ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020)

May 23, 2020


நேற்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று (23) புதிய அறிவித்தலை ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தல் வருமாறு: 
மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும். மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும். 
நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். 
மொஹான் சமரநாயக்க 
பணிப்பாளர் நாயகம் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2020.05.23

(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020) ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் (23.05.2020) Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து

May 23, 2020


ஹிஜ்ரி 1441 ஆம் வருடத்திற்குரிய ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று இலங்கையில் தென்பட்டதால் நாளை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 
எனவே நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் இரும்புத்திரை நியூஸ் இணையத்தளம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோன்று உலகளாவிய ரீதியில் வாழும் சுமார் 1.8 பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாரக்!! 
கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு அனைவரும் வீட்டில் இருப்போம்! பாதுகாப்பாக இருப்போம்!!
ஈத் முபாரக்!!

இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து இரும்புத்திரை நியூஸ் இன் நோன்பு பெருநாள் வாழ்த்து Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

இலங்கை மாணவர்களுக்காக சீனா வழங்கும் முகக் கவசங்கள்

May 23, 2020


பாடசாலை மாணவர்களுக்கு முகக் கவசங்கள் அன்பளிப்பு செய்வதற்காக இலங்கையிலுள்ள சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 
ஒரு மாவட்டத்திற்கு 5000 முகக் கவசங்கள் என மொத்தமாக 125000 முகக் கவசங்கள் வழங்க சீன தூதரகம் இவ்வாறு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மாணவர்களுக்காக சீனா வழங்கும் முகக் கவசங்கள் இலங்கை மாணவர்களுக்காக சீனா வழங்கும் முகக் கவசங்கள் Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்:

May 23, 2020


பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் செய்யப்படுகின்ற ஆயத்த வேலைகளில் உடல் வெப்பநிலையை அளவிட கூடிய கருவி மாத்திரமே அரசினால் வழங்கப்படும் ஏனையவை பாடசாலையே செய்துகொள்ளவேண்டும் என்ற செய்தி பிழையானது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மறுத்திருக்கிறார். இதற்காக மூன்று விடயங்கள் அரசினால் வழங்கப்படும். உடல் வெப்பநிலை அளவிடக்கூடிய கருவி, கைகளை கழுவ கூடிய சிங்க் வசதி, அதேபோன்று மருத்துவ வசதிகளைக் கொண்ட கட்டில் அல்லது அதனை கொண்ட அறை. இதற்காக 200 விட குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு 

30 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்தார். இதற்காக 680 மில்லியன் ரூபா செலவாகும் என இப்பொழுது கணக்கிடப்பட்டிருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்: வதந்திகளை மறுத்த கல்வி அமைச்சர்: இதுதான் நடக்கும் என விளக்கினார்: Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

உங்கள் பிரதேச PHI அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமா?

May 23, 2020


பல்வேறு தேவைகளுக்காக உங்கள் பிரதேச பொது சுகாதார அதிகாரி (PHI) அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமென்றால் பொது சுகாதார அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று உரிய தகவல்களை வழங்கி அவர்களது தொலைபேசி எண்களை பெற்றுக் கொள்ளலாம். 
குறித்த இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள Link ஐக் கிளிக் செய்க


உங்கள் பிரதேச PHI அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமா? உங்கள் பிரதேச PHI அதிகாரியை தொடர்புகொள்ள வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 23, 2020 Rating: 5

போக்குவரத்து சபைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகள்...

May 22, 2020

திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 
இலங்கை போக்குவரத்து சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 
ஜனாதிபதியின் முன்மொழிவுகள் சில வருமாறு: 

கிழமை நாட்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகிறது. இந்த நெறிசலை குறைப்பதற்காக 

தமது சொந்த கார்களில் அலுவலகங்களுக்கு வருவோரை பொதுப் போக்குவரத்து சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இதற்கு தீர்வாக தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்தி அலுவலகங்களுக்கு பஸ் வண்டிகளில் பயணம் செய்வதற்கு தேவையான முறைமையொன்றை (Park and Drive) உடனடியாக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் முன்மொழிந்தார். இதற்கு முழுமையான வசதிகளைக் கொண்ட பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். 

பாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்து பாடசாலை பஸ் சேவையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பாடசாலை பஸ்களை மஞ்சல் நிறத்துடன் வீதிகளில் முன்னுரிமை வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளையும் தனியார் பஸ் வண்டிகளையும் இரண்டு நிறங்களில் சேவையில் ஈடுபடுத்தல். 

ஊழியர்களை வலுவூட்டுதல், புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தல், வீண்விரயத்தை குறைத்தல் மற்றும் திருட்டுக்களை ஒழித்தல் போன்றவற்றுக்காக முறையான நடவடிக்கைகளை பின்பற்றவேண்டியது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

நிறுவனத்தை முன்னேற்றுவதற்காக தொடர்ச்சியாக ஆய்வுகள் மற்றும் மீளாய்வுகள் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

பயன்படுத்தப்படாத பெருமளவான காணிகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளன. அக்காணிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் வருமானம் ஈட்டமுடியும். 

சுமார் 4500 பேர் கொண்ட திறமையான தொழிநுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கை போக்குவரத்து சபையில் உள்ளனர். அவர்களிடமிருந்து முழுமையான பயனை பெற்று நிறுவனத்திற்கு வெளியே பராமரிப்புக்காக செயற்கட்டளைகளை பெற்று வருமானம் ஈட்ட முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பட்டார். 

பயிற்சிப் பாடசாலைகளை மேலும் மேம்படுத்தி ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

கிராமிய பிரதேசங்களில் இருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள் இலங்கை போக்குவரத்து சபையிடம உள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்திற்கு அமைய மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் ஜனாதிபதி அவர்களினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

போக்குவரத்து சபைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகள்... போக்குவரத்து சபைக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகள்... Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்:

May 22, 2020


நேற்று (21) கொழும்பு – மாளிகாவத்தையில்  இடம்பெற்ற பண பங்கீடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரை எதிர்வரும் ஜூன் மாதம் நான்காம் திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவு பிறப்பித்தது. 
நேற்றைய தினம் கொழும்பு – மாளிகாவத்தையில்  இடம்பெற்ற பணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். 68, 62, 59 வயதுடைய பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கிய மேலும் 9 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் பணப்பகிர்வு இடம்பெற்றிருப்தாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்: மாளிகாவத்தை சம்பவம்: 6 பேருக்கு விளக்கமறியல்: Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் செலுத்தும் முறை..

May 22, 2020


கடந்த பெப்ரவரி மாதத்தில் இறுதியாக தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண பட்டியலிலுள்ள கட்டணத்துக்கு சமமான தொகையை மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துமாறு பாவனையாளர்களை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட காலத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்மானி வாசிப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று நீர்ப்பாவனையை கணக்கிட முடியாது போனதால் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க நேற்று தெரிவித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தலைமையில் இரத்மலானையிலுள்ள நீர்வழங்கல் வடிகலாமைப்புச் சபையின் தலைமை அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நீருக்கான கட்டணங்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ நீர்பாவனை செய்யப்பட்டிருந்தால் இக் கட்டணங்கள் 06 மாத நீர்க்கட்டண கணக்கில் நிவர்த்தி செய்யப்படும். இதனால் தாமதக் கட்டணம அறவிடப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். சபைக்கு மாதாந்தம் 4.5 பில்லியன் வருமானம் கிடைக்க வேண்டும். ஆனால் இம்மாதம் 1.35 பில்லியனே கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி பற்றாக்குறையாக உள்ளது. 
மேலும் நீர் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளை பொதுமக்கள் 24 மணிநேரமும் 1939 என்ற இலக்க தொலைபேசியூடாக தொடர்பு கொள்ளலாம். அல்லது நீர் கட்டண பட்டியல் தொடர்பாக எதிர்காலத்தில் ஈமெயில் ஊடாக நீர்கட்டண பட்டியலை பெற்றுக் கொள்ள உங்களது ஈமெயில் முகவரியை 0719399999 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலம் அனுப்பலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
(அ.த.தி)

மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் செலுத்தும் முறை.. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான நீர்க்கட்டணம் செலுத்தும் முறை.. Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22-05-2020)

May 22, 2020


ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவிப்பை ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 
அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். 
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23, சனி இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 26, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும். 
இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் மே,26 செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். 
முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை. 
மொஹான் சமரநாயக்க 
பணிப்பாளர் நாயகம் 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2020.05.22

(அ.த.தி)

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22-05-2020) ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22-05-2020) Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

May 22, 2020


20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில்,

பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Cabinet decisions
20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 20-05-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on May 22, 2020 Rating: 5

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க தீர்மானம்

May 21, 2020


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது நேற்று நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை இவ்வாறு அதிகரிக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார். 
இது தொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு:
கௌரவ சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை வருடம் 60 தொடக்கம் 61 ஆக நீடித்தல். இதன் போது, அதிமேதகு ஜனாதிபதியினால் வைத்திய சேவைக்கு மேலதிகமாக , சேவையின் அடிப்படையில் அனைத்து தொழில்நுட்ப துறையை உள்ளடக்கிய வகையில் இந்த ஓய்வுபெறும் வயதை தீர்மானிப்பதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு பரிந்துரைத்தார்.

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க தீர்மானம் வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்க தீர்மானம் Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Civil Technology - 2019 (New/Old Syllabus)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes.  
Subject: Civil Technology 
Language: Sinhala. 

Click the link below for the scheme


Scheme

G.C.E.(A/L) Marking Scheme for Civil Technology - 2019 (New/Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Civil Technology - 2019 (New/Old Syllabus) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Russian (ரஸ்ய மொழி) - 2019 (New/Old Syllabus)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Russian (ரஸ்ய மொழி) 

Click the link below for the scheme


scheme-Russian



G.C.E.(A/L) Marking Scheme for Russian (ரஸ்ய மொழி) - 2019 (New/Old Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Russian (ரஸ்ய மொழி) - 2019 (New/Old Syllabus) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Japanese (ஜப்பானிய மொழி) - 2019 (New Syllabus)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Japanese (ஜப்பானிய மொழி) 

 Click the link below for the scheme


Scheme-Japanese

G.C.E.(A/L) Marking Scheme for Japanese (ஜப்பானிய மொழி) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Japanese (ஜப்பானிய மொழி) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Chinese (சீன மொழி) - 2019 (New Syllabus in 3 languages)

May 21, 2020


Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Chinese (சீன மொழி) 
Language: English, Tamil & Sinhala 

Click the link below for the scheme


Scheme-Chinese

G.C.E.(A/L) Marking Scheme for Chinese (சீன மொழி) - 2019 (New Syllabus in 3 languages) G.C.E.(A/L) Marking Scheme for Chinese (சீன மொழி) - 2019 (New Syllabus in 3 languages) Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு:

May 21, 2020

கொவிட்-19 பரவல் காரணமாக மக்களுக்கு வழங்கும் நிவாரணமான ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்க கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கை கட்சி சார்ந்து காணப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்ததையடுத்தே ஆணைக்குழுவால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் கையொப்பமிடப்பட்ட இக்கடிதம் ஜனாதிபதி செயலாளர், பிரதமர் செயலாளர், அமைச்சரவை குழு செயலாளர், அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
குறித்த நிதி வழங்கும் நடவடிக்கையானது எவ்வகையிலும் அரசியல் சார்ந்தோ வேட்பாளர் சார்ந்தோ இருக்க கூடாது அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை கீழே காணலாம்.



(நிவ்ஸ்வய)
ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு: ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு: Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வாகன தரிப்பிட கட்டணங்கள்

May 20, 2020

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மா நகர வீதிகளில்  அறவிடப்பட்ட தரிப்பிட கட்டண வசூல் நாளை (21) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. 
கொழும்பு மாநகர சபை இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:




கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வாகன தரிப்பிட கட்டணங்கள் கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வாகன தரிப்பிட கட்டணங்கள் Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்..

May 20, 2020


மீள ஆரம்பிக்கப்படும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளைப் பெறும் முறை தொடர்பாக கடந்த 15-5-2020 அன்று அத்திணைக்களம் ஊடக அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் வழங்கப்படும் சேவைகளும் அதற்காக தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.  
அதில் கார் உரிமை மாற்றம் மற்றும் சொகுசு வரி கொடுப்பணவு என்பவற்றிற்காக தொடர்புகொள்ள வேறு புதிய இலக்கங்களை திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. 
கடந்த 15ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் உள்ள இலக்கங்களையும் நேற்றைய தினம் (19) அறிவிக்கப்பட்ட புதிய இலக்கங்களையும் இங்கு தருகிறோம்.
சேவை பெறுனர்கள் தாம் பெறவிருக்கும் சேவைக்குரிய இலக்கத்தை தொடர்புகொண்டு முற்பதிவு செய்துதான் செல்லவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15-5-2020 அன்று வெளியிடப்பட்ட இலக்கங்கள் வருமாறு:



19-5-2020 அன்று வெளியிடப்பட்ட புதிய இலக்கங்கள்:





மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்.. மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள சேவைகளும் தொடர்புகொள்ளவேண்டிய இலக்கங்களும்.. Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்:

May 20, 2020

சுகாதார முறைகளைப் பின்பற்றாது இரகசிய முறையில் தலவாக்கலை நகரில் மேலதிக வகுப்புக்களை நடாத்திய இரு ஆசிரியர்களும் வகுப்பில் கலந்துகொண்ட 14 மாணவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக சேபால தெரிவித்துள்ளார். 
தமக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், இரு ஆசிரியர்களும் 14 மாணவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் அவரவர் வசிப்பிடங்களிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 
க.பொ.த. (உ.தர) பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்களையே இவ்வாறு நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி: நிவ்ஸ்வய)

தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்: தனிமைப்படுத்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் 14 மாணவர்கள்: Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை

May 20, 2020

வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை இன்று (20) இடம்பெற்றதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீராக்க அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்கடை மஜிஸ்திரேட் நீதிமன்றமும் வெலிக்கடை சிறைச்சாலையும் இவ்வாறு வீடியோ தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது. 
இதன் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படாமல் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட விஷேட தொழில்நுட்ப பகுதியில் வைத்து நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்டு இந்த முதல் கட்ட நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களில் நாடு பூராகவும் இந்த முறை பயன்படுத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 
இந்நிகழ்வில் நீதி, மனித உரிமைகள் மற்று சட்ட மறுசீராக்க அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா புதுக்கடை பிரதான மஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரத்ன அவர்களும் இன்னும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 
(நிவ்ஸ்வய)

வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை வரலாற்றில் முதன்முறையாக வீடியோ முறையில் வழக்கு விசாரணை Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு) - 2019 (New Syllabus)

May 20, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Arabic (அரபு)
Language: Tamil.

Click the link below for the scheme


Scheme-Arabic

G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Arabic (அரபு) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Pali - 2019 (New Syllabus)

May 20, 2020

Department of Examination 
G. C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Pali 
Language: Sinhala.

Click the link below for the scheme


Pali-Scheme

G.C.E.(A/L) Marking Scheme for Pali - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Pali - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (New Syllabus)

May 20, 2020

Department of Examination 
C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Tamil

Click the link below for the scheme


Scheme-Tamil

G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Tamil (தமிழ்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 20, 2020 Rating: 5

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவு செய்தல் மீள ஆரம்பம்..

May 19, 2020


தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் நாளை 20 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாகாண மற்றும் மாவட்ட செயலகங்களில் பதிவுசெய்துகொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 
முதற்கட்டமாக தென் கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கான பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 

நாட்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 
கொவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் தொழில்புரிவதற்கு செல்வோரை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 13 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவு செய்தல் மீள ஆரம்பம்.. தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வோரை பதிவு செய்தல் மீள ஆரம்பம்.. Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Sinhala - 2019 (New Syllabus)

May 19, 2020

Department of Examination 
C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Sinhala 

Click the link below for the scheme


Sinhala Scheme
G.C.E.(A/L) Marking Scheme for Sinhala - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Sinhala - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) - 2019 (New Syllabus in Languages)

May 19, 2020

Department of Examination 
C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) - 2019 (New Syllabus in Languages) G.C.E.(A/L) Marking Scheme for Bio Systems Technology (உயிர்முறைமைகள் தொழினுட்பவியல்) - 2019 (New Syllabus in  Languages) Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்) - 2019 (New Syllabus in 2 Languages)

May 19, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்)
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium
G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Engineering Technology (பொறியியற் தொழிநுட்பவியல்) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

Results released.. BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) - Open University of Sri lanka

May 19, 2020

BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) – 2019/1

Pass mark for the Entry Test of BA in English and English Language Teaching is 60% and above.
A pass in this examination is NOT an indication that you have been selected for the program. In addition to a pass in this examination, you need to fulfill the Entry Criteria

Click the link below to view results


Results

Results released.. BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) - Open University of Sri lanka Results released.. BA IN ENGLISH AND ENGLISH LANGUAGE TEACHING (Entry Test) - Open University of Sri lanka Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது..

May 19, 2020

ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் செலவழிக்கப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெற் கவுன்சிலும் இலங்கை கிரிக்கெற் நிறுவனமும் இணைந்தே இதற்கான முதலீட்டை மேற்கொள்ளவிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார். 
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விடையத்தை தெரிவித்தார்.

கிரிக்கெற் மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. கிரிக்கெற்  மைதானத்திற்கு எவ்வித மக்கள் பணமும் பயன்படுத்தப்படமாட்டாது.. Reviewed by irumbuthirai on May 19, 2020 Rating: 5

பல்கலைக்கழக விண்ணப்பங்களை உறுதிப்படுத்தல்: அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் முக்கிய அறிவித்தல்:

May 18, 2020

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததினால் , பாடசாலை பரீட்சார்த்திகளாக தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பங்களை, உறுதிசெய்வதற்கு மே 20, 21, 22 ஆகிய தினங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை 

வழங்குமாறு அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களை கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு, சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு அமைய, சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, குறித்த பாடசாலையின் அதிபர் அல்லது உதவி அதிபரினால், தமது பாடசாலையில் உயர் தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டும் என, கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
(அ.த.தி)

பல்கலைக்கழக விண்ணப்பங்களை உறுதிப்படுத்தல்: அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் முக்கிய அறிவித்தல்: பல்கலைக்கழக விண்ணப்பங்களை உறுதிப்படுத்தல்: அதிபர்களுக்கு கல்வியமைச்சு விடுக்கும் முக்கிய அறிவித்தல்: Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்?

May 18, 2020

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். ஹோமாகம தியகம பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச தரத்திலான மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது. 
அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று இப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக 26 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். 
பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படும் என்றும், முதற்கட்டத்தின் கீழ் 

போட்டியை பார்வையிடும் சுமார் நாற்பதாயிரம் (40000) பேருக்கான வசதிகளைக் கொண்டதாகவும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் இருபதாயிரம் (20000) ஆசனங்களை ஒன்றிணைத்து மொத்தமாக 60 000 பார்வையாளர்களின் ஆசனங்களை கொண்ட வசதிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வலம் வருகின்றன. கொரோனாவினால் நாடு எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியில் இது தேவைதானா? ஒரு புறம் நிதி நெருக்கடியென சுட்டிக்காட்டி அரச ஊழியர்களின் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய கோரும் அரசு மறு புறம் இந்த மைதானத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறுவது அரசின் இரு வேறுபட்ட நிலைமைகளைக் காட்டுவதாகவும், மைதானத்திற்கு முன் இலங்கை கிரிக்கெற் அணியை செய்ய வேண்டும், நாட்டில் எத்தனையோ பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் இது இப்போதைக்கு அவசரமா என்றெல்லாம் பல விமர்சனங்கள் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்? பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தயாராகிறதா இலங்கையின் பாரிய கிரிக்கெற் மைதானம்? Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்...

May 18, 2020


எதிர் வரும் 20 ஆம் திகதி முதல் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும்இ குறிப்பிட்ட ஆளணியினரை வைத்து சில வரையறைகளுக்குட்பட்ட விதத்தில் மீளவும் ஆரம்பிப்பதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் உங்களுக்கு தேவையான சேவையை பெற அதற்கேயுரிய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு திகதி நேரம் என்பவற்றை முன்னரே ஒதுக்கிக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை இலக்க அடிப்படையிலேயே தினம் ஒதுக்கப்பட வேண்டும். 
இது தொடர்பான ஊடக அறிக்கையை கீழே காணலாம்...




20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்... 20ஆம் திகதி முதல் மோட்டார் போக். திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறுவது இவ்வாறுதான்... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

ஈழம் என்ற வார்த்தை.... சரோஜா சிரிசேன எடுத்த நடவடிக்கை ...

May 18, 2020

ஐக்கிய இராச்சியத்தில் த கார்டியன் செய்திப் பத்திரிகையின் இணையத்தளப் பதிப்பில் 2020 மே 15 ஆந் திகதி  வெளியிடப்பட்ட 'சுற்றுலா வினா விடைப் போட்டி: ஃப்ரைடே மேன், உங்கள் தீவுகளை உங்களுக்குத் தெரியுமா?' எனத் தலைப்பிடப்பட்ட வினா விடைப் போட்டி தொடர்பில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு கவனம் செலுத்துகின்றது.
இதில் இரண்டாவது வினா, 'ஈழம் என்பது எந்தப் பிரபலமான விடுமுறைத் தீவின் பூர்வீகப் பெயர்?' எனும் வகையில் வினவுவதாக அமைந்துள்ளது. இந்த வினாவிற்கான பதில் தெரிவுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், ஒருவர் இலங்கையை பதிலாகத் தேர்ந்தெடுத்து, அதை சரியான பதிலாகக் குறிப்பிடுகையில், 'இந்தத் தீவின் அண்மைய இராணுவக் கிளர்ச்சியின் முழுப் பெயர் எல்.ரீ.ரீ.ஈ. - தமிழீழ விடுதலைப் புலிகள்' எனும் மேலதிக விளக்கம் தோன்றுகின்றது.
இந்தத் தகவலின் தவறான தன்மை காரணமாக அதனை நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சரோஜா சிரிசேன எழுதிய கடிதத்தில் புலிகள் அமைப்பு தமது தனி நாட்டுக் கோரிக்கைக்காக பயன்படுத்திய வார்த்தையே ஈழம் என்பது மற்றப்படி அது எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையின் பழைய பெயராக பயன்படுத்தப்படவில்லை என்று எழுதியுள்ளார்.இதையடுத்து குறித்த பத்திரிகை அதை நீக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஈழம் என்ற வார்த்தை.... சரோஜா சிரிசேன எடுத்த நடவடிக்கை ... ஈழம் என்ற வார்த்தை.... சரோஜா சிரிசேன எடுத்த நடவடிக்கை ... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள்...

May 18, 2020

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாட்டில் 413 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, நாட்டில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 49 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 
இதேவேளை தற்போது நிலவும் மழையுடனான கால நிலையையடுத்து டெங்கு நோய் பரவக்கூடிய நிலை அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்தள்ளது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் வீடுகளின் சுற்றாடல்பகுதியை பரிசோதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அருனா ஜெயசேகர தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை போன்று டெங்கு நோய் பரவுதை தடுப்பதற்கும் ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள்... கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு நோயாளிகள்... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையரின் எதிர்பார்ப்பு...

May 18, 2020


143 நாடுகளிலுள்ள 38,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளனர் என்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 
அது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு:



(அ.த.தி)



38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையரின் எதிர்பார்ப்பு... 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையரின் எதிர்பார்ப்பு... Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5

முப்படை மற்றும் பொலிஸாரும் தமது சம்பளத்திலிருந்து நன்கொடை வழங்க வேண்டுமா?

May 18, 2020


கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள திதி நெருக்கடிகளை சமாளிக்க அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரைச் சம்பளம், வார சம்பளம் அல்லது மே மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் 

வெளியான கருத்துக்களை முற்றாக மறுத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, நன்கொடை வழங்கும் இந்த கோரிக்கை இராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படையினருக்கு அவசியமற்றது என உறுதிப்படுத்தினார்.
(அ.த.தி)
முப்படை மற்றும் பொலிஸாரும் தமது சம்பளத்திலிருந்து நன்கொடை வழங்க வேண்டுமா? முப்படை மற்றும் பொலிஸாரும் தமது சம்பளத்திலிருந்து நன்கொடை வழங்க வேண்டுமா? Reviewed by irumbuthirai on May 18, 2020 Rating: 5
Powered by Blogger.