நாளை இடம்பெறும் பொதுத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறும் அதேவேளை பி.ப. 4 மணி முதல் பி.ப. 5 மணி வரையான நேரம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க அவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுகமடைந்து 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே அவர்களுடைய வாகனங்களில் வருகை தந்து இந்த நேரத்திற்குள் வாக்களிக்கலாம் என தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி சந்தர்ப்பங்களில் மாத்திரம் சுகாதார அதிகாரி ஒருவர் உதவி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வாக்காளர்களுக்கு விசேட வாக்களிப்பு இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுய தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமையில் இவ்வாறு வாக்களிக்க முடியாதவர்களாக லங்காபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 880 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது!
Reviewed by irumbuthirai
on
August 04, 2020
Rating:
Reviewed by irumbuthirai
on
August 04, 2020
Rating:

No comments: