Results for Technology

Mobile App for Teachers

February 08, 2024

 
NEMIS – THRM App இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் (National Education Management System - NEMIS) கீழ் ஆசிரியர் மனித வள முகாமைத்துவ (Teacher Human Resource Management - THRM) அமைப்பு என பெயரிடப்பட்ட தகவல் அமைப்பை அமைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
அரசாங்கப் பாடசாலைகள், விசேட கல்விப் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் இலங்கை ஆசிரியர்களுக்கு சேவையை வழங்குவதே இந்த முறைமையாகும். 
 
ஒவ்வொரு ஆசிரியரின் தரவு உள்ளீடு ஆசிரியர்களின் தனிப்பட்ட கோப்புகளின் தகவல்களின் அடிப்படையில் ஆசிரியர் பணியாற்றும் அந்தந்த வலயக் கல்வி அலுவலகத்தால் செய்யப்படுகிறது. பணியாளர் தர அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், வலயங்களில் உள்ள ஆசிரியர்களின் தனிப்பட்ட கோப்புகளை கையாளும் அந்தந்த அதிகாரிகளால் பதிவேற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தரவாகும். 
 
பயன்பாட்டில் காட்டப்பட்டுள்ள எந்த தகவலும் துல்லியமாக இல்லாவிட்டால் அல்லது புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தால், இந்த பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலில் உள்ள விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த வலய NEMIS ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொள்ளவும். கணினியில் புதுப்பித்த தகவலை வைத்திருப்பதும் ஆசிரியரின் பொறுப்பாகும்.

Click the link below for App.
 
 
 
Previous:

Mobile App for Teachers Mobile App for Teachers Reviewed by Irumbu Thirai News on February 08, 2024 Rating: 5

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple!

January 18, 2024


உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளரான Samsung நிறுவனத்தை Apple பின்னுக்குத் தள்ளியுள்ளது. 

அமெரிக்காவின் iPhone அதன் தென் கொரிய போட்டியாளரான Samsung இன் 12 வருட சாதனையை முறியடித்து உலகில் அதிக விற்பனையாகும் Smart Phone என்ற நாமத்தை பெற்றுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் தரவுகளின்படி, தென் கொரிய நிறுவனத்தின் 226.6 மில்லியன் யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஐபோன் 2023 இல் 234.6 மில்லியன் யூனிட்டுகளுடன் முன்னணியில் காணப்படுகிறது. 

Samsung  19.4% சந்தைப் பங்கையும் iPhone 20.1% சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது என்று IDC தெரிவித்துள்ளது. 

Samsung இன் அண்மைய வெளியீடுகள் தொடர்பான அறிமுகத்திற்கு முன்னரே இந்த தரவுகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
 
 
Previous:

Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Samsung இன் 12 வருட ஒட்டத்தை பின் தள்ளிய Apple! Reviewed by Irumbu Thirai News on January 18, 2024 Rating: 5

சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்!

August 23, 2023


சந்திராயன் - 3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது இந்தியா. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) 40 நாட்கள் பயணத்தின் பின்னர் மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதையடுத்து விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 க்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது 

சந்திராயன்-3 ஆனது தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமையின் ஊடாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர், நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்த உலகின் 4வது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. 

தென் துருவத்தை தொட்ட முதல் நாடு:
நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொதுமக்களுக்காக இஸ்ரோவின் உத்தியோகபூர்வ YOUTUBE தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.  

சந்திரயான் 3 கடந்து வந்த பாதை
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் 386 கோடி இந்திய ரூபா செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் - 2 திட்டத்திற்கு 978 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு 615 கோடி இந்திய ரூபா. 

சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு LVM3 M4 ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

பின்னர், சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயரத்தை உயர்த்தும் (Orbit Raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது. புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 

 ஆகஸ்ட் 17 ஆம் திகதி சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. 

 ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியது 


 விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யப் போகிறது? 
 நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கி, அங்கு சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யவுள்ளது. 

 நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, அங்குள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பம் தாங்கும் தன்மை கொண்டதா போன்ற பல தரவுகளை சந்திரயான்-3 கண்டறியவுள்ளது. 

 தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. 

 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதன் உள்ளே இருக்கும் ரோவர் (Rover) எனப்படும் ஊர்திக்கலன் வெளியே வரும். 

இந்த ஊர்திக்கலன் நிலவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவிற்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்பும்.
Source: newsfirst.
சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்! Reviewed by Irumbu Thirai News on August 23, 2023 Rating: 5

குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App)

September 15, 2022

உலக நாடுகளை பாதித்து வரும் கொரோனா(Covid-19) நோய்த் தொற்றை எளிமையாக கண்டறிய தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 
 
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் செயல்படும் இந்த செயலியானது நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது குறித்த நபருடைய மருத்துவ குணங்கள், அவரது புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை அதில் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் அதில் பதிவு செய்ய வேண்டும். 

அதன்படி 03 முறை இருமல், 03 - 05 முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை 03 முறை வாசிப்பது என்பன இதில் அடங்கும். 

இந்த விடயங்களைக் கொண்டு குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 

இந்த செயலியானது 89% அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், ஏனைய பரிசோதனை முறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) குரல் பதிவைக் கொண்டு கொரோனாவை கண்டறியும் செயலி (App) Reviewed by Irumbu Thirai News on September 15, 2022 Rating: 5

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!

November 03, 2021

பேஸ்புக்கானது அதன் கூட்டு நிறுவனத்தின் பெயரை META என்று அண்மையில் மாற்றியது. தற்போது பேஸ்புக்கில் மற்றுமொரு மாற்றம் இடம்பெற்றுள்ளது. 
 
அதாவது  பேஸ்புக்கில் உள்ள Facial Recognition என்ற வசதியை தடை செய்வதற்கு META நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

META வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FB யில் உள்ள Facial Recognition தொழில்நுட்பம் காரணமாக பயனர்களின் பிரத்தியேக பாதுகாப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததோடு குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டிருந்தன.   

எனவே குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த வசதி நீக்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்!  ஃபேஸ்புக்கில் இடம்பெற்ற மற்றுமொரு மாற்றம்! Reviewed by Irumbu Thirai News on November 03, 2021 Rating: 5

நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021

October 10, 2021
 

தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நாடளாவிய சேவைகளிலுள்ள உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகளை மிகவும் சரியாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்காக புதிய இணையவழி தகவல் தொழில்நுட்ப தொகுதி (Online IT system) ஒன்றை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 
 
இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகளுக்கான இணைய வழித் தகவல் தொழில்நுட்ப முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 
 
இதுதொடர்பாக 2021-10-07 திகதி இடப்பட்டு அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலை கீழே காணலாம்.

நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021 நாடளாவிய சேவை உத்தியோகத்தர்களுக்கான இணைய வழி தகவல் தொழில்நுட்பத் தளம் (Online IT system) ஒன்றை அறிமுகப்படுத்தல் - 2021 Reviewed by Irumbu Thirai News on October 10, 2021 Rating: 5

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்...

September 27, 2021
 

கூகுள் தொடங்கி இன்றுடன்(27/9/2021) 23 வருடங்களாகின்றன. எனவே இதை முன்னிட்டு கூகுள் தொடர்பாக 23 சுவாரஸ்ய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். 

(1) அதிகம் தேடப்படும் மற்றும் பார்க்கப்படும் இணையதளம் இதுவாகும். 
 
(2) கல்லூரி மாணவர்கள் இருவரால் உருவாக்கப்பட்டதே Google. லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்பவர்களாலேயே உருவாக்கப்பட்டது. இணையதளங்களை தரவரிசைப்படுத்தும் ஓர் தளமாகவே இதை உருவாக்க விரும்பினர். அதாவது ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் இணைப்பை எத்தனை இணைய தளங்கள் பகிர்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை உருவாக்கப்பட்டது. 
 
(3) Google என்ற சொல் கூகொல் (Googol) என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூச்சியங்களைப் போடுவதால் வரும் எண்ணைக் குறிக்கவே இந்த கூகொல் என்ற சொல் பயன்படுகிறது. எவ்வளவு தகவல்களை இதில் தேட விரும்புகிறோம் என்பதை குறிக்கவே இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர். 
 
(4) 1998 இல் முதல் கூகுள் டூடுல் உருவாக்கப்பட்டது.'burning man' என்ற நிகழ்வுக்காக இது உருவாக்கப்பட்டது. 
 
(5) முதல் வீடியோ டூடுல் ஜோன் லெனனின் 70 வது பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டது. 
 
(6) கூகுளின் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் அமைந்துள்ளது. இந்த தலைமை அலுவலகம் கூகுள் ப்ளக்ஸ் என அழைக்கப்படுகிறது. 

(7) தலைமை அலுவலகத்தில் டி-ரெக்ஸ் டைனோசரின் பெரிய சிலை காணப்படுகிறது. இந்த சிலை அடிக்கடி பிளமிங்கோ பறவையால் முழுமையாக மறைக்கப்படும். கூகுள் எப்போதுமே அழிந்து விடக்கூடாது என்பதை ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்படுவதாக ஒரு வதந்தி இருக்கிறது. 
 
(8) கூகுளின் முதல் சேர்வர் (Server) லெகோ என்ற பிளாஸ்டிக் பொம்மை பாகங்களால் தயாரிக்கப்பட்ட பெட்டியில் தான் அமைந்திருந்தது. 

(9) கூகுளின் தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்குள்ள புற்களை சீர் செய்வதற்கு ஊழியர்களுக்கு பதிலாக ஆடுகளே இருக்கும். 
 
(10) தமது செல்லப் பிராணியான நாய்களை கொண்டு வருவதற்கு Google இன் ஊழியர்களுக்கு அனுமதி உண்டு. 
 
(11) கூகுளில் இமேஜ் தேடுதல் முறை 2001 இல் ஆரம்பிக்கப்பட்டது. 
 
(12) Google தனது இமெயில் சேவையை Gmail என்ற பெயரில் 1-4-2004 இல் ஆரம்பித்தது. 
(13) கூகுள் என்ற வார்த்தை 2006 இல் முதன்முதல் அகராதியில் சேர்க்கப்பட்டது. அதன் பொருளாக "கூகுளை பயன்படுத்தி தகவலைத் தேடிப் பெறுதல்" என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
(14) 2006இல் 1.5 பில்லியன் டொலருக்கு யூடியூப் ஐ கூகுள் வாங்கியது. தற்போது இதில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 400 மணித்தியால அளவிற்கு வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. 
 
(15) ஒவ்வொரு நாளும் வேறு எதிலும் தேவைப்படாத 15%மான தேடல்கள் கூகுளில் மாத்திரமே தேடப்படுகின்றன. 
 
(16) 2018 ஏப்ரல் தொடக்கம் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மட்டும் பயன்படுத்தும் நிறுவனமாக கூகுள் மாறியது. அதாவது 1KW மின்சாரத்தை பயன்படுத்தினால் அது முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும். 
 
(17) கூகுளிற்கு 6 பிறந்த நாட்கள். ஆனால் செப்டம்பர் 27 ஐயே இது தேர்ந்தெடுத்தது. 
 
(18) கூகுள் ஹோம் பேஜ் (Home Page) குறைந்தபட்சம் 80 மொழிகளில் வழங்கப்படுகின்றது. 

(19) நமது தேடலின் முடிவை தருவதற்கான Google இன் கணிப்பு ஆற்றலின் அளவு அப்பலோ 11 விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை நிலவிற்கு அனுப்புவதற்கு தேவைப்பட்ட கணிப்பு ஆற்றலின் அளவுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
(20) கூகுளை உருவாக்கியவர்களில் ஒருவரான லாரி, 1995இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபோது, அவருக்கு அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி காட்டுவதற்காக செர்கே கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் இருவரும் நண்பர்களாகி "Backrub" என்ற தேடுபொறியை உருவாக்கினர். பின்னர் Backrub - Googol என மாற்றினர். (Googol என்பது 1 ஐ தொடர்ந்து 100 பூச்சியங்கள் இருப்பதற்கு கணிதத்தில் பயன்படுத்தப்படும் சொல்). ஆனால் நடந்தது என்னவென்றால் லாரி பேஜ் அதன் எழுத்தை தவறாக எழுதியதால் உருவானதே கூகுள் (Google). பின்நாளில் அதையே பெயராக வைத்துவிட்டனர். 
 
(21) கூகுள் நிவ்ஸ் செப்டம்பர் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. 

(22) கூகுள் அனலிட்டிக்ஸ் நவம்பர் 2005 இல் தொடங்கப்பட்டது, இது வலைத்தள ட்ராஃபிக்கை (Website Traffic)  கண்காணித்து அறிக்கை செய்கிறது.
 
(23) Google தற்போது வெறுமனே ஒரு தேடுபொறியாக மட்டும் கருதப்படுவதில்லை. செயற்கை நுண்ணறிவு, ஓட்டுனர்கள் இல்லாத கார்கள், புதிய விளையாட்டு தளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய எதிர்கால வளர்ச்சியின் உதாரணமாகவே கருதப்படுகிறது. 

இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... இன்றுடன் Google ற்கு 23 வயது: Google பற்றி 23 சுவாரஸ்ய தகவல்கள்... Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

September 20, 2021
 

தற்போதைய டிஜிட்டல் பொருளாதார உலகில் தரவுகள் என்பது முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகிறது. ஒவ்வொருவரினதும் இப்படிப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெரிய சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது. 
 
எனவே பொருளாதார கருமங்களுக்கு இப்படிப்பட்ட சகல தரவுகள், தகவல்கள் முக்கியமாக தேவைப்படுவதால் தற்போது இது தகவல் பொருளாதாரம் என்ற அடிப்படையில் செயல்படுகிறது. 
 
 
எது தனிப்பட்ட தரவுகள்? 

நாம் எந்த இணையத்தளத்திற்கு சென்றாலும் எம்மைப் பற்றி ஏதோ ஒரு சில தரவுகளை அவை பெற்றுக் கொள்கின்றன. சில தளங்கள் நாம் எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிக்கிறோம்? எந்த நேரத்தில் இணையத்தை பயன்படுத்துகிறோம்? எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறோம்? என்ற பொதுவான விடயங்களை பெற்றுக் கொள்கின்றன. 
 
இன்னும் சில இணையதளங்கள் இதற்கு மேலதிகமாக எமது பெயர், முகவரி, வயது, இமெயில், தொலைபேசி இலக்கம் போன்ற விடயங்களையும் பெற்றுக் கொள்கின்றன. 
 
பொதுவான தரவுகளை பெற்றுக்கொள்வது பிரச்சினை அல்ல. ஆனால் குறித்த தரவுகளை வைத்து நபர் யார் என்பதை அடையாளம் காண முடியும் என்றால் அவை தனிப்பட்ட தரவுகளாக கருதப்படும். இவ்வாறான தகவல்களை பெறுவது தனிநபர் உரிமை மீறலாகும். 
 
 
கவனமாக இருப்பது எப்படி? 
மிக முக்கியமான விடயம் என்னவென்றால் தேவைக்கு அதிகமான தகவல்களை வழங்க கூடாது. இதனால் இரு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று, எம்மைப் பற்றிய அதிக தகவல்கள் மூன்றாம் நபருக்கு செல்கின்றன. மற்றையது, எம்மை அவர்களது தளத்தில் அதிக நேரம் செலவழிக்க வைப்பதற்கான வாய்ப்பை நாமே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். உதாரணமாக, குறித்த தளம் ஒன்றில் மின்னஞ்சல் முகவரி கேட்கப்படாவிட்டால் நாம் அதை வழங்கக்கூடாது. ஆனால் கட்டாயம் மின்னஞ்சல் வழங்க வேண்டுமென்றால் 

இப்படிப்பட்ட பொதுவான விடயங்களுக்காக வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தனிப்பட்ட எமது மின்னஞ்சல் முகவரியை வழங்கக்கூடாது. எனவே பொதுவான விடையங்களுக்கு ஒன்றும் தனிப்பட்ட விடயங்களுக்கு ஒன்றும் என குறைந்தது இரு மின்னஞ்சல் முகவரிகளை பேணுவது சிறந்தது. 
 
 
VPN பாவிப்பவர்கள் நினைப்பதுண்டு எம்மைப் பற்றிய தரவுகளை வலைத்தளங்களுக்கு பெறமுடியாது என்று. ஆனால் உண்மை அதுவல்ல. நாம் விபிஎன் பாவிக்கும் போது எமக்கு இணைய சேவை வசதி வழங்கும் நிறுவனங்களுக்குதான் அது தெரியாமல் போகும். ஆனால் நாம் செல்லும் வலைத்தளங்கள் எமது தரவுகளை பெற்றுக் கொள்கின்றன. எனவே விபிஎன் பயன்படுத்தும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். 
 
 
சில மென்பொருள்கள் அல்லது செயலிகளை நாம் குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கென தற்காலிகமான தரவுகளை மட்டும் நாம் வழங்குவது போதுமாகும். 
 
சமூக ஊடக மென்பொருள் அல்லது செயலிகளை பதிவிறக்கம்(Download) செய்யும் போது நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
 
 
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது மிகக்கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் எமது தனிப்பட்ட தரவுகளை அதில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். 
 
 
ஒரு மென்பொருள் அல்லது செயலியை நாம் பயன்படுத்த விரும்பினால் அது தொடர்பான தனிநபர் கொள்கை (Privacy Policy) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (Terms and Conditions) மூன்றாம் தரப்பு மதிப்பாய்வு (Review) போன்றவற்றை அவசியம் பரிசோதித்தே முடிவெடுக்க வேண்டும். 
 
 
எமது தரவுகளை வழங்குவதால் என்ன நேர்ந்து விடப்போகிறது என்ற அலட்சியத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வணிகர்களால் தகவலாகவும் பயன்படுத்தப்படலாம். தவறாகவும் பயன்படுத்தப்படலாம். எமது தனிநபர் உரிமை குறித்து முதலில் நாமே கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் திருடப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? Reviewed by Irumbu Thirai News on September 20, 2021 Rating: 5

இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு)

August 02, 2021

அரசின் சௌபாக்கிய திட்டத்தின் மூலம் வினைத்திறனான மக்கள் சேவையை வழங்கும் முகமாக இன்று(2) முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை நிகழ்நிலை (Online) முறையில் பெற்றுக் கொள்ளும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தங்களது கையடக்கத் தொலைபேசி அல்லது கணினி மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பித்ததன் பின்னர் கட்டணங்களை செலுத்துவதற்கான இணைப்பு பயனாளரின் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

கடன் அட்டை அல்லது வரவு அட்டையைப் பயன்படுத்தி உரிய கட்டணத்தை செலுத்தலாம். 

விண்ணப்பித்த சான்றிதழின் பிரதியை விரைவு தபால் (Speed Post) மூலம் வீட்டுக்கு வரவழைத்துக் கொள்ளலாம். அல்லது அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 

மேலதிக விபரங்களுக்கு: 

விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) இன்று முதல் ஆரம்பம்: பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் விரைவாகப் பெற புதிய முறை! (விளக்கமும் லிங்கும் இணைப்பு) Reviewed by irumbuthirai on August 02, 2021 Rating: 5

பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு)

May 25, 2021

According to the increasing population and the number of vehicles, it is impossible to deploy large police forces to reduce the violations to the traffic law. Therefore, an official app is a timely requirement so that police can enforce the general. 
Also, this can act as an empowerment tool. At the moment, many people share traffic violations videos via social media and personal groups unofficially. This should not happen like this. This should be available for everyone to use at any time. 
These actions conclude that there is a need in the community for official reporting mechanisms so that they can make roads a safer place for all of us. So that, our proposed application enables the general public to report traffic violations or traffic obedience cases along with media evidence and its location. 

சனத்தொகையும் வாகனங்களும் அதிகரிப்பதற்கு ஏற்ப இடம்பெறும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை குறைப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள தற்போது அவசியமில்லை. அது சாத்தியமும் இல்லை. 
இதற்காக போலீஸ் திணைக்களம் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றை (Mobile App.) வெளியிட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் தொடர்பாக பொதுமக்கள் இந்த App மூலம் முறைப்பாடு செய்யலாம். 
இந்த முறைப்பாடுகள் அதே நேரத்திலேயே போலீஸ் தலைமையகத்திற்கு சென்றடைகின்றன. 
வீடியோ படங்கள் என்பவற்றுடன் Location வசதி காணப்படுவதனால் குறித்த இடத்தையும் சேர்த்து முறைப்பாட்டில் தெரிவிக்கலாம். 
இதன் காரணமாக, போக்குவரத்து குற்றங்களை புரிந்துவிட்டு தப்பிப்பதோ அல்லது போலீசாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிப்பதோ முடியாமல் போகிறது. 
குறித்த செயலியை (App) உங்கள் கையடக்க தொலைபேசிக்கு Download செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு) பொலிஸ் திணைக்களத்தின் புதிய Mobile App: வீடியோ மற்றும் படங்களுடன் முறைப்பாடு செய்யலாம்: (App. Download செய்யும் வசதி இணைப்பு) Reviewed by irumbuthirai on May 25, 2021 Rating: 5

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள்

May 18, 2021

இலங்கையில் அரச இணைய தளங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 
அந்த வகையில் மின்சக்தி அமைச்சு, சுகாதார அமைச்சு, ரஜரட்டை பல்கலைக்கழகம் மற்றும் சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுருவப்பட்டுள்ளதாக Sri Lanka Computer Emergency Response Team (SLCERT) அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச இணையதளங்கள் Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை

May 16, 2021

உலகில் இதுவரை காலமும் அமெரிக்காவே செவ்வாய் கிரகத்தில் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தது. 
அந்த வகையில் தற்போது சீனாவும் Zhurong என்ற ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளது. நேற்று (15) அதிகாலை இந்த விண்கலம் இவ்வாறு தரையிறங்கியதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. 
2020 ஜூலை மாதம் சீனா அனுப்பிய Tianwen-1 என்ற விண்கல திட்டத்தின் Zhurong என்ற ரோவர் கடந்த பெப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதற்கு 6 சக்கரங்கள். இந்த விண்கலத்தின் மொத்த எடை 240Kg ஆகும். 
செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் இதில் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி செவ்வாய் கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்தும் இந்த விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை அமெரிக்காவுக்கு இணையாக செவ்வாய் கிரகத்தில் சீனாவின் சாதனை Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா?

April 11, 2021

அதிகமாக ஸ்மார்ட் போன்களை பாவிப்பது பல்வேறு நீண்ட நாள் நோய்களுக்கு வழிவகுக்கும் என குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய், ஆண்மை குறைவு ஏற்படுத்தல், மூளை தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய், குழந்தைகளில் கவனம் குறைதல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். எனவே இதை முறையாக அளவோடு பாவிக்க பழகிக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? எச்சரிக்கை! ஸ்மார்ட் போன்களால் இவ்வளவு ஆபத்தா? Reviewed by irumbuthirai on April 11, 2021 Rating: 5

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக புதிய முறையில் வெளியிடப்பட்ட முத்திரை

March 17, 2021

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக டிஜிட்டல் முறையில் அதாவது QR குறியீட்டுடனான முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று (16) ஊடக அமைச்சில் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இடம்பெற்றது. 
 இதற்கமைவாக 25 ரூபா பெறுமதியுடைய முத்திரையொன்று QR குறியீட்டுடன் நேற்று வெளியிடப்பட்டது. இந்த QR குறியீட்டு முத்திரை தொடர்பாக 
மேலதிக தகவல்களை பெறுவதற்கு அதன் QR குறியீட்டை ஸ்கேன் செய்து முத்திரை திணைக்களத்தின் இலங்கை தபால் இணையதளத்திற்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். 
இதேவேளை பாதுகாப்பு அடையாளத்துடன் கூடிய ரூ. 500 பெறுமதியுள்ள புதிய தபால் முத்திரையொன்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் தலைமையில் இங்கு வெளியிடப்பட்டது. இந்த முத்திரையில் ஒரு பாதுகாப்பு குறியீடு மறைந்திருப்பதாகவும், எவரேனும் ஒருவர் அதனை முறைகேடாக பயன்படுத்துபவார்களாயின் அது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க இதன்போது தெரிவித்தார். 


எமது நாட்டு வரலாற்றில் முதலாவது முத்திரை 1857ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை தபால் திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏராளமான நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக புதிய முறையில் வெளியிடப்பட்ட முத்திரை இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக புதிய முறையில் வெளியிடப்பட்ட முத்திரை Reviewed by irumbuthirai on March 17, 2021 Rating: 5

வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்...

January 12, 2021

உலகளாவிய ரீதியில் டெலிகிராம் (Telegram) செயலியை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அந்த செயலி உத்தியோகபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. 
இன்றைய தினத்தில் உள்ள தரவுகளின்படி அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை 
500 மில்லியனைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் புதிதாக 25 மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 அண்மையில் வாட்ஸ் அப் செயலி வெளியிட்ட புதிய நிபந்தனைகள் காரணமாக பாவனையாளர்கள் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி பல்வேறு தளங்களுக்கு வழங்கப்படலாம் என்று பரவலாக பேசப்படும் இந்த நிலையில் Telegram பாவனையாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்... வேகமாக அதிகரிக்கும் Telegram பாவனையாளர்கள் ... வெளியான தகவல்... Reviewed by irumbuthirai on January 12, 2021 Rating: 5

வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை:

January 10, 2021

வட்ஸ்அப் (WhatsApp) சமூக வலைத்தளம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகளினால் பாவனையாளர்கள் பாரிய அளவிலான அதிர்ச்சி, அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
புதிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பாவனையாளர்களின் 
தகவல்கள், தொலைபேசி இலக்கம், அவர்கள் செல்லும் இடங்கள் என்பன பற்றிய தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி, பெற்றுக் கொள்ள வட்ஸ்எப் ற்கு முடியும். அதேவேளை
பாவனையாளர்களின் சகல தகவல்களையும் ஏனைய நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு வட்ஸ்அப் நிறுவனத்திற்கு கிடைக்கும். 
இந்த நிலையில்  WhatsAppன் இந்த புதிய நிபந்தனைகள் காரணமாக 
டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 தற்போதைய நிலையில் உலகின் முதலாவது பணக்காரராக இருக்கும் எலன் மஸ்க் போன்றவர்கள் வட்ஸ் அப் சமூக வலைத்தளத்திற்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை: வட்ஸ்அப்பின் (WhatsApp) புதிய நிபந்தனைகள்: மாற்று வழியை தேடும் மக்கள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரின் பரிந்துரை: Reviewed by irumbuthirai on January 10, 2021 Rating: 5

காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்...

January 08, 2021

இலத்திரனியல் முறையில் காணி பதிவு செய்யும் முறைமை (e-Land Registry system) கொழும்பில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
தற்போது மூன்று அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் அடுத்த 06 மாதங்களில் 
அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது. 
 இந்த ஆண்டு இறுதிக்குள் 45 நில பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறைமையை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... காணிகளை இலத்திரனியல் முறையில் பதிவு செய்யும் முறைமை ஆரம்பம்... Reviewed by irumbuthirai on January 08, 2021 Rating: 5

சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை..

December 22, 2020

ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தெரிவித்த கருத்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 
அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே கூறப்பட்டது. மாறாக இங்குள்ள சமூக ஊடக மற்றும் டிஜிட்டல் பாவனையாளர்களை பதிவு செய்வதாக கூறப் படவில்லை. 
இந்த Digital  பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை 
பெரிதும் பாதிப்பதாகவும் நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிப்பதாகவும் அமைகிறது. அதேவேளை இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெருந்தொகையான பணம் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. சமூக ஊடக பாவனையாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டுமா? அமைச்சர் கெஹெலிய வெளியிட்ட அறிக்கை.. Reviewed by irumbuthirai on December 22, 2020 Rating: 5

இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்...

September 10, 2020

இலத்திரனியல் கழிவுகளை தபால் நிலையங்கள் மூலமாக சேர்க்கவும் தபால்காரர்களைக் கொண்டு இத்திட்டத்தை செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். சமரசிங்க தெரிவித்துள்ளார். 
ஒன்றுசேர்க்கப்படும் இலத்திரனியல் கழிவுகளை வெளிநாட்டுக்கு அனுப்ப இருப்பதாகும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்... இலத்திரனியல் கழிவுகளை சேர்க்க தபால்காரர்கள்... Reviewed by irumbuthirai on September 10, 2020 Rating: 5

பஸ் பயணிகளுக்கான App இன்று முதல்..

July 07, 2020


பஸ் பயணம் தொடர்பான பல்வேறு விபரங்களை அறிந்து கொள்வதற்காக பயணிகளுக்கான App ஒன்று இன்று முதல் அறிமுகமாகியுள்ளது. இதில் ஆசன பதிவு (Seat reservation), நேர அட்டவணை (Time table), கட்டண விபரம் (Fare table), ஜி.பி.எஸ். கண்காணிப்பு (GPS Tracking). முறைப்பாடு செய்தல் (Make complaint) போன்ற பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.
Mybus.sl என்ற பெயர் கொண்ட இந்த App ஐ தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

பஸ் பயணிகளுக்கான App இன்று முதல்.. பஸ் பயணிகளுக்கான App இன்று முதல்.. Reviewed by irumbuthirai on July 07, 2020 Rating: 5
Powered by Blogger.