Results for Local News

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

April 04, 2024


நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறு மற்றும் சாதாரண தர பரீட்சை நடத்துதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்த விடயங்கள் கல்வி அமைச்சினால் ஊடக அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

க.பொ.த. (சா/த) பரீட்சை எதிர்வரும் மே மாத நடுப் பகுதியில் நடத்துவதற்கு பரீட்சை அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அதேவேளை நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சாதாரண தர பரீடசை ஆரம்பமாவதற்கு முன்னர் வெளியிடுவதற்கான முடியுமான சகல முயற்சிகளும் எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அதேபோன்று விடைத்தாள் மதிப்பீட்டாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கமிட்டியின் அறிக்கை கிடைக்க பெற்றுள்ள அதேவேளை  எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதற்குரிய அனுமதியை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

சாதாரண தர மதிப்பீட்டாளர்கள் 35,000 பேர் மற்றும் உயர்தர பரீட்சை மதிப்பீட்டாளர்கள் 19,000 அளவில் இருக்கின்ற அதேவேளை இவர்கள் அனைவருக்கும் பொருத்தமான முறையில் இயலுமானவரை கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, இந்த வருடத்திற்கு சட்டரீதியாக பணம் ஒதுக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி தேர்தலுக்குத்தான். பாராளுமன்ற தேர்தலுக்கு அல்ல என்றார். 

குறித்த ஊடக அறிவித்தலின் சிங்கள வடிவத்தை கீழே காணலாம்.





Previous:
 

உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! உயர்தர பெறுபேறு, சாதாரண தர பரீட்சை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பணவு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on April 04, 2024 Rating: 5

மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு

March 24, 2024


நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 16 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் போஷக்கு உணவு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கும் அதே போன்று 100க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலையின் சகலருக்கும் இந்த உணவு வழங்கப்படும். 

இதற்காக 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு இவ்வாறு காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஷாக்கு மற்றும் சுகாதாரம் என்பவற்றில் உணவு முறையை உயர்மட்டத்தில் பேணுவதற்கும் கல்வி அமைச்சானது அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த உணவு காலை 7:30 முதல் 8:30 வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
 
Previous:

 
மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு மாணவர்களுக்கு நாளை முதல் போஷாக்கு உணவு Reviewed by Irumbu Thirai News on March 24, 2024 Rating: 5

அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு!

March 15, 2024


அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்ப இறுதி தினம் இன்றுடன்(15) நிறைவடைய இருந்தது. ஆனால் அது எதிர்வரும் 22ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டாம் கட்டத்திற்காக சுமார் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இரண்டாம் கட்டத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

Aswesuma விண்ணப்பம் மற்றும் ஏனைய முழு விபரங்களை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



Previous:

அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு! அஸ்வெசும விண்ணப்ப காலம் நீடிப்பு! Reviewed by Irumbu Thirai News on March 15, 2024 Rating: 5

New Electricity Rates with effect from 4-3-2024 midnight

March 04, 2024


New Electricity Tarrif with effect from 4-3-2024 midnight 

4-3-2024 මධ්‍යම රාත්‍රියේ සිට බලපැවැත්වෙන පරිදි නව විදුලි ගාස්තු 

4-3-2024 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய மின் கட்டணங்கள்.
 
 

 


Click the links below for full details in Tamil, English and Sinhala.
 

 
 
 
 
Previous:

New Electricity Rates with effect from 4-3-2024 midnight New Electricity Rates with effect from 4-3-2024 midnight Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight)

March 04, 2024


New fuel prices has been announced.

 

No changes in 92 Octane petrol and auto diesel. 
 
Petrol (95) New price  - 447.00
Super diesel New price - 458.00
Kerosene new price - 257.00





Previous:
 
New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight) New Fuel Prices (Effect from 4-3-2024 Midnight) Reviewed by Irumbu Thirai News on March 04, 2024 Rating: 5

அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை - ஆய்வில் வெளியான தகவல்

February 27, 2024


இலங்கையில் அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை என பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக இன்று வெளியான பத்திரிகை செய்தியை கீழே காணலாம்.



அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை - ஆய்வில் வெளியான தகவல் அரச நிறுவன தொலைபேசிகளில் 71% ஆனவை பதிலளிக்கப்படுவதில்லை - ஆய்வில் வெளியான தகவல் Reviewed by Irumbu Thirai News on February 27, 2024 Rating: 5

Aswesuma New Application - 2024 (Full Details)

February 15, 2024

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம்?
நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board)
 
யார் விண்ணப்பிக்கலாம்? 
அஸ்வெசும முதலாம் கட்டத்தின் போது விண்ணப்பிக்க முடியாது போனவர்கள், நலன்புரி நலன்களுக்கு உரித்து உள்ளதாக உணரும் குடும்பங்கள் அல்லது நபர்கள் மற்றும் 2023 அஸ்வெசும முதலாம் கட்டத்தில் தகவல் கணக்கெடுப்பு செய்யும்போது தகவல் வழங்குவதற்கு இயலாமல் போன குடும்பங்கள் / நபர்கள் இரண்டாம் கட்டத்தின் போது விண்ணப்பம் செய்ய முடியும். 

விண்ணப்பிக்க வேண்டிய முறை யாது? 
Online முறை மூலமோ அல்லது மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குவதன் மூலமோ விண்ணப்பிக்கலாம். 
 
Online விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் (நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளம்)?


விண்ணப்பத்தை எங்கு ஒப்படைக்க வேண்டும்? 
கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

விண்ணப்ப முடிவு திகதி யாது? 
15-03-2024. 

இது தொடர்பான மேலதிக விவரங்களை பெற உடனடி அழைப்பு இலக்கம் யாது? 
1924

Click the link below for online application;


Click the link below for Application download:

 



விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள், விண்ணப்ப படிவம் மற்றும் ஏனைய விபரங்களை ஒரே தளத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (Application and other details)
 
 
 
 
Previous:
 
Aswesuma New Application - 2024 (Full Details) Aswesuma New Application - 2024 (Full Details) Reviewed by Irumbu Thirai News on February 15, 2024 Rating: 5

54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர்

February 14, 2024


அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு காரணமாக 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

ஓய்வு பெற்ற நபர்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிப்பதன் மூலம் அதன் பணி வினைத்திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 

54 அதிபர் நியமனம் தொடர்பாக நாம் 06 மாதங்களாக முயற்சித்து வருகிறோம். ஆனால் பொதுச்சேவை ஆணைக்குழு அதற்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த சுயாதீன ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை அதற்கு நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளேன். நாம் அனுமதி கேட்டு ஆறு மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும் அனுமதி தருகிறோம் என கூறுகின்றனர். ஆனால் அனுமதி தருவதில்லை. இப்படியான சுயாதீன ஆணை குழுக்கள் எவ்வளவு தோல்வியில் இருக்கின்றன என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார். 

இதே வேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார். 

அதாவது, சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும். பிரயோக பரீட்சைகளும் இடம்பெற உள்ளன. இவை அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
 
 
 
Previous:


54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்

February 14, 2024


ஆட்பதிவு திணைக்களமானது தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது சாதாரண தர பரீட்சை 2023 (2024) க்கு தோற்றுவதற்காக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் ஆட்பதிவு திணைக்களத்திற்கு செல்லாமல் Online முறையில் அந்த கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 01-02-2005 முதல் 31-01-2008 வரை பிறந்த குறித்த விண்ணப்பதாரர்களுக்கான தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் தற்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தில் சரியான முகவரியை குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அதை பெறவில்லை என்றாலும் ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு சென்று குறித்த கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர் விண்ணப்ப எண் மற்றும் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும் OTP குறியீட்டு இலக்கத்தை உட்செலுத்தி குறித்து ஆவணத்தை வர்ண அச்சுப் பிரதி (Colour Print) எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 

 

Previous:
 
NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு

February 14, 2024
 

2023 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜாயந்த கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துக்களை தெரிவித்துள்ளார். 
 
அதாவது 2023 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே- ஜூன் மாதங்களில் இடம்பெறும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதே வேளை 2025 ஆம் வருடத்திற்கான புதிய கல்வி ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
Previous:

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்...

February 09, 2024


அஸ்வெசும திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்காக நாளை (10) முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், பயனாளிகளை தெரிவு செய்வதில் கருத்திற் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் குடும்பங்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்திய விதிமுறைகளின் அடிப்படையில் யாராவது இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் போயிருந்தால் அவர்களும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். 4 லட்சம் புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்காகவே நாளை முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
More Details... Hotline: 1924 
 
Aswesuma official website...
 

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலை, இந்த திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா? அதன் விபரம் போன்றவற்றை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தே. அடையாள அட்டை இலக்கம் அல்லது உங்களுக்கான பிரத்தியேக குறியீட்டு இலக்கத்தை வழங்கி விபரங்களை அறிந்துகொள்ளவும்.






Previous:
 

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்... அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்... Reviewed by Irumbu Thirai News on February 09, 2024 Rating: 5

உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்!

January 21, 2024


2023 ற்கான உயர்தர பரீட்சை தற்போது நடைபெறுகிறது. இதில் கணக்கீடு பகுதி - 1 ற்கான பரீட்சையின் போது மாணவர்கள் கணிப்பான்களை பயன்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

காலி பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையம் ஒன்றிலேயே இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

மாணவர்கள் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும்போது பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கணிப்பான்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.. அதன் பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவர்களுக்கு மீண்டும் கணிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான் வகைகளை கொண்டு வந்ததாலேயே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கணிப்பான்களை மீண்டும் வழங்கியதன் பின்னர் மாணவர்களுக்கு மேலதிக நேரம் வழங்கப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே இந்த நிகழ்வினால் தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குறித்த பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
 
 
Previous:



உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! உயர்தர கணக்கீடு பரீட்சையின் போது மாணவர்களுக்கு அநீதி: பெற்றோர் விசனம்! Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல்

January 21, 2024


தற்போதைய நிலையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பலர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகி உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1989 மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். இதில் நுவரெலியா மாவட்டத்தில் 570 மாணவர்களும் கொத்மலையில் 319, கம்பளையில் 250, ஹட்டனில் 541 மாணவர்களும் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகி உள்ளனர். தற்போதைய பொருளாதார நிலை காரணமாக பாடசாலை கல்வியிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவது அதிகரித்த வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் அதிகரித்துவரும் மாணவர் இடைவிலகல் Reviewed by Irumbu Thirai News on January 21, 2024 Rating: 5

சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்!

January 17, 2024


சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்த கூடாது என்று மத்திய மாகாணத்தில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. பெற்றோர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த சுற்றறிக்கையை மீறும் வகையில் சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புக்களை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள், சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக மத்திய மகாண கல்வி அமைச்சு விசேட சுற்றி வளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனையும் நடத்தியது. 

சுற்றி வளைப்பிற்காக அமைக்கப்பட்ட விசேட குழு உரிய இடங்களுக்கு சென்று முறையாக விசாரணைகளையும் மேற்கொண்டது. 

இதன் போது சில ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையிலேயே இவ்வாறு சுற்றறிக்கையை மீறும் வகையில் மேலதிக வகுப்புகளை பணம் வசூலித்து நடாத்திய 51 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous:
 
சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! சுற்றறிக்கையை மீறிய 51 ஆசிரியர்கள் இடமாற்றம்! Reviewed by Irumbu Thirai News on January 17, 2024 Rating: 5

இன்று (ஜனவரி 1) முதல் அமுலாகும் லிட்றோ எரிவாயுவின் புதிய விலைகள்

January 01, 2024


இன்று முதல் அமுலாகும் VAT வரி அதிகரிப்பின் காரணமாக லிட்றோ எரிவாயு நிறுவனமும் அதன் விலைகளை அதிகரித்துள்ளது. 

புதிய விலை விபரங்கள் இதோ! 

12.5kg LP gas: 
அதிகரிப்பு– Rs. 685 
புதிய விலை – Rs. 4,250 

5kg LP gas: 
அதிகரிப்பு – Rs. 276 
புதிய விலை – Rs. 1,707 

2.3kg LP gas: 
அதிகரிப்பு – Rs. 127 
புதிய விலை– Rs. 795
இன்று (ஜனவரி 1) முதல் அமுலாகும் லிட்றோ எரிவாயுவின் புதிய விலைகள் இன்று (ஜனவரி 1) முதல் அமுலாகும் லிட்றோ எரிவாயுவின் புதிய விலைகள் Reviewed by Irumbu Thirai News on January 01, 2024 Rating: 5

உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறாது - கல்வி அமைச்சர்

September 21, 2023


இந்த வருடத்திற்கான (2023) உயர்தரப் பரீட்சையின் திருத்தப்பட்ட திகதிகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பதால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், 

2024 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சாதரண தரப் பரீட்சையை 2024 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒத்திவைக்க நேரிடும். 

2023 ஆம் ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் பெறபேறுகள் 2024 ஜூலை இல் வெளியிடப்பட்டால். ஜூலை இல் பெறுபேறுகள் வெளியான பிறகு, 2024 ஆம் ஆண்டுக்கான உயர் பரீட்சைக்குத் தோற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இது போன்ற கூடுதல் காலம் வழங்கப்பட வேண்டும். அப்படியானால், 2024 உயர் தரப் பரீட்சையை 2024 டிசம்பர் அல்லது 2025 ஜனவரி வரை தாமதமாகும். அதற்கேற்ப, தற்போதைய கல்விமுறையின் பின்தங்கிய நிலையை சரிசெய்வது மேலும் தாமதமாகும். 

பாடசாலை பரீட்சைகள் மாற்றப்பட்டால் பாடசாலை அட்டவணைகளும் தாமதப்படுத்தப்படலாம். 

அதன்படி, முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது காலதாமதமாகலாம். 

உயர் தர பரீட்சை தாமதமாவதால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் இரண்டு குழுக்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டி வரும். இதனால் வகுப்பறைகளில் இடப் பிரச்சினைகள் ஏற்படும். 

அத்துடன் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதால் பல்கலைக்கழக அனுமதியும் தாமதமாகிறது என்றார்.
Source: adaderana.


Previous:

உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறாது - கல்வி அமைச்சர் உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் நடைபெறாது - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on September 21, 2023 Rating: 5

அதிபர் ஒருவருக்கு 7 வருட சிறை! நீதிமன்றத்தின் அதிரடி!

September 12, 2023


பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். “தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது அதிகரித்து வரும் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.” என்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பில் கோடிட்டு காட்டினார். 

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 வயது மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார். மன்னார் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்க முறையற்ற விசாரணைகளின் பின் சட்ட மா அதிபரினால் மன்னார் மேல் நீதிமன்றில் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்ற நிலையில் நேற்று (11) வழக்கு தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது. 

எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிகழ்வு – நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி எனக் கண்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

அதன்படி, நீதிபதி தனது தீர்ப்பில், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது, செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்றும் மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்குத் தொடுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி செஸான் மஹ்பூம் வழக்கை நெறிப்படுத்தினார்.
Source: adaderana.
அதிபர் ஒருவருக்கு 7 வருட சிறை! நீதிமன்றத்தின் அதிரடி! அதிபர் ஒருவருக்கு 7 வருட சிறை! நீதிமன்றத்தின் அதிரடி! Reviewed by Irumbu Thirai News on September 12, 2023 Rating: 5

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர்

September 01, 2023


மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் விபரங்களைக் கோரிய பாடசாலை அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி கோட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ தலைவியிடம் அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் தகவல் கோரியதாக கல்முனை பிராந்திய மனித உரிமை காரியாலயத்தில் 23.08.2023 முறையிடப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டினை மாணவ தலைவி உள்ளிட்ட பெற்றோர்கள் மேற்கொண்டுள்ளதுடன் பாடசாலை அதிபருக்கு இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கமைய குறித்த விசாரணையில் பாடசாலை அதிபர் குறித்த மாணவ தலைவியை தனது அறைக்குள் அழைத்து மாணவிகளின் வரவு வீதம் குறைவாக உள்ளதாகவும் இதற்கு காரணம் மாதவிடாய் என தான் அறிவதாகவும் எனவே ஒரு கொப்பியில் தினமும் மாதவிடாய் எந்த மாணவர்களுக்கு ஏற்படுகின்றது, எத்தனை நாட்களின் பின்னர் மாதவிடாய் நிறைவடைகின்றது. மாதவிடாய் காரணமாக தான் மாணவர்கள் பாடசாலைக்கு இடைநடுவில் செல்கின்றார்களா? அல்லது பாடசாலைக்கு ஏன் சமூகமளிக்கவில்லை? என வினவி உரிய மாணவர்களின் தகவலுடன் தன்னை தினமும் சந்தித்து கூற வேண்டும் என அதிபர் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக அப்பாடசாலையில் உள்ள சில மாணவர்கள், ஆசிரியர்களிடமும் எதிர்வரும் சில தினங்களளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Source: adaderana.



Previous:

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர் மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் விசாரித்த அதிபர் Reviewed by Irumbu Thirai News on September 01, 2023 Rating: 5

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை..

August 31, 2023


பாடசாலை நடைபெறும் நேரத்தை காலை 8 மணியிலிருந்து பி.ப. 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் ரொசான் ரணசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கிலேயை இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை.. Reviewed by Irumbu Thirai News on August 31, 2023 Rating: 5

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

August 30, 2023


வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

வட மாகாணத்தில் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் இல்லாமல் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வருகின்றனர். அண்மையில் குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமக்கான நிரந்தர நியமத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர். 

அதுதொடர்பாக ஆராயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் இது தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்திய நிலையில், அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: adaderana.


தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் Reviewed by Irumbu Thirai News on August 30, 2023 Rating: 5
Powered by Blogger.