோனா: பாடசாலைகள் மூடப்படுமா? வெளியான அறிவிப்பு தீவிரமடையும் கொரோனா: பாடசாலைகள் மூடப்படுமா? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 22, 2021 Rating: 5

அருகிலுள்ள பாடசாலைக்கே ஆசிரியர் நியமனம்....

April 21, 2021

அருகிலுள்ள பாடசாலைக்கே ஆசிரியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 
 பாடசாலைக்கான விஷேட நியமனமாக இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வேறு மாகானங்களுக்கு செல்ல முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அருகிலுள்ள பாடசாலைக்கே ஆசிரியர் நியமனம்.... அருகிலுள்ள பாடசாலைக்கே ஆசிரியர் நியமனம்.... Reviewed by irumbuthirai on April 21, 2021 Rating: 5

திருப்பி ஒப்படைத்த இலங்கை.... வாய்ப்பை பெற்றுக் கொண்ட அயர்லாந்து...

April 21, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற திருமதி உலக அழகுராணி (Mrs World) போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி தனது பட்டத்தை திருப்பி ஒப்படைத்தார். இதனை திருமதி உலக அழகுராணி அமைப்பு உறுதி செய்துள்ளது. 
இதனைத் தொடர்ந்து குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைன்டர் Mrs World - 2020 அழகுராணியாக மகுடம் சூட்டப்பட்ட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை (Mrs Sri Lanka) போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்தானவர் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறி போட்டி முடிவையும் மாற்றினார் கரோலின் ஜூரி. 
பின்னர் குறித்த விடயம் பொய்யென தெரியவந்ததை தொடர்ந்து கரோலின் ஜூரி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருக்கு ஏற்பட்ட 
எதிர்ப்பலைகளை தொடர்ந்து அவர் குறித்த பட்டத்தை மீள ஒப்படைப்பதாக அறிவித்தார். 
அந்த அடிப்படையிலேயே அயர்லாந்தை சேர்ந்தவர் தற்போது மகுடம் சூட்டப்பட்ட உள்ளார். 
இதேவேளை குறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக ஏற்பாட்டுக் குழுவால் புஷ்பிகா டி சில்வா மீண்டும் Mrs Sri Lanka -2021 மகுடம் சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருப்பி ஒப்படைத்த இலங்கை.... வாய்ப்பை பெற்றுக் கொண்ட அயர்லாந்து... திருப்பி ஒப்படைத்த இலங்கை.... வாய்ப்பை பெற்றுக் கொண்ட அயர்லாந்து... Reviewed by irumbuthirai on April 21, 2021 Rating: 5

அரச வங்கியில் 70 பேருக்கு கொரோனா

April 21, 2021

இலங்கையில் அரச வங்கியொன்றில் கடமையாற்றும் சுமார் 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக Covid-19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 
இந்த தொற்றாளர்கள் குறித்த வங்கியின் கொழும்பு, காலி, பதுளை, அம்பலாங்கொடை மற்றும் கேகாலை போன்ற கிளைகளிலிருந்து இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச வங்கியில் 70 பேருக்கு கொரோனா அரச வங்கியில் 70 பேருக்கு கொரோனா Reviewed by irumbuthirai on April 21, 2021 Rating: 5

தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாமிடம்...

April 21, 2021

180 நாடுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வருடத்திற்கான ஊடக சுதந்திரத்திற்காக இலங்கைக்கு தெற்காசியாவில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. 
 தெற்காசியாவில் முதலிடத்தில் நேபாளம் இருக்கின்றது. இலங்கைக்கு அடுத்த இடங்களில் முறையே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 
இந்தப் பட்டியலில் உலகளாவியரீதியில் இலங்கை 127வது இடத்தில் காணப்படுகிறது. நேபாளம் 106 வது இடத்தில் உள்ளது. 
முழுமையாக ஊடக சுதந்திரம் உள்ள நாடுகளில் நோர்வே, பின்லாந்து, சுவீடன், டென்மார்க், கோஸ்டாரிகா, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஜெர்மனி, போர்த்துக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 
 இதேவேளை உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலில் சீனா 177 வது இடத்திலும் வடகொரியா 179 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாமிடம்... தெற்காசியாவில் இலங்கைக்கு இரண்டாமிடம்... Reviewed by irumbuthirai on April 21, 2021 Rating: 5

19-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

April 21, 2021

19-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


19-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 19-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on April 21, 2021 Rating: 5

Vacancy: Sri Jayawardenepura General Hospital

April 20, 2021

Vacancy: Sri Jayawardenepura General Hospital 
Closing date: 27-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Sri Jayawardenepura General Hospital Vacancy: Sri Jayawardenepura General Hospital Reviewed by irumbuthirai on April 20, 2021 Rating: 5

06 Vacancies (Disaster Management Centre)

April 20, 2021

06 Vacancies (Disaster Management Centre) 
Closing date: 30-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

06 Vacancies (Disaster Management Centre) 06 Vacancies (Disaster Management Centre) Reviewed by irumbuthirai on April 20, 2021 Rating: 5

29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE)

April 19, 2021

29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE) 
Closing date: 09-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE) 29 Vacancies (Sri Lanka Institute of Advanced Technological Education - SLIATE) Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

Vacancy: Embassy of Switzerland to Sri Lanka

April 19, 2021

Vacancy: Embassy of Switzerland to Sri Lanka 
Post: Senior national programme officer 
Closing date: 30-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Embassy of Switzerland to Sri Lanka Vacancy: Embassy of Switzerland to Sri Lanka Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Navy

April 19, 2021

Vacancies: Sri Lanka Navy (Regular Naval Force) 
Vacancies for officer cadets at naval & maritime academy. 
Closing date: 10-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Navy Vacancies: Sri Lanka Navy Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

ஒரு வாரமாக குறைக்கப்பட்ட பாடசாலை விடுமுறை!

April 19, 2021

பாடத் திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வரும் நோக்கில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறையை ஒருவார காலத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு வாரமாக குறைக்கப்பட்ட பாடசாலை விடுமுறை! ஒரு வாரமாக குறைக்கப்பட்ட பாடசாலை விடுமுறை! Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

Vacancies: University College of Kuliyapitiya (UniVoTech)

April 19, 2021

Vacancies: University College of Kuliyapitiya (University of Vocational Technology) 
Closing date: 30-04-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: University College of Kuliyapitiya (UniVoTech) Vacancies: University College of Kuliyapitiya (UniVoTech) Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட Digital Learning Materials தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

April 19, 2021

மேற்படி விடயம் தொடர்பாக கல்வி வெளியீட்டு திணைக்களத்தினால் வலயக் கல்வி காரியாலயங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை கீழே தருகிறோம்.கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட Digital Learning Materials தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட Digital Learning Materials தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்   Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

மே 17 வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம்

April 19, 2021

கிழக்கு மாகாணத்திற்குரிய வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் இம்மாதம் 19ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது தற்போது அடுத்த மாதம் (மே மாதம்) 17ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர் எம் டி அப்துல் நிசாம் தெரிவிக்கையில், 
தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் கிடைத்த ஆசிரியர்கள் தற்போது நோன்பு கால விடுமுறை என்பதனால் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையேற்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. அதேபோல் தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றம் கிடைத்த ஆசிரியர்களுக்கு அவர்களது நோன்பு கால விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போய்விடும். எனவே இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டே எதிர்வரும் மே 17ஆம் திகதி முதல் இந்த இடமாற்றங்களை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
மே 17 வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் மே 17 வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

April 19, 2021

16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 16-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 16-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி:

April 19, 2021

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரத்து 170 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  
நாடு பூராகவும் தற்போது 373 தேசிய பாடசாலைகள் உள்ளன. இதன் பிரகாரம் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளன. 
இதன் முதல் வேலைத்திட்டம் எதிர்வரும் 29ம் திகதி சியம்பலாண்டுவ மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது முதல் கட்டத்தில் 125 பாடசாலைகள், 
தேசிய பாடசாலைக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. 
இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளின் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 
தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் சகல பாடசாலைகளுக்கும் 'இணையத்தளம்', 'ஸ்மாட்' வகுப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுமென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி: தேசிய பாடசாலைகளை 1000ஐ விட அதிகரிக்க அரசு தீர்மானம்: முதல் கட்டம் இம்மாதம் 29ஆம் திகதி: Reviewed by irumbuthirai on April 19, 2021 Rating: 5

கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு:

April 18, 2021

தமிழ் சிங்களப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அதில், கல்வி அமைச்சால் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை முறையாக பின்பற்றும்படியும் சுகாதாரத் தரப்பின் ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது. 
உலகம் பூராவும் கொரோனா 3வது அலைக்கான அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் நாட்டில் 
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையையும் கருத்தில் கொண்டு செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி ஒரு வகுப்பில் 15 மாணவர்களை விட குறைவாக இருப்பின் முழுமையாகவும் 16-30 வரையான மாணவர்கள் இருப்பின் இரு குழுக்களாகவும் 30ற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் 3 குழுக்களாகவும் வகுப்புக்களை நடாத்துமாறும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு: கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை: 2ம் தவணைக்காக வழிகாட்டல்களை வழங்கிய கல்வியமைச்சு:  Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்:

April 18, 2021


யாழ்ப்பாண மாவட்டத்திலே கல்வி செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய சகல விடயங்களுக்கும் விடுக்கப்பட்ட தற்காலிகத் தடை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன் தெரிவித்தார். 
அந்தவகையில் அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் யாவும் சுகாதார தரப்பினரின் ஆலோசனையின் படி திங்கட்கிழமை (19) முதல் முழுமையாக செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.
கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்: கல்வி செயற்பாடுகள் தவிர ஏனையவற்றுக்கான தடை தொடரும்: Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு!

April 18, 2021

வீட்டுத்தோட்ட பயிர்ச்சைகைகளுக்காக அரிய பழ தாவர கன்றுகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆரம்பித்துள்ளார். 
இவ்வாறான பழ கன்றுகளைப் பயிரிடும் போது அதற்குத் தேவையான ஆலோசனைகளை 
05 வருடங்கள் வரைக்கும் இலவசமாக வழங்குவதாகவும் அவர் கூறினார். 
 இலவசமாக வழங்கப்படுகின்ற இந்த பழ கன்றுகளின் உற்பத்தி குறித்து ஒவ்வொரு ஆறு மாதமும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 இது தொடர்பான மேலதிக தகவல்களை 071 375 62 13 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு! இலவசமாக பழக் கன்றுகளையும் அது தொடர்பான ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பு! Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5

சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு:

April 18, 2021

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
இதுவரை 11 தீவிரவாத அமைப்புகளை முற்றிலுமாக தடை செய்துள்ளோம். அதன் தலைவர்களை அழைத்து வந்து விசாரணைகளை நடத்துகிறோம். அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்த விசாரணை அறிக்கைகளைப் பெற்றதும், அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து, அவற்றை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் அவற்றின் உறுப்பினர்கள் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்பினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு: சகல சொத்துக்களும் பறிமுதல்: சரத் வீரசேகரவின் மற்றுமொரு அறிவிப்பு: Reviewed by irumbuthirai on April 18, 2021 Rating: 5
Powered by Blogger.