ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு:


கொவிட்-19 பரவல் காரணமாக மக்களுக்கு வழங்கும் நிவாரணமான ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்க கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கை கட்சி சார்ந்து காணப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்ததையடுத்தே ஆணைக்குழுவால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் கையொப்பமிடப்பட்ட இக்கடிதம் ஜனாதிபதி செயலாளர், பிரதமர் செயலாளர், அமைச்சரவை குழு செயலாளர், அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 
குறித்த நிதி வழங்கும் நடவடிக்கையானது எவ்வகையிலும் அரசியல் சார்ந்தோ வேட்பாளர் சார்ந்தோ இருக்க கூடாது அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை கீழே காணலாம்.



(நிவ்ஸ்வய)
ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு: ரூ: 5000 கொடுப்பணவு நடிவடிக்கைகளிலிருந்து பிரதேச அரசியல்வாதிகளை விலக்கவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு: Reviewed by irumbuthirai on May 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.