தரம் 6 ற்கான புதிய கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு

January 13, 2026


6 ஆம் தரத்திற்காக முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்துவதற்குப் பதிலாக 2027 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார். 

அதன்படி, உள்ளடக்கம் மற்றும் செ நடைமுறைப்படுத்தல் பொறிமுறை குறித்து எழுந்த நிலைமைகளை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 6 ஆம் தரம் ஆங்கில பாடத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை மேலும் மதிப்பாய்வு செய்ய அதிக நேரம் ஒதுக்கப்படும். 

இதேவேளை தற்போதுள்ள தரம் 1 தொகுதி எந்த மாற்றங்களும் இல்லாமல் இந்த வருடமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தரம் 6 ற்கான புதிய கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு தரம் 6 ற்கான புதிய கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு Reviewed by Irumbu Thirai News on January 13, 2026 Rating: 5
Powered by Blogger.