பொஸ்பேட் நிறுவனம் குறித்து விமலின் பேஸ்புக் பதிவு!

June 19, 2021

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் கீழ் இருந்த லங்கா பொஸ்பேட் என்ற நிறுவனத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் கீழ் கொண்டு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்றைய தினம் (19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இது தொடர்பில் தனது பேஸ்புக் கணக்கில் அமைச்சர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 
பல வருடங்களாக நட்டத்தில் இயங்கிய லங்கா பொஸ்பேட் நிறுவனத்தை தான் இலாபம் பெறும் நிலைக்கு மாற்றிய பின்னர் அது வேறு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொஸ்பேட் நிறுவனம் குறித்து விமலின் பேஸ்புக் பதிவு! பொஸ்பேட் நிறுவனம் குறித்து விமலின் பேஸ்புக் பதிவு! Reviewed by irumbuthirai on June 19, 2021 Rating: 5

கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய்

June 19, 2021

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 2 - 6 வாரங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு புதிய வகை நோய் ஒன்று வருவதாகவும் குழந்தைகளுக்கு அறியாமலேயே இந்த நோய்க்கு ஆளாகின்றமை என்பது ஒரு மோசமான நிலை எனவும் விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார். 
காய்ச்சல், வாந்தி, கடுமையான உடல் வலிகள், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவத்தல் என்பன இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்பதுடன் இது இதயத்தை பாதித்து 
குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக குழந்தை உயிரிழக்க நேரிடுவது இதன் ஆபத்தான நிலையாகும். 
இதுவரையில் 8 - 15 வயதிற்கு உட்பட்ட 6 குழந்தைகள் இந்த நோய்க்குட்பட்டு கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். 
மேலும் இது 2020 ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஒரு புதிய நோய் எனவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய் கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய் Reviewed by irumbuthirai on June 19, 2021 Rating: 5

18-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

June 19, 2021

18-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். Official gazette released on 18-06-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 


கடந்த வார வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


Join our WhatsApp Groups:

Join Our Telegram Channel:

Like our FB Page:

18-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 18-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on June 19, 2021 Rating: 5

மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொரோனா தடுப்பூசிக்கு உண்டா?

June 19, 2021
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சகலரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் Delta, Alpha, Beta, Gamma, போன்ற வைரஸ் திரிபுகளினால் ஏற்படும் கடுமையான நோய் நிலைமை மற்றும் ஏற்படக்கூடிய கொரோனா மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் தடுப்பூசிக்கு உண்டு என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி நீலிகா மலவீகே தெரிவித்தார். 
Alpha வைரஸ் திரிபு பிரிட்டனிலும் Beta, Gamma பிரேசிலிலும் Delta திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டவை. இதில் வீரியம் கூடியதும் வேகமாக பரவக்கூடியதுமாகும். 
இது போன்ற வைரஸ் திரிபுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி தடுப்பூசி போடுவதாகவும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொரோனா தடுப்பூசிக்கு உண்டா? மரணங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொரோனா தடுப்பூசிக்கு உண்டா? Reviewed by irumbuthirai on June 19, 2021 Rating: 5

உணவுப் பற்றாக்குறை: முதன்முறையாக ஏற்றுக்கொண்ட வடகொரிய ஜனாதிபதி:

June 18, 2021

நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். 
 "நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது” என மூத்த தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 
வெள்ளம், சூறாவளி என்பவற்றால் விவசாய உற்பத்தி இலக்கை அடையவில்லை. உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டது. 
 மேலும் கொரோனா காரணமாக  வட கொரியா தனது எல்லைகளை மூடியது. இதன் காரணமாக சீனாவுடனான வர்த்தகம் சரிந்தது. 
இதுமாத்திரமன்றி வட கொரியாவின் அணு திட்டங்களால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளாலும் அது கஷ்டங்களை அனுபவித்து வருகிறது.
உணவுப் பற்றாக்குறை: முதன்முறையாக ஏற்றுக்கொண்ட வடகொரிய ஜனாதிபதி: உணவுப் பற்றாக்குறை: முதன்முறையாக ஏற்றுக்கொண்ட வடகொரிய ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

சேதனப் பசளையை தயாரித்தால் ரூ. 10000 கொடுப்பணவு!

June 18, 2021

பெரும் போகத்திற்குத் தேவையான சேதன உரங்களை உற்பத்தி செய்து வழங்குவது தொடர்பில் இன்றைய தினம் (18) விவசாய அமைச்சில் இடம்பெற்றது. 
அதில், ஹெக்டயருக்கான (2 1/2 ஏக்கர்) சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 10,000 பணத்தை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஹெக்டயருக்கு 500Kg சேதனப் பசளை, 5Kg தாவர போசணை, 5Kg அமோனியம் அமிலம், 35Kg பொட்டாசியம், 10 லீற்றர் உயிரியல் உரங்களை பயன்படுத்துவற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகளை எவ்வித சிக்கலுமின்றி அரசு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சேதனப் பசளையை தயாரித்தால் ரூ. 10000 கொடுப்பணவு! சேதனப் பசளையை தயாரித்தால் ரூ. 10000 கொடுப்பணவு! Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

அறிமுகமாகிறது தடுப்பூசி பாஸ்போர்ட்!

June 18, 2021

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. 
வெளிநாடு செல்லும் பயணிகள் கொரோனா பாதிப்பில்லா சான்றிதழை தங்களுடன் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு பயணிகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருபவர்களுக்கு பல நாடுகள் முன்னுரிமை அளித்து வருகின்றன. 
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் (Covid 19 Immune Passport) வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் (ஜுலை) முதல் அமுலுக்கு வரும் என ஜப்பானிய அரசின் செய்தி தொடர்பு அதிகாரி கத்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.
அறிமுகமாகிறது தடுப்பூசி பாஸ்போர்ட்! அறிமுகமாகிறது தடுப்பூசி பாஸ்போர்ட்! Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

'டெல்டா' வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு!

June 18, 2021

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி ஒருவர் டெல்டா வைரஸ் திரிபு தொடர்பான அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 
 அதாவது இந்த 'டெல்டா´ திரிபு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 
ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக மாறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டது இந்த டெல்டா திரிபு. இது தற்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. இங்கிலாந்து திரிபான அல்பாவைவிட இரண்டு மடங்கு வேகத்துடன் பரவக்கூடியது. 
இலங்கையிலும் முதன்முறையாக சமூகத்திலிருந்து இந்த வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
'டெல்டா' வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு! 'டெல்டா' வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

புதிய முறையில் வாக்காளர் பெயர்ப்பட்டியலை திருத்தும் பணி:

June 18, 2021

இம்மாதம் (ஜூன்) 1ம் திகதி முதல் வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதை புதிய முறையின் கீழ் திருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 
நாட்டினுள் நிலவும் கொரோனா நிலமை காரணமாக சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
புதிய முறையில் வாக்காளர் பெயர்ப்பட்டியலை திருத்தும் பணி: புதிய முறையில் வாக்காளர் பெயர்ப்பட்டியலை திருத்தும் பணி: Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

தொழில்வாய்ப்பிற்காக கொரியா செல்லவிருப்போர்க்கான அறிவித்தல்:

June 18, 2021

இலங்கைக்கான கொரியத் தூதுவர் வொன்ஜின் ஜியேன் (Woonjin Jeong) ற்கும் வௌிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்குமிடையில் வௌிவிவகார அமைச்சில் கடந்த 16 ம் திகதி சந்திப்பொன்று இடம்பெற்றது. 
கொரியாவில் தொழிலுக்காக தகுதி பெற்றுள்ளவர்கள் 
நீண்ட காலமாக அங்கு செல்ல எதிர்ப்பார்ப்புடன் உள்ள போதும், கொரோனா தொற்று நிலைமை காரணமாக அது நாளுக்கு நாள் தள்ளிச் செல்வதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது தெரிவித்தார். 
இதற்கு பதிலளித்த தூதுவர், கொரிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தௌிவு படுத்தியதோடு, கொரிய தொழிலுக்கு தகுதி பெற்றுள்ள அனைவருக்கும் குறித்த தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா தொற்று நிலைமை காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், முதல் சந்தர்ப்பத்திலேயே அவர்கள் அனைவரையும் அனுப்பி வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழில்வாய்ப்பிற்காக கொரியா செல்லவிருப்போர்க்கான அறிவித்தல்: தொழில்வாய்ப்பிற்காக கொரியா செல்லவிருப்போர்க்கான அறிவித்தல்: Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

மைக்ரோசாஃப்டின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்:

June 18, 2021

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்டின் தலைவராக இருந்த ஜான் டபிள்யூ தாம்ஸனுக்கு பதிலாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சத்யா நாதெள்ளா என்பவரை இயக்குனர் குழு நியமித்துள்ளது. 
 இதேவேளை ஜான் டபிள்யூ தாம்ஸன் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
தலைமை பொறுப்பை ஏற்கும் சத்யா நாதெள்ளா, இயக்குநா் குழுவின் இலக்குகளை நிா்ணயிக்கும் பணிக்கு தலைமை வகிப்பாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்டின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்: மைக்ரோசாஃப்டின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்: Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

நீக்கப்படவுள்ள பயண கட்டுப்பாடு! வெளியானது புதிய அறிவிப்பு!

June 18, 2021

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படும்.
மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீக்கப்படவுள்ள பயண கட்டுப்பாடு! வெளியானது புதிய அறிவிப்பு! நீக்கப்படவுள்ள பயண கட்டுப்பாடு! வெளியானது புதிய அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் புகுந்த கொரோனா! சிங்கத்தின் நிலை...?

June 18, 2021

கடந்த 2012ஆம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக் காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்ட 'தோர்' என்ற பெயருடைய சிங்கம் கடந்த 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தது. 
 இதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பரிசோதனைகளுக்கு அமைய சிங்கமானது தொண்டை நோய் மற்றும் இருமல் என்பவற்றால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது. பின்னர் இதன் சளி மாதிரி பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதித்த போது சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 
தற்போது இந்த சிங்கத்தோடு இருந்த இன்னும் 05 சிங்கங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மற்றும் இதற்கு பொறுப்பாக இருந்த மூன்று ஊழியர்கள் தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த இரு வாரங்களுக்குள் வரிக்குதிரை ஒன்றும் நீர்யானை ஒன்றும் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்துள்ளன. இதற்கும் காரணம் கொரோனாவாக இருக்கலாம் என தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் புகுந்த கொரோனா! சிங்கத்தின் நிலை...? தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் புகுந்த கொரோனா! சிங்கத்தின் நிலை...? Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சளி, காய்ச்சல்: வெளியான புதிய ஆய்வு!

June 18, 2021

Journal of Experimental Medicine என்ற மருத்துவ அறிவியல் சஞ்சிகையில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அதாவது சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று ஒருவருக்கு வரும்போது, அந்தத் தொற்றை எதிர்த்து அவரது உடலில் உருவாகும் எதிர்ப்பாற்றல், கொரோனா வைரஸிற்கு எதிராகவும் செயற்படும் திறன் கொண்டதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், இவை அந்த வைரஸ்களின் வேகம் மற்றும் நீடிக்கும் காலம் என்பவற்றைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சளி, காய்ச்சல்: வெளியான புதிய ஆய்வு! கொரோனாவிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சளி, காய்ச்சல்: வெளியான புதிய ஆய்வு!  Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

ரூ. 90,000 பெறுமதியான தடுப்பூசிகள் மாயம்!

June 18, 2021

ரூ. 90,000 பெறுமதியான Sinopharm தடுப்பூசி டோஸ்கள் காணாமல் போயுள்ளதாக காலி, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியினால் (MOH), ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் காலி குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் MOH அலுவலக சாரதி மற்றும் சிற்றூழியர் ஒருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரூ. 90,000 பெறுமதியான தடுப்பூசிகள் மாயம்! ரூ. 90,000 பெறுமதியான தடுப்பூசிகள் மாயம்! Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

காசா மீது மீண்டும் தாக்குதல்! புதிய அரசாங்கத்தின் முதலாவது தாக்குதல்:

June 18, 2021

கடந்த புதன்கிழமை அதிகாலை இஸ்ரேலிய விமான படைகள் காசா பகுதியில் மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும். 
வான்வழி தாக்குதல் நடத்தியதை உறுதி செய்துள்ள இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் போராளிக்குழுவால் இயக்கப்படும் வானொலி நிலையமும் பலஸ்தீனிய பயிற்சி முகாமையும் குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பால் தெற்கு இஸ்ரேல் பகுதியில் தீப்பிடிக்கும் வகையிலான பலூன்கள் பறக்கவிட்டதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.
காசா மீது மீண்டும் தாக்குதல்! புதிய அரசாங்கத்தின் முதலாவது தாக்குதல்: காசா மீது மீண்டும் தாக்குதல்! புதிய அரசாங்கத்தின் முதலாவது தாக்குதல்:  Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

முதன்முறையாக இந்திய டெல்டா திரிபு தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம்! அல்பாவை விட இரு மடங்கு வேகம்!!

June 18, 2021

தற்போது நாட்டில் நிலவும் B.1.1.7 அல்பா வகை திரிபை விட இருமடங்கு வேகமாக பரவக்கூடிய இந்திய திரிபான G.1.617.2 டெல்டா வகை வைரஸ் தொற்றைக் கொண்ட 05 பேர் கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 
அத்துடன், தடுப்பூசியின் ஒரு டோஸுக்கு இது கட்டுப்படியாகாது. தற்போது ஒரு டோஸ் மாத்திரம் 
Covid-19 தடுப்பூசி பெற்றவர்களுக்கு இத்திரிபிற்கு எதிரான நோயெதிர்ப்பு சுமார் 33% (1/3) அளவே காணப்படும். ஆனால் இது போதுமானதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த இந்திய திரிபு (டெல்டா) தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம்  இதுவாகும். இதற்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த இருவருக்கே இது அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



முதன்முறையாக இந்திய டெல்டா திரிபு தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம்! அல்பாவை விட இரு மடங்கு வேகம்!! முதன்முறையாக இந்திய டெல்டா திரிபு தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம்! அல்பாவை விட இரு மடங்கு வேகம்!!   Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

தொழில் திணைக்கள பதவி வெற்றிடம்: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவுத் திகதி:

June 17, 2021

தொழில் திணைக்களத்தில் சுருக்கெழுத்தாளர் பதவிக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்குரிய இறுதி தினம் ஜூலை 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக தொழில் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை கீழே காணலாம்.


தொழில் திணைக்கள பதவி வெற்றிடம்: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவுத் திகதி: தொழில் திணைக்கள பதவி வெற்றிடம்: நீடிக்கப்பட்டது விண்ணப்ப முடிவுத் திகதி: Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

அத்தியாவசிய சேவைகள்: வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி! (வர்த்தமானி இணைப்பு)

June 17, 2021

தற்போதைய பயணக் கட்டுப்பாட்டு நிலமையில் பொது மக்களின் தேவைக்கருதி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று இன்றைய தினம் (17) வெளியிடப்பட்டுள்ளது. 
2232/31 என்ற இலக்கம் கொண்ட குறித்த வர்த்தமானி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரினால் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 
வர்த்தமானியை கீழே காணலாம்.




அத்தியாவசிய சேவைகள்: வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி! (வர்த்தமானி இணைப்பு) அத்தியாவசிய சேவைகள்: வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி! (வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

ஓட்டமாவடியில் இதுவரை அடக்கப்பட்ட உடல்கள்...

June 17, 2021

நேற்று (16) மாலை வரை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்" அமைந்துள்ள கொரோனா மைய வாடியில் 649 கொரோனா உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் S.M. சிஹாப்தீன் தெரிவித்துள்ளார். 
அதில் 612 முஸ்லிம்கள், 15 இந்துக்கள், 14 கிறிஸ்தவர்கள், 06 பௌத்தர்கள், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 649 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் இதுவரை அடக்கப்பட்ட உடல்கள்... ஓட்டமாவடியில் இதுவரை அடக்கப்பட்ட உடல்கள்... Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

ஐ.தே.க. யின் அதிரடி: நகர சபைத் தலைவர்கள் உட்பட பலர் பதவி இழப்பு!

June 17, 2021

ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக நகரசபை தலைவர்கள் உட்பட பல உறுப்பினர்கள் தமது பதவியை இழந்துள்ளனர். 
அதாவது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றதன் காரணமாக அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 
 இது தொடர்பில் ஐ.தே.க. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளால் இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதன் காரணமாக, 
குறித்த உள்ளுராட்சி மன்ற ஆசனத்தை விட்டு அவர்களே விலகுவதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதற்கமைய, நாவலபிட்டி நகர சபைத் தலைவர் சசங்க சம்பத் சஞ்சீவ, வெலிகம நகர சபைத் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம,தங்காலை நகர சபைத் தலைவர் ரவிந்து தில்ஷன் வேதஆரச்சி ஆகிய நகர சபைத் தலைவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. 
இது மாத்திரமன்றி கொழும்பு, கடுவலை, ஜா-எல மாநகர சபை உறுப்பினர்கள் மூவர் தங்களது ஆசனத்தை இழந்துள்ளனர். 
மற்றும் மாவனல்லை, கொத்மலை, நுவரெலியா, வலப்பனை, கருவலகஸ்வெவ, கெபித்திகொல்லாவை, எஹலியகொட, கலவானை, கொலன்ன, மஹவ, ஆனமடுவ, ஊவ மடுல்ல, பரணகம, கற்பிட்டி, சிலாபம், தலாவை, திறப்பனை, பலாகல, அம்பலாங்கொடை, அம்பகமுவ, பிபிலை, வரக்காபொல, பாணந்துறை, வலிகாமம் வடக்கு, வவுனியா தெற்கு, நுவரகம்பலாத்த, பண்டாரகம, மில்லனிய, நவகத்தேகம, பிங்கிரிய, குருணாகல், ரிதீகம, வத்தளை, திவுலபிட்டிய, களனி, பெலியத்த, நியகாம, போபெ - போத்தல, கலிகமுவ, ரம்புக்கன பிரதேச சபை உறுப்பினர்களும் தங்களது ஆசனத்தை இழந்துள்ளனர்.
ஐ.தே.க. யின் அதிரடி: நகர சபைத் தலைவர்கள் உட்பட பலர் பதவி இழப்பு! ஐ.தே.க. யின் அதிரடி: நகர சபைத் தலைவர்கள் உட்பட பலர் பதவி இழப்பு! Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

Online மூலம் மதுபான விற்பனை: அனுமதியை மறுத்த Covid அணி:

June 17, 2021

Online மூலம் மதுபானம் விற்பனை செய்ய நிதியமைச்சு கொள்கை ரீதியாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆனால் Covid-19 தடுப்புக்கான மத்திய நிலையத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அந்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தாம் வியாபார நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க உள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் எம். ஜே. குணசிறி தெரிவித்தார். 
நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் 600 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் இக்காலங்களில் நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்து வருவதாகவும் இவற்றைக் கருத்தில் கொண்டே இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 
ஆனால் Online மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான கோரிக்கையை, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயலணி நிராகரித்துள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Online மூலம் மதுபான விற்பனை: அனுமதியை மறுத்த Covid அணி: Online மூலம் மதுபான விற்பனை: அனுமதியை மறுத்த Covid அணி: Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்பம் எதிர்பார்த்ததை விட அதிகம்: மேலும் கால அவகாசம்: வெளியானது புதிய அறிவிப்பு!

June 17, 2021

2020/21 ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிக்காக எதிர்பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் சுமார் 65,000 ஆகும். ஆனால் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். 
பல்கலைக்கழக அனுமதிக்காக Online மூலம் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. பல்கலைக்கழக அனுமதி நடைமுறைகள் தொடர்பிலான ஏனைய விடயங்களை முன்னெடுப்பதற்காகவே, 
Online ஊடாக விண்ணப்பிப்பதை நாளையுடன் நிறைவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. 
ஆனால் இதுவரை விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு, பயணக் கட்டுப்பாடு தளர்ப்பட்டதன் பின்னரும் மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பது அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விண்ணப்பம் எதிர்பார்த்ததை விட அதிகம்: மேலும் கால அவகாசம்: வெளியானது புதிய அறிவிப்பு! பல்கலைக்கழக விண்ணப்பம் எதிர்பார்த்ததை விட அதிகம்: மேலும் கால அவகாசம்: வெளியானது புதிய அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நிலைமை வழமைக்கு திரும்பினால்தான்... - கல்வியமைச்சர்

June 17, 2021

பாடசாலைகளை மீள படிப்படியாக திறப்பது தொடர்பில் நேற்று (16) நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ்,
கொரோனா தொற்று நிலைமை குறைவடைந்து சிறந்த நிலைமை ஏற்பட்ட பின்னரே கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீள திறக்கப்படும். 
அதேபோல், பாடசாலைகளை மீள திறப்பதற்கான முதற்கட்டமாக ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நிலைமை வழமைக்கு திரும்பினால்தான்... - கல்வியமைச்சர் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நிலைமை வழமைக்கு திரும்பினால்தான்... - கல்வியமைச்சர் Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

Online மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!

June 17, 2021

Online ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இருப்பினும் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் முன்வைத்துள்ளதாகவும் கலால் திணைக்கள ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Online மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி! Online மூலம் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி! Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

14-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

June 16, 2021

14-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்த வார அமைச்சரவை கூட்ட தீர்மானங்களுக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


Join our WhatsApp group:


Join our Telegram channel:

Like our FB page:



14-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 14-06-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on June 16, 2021 Rating: 5

Vacancy: State Ministry of Pharmaceutical Production, Supply & Regulation.

June 16, 2021

Vacancy: State Ministry of Pharmaceutical Production, Supply & Regulation. 
Closing date: 13-07-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: State Ministry of Pharmaceutical Production, Supply & Regulation. Vacancy: State Ministry of Pharmaceutical Production, Supply & Regulation. Reviewed by irumbuthirai on June 16, 2021 Rating: 5

Vacancies: Engineering Council, Sri Lanka.

June 16, 2021

Following Vacancies at the Engineering Council, Sri Lanka. 
Management Assistant. 
ICT Assistant. 
Personal Assistant. 
Closing date: 02-07-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Engineering Council, Sri Lanka. Vacancies: Engineering Council, Sri Lanka. Reviewed by irumbuthirai on June 16, 2021 Rating: 5

Vacancy for Teachers (The British School - Colombo)

June 16, 2021

Vacancy for Teachers (The British School - Colombo) 
Closing date: 18-06-2021. 
See the details below.

Source: Sunday Observer.
Vacancy for Teachers (The British School - Colombo) Vacancy for Teachers (The British School - Colombo) Reviewed by irumbuthirai on June 16, 2021 Rating: 5

மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம்: P.B.ஜயசுந்தரவை பதவி நீக்க வேண்டும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

June 16, 2021

மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம்தான் என நாரஹேன்பிட்டி அபயாராமய விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
காலை முதல் இரவு வரை வீதியில் இறங்கி சத்தமிடுகின்றனர். உண்பதற்கு ஒன்றும் இல்லை. உரம் இல்லை. கடலாமைகள் போன்ற உயிரினங்கள் இறக்கின்றன. இந்த அனைத்து அவலக் குரலுக்கு மத்தியில், வாகனங்களை கொண்டுவர முயற்சிக்கின்றனர். 
எந்தவொரு நபரையும் சுற்றி எட்டப்பன்மார் இருப்பார்கள். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருக்கும் மிகப்பெரிய எட்டப்பனாக 
கலாநிதி ஜயசுந்தரவை காண்கின்றோம். ஜனாதிபதியின் இந்த விழ்ச்சிக்கு அவரே காரணம். அவரை பதவியில் இருந்து நீக்கி பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம்: P.B.ஜயசுந்தரவை பதவி நீக்க வேண்டும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம்: P.B.ஜயசுந்தரவை பதவி நீக்க வேண்டும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் Reviewed by irumbuthirai on June 16, 2021 Rating: 5

முகக் கவசம் அணியவில்லை: பிரேசில் ஜனாதிபதிக்கு கிடைத்த தண்டனை:

June 15, 2021
பிரேசிலின் 'ஸா பாலோ' பகுதியில் சுமார் 1000 பேர் கலந்துகொண்ட பேரணி ஒன்றில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோராவும் கலந்துகொண்டார். அதில் அவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. 
எனவே பொதுவெளியில் முகக்கவசம் அணியாத பிரேசில் ஜனாதிபதிக்கு 
100 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், தனிமைப்படுத்துதல் தேவையில்லாத ஒன்று என்று பிரேசில் ஜனாதிபதி தெரிவிக்கின்றமையால் கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். 
இதேவேளை பிரேசிலில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பொது வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற ஆலோசனை பரிசீலனையில் உள்ள நிலையில், ஜனாதிபதிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகக் கவசம் அணியவில்லை: பிரேசில் ஜனாதிபதிக்கு கிடைத்த தண்டனை: முகக் கவசம் அணியவில்லை: பிரேசில் ஜனாதிபதிக்கு கிடைத்த தண்டனை: Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

Vacancy: National Medicinal Drugs Regulatory Authority

June 15, 2021

Vacancy: National Medicinal Drugs Regulatory Authority 
Closing date: 26-06-2021. 
See the details below.


Vacancy: National Medicinal Drugs Regulatory Authority Vacancy: National Medicinal Drugs Regulatory Authority  Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

2021 உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா?

June 15, 2021
தற்போதைய நிலையில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியே பரீட்சை நடத்தும் தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். நடந்து முடிந்த சாதாரணதர பரீட்சையின் 
செயன்முறை பரீட்சைகளை நடாத்தும் தீர்மானம் தொடர்பில் நாளை (16) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும் 2020 க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
2021 உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? 2021 உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

அதிகரிக்கப்பட்டன பேக்கரி பொருட்களின் விலைகள்!

June 15, 2021

பாண் தவிர்ந்த ஏனைய சகல வகையான பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
அந்தவகையில் மாளுபான், பனிஸ் உட்பட சகல பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டன பேக்கரி பொருட்களின் விலைகள்! அதிகரிக்கப்பட்டன பேக்கரி பொருட்களின் விலைகள்! Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

Vacancy: RPA Engineer (Commercial Bank of Ceylon Ltd)

June 15, 2021

Vacancy: Robotic Process Automation (RPA) Engineer at the Commercial Bank of Ceylon Ltd. 
Closing date: 10 days from 13/6/2021. 
See the details below.
Source: Sunday Observer 13/6/2021.

Vacancy: RPA Engineer (Commercial Bank of Ceylon Ltd) Vacancy: RPA Engineer (Commercial Bank of Ceylon Ltd) Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

இஸ்ரேல்! முடிவுக்கு வந்த 12 வருட ஆட்சியும் புது முறையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கமும்:

June 15, 2021

2009 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக பெஞ்சமின் நெதன்யாஹு தொடர்ச்சியாக பதவியில் இருந்து வந்தார். அங்கு கடந்த 02 ஆண்டுகளாக 04 தடவைகள் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 
கடந்த மார்ச் 23 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாஹு கட்சி 30 இடங்களையே கைப்பற்றியது. அவரால் கூட்டணி அரசைக் கூட அமைக்க முடியவில்லை. 
இதனிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் சுழற்சி முறையில் பிரதமர் பதவி வழங்கப்படுமெனவும் முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட் பிரதமர் பதவியை ஏற்பார் எனவும் யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார். 
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒன்றாய், 
அரபு எம்பிக்களின் ஆதரவு பெற்ற தீவிர வலது மற்றும் இடது கொள்கைகள் கொண்ட பல கட்சிகள் ஒன்றாக சேர்ந்த `மாற்று ஆட்சி`யை உருவாக்கியது விஷேட அம்சமாகும். 
அந்தவகையில் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நப்தாலி பென்னட் வெற்றி பெற்று பிரதமராக தெரிவானார். அவரது அமைச்சரவையில் 27 பேர். அதில் 9 பெண்கள். 
Naftali Bennett எதிர்வரும் 2023 செப்டெம்பர் வரை இஸ்ரேலின் பிரதமராக செயற்படவுள்ளதோடு அதன்பின்னர் 02 ஆண்டுகளுக்கான பிரதமர் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் யயர் லபிட்டிடம் (Yair Lapid) ஏற்கவுள்ளார். 
இதேவேளை புதிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்! முடிவுக்கு வந்த 12 வருட ஆட்சியும் புது முறையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கமும்: இஸ்ரேல்! முடிவுக்கு வந்த 12 வருட ஆட்சியும் புது முறையில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கமும்: Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

மற்றுமொரு தடுப்பூசியை தயாரித்து அசத்திய அமெரிக்கா!

June 15, 2021

அமெரிக்காவில் ஏற்கனவே Pfizer, Johnson & Johnson மற்றும் Moderna ஆகிய 03 கொரோனா தடுப்பூசிகள் அவசரகால பாவனையில் உள்ளது. 
இந்நிலைவில் மற்றுமொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை Novavax என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இது 100% பாதுகாப்பானது என்றும் 90.4% செயற்திறன் கொண்டது என்றும் உருமாறிய கொரோனாவிற்கு 
எதிராக சிறப்பாக செயற்படுகிறது எனவும் Novavax நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை களஞ்சியப்படுத்தி வைப்பதும் எடுத்து செல்வதும் சுலபம் எனவும் நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும் அமெரிக்காவில் தடுப்பூசிக்கான தேவை பலமடங்கு குறைந்துள்ளது என்றும் அங்கு கொரோனா தடுப்பூசிகள் கோடிக்கணக்கில் காலாவதி திகதியை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு சபையின் அனுமதி பெறப்பட்டவுடன், வளர்ந்து வரும் நாடுகளுக்கு மேலதிக தடுப்பூசிகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசியை இந்தியாவில் Serum நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றுமொரு தடுப்பூசியை தயாரித்து அசத்திய அமெரிக்கா! மற்றுமொரு தடுப்பூசியை தயாரித்து அசத்திய அமெரிக்கா! Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை!

June 15, 2021

கொவிட் மரணங்களை அறிவிக்கும் போது நேற்று (14) முதல் புதிய முறை பின்பற்றப்படுகிறது. 
இது தொடர்பில் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவிக்கையில், 
நாள் ஒன்றில் ஏற்படும் சகல கொவிட் மரணங்களையும் அன்றைய தினமே வௌியிட புதிய பொறிமுறையொன்றை தயாரித்துள்ளோம். இதற்கமைய கடந்த 48 மற்றும் 24 மணித்தியாலங்களினுள் இடம்பெறும் கொவிட் மரணங்களை அன்றைய தினத்திலேயே அறிக்கையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை! கொரோனா மரணங்களை அறிவிக்கும் புதிய முறை! Reviewed by irumbuthirai on June 15, 2021 Rating: 5

Application for the Aptitude Test- 2020/21. (University of Moratuwa)

June 14, 2021

Applications are invited for the aptitude test for following degree programs. 
Architecture degree 
Design degree 
Landscape Architecture degree 
Fashion design & Product development degree 
Information technology & Management 
Closing date: 25-06-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Application for the Aptitude Test- 2020/21. (University of Moratuwa) Application for the Aptitude Test- 2020/21. (University of Moratuwa) Reviewed by irumbuthirai on June 14, 2021 Rating: 5

கண்டுபிடிக்கப்பட்டது 1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை!

June 13, 2021

1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ஒன்று இஸ்ரேலின் யவ்னே என்ற நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
குறித்த பகுதியில் இடம்பெறும் அகழ்வாராய்ச்சியின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து இந்த கோழி முட்டை உடையாமல் எடுக்கப்பட்டுள்ளது. 
சுமார் 1,000 வருடங்களைக் கடந்த பின்னரும் கோழி முட்டை உடையாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டது 1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை! கண்டுபிடிக்கப்பட்டது 1000 வருடங்கள் பழமையான கோழி முட்டை! Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை:

June 13, 2021

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பாடசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தபோது அவரை வரவேற்க பாடசாலைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்கள் கூட்டத்திலிருந்த டேமியன் தாரெல் என்கிற இளைஞன் ஜனாதிபதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். 
இதையடுத்து குறித்த இளைஞரையும் இதை செல்போனில் படம் பிடித்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது அதிபரை கன்னத்தில் அறைந்ததை ஒப்புக்கொண்ட டேமியன் தாரெல், எல்லோரும் 
தன்னை கவனிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்ததாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள், அதில் 14 மாதங்களை இரத்து செய்துவிட்டு 4 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அந்த வகையில் அவருக்கு தற்போது 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை அந்த இளைஞர் தனது கன்னத்தில் அறைந்த விடயத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என கூறிய‌ மெக்ரோன், தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை: பிரான்ஸ் ஜனாதிபதியை கன்னத்தில் அறைந்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5
Powered by Blogger.