நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள்



கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இரு சிறைக் கைதிகள் தெரிவாகியுள்ளனர். 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று அழைக்கப்படும் பிள்ளையான் அந்த மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று சிறையில் இருந்தவாறு தெரிவாகியுள்ளார். 
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின ஆராதனைகளின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு பிள்ளையான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
அதேபோன்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளார். 
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது கஹவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவான சிறைக்கைதிகள் Reviewed by irumbuthirai on August 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.