அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்...அஸ்வெசும திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்காக நாளை (10) முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 
 
பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், பயனாளிகளை தெரிவு செய்வதில் கருத்திற் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் குடும்பங்களை தேர்ந்தெடுக்க பயன்படுத்திய விதிமுறைகளின் அடிப்படையில் யாராவது இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் போயிருந்தால் அவர்களும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். 4 லட்சம் புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்காகவே நாளை முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
More Details... Hotline: 1924 
 
Aswesuma official website...
 

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் உங்கள் விண்ணப்பத்தின் நிலை, இந்த திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா? அதன் விபரம் போன்றவற்றை அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தே. அடையாள அட்டை இலக்கம் அல்லது உங்களுக்கான பிரத்தியேக குறியீட்டு இலக்கத்தை வழங்கி விபரங்களை அறிந்துகொள்ளவும்.


Previous:
 

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்... அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் நாளை முதல்... Reviewed by Irumbu Thirai News on February 09, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.