Vacancies: Ceylon Fisheries Corporation

January 09, 2021

Vacancies: Ceylon Fisheries Corporation 
Closing date: 21-01-2021. 
See the details below.
Source : 03-01-2021 Sunday Observer. 

Vacancies: Ceylon Fisheries Corporation Vacancies: Ceylon Fisheries Corporation Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

Vacancy for Teachers (Zahira College, Colombo)

January 09, 2021

Vacancy for Teachers (Zahira College, Colombo) C
losing date: 10 days from 03-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.

Vacancy for Teachers (Zahira College, Colombo) Vacancy for Teachers (Zahira College, Colombo) Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

Vacancies: University of Moratuwa

January 09, 2021

Vacancies: University of Moratuwa. 
Closing date: 29-01-2021. 
See the details below.
Source: 03-01-2021.

Vacancies: University of Moratuwa Vacancies: University of Moratuwa Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

அபராதம் செலுத்த முடியாத சகல கைதிகளும் விடுதலை!

January 09, 2021

ஜனாதிபதியின் விசேட அரச மன்னிப்பின் கீழ், தமக்குரிய அபராதத் தொகையை செலுத்த முடியாத நிலையில் சிறையில் உள்ள கைதிகளை 
விடுதலை செய்யும் நடவடிக்கை இன்று முதல் இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார். 
சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அபராதம் செலுத்த முடியாத சகல கைதிகளும் விடுதலை! அபராதம் செலுத்த முடியாத சகல கைதிகளும் விடுதலை! Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்!

January 09, 2021

சுகாதார விதிமுறையை மீறி ஹட்டன் நகரில் வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் நேற்று (08) 1,000 ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார பரிசோதகருக்கு 
பொது மக்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்! வகுப்பு நடத்திய ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது அபராதம்! Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி:

January 09, 2021

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கு அமைய 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அதிகாரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார். 
அம்பாறை, ஏறாவூர் ஆகிய நகர சபைகளின் மற்றும் பொத்துவில், இறக்காமம், பதியத்தலாவ, மண்முனை, வாழைச்சேனை, வாகரை, ஏறாவூர்பற்று, 
சேருவில, தம்பலகாமம், திருகோணமலை பட்டிணமும் சூழலும், மொரவெவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்களுக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் சபை தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான விசேட வர்த்தமானி வெயிடப்படும் வரை சபை அமர்வுகளை நடத்துவதற்கும் மூலதன வேலைத்திட்டங்களை செய்யவோ அல்லது இலவச விநியோகங்களை மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: 13 உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு தடை விதிப்பு: கிழக்கு மாகாண ஆளுநரின் அதிரடி: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்...

January 09, 2021

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் அதிகாரி வி.திலீபன் தெரிவித்தார். 
இதற்காக புளியங்குளம் இந்துக் கல்லுாரியில் 
PCR பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அங்கு பரிசோதனைக்கு வருவோரது எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... அதிபர்கள், ஆசிரியர்கள் PCR செய்தாலே பாடசாலைக்கு செல்லலாம்... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை:

January 09, 2021

கொரோனா தடுப்பூசி (Covid Vaccine) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசி போட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி: 
சுகாதார பணியாளர்கள் - 155,000 (0.68%) 
முப்படை மற்றும் பொலிஸ்- 127,500 (0.56%) 
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 3,159,800 (14%) 
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தொடர்புபடும் ஊழியர்கள் - 225,700 (1%) 
நோய்வாய்ப்பட்ட 18-59 வயதுடையவர்கள் - 3,227,510 (14.3%) 
40-59 வயதுடையவர்கள் - 3,114,660 (13.8%) 
இருப்பினும், கோவிட் தடுப்பூசி 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது. அவர்கள் தடுப்பூசி போடத் தேவையில்லை என்பதே இதற்குக் காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை: கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எண்ணிக்கை: சிறுவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி இல்லை: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா...

January 09, 2021

கேகாலை, மாகுர, மகுருதெனியவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இவர்கள் அனைவரும் தம்மிக கொரோனா பாணியை 
அருந்தியவர்கள் என தெரியவந்துள்ளதாக புழுகஹதெனிய பொது சுகாதார பரிசோதகர் பன்டார அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... கொரோனா பாணியை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்..

January 09, 2021

10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஹோமாகம போலீஸ் நிலையமே இவ்வாறு சட்டவிரோதமாக நீரை பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்திற்கு தண்ணீர் வழங்க கூடிய 
நான்கு இணைப்புக்கள் இருந்துள்ளன. அதில் மூன்று இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அந்த துண்டிக்கப்பட்ட இணைப்புகள் மூலமாக சட்டவிரோதமாக நீர் இவ்வளவு காலமும் பெறப்பட்டுள்ளது. 
 இந்த சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு சுமார் 15 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நீர்வழங்கல் சபைக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது இது தொடர்பான விசாரணைகளை அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. 10 வருடங்களாக சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற பொலீஸ் நிலையம்.. Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்:

January 09, 2021

கடந்த சில நாட்களாக கேகாலை பிரதேசத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு வித்தியாசமான அறிகுறி அதாவது அதிக காய்ச்சல் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை இந்த அறிகுறிகள் தென்படுவது பெரும்பாலும் 
புதிய வகையான கொரோனாவாக இருக்கலாம் என குறித்த சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேகாலை பிரதேசத்தில் கொரோனா பாணியை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான மக்கள் சமூக இடைவெளியை பேணாது ஒன்றுகூடியமை குறிப்பிடத்தக்கது.
கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: கேகாலையில் வித்தியாசமான அறிகுறிகளுடன் தொற்றாளர்கள்: GMOA வெளியிட்ட சந்தேகம்: Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர்

January 09, 2021

மேலதிக வகுப்புக்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர், 
கட்டம் கட்டமாகவே ஒவ்வொரு கற்றல் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய இன்னும் 02 வாரங்களில் 
மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்க எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமையவே இந்த செயற்பாடு ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது பற்றி கல்வியமைச்சர் Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா?

January 09, 2021

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்துதல் கட்டணம் அறவிடப்படமாட்டாது என அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
அவர்கள் அரசினால் 
நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா? நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டணம் அறவிடப்படுமா? Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

பயிலுனர் பட்டதாரிகளில் சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு..

January 09, 2021

49 ஆயிரத்து 478 பேருக்கு இதுவரை பட்டதாரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 2000 பேருக்கு தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பை 
மேற்கொள்ள அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக அரச நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். 
 அரச சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை தகுதியுடையவர்களாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பயிலுனர் பட்டதாரிகளில் சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு.. பயிலுனர் பட்டதாரிகளில் சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு.. Reviewed by irumbuthirai on January 09, 2021 Rating: 5

முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை:

January 08, 2021

உக்ரேன் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இன்று (8) முதல் 24ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்றைய தினத்திலான தகவல்களின்படி ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட 
மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 19,588 பேர் இறந்துள்ளனர். 
இதேவேளை உக்ரைனில் இருந்து 6வது சுற்றுலா பயணிகள் குழுவும் இன்றைய தினம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை: முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை: Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

January 08, 2021

2020 க.பொ.த. (உ/தர) பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக செயன்முறை பரீட்சைகள் (Practical Exames) 5ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
செயன்முறை பரீட்சைகளில் தோற்றும் மாணவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு குறித்த திகதியில் செல்ல வேண்டும். 
 இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் 
தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சைக்கு செல்லலாம் என பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 0112 781208/ 0112784537/ 0113140314 அவசர அழைப்பு இலக்கம் - 1911
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல் Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

உயர் தர செயன்முறை பரீட்சை நேர அட்டவணை வெளியானது

January 08, 2021

2020 க.பொ.த. (உ/தர) பரீட்சையில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக செயன்முறை பரீட்சைகள் (Practical Exames) 5ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
பரீட்சைகள் நடைபெறும் திகதியையும் பாடத்தையும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
2021/01/05 - நாட்டியம் (தேசிய) 
2021/01/05 - நாட்டியம் (பரதம்) 
2021/01/09 - உயிர் முறைமை தொழிநுட்பவியல். 
2021/01/21 - பொறியியற் தொழிநுட்பம் 
2021/01/26 - மனைப்பொருளியல் 
2021/01/26 - கீழைத்தேய சங்கீதம் 
2021/01/26 - கர்நாடக சங்கீதம் 
2021/01/26 - மேலைத்தேய சங்கீதம் 
2021/01/26 - நாடகமும் அரங்கியலும் (சிங்களம்). 
2021/01/26 - நாடகமும் அரங்கியலும் (தமிழ்). 
2021/01/26 - நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்). 

மேலதிக விபரங்களுக்கு: 0112 781208/ 0112784537/ 0113140314 
அவசர அழைப்பு இலக்கம் - 1911
உயர் தர செயன்முறை பரீட்சை நேர அட்டவணை வெளியானது உயர் தர செயன்முறை பரீட்சை நேர அட்டவணை வெளியானது Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்தவர்...

January 08, 2021

உலக பணக்காரர்களில் முதலாம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோவை பின்தள்ளி முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் எலான் மஸ்க். 
உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள 
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோ கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்காரர்களில் முதலிடம் பிடித்தவர்... உலக பணக்காரர்களில் முதலிடம்  பிடித்தவர்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

மீள ஆரம்பமாகும் கொரியா வேலைவாய்ப்புக்கள்..

January 08, 2021

கொரியாவில் வேலை வாய்ப்புக்களை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: 
ஊடக வெளியீடு 
 கொரியாவில் வேலை வாய்ப்புக்களை மீளத் திறப்பதற்கு வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன எதிர்பார்ப்பு 
 இலங்கை மற்றும் கொரியக் குடியரசில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சார்ந்த ஒத்துழைப்புக்களை புதுப்பித்தல் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன இலங்கையில் உள்ள கொரியத் தூதுவர் திரு. வூன்ஜின் ஜியோங் அவர்களுடன் 2021 ஜனவரி 04ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடினார். 
 கொரியக் குடியரசில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதிலான கொரியக் குடியரசின் பங்காண்மையைப் பாராட்டிய அதே வேளையில், இலங்கை மற்றும் கொரியக் குடியரசில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 தொற்று நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தொழில்களுக்காக இலங்கையில் இருந்து புதிய பணியாளர்களைப் பெற்றுக் கொள்வதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கொரிய அரசாங்கத்தின் உதவியை வெளிநாட்டு அமைச்சர் கோரினார். 
தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையிலிருந்து கொரியாவிற்கான வேலைவாய்ப்பை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான நோக்கத்துடன் கொரிய அதிகாரிகளுடன் இணைந்து, சுகாதார மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்தார். 
கொரியக் குடியரசின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கை ஊழியர்கள் பெரும் பங்களிப்புக்களை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய தூதுவர் ஜியோங், சவால்களை சமாளிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்காக தனது முழுமையான ஒத்துழைப்பை வெளிப்படுத்தினார். 
 இந்தக் கலந்துரையாடல்களின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரியங்கர ஜயரத்ன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் திரு. கமல் ரத்வத்த, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல், மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

வெளிநாட்டு அமைச்சு.
 கொழும்பு. 
 2021 ஜனவரி 08.

(அரசாங்க தகவல் திணைக்களம் )
மீள ஆரம்பமாகும் கொரியா வேலைவாய்ப்புக்கள்.. மீள ஆரம்பமாகும் கொரியா வேலைவாய்ப்புக்கள்.. Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா?

January 08, 2021

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் இவராவார். கடந்த 4 நாட்களாக சுகவீனமுற்றிருந்த தயாசிறி ஜயசேகர 
PCR செய்து பார்த்தபொழுது நேற்றிரவு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 
அவர் தற்போது ஹிக்கடுவை, ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். 
இதேவேளை கடந்த சில நாட்களாக நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் தான் கலந்து கொள்ளவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா? அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா: பாராளுமன்றம் மூடப்படுமா? Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

Study Programmes in Economics (University of Colombo)

January 08, 2021

Study Programmes in Economics (University of Colombo) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source : 03-01-2021 Sunday Observer.

Study Programmes in Economics (University of Colombo) Study Programmes in Economics (University of Colombo) Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இடிந்து வீழ்ந்தது தலதா மாளிகை மதில்...

January 08, 2021

நேற்று முன்தினம் பெய்த கடும் மழையால் கண்டி தலதா மாளிகை வளாகத்தில், தலதா மாளிகைக்கு அருகிலுள்ள ஶ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பாதுகாப்பு மதிலின் சுமார் 100 மீட்டர் பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. 
இந்த விடயம் தொடர்பாக 
தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடிந்து வீழ்ந்தது தலதா மாளிகை மதில்... இடிந்து வீழ்ந்தது தலதா மாளிகை மதில்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி

January 08, 2021

இலங்கை ராணுவத்தால் புதிய படையணி ஒன்று நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
விவசாயம் மற்றும் கால்நடைவள படையணியே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 இந்த புதிய படையணியை ராணுவ தலைமையகத்தில் ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆரம்பித்துவைத்தார். பாவனையின்றி இருக்கும் நிலத்தினை 
பயன்படுத்தி பல்வேறு பயிர்ச்செய்கை இந்த படையணி மூலம் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி குறித்த நிகழ்வில் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி இலங்கை இராணுவத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய படையணி Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள்

January 08, 2021

எக்ஸ்டசி (Ecstasy) வகையிலான போதை வில்லைகளை இலங்கை சுங்கம் முதன்முறையாக கைப்பற்றியுள்ளது. பெல்ஜியத்தில் இருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட 135 மில்லியன் ரூபா பெறுமதியான 
போதை வில்லைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. 
மத்திய தபால் பரிமாற்றகத்தில் இடம்பெற்ற சோதனையின் போது விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொதியில் இருந்து இந்த போதை வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 18,000 போதை வில்லைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள் இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதை பொருள் Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது...

January 08, 2021

இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை பரவியதற்கான பிரதான காரணம் கடந்த வருடம் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் விமானப் பணியாளர்களே என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 
குறித்த விமானப் பணியாளர்கள் சீதுவையில் அமைந்துள்ள 
ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் அவர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் வௌியிலிருந்தும் ஆட்கள் பங்கேற்றிருந்ததாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது... இலங்கையில் கொரோனா 2ம் அலைக்கான காரணம் வெளியானது... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்...

January 08, 2021

இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
தற்போது மூன்று அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த 06 மாதங்களில் 
அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. 
 இந்த ஆண்டு இறுதிக்குள் 45 நில பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறைமையை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை:

January 07, 2021

கடந்த ஒரு வார காலமாக தனிமைப்படுத்தப்பட்ட காத்தான்குடி நகரில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 
இதற்குக் காரணம் முடக்க நிலையினை முறையாக மக்கள் பின்பற்றாமையேயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 எனவே இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று இரவு முதல் மிகக் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவையாவன,
  • அனுமதியின்றி வீதியில் நடமாடுபவர்கள், வீட்டுக்கு வெளியே வருகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போலீசாருக்கு இறுக்கமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  • மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் சென்றால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்படும். 
  • அனுமதியின்றி கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
  • இன்று இரவிலிருந்து முழுமையான ராணுவ பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்படும். 
போன்ற கடுமையான நடவடிக்கைகள் அங்கு  அமுலாகின்றன. 
தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: தனிமைப்படுத்தலுக்கு மத்தியிலும் காத்தான்குடியில் பரவும் கொரோனா: அரசின் அதிரடி நடவடிக்கை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 07, 2021

24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 24-12-2020 (In two languages) 
இதில், 
போட்டிப் பரீட்சை, கற்கை நெறிகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 24-12-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா?

January 07, 2021

2020 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் வாக்காளர் ஒருவராக பதிவு செய்த நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத் தளத்தில் பரீட்சித்துக்கொள்ளலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.


தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? தேர்தல் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது?

January 07, 2021

சஜித் பிரேமதாஸ, மாணவர்களுக்கு புதுவருடத்திற்கான சீருடைத் துணி இன்னமும் வழங்கப்படவில்லை என நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் G.L. பீரிஸ், 
சீருடைத் துணி வழங்கும் வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளை தொடங்காமல், சீருடையை விநியோகிப்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல. பாடசாலை தொடங்கியதும் விநியோகிக்கப்படும் என்றார்.
பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் எப்போது? Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு:

January 07, 2021

2020ம் வருடத்தின் இறுதிப் 10 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 600 ற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் Covid-19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக ஜெனீவாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் 'பத்திரிகைச் சின்னம்' என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. 

பெரு நாட்டில் 93, பிரேசிலில் 55, இந்தியாவில் 53, 
மெக்சிக்கோவில் 45, ஈக்குவடோரில் 42, பங்களாதேஷில் 41 ஊடகவியலாளர்களும் இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
59 நாடுகளை மையப்படுத்தி மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: கொரோனாவால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள்: 59 நாடுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவு: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை:

January 07, 2021

கொரோனவைரஸின் மரபணு மாறி புதிய வகை கொரோனா வைரஸாக உருவெடுத்து இங்கிலாந்தில் பரவத்தொடங்கியது. 
அது தற்போது ஏனைய நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. 
 இந்த நிலையில் இந்திய விஞ்ஞானிகள் உலகில் முதன் முறையாக 
இந்த புதிய வகை கொரோனவைரஸ் மரபணுவை தனியாக பிரித்து எடுத்து சாதனை படைத்துள்ளனர். 
 பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரஸின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய கொரோனா வைரஸ்: முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: புதிய கொரோனா வைரஸ்:  முதன்முதலாக பிரித்து இந்தியா சாதனை: Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura)

January 07, 2021

Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) 
Closing date: 31-01-2021. 
See the details below.
Source: 03-01-2021 Sunday Observer.
Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) Diploma in Public Management - 2021 (University of Sri Jayewardenapura) Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா

January 07, 2021

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்த விசாரணைகளுக்காக சீனாவின் வூஹானிற்கு செல்ல முற்பட்டபோது 
சீனா அதற்கு அனுமதி வழங்கவில்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் எட்ஹனொம் ஹெப்பிரயேசிஸ் தெரிவித்துள்ளார். 
 இது தொடர்பில் தான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சீன உயர் மட்டத்தை தொடர்பு கொண்டதாகவும் சீனாவிற்கு சர்வதேச குழுக்களை அனுப்புவதே தனது முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா கொரோனா ஆராய்ச்சிக்காக சென்ற WHO குழுவை தடுத்து நிறுத்திய சீனா  Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்)

January 07, 2021

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார ரீதியிலான பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பாடசாலை சுகாதாரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். 
 கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலின் கீழ் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. 

அதிபர்களுக்கான ஆலோசனைகள் :- 
 ● 2021 ஜனவரி மாதம் 06, 07, 08, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் 
 ● பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று தேவையான மாற்றங்களை செய்தல் 
 ● COVID – 19 தொற்றுநோய் நிலைமையின் கீழ் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பில் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் 
 ● கொரோனா பரவலை தடுப்பதற்காக பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களை தயார்ப்படுத்தல் தொடர்பான 15/2020 இலக்க சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்தல் 
 ● பாடசாலையை ஆரம்பித்ததன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்லல் 
 ● பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களை இனிதாக வரவேற்பதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலிமையை ஏற்படுத்தல் 
 ● மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும்போது, பாடசாலைக்குள் அல்லது பாடசாலையிலிருந்து வௌிச்செல்லும் வழியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கடினமாக இருப்பின் சமூக இடைவௌியை பேணக்கூடிய சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அகற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல் 
 ● பாடசாலைக்குள் நுழையும் போது சகல மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் மீண்டும் வகுப்பறைகளுக்குள் உடல் வெப்பநிலையை பரீட்சித்தல் 
 ● மாணவர்கள் பாடசாலைக்குள் நுழையும் போது இரு கைகளையும் கழுவுவதை கட்டாயமாக்குதல் மற்றும் அது திறன்பட முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை தினமும் மேற்பார்வை செய்தல் 
 ● மாணவர்கள் இடையே சமூக இடைவெளியை பேணுதல் 
 ● மாணவர்கள் கூட்டமாக சேர்வதை தடுப்பதற்கு வகுப்பு மட்டத்தில் தேவையான நேரத்தில் இடைவேளை வழங்குதல் 
 ● வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவு நீர் மற்றும் ஏனைய உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்தல் 
 ● ஒருவருக்கொருவர் தொடுகையில் ஈடுபடும் வகையிலான விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளை சமூக இடைவௌியுடன் நடத்துதல் 
 ● அவசர நிலைமைகளின் போது தொடர்புகொள்வதற்கு தேலையான தொலைபேசி இலக்கம் மற்றும் தகவல்களை சேகரித்து அலுவலகத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் பணியாளர்களுக்கு அறியப்படுத்தல் 
 ● திடீரென பாடசாலையில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகரிடம் ஆலோசனை பெற்று அதனை செயற்படுத்தல் 
 ● அதிபரின் தலைமையில் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டுக் குழுவை முனைப்புடன் பேணுவதனூடாக கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்தல் 
 ● பாடசாலையை சுகாதார ரீதியில் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் முன்னிலையில் அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதை உறுதி செய்தல் 
 ● பாடசாலையை ஆரம்பிப்பதற்கு முன்னரான முன்னாயத்தங்கள் மற்றும் ஆரம்பித்ததன் பின்னரான ஆரோக்கிய நிலைமையை பேணுவதற்கான மேற்பார்வை ஆவணமொன்றை பேணுதல் 
 ● மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் 
 ● காய்ச்சல், சுவாச நோய்க்கான அறிகுறிகளுடைய மாணவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள், சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரையில் பாடசாலைக்கு சமூகமளிக்காதிருக்குமாறு குறித்த மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தல் 
 ● கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் ஒரு நிலைமை காரணமாக வீட்டிலிருக்க நிர்ப்பந்திக்கப்படும் மாணவர்களின் அன்றாட கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருக்க உதவிகளை வழங்குதல். 

 பெற்றோருக்கான ஆலோசனைகள் : – 
 ★ இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல் 
 ★ வீட்டில் வேறு யாரேனும் அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல் 
 ★ வீட்டிலுள்ள அங்கத்தவர் ஒருவர் அல்லது பிள்ளைக்கு PCR பரிசோதனை, Rapid Antigen பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அவ் அறிக்கையின் படி சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரை பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல் 
 ★ தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைக்கு பிள்ளையை அனுப்பாதிருத்தல் 
 ★ தமது பிள்ளை பயன்படுத்தும் உபகரணங்கள் (புத்தகப்பை, தண்ணீர் போத்தல், உணவுப் பெட்டி, புத்தகங்கள்) ஆகியவற்றை சுத்தப்படுத்தல் அல்லது வெயிலில் இட்டு உலர்த்துதல் 
 ★ தினந்தோறும் பிள்ளையின் ஆடைகள் மற்றும் பாதணிகளை சுத்தப்படுத்தல் 
 ★ பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியதும் பிள்ளையின் கைகளை கழுவுதல் மற்றும் பிள்ளையை நீராட்டி சுத்தப்படுத்தல் 
 ★ பாடசாலை விட்டு வந்ததும் காலணிகளை வீட்டிற்கு வௌியில் கழற்றுதல் 
 ★ பாவித்த முகக்கவசங்களை எரித்தல் 
 ★ தும்மல் ஏற்படும்போது பயன்படுத்திய திசு கடதாசிகளை மூடிய பாத்திரம் ஒன்றில் சேகரித்து எரித்தல் 
 ★ வீட்டில் சமைத்த உணவுகளை மாத்திரம் பிள்ளைக்கு கொடுப்பதோடு சகல சந்தர்ப்பங்களிலும் பிள்ளை பயன்படுத்தும் பொருட்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த அறிவுறுத்தல் வழங்குதல் 
 ★ பாடசாலை நிறைவடைந்ததும் பிள்ளையை வீட்டிற்கு வரும்படி அறிவுறுத்தல் வழங்குதல் அல்லது வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல் 
 ★ பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்கு செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்து சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்குதல் 
 ★ தமது பிரதேசத்தில் சுகாதாரம் தொடர்பான ஏனேும் சிக்கல் இருந்தால் அது தொடர்பாக பாடசாலை அதிபருக்கு அறிவிப்பதன் மூலம் பாடசாலைக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைக்க உதவுதல். 

 மாணவர்களுக்கான ஆலோசனைகள் :- 
 ★ பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் போது சவர்க்காரம் இட்டு கைகளை கழுவுதல் மற்றும் பாதணிகளை கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்துதல் 
 ★ சமூக இடைவௌியை பேணுதல் 
 ★ புத்தகங்கள், பேனைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்த்தல் 
 ★ பாடசாலை நேரத்திற்குள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் மற்றும் மேலதிக முகக்கவசம் ஒன்றை புத்தகப்பையில் வைத்திருத்தல் 
 ★ கிருமித்தொற்று நீக்கல் திரவங்களை (Sanitizer) கொண்டுவருதல் மற்றும் தேவையானபோது அவற்றை பாவித்தல் 
 ★ பாடசாலையில் அதிக நேரம் முகக்கவசத்தை அணிய முடியாத, சிரமம் மிக்க மாணவர்கள் முகக்கேடயம் (Face Shield) பாவித்தல் 
 ★ உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்த சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக முகக்கவசத்தை அகற்றி சுத்தமான பையொன்றில் வைத்தல் அல்லது அணிந்திருக்கும் சீருடையில் வைத்திருத்தல் 
 ★ முகக்கவசங்களை ஒருபோதும் பொது இடங்களில் வைக்காதிருத்தல் 
 ★ இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் முழங்கையால் வாய் மற்றும் மூக்கை மறைத்துக்கொள்ளல் அல்லது திசு கடதாசியை பயன்படுத்தல் மற்றும் அவற்றை உரிய முறையில் அகற்றுதல் 
 ★ உணவு அருந்துவதற்காக அல்லது வேறு தேவைகளுக்காக தற்காலிகமாக முகக்கவசங்களை அகற்றி பின் மீண்டும் அவற்றை அணியும் போது, கைகளை நன்றாக கழுவியிருத்தல் வேண்டும் 
 ★ பிற நபர்களின் முகக்கவசங்களை ஒருபோதும் பயன்படாதிருத்தல் 
★ வகுப்பறையை விட்டு வௌியேறி பின் மீண்டும் வகுப்பறைக்குள் வரும்போது எந்தவொரு மேற்பரப்பையும் தொட்டதன் பின்னர் கைகளை கழுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல் 
 ★ உணவு மற்றும் தண்ணீர் போத்தல்களை பரிமாறுவதை தவிர்த்தல் 
★ பாடசாலைக்குள் மற்றும் வௌியில் குழுக்களாக சேர்ந்திருப்பதை தவிர்த்தல் 
 ★ பாடசாலை நிறைவடைந்தவுடன் வீடுகளுக்கு செல்லுதல் வேண்டும் 
 ★ பாடசாலைக்கு வரும்போமு மற்றும் வீடுகளுக்கு செல்லும் போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்து சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தல் 
 ★ தங்களுக்கு ஏதேனும் நோய், காய்ச்சல், சளி போன்ற நிலைகள் காணப்படின் அந்நிலை குணமாகும் வரை பாடசாலைக்கு செல்வதை தவிர்த்தல் 
 ★ தமது வீட்டில் யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொரோனா நோயாளியுடன் தொடர்புகளை பேணியிருந்தால் சுகாதார அறிவுறுத்தல்களின் படி மறு அறிவிப்பு வரும்வரை பாடசாலைக்கு செல்லாதிருத்தல் 
 ★ பாடசாலையில் அல்லது அதற்கு வெளியில் தேவையற்ற விதத்தில் எப்பொருளையும் தொடுவதை தவிர்த்தல்.
Source: newsfirst.lk
பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்) பாடசாலைகளை ஆரம்பித்தல்: மூன்று தரப்பினர்க்கு வழங்கப்பட்ட தனித்தனி ஆலோசனைகள் (முழு விபரங்களுடன்) Reviewed by irumbuthirai on January 07, 2021 Rating: 5

நாளை முதல் ரயில் பொதி சேவை

January 06, 2021

நாளை (07) முதல் மீண்டும் ரயில் பொதிசேவை ஆரம்பமாவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
நாளை பிரீமா லங்கா தனியார் நிறுவனத்தின் உற்பத்திகளை ரயில் மூலம் கொண்டுசெல்லும் 
சேவையும் ஆரம்பமாகிறது. இதற்காக சீதுவ பிரீமா லங்கா (prima Lanka) நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் இது தொடர்பான வைபவம் ஒன்றும் இடம்பெறவுள்ளது. 
இதேவேளை ரயில் சேவைகள் நடத்தப்படும் பிரதேசங்களுக்கு மாத்திரம் பொதிகளை அனுப்பி வைக்கலாம். பழுதடையக்கூடிய பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றை ரயில் நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் கஸூன் சாமர தெரிவித்தார்.
நாளை முதல் ரயில் பொதி சேவை நாளை முதல் ரயில் பொதி சேவை Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?

January 06, 2021

சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து சுகாதார அமைச்சு மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 
வைரஸ் தொற்று அபாயம் அதிகமுள்ள மேல் மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிக்கலாம். 
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டாம். 
அத்துடன் நோய் அறிகுறிகளுடைய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள எந்தவொரு பிள்ளைகளையும் விளையாட்டுப் போட்டிகளுக்கு உட்படுத்தக்கூடாது. 
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் தேவைக்கேற்ப முழுமைப்படுத்தப்பட்டு முறையாக பாடசாலை விளையாட்டுப் போட்டி ஆரம்பிப்பதிலுள்ள முக்கியத்துவம்.
போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.
பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா? பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாமா?  Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5

முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு!

January 06, 2021

முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு மேலதிகமாக நேற்று முதல் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் திட்டமும் பொலிசாரினால் ஆரம்பிக்கப்பட்டது. 
உரிய சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமை காரணமாகவே இந்த புதிய நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. 
 அதன்படி நேற்று முகக் கவசம் அணியாத சுமார் 1060 பேரிடம் 
செய்யப்பட்ட Rapid Antigen மற்றும் PCR பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! முகக் கவசம் அணியாதவர்களின் கொரோனா அதிகரிப்பு! Reviewed by irumbuthirai on January 06, 2021 Rating: 5
Powered by Blogger.