Results for Election

சுற்றறிக்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கல் (சுற்றறிக்கை மும்மொழிகளிலும் இணைப்பு)

May 09, 2023


தலைப்பு: 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களை கையளித்துள்ள அரசியல் உரிமையுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்குதல். 

சுற்றறிக்கை இல. 07/2023 

திகதி: 2023-05-08


Topic
Providing relief to the public officers entitled to political rights who have submitted nominations for the Local Government Election 2023 ... 

Circular No: 07/2023. 

Circular Date: 2023-05-08.

Click the link below for circular:





Previous:




சுற்றறிக்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கல் (சுற்றறிக்கை மும்மொழிகளிலும் இணைப்பு) சுற்றறிக்கை: உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கல் (சுற்றறிக்கை மும்மொழிகளிலும் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on May 09, 2023 Rating: 5

How to Know Your Area Candidates? / உங்கள் பிரதேசத்திற்குரிய வேட்பாளர்களைத் தெரிந்துகொள்வது எப்படி?

February 11, 2023


The Election Commission of Sri Lanka has introduced a new web portal for public to obtain information about the candidates contesting for the upcoming Local Government Elections. 

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில் இணையத் தளமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகம் செய்துள்ளது. 

குறித்த லிங்கில் சென்று விரும்பிய மொழியைத் தெரிவு செய்து உங்கள் மாவட்டம் மற்றும் தேர்தல் பிரதேசம் என்பவற்றைத் தெரிவு செய்வதன் மூலம் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்சைக் குழு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முழுமையான பெயர்ப் பட்டியலைப் பார்வையிடலாம். 

Click the link below for candidate list/ உங்கள் வேட்பாளர்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.




Previous:



How to Know Your Area Candidates? / உங்கள் பிரதேசத்திற்குரிய வேட்பாளர்களைத் தெரிந்துகொள்வது எப்படி? How to Know Your Area Candidates? / உங்கள் பிரதேசத்திற்குரிய வேட்பாளர்களைத் தெரிந்துகொள்வது எப்படி? Reviewed by Irumbu Thirai News on February 11, 2023 Rating: 5

வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்:

January 17, 2021

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக தமது மன்னார் மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 
இவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டவர்களில் 7,727 பேரின் வாக்காளர் பதிவை, அதிகாரிகள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 
இவ்வாறு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு 
பிரதேசத்திலும் தற்போது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, அவர்களது வாக்குகளை மீள அதே கிராமங்களில் பதிய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம்: Reviewed by irumbuthirai on January 17, 2021 Rating: 5

நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ...

December 26, 2020

தேர்தல்களின் போது வாக்களிக்க முடியாத நிலைமையை எதிர்நோக்குபவவர்களுக்கு வாக்களிக்க கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்க பிரதமர் உடன்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோர்,  வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர், 
சிறைக்கைதிகள் போன்றோருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறது. 
இது மாத்திரமன்றி சுகாதார ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் நாளாந்தம் தமது கடமைகளை செய்ய வேண்டி இருப்பதனால் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது.  
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய திட்டம் வகுக்கப்பபடவிருப்பதாகவும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... நோயாளிகள் சிறைக் கைதிகள் உட்பட பலருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம்... விரைவில் புதிய திட்டம் ... Reviewed by irumbuthirai on December 26, 2020 Rating: 5

அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு..

December 13, 2020

புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பொன்று கடந்த 11 அன்று பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 
இதன்போது பிரதமர், பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். 
அதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள், இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையின் கீழ் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என சுட்டிக்காட்டினர்.
அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு.. அடுத்த தேர்தலுக்கு தயாராகும் அரசு.. Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்...

August 20, 2020


இன்று (20) ஆரம்பமாகும் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு விசேட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. 
இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆகும். 
25 - 40 வயதுக்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
இதேவேளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுள் 81-90 இற்கும் இடைப்பட்ட வயது பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். திரு. வாசுதேவ நாணயக்கார, திரு. ஆர். சம்பந்தன், திரு. சீ. பி. விக்னேஸ்வரன் ஆகியோரே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள். 
இம்முறை பொதுத்தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் சக்தி ஆகியவற்றுக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக இதுவரையில் பெயரிடப்படவில்லை. 
இதனால் பாராளுமன்றத்தின் அமர்வில் கலந்து கொள்ளும் 225 உறுப்பினர்களுள் 223 பேர் மாத்திரமே இடம்பெறுகின்றனர்.  
73 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இன்று இடம்பெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இடம்பெறவில்லை. பாராளுமன்ற வரலாற்றில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும். 
நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜெயசேகர மற்றும் விளக்கமறியலில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்... இலங்கை வரலாற்றில் பல்வேறு விஷேட அம்சங்களைக் கொண்ட 9 ஆவது பாராளுமன்றம்... Reviewed by irumbuthirai on August 20, 2020 Rating: 5

புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விபரம் (வர்த்தமானி இணைப்பு)

August 15, 2020

புதிய அரசாங்கத்தில் 12-08-2020 முதல் செல்லுபடியாகும் வகையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இங்கு தருகிறோம். 
அமைச்சரவை அமைச்சர்களின் விபரங்களை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 

இராஜாங்க அமைச்சர்களின் விபரங்களை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விபரம் (வர்த்தமானி இணைப்பு) புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விபரம் (வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on August 15, 2020 Rating: 5

Cabinet & State Ministers (Full Details- Gazette)

August 15, 2020

New government's cabinet ministers and state ministers' full details by Extra ordinary Gazette.
Click the link below for cabinet ministers.


Cabinet ministers
Click the link below for state ministers.
State ministers
Cabinet & State Ministers (Full Details- Gazette) Cabinet & State Ministers (Full Details- Gazette) Reviewed by irumbuthirai on August 15, 2020 Rating: 5

புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

August 10, 2020

புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அதன் கீழ் உள்ளடங்கும் நிறுவனங்கள் போன்ற பல விபரங்களை உள்ளடக்கி வெளியான விஷேட வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Special Gazette
புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) புதிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் தொடர்பான விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on August 10, 2020 Rating: 5

4ஆவது தடவையாக பிரதமரான மஹிந்த

August 10, 2020


இலங்கையின் 14வது பிரதமராக திரு மஹிந்த ராஜபக்ஷ நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். களனி ரஜமஹா விஹாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் திரு மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 
மஹிந்த ராஜபக்ஷ 1970ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகி முதற் தடவையாக பாராளுமன்றதில் பிரவேசித்தார். 1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்ட பின்னர் 14வது பிரதமர் என்ற ரீதியில் நேற்று அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தார். 
தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற உறுப்பினரராகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் மஹிந்த ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். முதல் தடவையாக 2004ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு. மஹிந்த ராஜபக்ஸ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று அமோ வெற்றி பெற்றார்.இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகள் இதுவாகும். 
இரண்டு தடவைகள்; ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2005, 2010ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட் டியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டார். 
2004ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதிவரை முதல் முறையாக இலங்கையின் பிரதமராக செயற்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி மீண்டும் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், அவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதிவரை பிரதமராகவும் செயற்பட்டிருந்தார். 
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமராக திரு.மஹிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார். 
நேற்றைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர், திரு.மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள் பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

4ஆவது தடவையாக பிரதமரான மஹிந்த 4ஆவது தடவையாக பிரதமரான மஹிந்த Reviewed by irumbuthirai on August 10, 2020 Rating: 5

2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

August 10, 2020

2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் பெயர், மாவட்டம், கட்சி அல்லது சுயேட்சைக் குழு என்பவற்றை முழுமையாகப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) 2020 பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on August 10, 2020 Rating: 5

புதிய பாராளுமன்றம் செல்லும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இதோ..

August 08, 2020

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களில், 16 முஸ்லிம்கள், 25 தமிழர்கள் உள்ளிட்ட 41 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். 
தேசிய பட்டியலையும் சேர்த்து அமையவுள்ள பாராளுமன்றத்தில் 20 முஸ்லிம்கள், 26 தமிழர்கள் உள்ளிட்ட மொத்தமாக 46 தமிழ் பேசும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

46 பேரின் விபரம் இதோ.. 

யாழ்ப்பாணம் மாவட்டம் 
1. அங்கஜன் ராமநாதன் - 36,365 (SLFP) 
2. சிவஞானம் ஶ்ரீதரன் - 35,884 (ITAK/TNA) 
3. எம்.ஏ. சுமந்திரன் - 27,834 (ITAK/TNA) 
4. தர்மலிங்கம் சித்தார்த்தன் - 23,840.                        (ITAK/TNA) 
5. டக்ளஸ் தேவானந்தா - 32,146 (EPDP) 
6. கஜேந்திர குமார் பொன்னம்பலம் - 31,658 
    (AITC) 
7. சி.வி. விக்னேஸ்வரன் - 21,554 (TMTK) 

திகாமடுல்ல மாவட்டம் 
8. எச்.எம்.எம். ஹரீஸ் - 36,850 (SJB) 
9. பைஸல் காசிம் -29,423 (SJB) 
10. ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் - 35,697 (NC) 
11. மொஹமட் முஸரப் -18,389 (ACMC) 

வன்னி மாவட்டம் 
12. சார்ள்ஸ் நிர்மலநாதன் - 25,668 (ITAK/TNA) 
13. செல்வம் அடைக்கலநாதன் - 18,563 (ITAK/TNA) 
14. எஸ். யோகராஜலிங்கம் - 15,180 (ITAK/TNA) 
15. குலசிங்கம் திலீபன் - 3,203 (EPDP) 
16. ரிஷாட் பதியுதீன் - 28,203 (SJB) 
17. காதர் மஸ்தான் - 13,454 (SLPP) 

மட்டக்களப்பு மாவட்டம் 
18. சிவனேசத்துரை சந்திரகாந்தன் - 54,198 (TMVP) 
19. சாணக்யா ராஹுல் - 33,332 (ITAK/TNA) 
20. கோவிந்தன் கருணாகரன் - 26, 382 (ITAK/TNA) 
21. எஸ். வியாழேந்திரன் - 22,218 (SLPP) 
22. ஹாபிஸ் நசீர் - 17,599 (SLMC) 

நுவரெலியா மாவட்டம் 
23. ஜீவன் தொண்டமான் - 109,155 (SLPP) 
24. மருதபாண்டி ரமேஸ்வரன் - 57,902 (SLPP) 
25. பி. திகாம்பரம் - 83,392 (SJB) 
26. வீ. இராதாகிருஸ்ணன் - 72,167 (SJB) 
27. எம். உதயகுமார் - 68,119 (SJB) 

திருகோணமலை மாவட்டம் 
28. எம்.எஸ். தௌபீக் - 43,759 (SJB) 
29. இம்ரான் மஹ்ரூப் - 39,029 (SJB) 
30. ஆர். சம்பந்தன் - 21, 422 (ITAK/TNA) 

கண்டி மாவட்டம் 
31. ரஊப் ஹக்கீம் - 83,398 (SJB) 
32. அப்துல் ஹலீம் - 71,063 (SJB) 
33. எம். வேலுகுமார் - 57,445 (SJB) 

கொழும்பு மாவட்டம் 
34. எஸ்.எம். மரிக்கார் - 96,916 (SJB) 
35. முஜிபுர் ரஹ்மான் - 87,589 (SJB) 
36. மனோ கணேஷன் - 62,091 (SJB) 

பதுளை மாவட்டம் 
37. வடிவேல் சுரேஸ் - 49,762 (SJB) 
38. அரவிந்தகுமார் - 45,491 (SJB) 

கேகாலை மாவட்டம் 
39. கபீர் ஹஷீம் - 58,716 (SJB) 

புத்தளம் மாவட்டம் 
40. அப்துல் அலி சப்ரி - 33,509 (MNA) 

அநுராதபுரம் மாவட்டம் 
41. இஷாக் ரஹ்மான் - 49,290 (SJB) 

தேசியப் பட்டியல் (SLPP) 
42. அலி சப்ரி 
43. மொஹமட் முஸம்மில் 
44. மர்ஜான் பளீல் 
45. சுரேன் ராகவன் 

தேசியப் பட்டியல் (SJB) 
46. இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்.
புதிய பாராளுமன்றம் செல்லும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இதோ.. புதிய  பாராளுமன்றம் செல்லும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இதோ.. Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை-மகன் ஜோடிகள்

August 08, 2020


இம்முறை பொதுத் தேர்தலில் தந்தை-மகன் 03 ஜோடிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 
01. மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச. 
02. முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஷஷிந்ர ராஜபக்ச. 
03. முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னக்கோன் ஆகியோர்.

தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை-மகன் ஜோடிகள் தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை-மகன் ஜோடிகள் Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக் கட்சியினர் விபரம்...

August 08, 2020


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் விபரம் 
மைத்திரிபால சிறிசேன - பொலன்நறுவை. 
துமிந்த திஸாநாயக்க - அனுராதபுரம். 
மகிந்த அமரவீர - ஹம்பாந்தோட்டை 
லசந்த அழகியவண்ண - கம்பஹா 
நிமல் சிறிபால டி சில்வா - பதுளை 
சாமர சம்பத் - பதுளை 
தயாசிறி ஜயசேகர - குருணாகல் 
சாந்த பண்டார - குருணாகல். 
ஷான் விஜேலால் - காலி 
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - கேகாலை 
சாரதி துஷ்மான - கேகாலை 
ஜகத் புஷ்பகுமார - மொகராகலை 
காதர் மஸ்தான் - வன்னி 
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியை கைப்பற்றியதுடன் அங்கஜன் ராமநாதன் நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக் கட்சியினர் விபரம்... நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக் கட்சியினர் விபரம்... Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

SLPP தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட 17 பேரின் விபரம்..

August 08, 2020

பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, 
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், 
சாகர காரியவசம், 
அஜித் நிவாட் கப்ரால், 
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, 
ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, 
மஞ்சுள திஸாநாயக்க, 
பேராசிரியர் ரஞ்சித் பண்டார, 
பேராசிரியர் சரித ஹேரத், 
கெவிந்து குமாரதுங்க, 
மொஹமட் முசாமில், 
பேராசிரியர் திஸ்ஸ விதாரன, 
பொறியியலாளர் யாமினி குணவர்தன, 
கலாநிதி சுரேந்திர ராகவன், 
டிரான் அல்விஸ், 
வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல, 
ஜயந்த கெடுகொட, 
மொஹமட் பலீல் மர்ஜான் 
ஆகியவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 
இந்த பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிற்கு SLPP கையளித்துள்ளது.

SLPP தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட 17 பேரின் விபரம்.. SLPP தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட 17 பேரின் விபரம்.. Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர்

August 08, 2020


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப்பட்டியலில் இருந்து கடந்த மாத ஆரம்பத்திலேயே தான் விலகிக் கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், எனது இந்த முடிவை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன். 
கிரிக்கெட் விளையாட்டில் அதிக காலத்தை செலவழித்த நான் இதன் பிறகு எனது குடும்பத்துக்காக காலத்தை செலவழிக்க திட்டமிட்டுள்ளேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது பிரச்சாரத்தை கோத்தாபய ராஜபக்ச அவர்களுக்காக சிறந்தமுறையில் செய்தேன். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாட்டை சிறந்த முறையில் வழிநடத்துவதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட 17 பேர்கள் அடங்கிய தேசிய பட்டியல் உறுப்பினர்களில் திலக்கரட்ன டில்ஷானின் பெயர் அடங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர் தேசியப்பட்டியலிலிருந்து நானே விலகிக் கொண்டேன் - கிரிக்கெட் வீரர் Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள்

August 08, 2020


கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இரு சிறைக் கைதிகள் தெரிவாகியுள்ளனர். 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும் பிள்ளையான் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று சிறையில் இருந்தவாறு தெரிவாகியுள்ளார். 
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின ஆராதனைகளின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பிள்ளையான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
அதேபோன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளார். 
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது கஹவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள் Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

2020 எலக்சன் ஸ்பெஷல்... Election Special ...

August 05, 2020


2020 பொதுத்தேர்தல் தொடர்பாக உள்ள விஷேட அம்சங்களை இங்கு தருகிறோம். 
* Corona பரவலுக்கு மத்தியிலும் 71% வாக்களிப்பு பதிவான தேர்தல். 
* கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தென்னாசியாவில் நடைபெறும் முதலாவது தேர்தல். 
* வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல். 
* அடுத்த நாளே (6) வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும் தேர்தல். 
* சுகாதார ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட தேர்தல். 
* மாலை 5 மணி வரை இடம்பெற்ற தேர்தல். 
* 9 வருடங்களின் பின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வாக்களித்த தேர்தல். 
* மூன்று வாக்காளர்களுக்காக வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்ட தேர்தல். 
* தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பதால் சிலருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படாத தேர்தல்.

2020 எலக்சன் ஸ்பெஷல்... Election Special ... 2020 எலக்சன் ஸ்பெஷல்... Election Special ... Reviewed by irumbuthirai on August 05, 2020 Rating: 5

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்...

August 04, 2020


தற்போது வெளிநாட்டுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டிருப்பதனால் இம்முறை பொதுத் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்குபற்ற மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் தேர்தல் தொடர்பான மதிப்பீடுகளில் ஈடுபடுவார்கள் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண கெட்டியாராச்சி தெரிவித்தார்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்... வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லாத தேர்தல்... Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது!

August 04, 2020


நாளை இடம்பெறும் பொதுத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறும் அதேவேளை பி.ப. 4 மணி முதல் பி.ப. 5 மணி வரையான நேரம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க அவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுகமடைந்து 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே அவர்களுடைய வாகனங்களில் வருகை தந்து இந்த நேரத்திற்குள் வாக்களிக்கலாம் என தெரிவித்தார். 
 இதேவேளை மேற்படி சந்தர்ப்பங்களில் மாத்திரம் சுகாதார அதிகாரி ஒருவர் உதவி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வாக்காளர்களுக்கு விசேட வாக்களிப்பு இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை சுய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். 
தற்போதுள்ள நிலைமையில் இவ்வாறு வாக்களிக்க முடியாதவர்களாக லங்காபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது! தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது! Reviewed by irumbuthirai on August 04, 2020 Rating: 5
Powered by Blogger.