Results for Indian News

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்!

February 09, 2022

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இதுவரை இருந்துவந்த இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி அதே நாட்டைச் சேர்ந்த கௌதம் அதானி என்பவர்  அந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 

Bloomberg தரப்படுத்தலில் அடிப்படையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 88.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

 

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டொலர்களாகும்.

 

துறைமுகம், பசுமை எரிசக்தி, சுரங்கம் உட்பட பல வர்த்தக குழுமங்களை வைத்துள்ள அதானி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திலும் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! அம்பானியை பின்தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான நபர்! Reviewed by Irumbu Thirai News on February 09, 2022 Rating: 5

சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!

October 01, 2021
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும். 
 
அவர் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகிறோம். 
 
அவர் முதன் முதலில் நடித்த மேடை நாடகம் ராமாயணம். அதில் சீதையாக நடித்தார். 
 
அவரது முதல் திரைப்படம் பராசக்தி. 1952இல் வெளிவந்தது. 
 
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி. 
 
1962 இல் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். 
 
எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சிவாஜி. 
 
தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை சிவாஜி ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வெற்றி கண்ட இவருக்கு அரசியலில் வெற்றி காண முடியவில்லை. 
 
கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கணேசன். 
 
சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், இறுதிவரை அது நடக்கவில்லை. 
 
சென்னையில் இவரது பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு. 
 
இந்த நிலையில் இவரது 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக Google நிறுவனம் டூடுல் (Doodle) வெளியிட்டுள்ளது. இதனை வரைந்தவர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவர்.
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்! Reviewed by Irumbu Thirai News on October 01, 2021 Rating: 5

தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன?

September 19, 2021
 

தென்னிந்திய நடிகர் விஜய் தனது தாய் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. 
 
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 09 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 
 
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் 
 
போட்டியிடவுள்ளனர். நீண்ட ஆலோசனைகளுக்கு பின் அதற்கான அனுமதியை விஜய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
அதாவது இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவும் தனது பெயரையும் விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் கொடியையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபட விஜய் அனுமதி அளித்துள்ளார். 
 
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. எவ்வாறாயினும் அவரது பெயரைச் சொல்லி அரசியலில் ஈடுபட அனுமதி கேட்டோம். அதற்கு அனுமதி தந்தார் என்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவரான விஜய் அன்பன் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இம்மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 
 
ஏன் வழக்கு தொடர்ந்தார்? 
 
இயக்குநரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ். ஏ. சந்திரசேகர் விஜய் ரசிகர்களை இணைத்து "அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்" என்ற கட்சி தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். மேலும் இந்த கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். 
 
இதற்கு கடுமையான ஆட்சேபணை தெரிவித்த நடிகர் விஜய். தனது பெயரில் கட்சி தொடங்கப்படுவதில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறி தனது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையே இம்மாதம் 27 ஆம் தேதி வருகிறது.
தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்! பின்னணி என்ன? Reviewed by Irumbu Thirai News on September 19, 2021 Rating: 5

தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு..

August 16, 2020


"உங்களுடன் (தோனி) விளையாடுவதை தவிர வேறு என்ன விரும்பினேன். நெஞ்சம் முழுவதும் பெருமையுடன் நான் உங்களுடன் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்." என தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஓய்வை அறிவித்துள்ளார். 
33 வயதான ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார். எம்.எஸ் தோனியை தொடர்ந்து இவரும் தற்போது தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு.. தோனியைத் தொடர்ந்து ரய்னா வெளியிட்ட அறிவிப்பு.. Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்..

August 16, 2020


"உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 19.29 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாக கருதிக் கொள்ளுங்கள்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு ஓய்வை அறிவித்தார் மஹேந்திரசிங் தோனி. 
கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியிலேயே தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுள்ளார். 
 தோனி இறுதியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி 2019 நடந்த உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியேயாகும். 
1981 ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி இளம் வயதில் அதிகம் விளையாடியது கால்பந்து மற்றும் பேட்மின்டன் ஆகியவையே. தோனி படித்த பாடசாலையின் கிரிக்கெட் அணியில் வழக்கமாக விளையாடும் விக்கெட் கீப்பர் ஒரு போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட அந்த போட்டியில் தோனி விக்கெட் கீப்பராக விளையாடினார் அப்படி ஆரம்பித்ததே அவரது கிரிக்கெட் வாழ்க்கை. 
2004 டிசம்பரில் தான் இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 2007 t20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பை தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. 2013 ஐசிசி சம்பியன்ஸ் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. 2010 மற்றும் 2016 ஆகிய இரு முறைகள் இந்தியா ஆசிய கோப்பையை வென்றதும் இவரது தலைமையில்தான். 
அதேபோன்று 2010 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களில் இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. விடைபெறும் M.S. Dhoni.. கிரிக்கெற்றை இப்படித்தான் ஆரம்பித்தார்.. Reviewed by irumbuthirai on August 16, 2020 Rating: 5

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா?

July 12, 2020


பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தமது ட்விட்டர் செய்தியில் உறுதி செய்துள்ளனர். 
இதேவேளை பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அபிஷேக் பச்சனின் மனைவியான ஐஸ்வர்யா ராய்க்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் ட்விட்டர் செய்திகளை கீழே காணலாம். (ஐஸ்வர்யாராய் மற்றும் மகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட முன் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவுகளே இவை)


அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்றா? Reviewed by irumbuthirai on July 12, 2020 Rating: 5

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா...

June 19, 2020

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும், பாதுகாப்பு பேரவை தான் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. 
இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. இதற்கான உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில், தற்போது காலியாக இருந்த 5 நாடுகளுக்கான உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (17) நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும். 193 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. எட்டாவது முறையாக ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக, உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.

போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்ட இந்தியா... Reviewed by irumbuthirai on June 19, 2020 Rating: 5

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை

June 14, 2020


இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் MS Dhoni யின் வாழ்க்கைப் படமான M.S. Dhoni: The Untold Story என்ற திரைப்படத்தில் நடித்த ஹிந்தி நடிகரான Sushant Singh Rajput தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
மும்பையில் உள்ள அவரது இல்லத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இறக்கும்போது வயது 34. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை MS Dhoni யாக நடித்தவர் தற்கொலை Reviewed by irumbuthirai on June 14, 2020 Rating: 5

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்..

June 09, 2020


இந்தியாவில் லொக்டவுன் (Lockdown) காலப்பகுதியில் ரயில்வே நிலையத்தின் மேடையில் இறந்த தாயின் குழந்தையை பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் தத்தெடுத்துள்ளார். 
தனது தாய் இறந்தது தெரியாமல் தாயை எழுப்பும் குழந்தையின் இந்த வீடியோ உலகம் பூராவும் பரவி அனைவரின் மனதையும் உருக வைத்தது.
இந்த விடயம் நடிகர் ஷாருக்கானுக்கு தெரியவர அவர் இந்த குழந்தையை பொறுப்பெடுத்துள்ளார். ஷாரூக்கானின் 'மீர்' அமைப்பு இதற்குரிய ஏற்பாடை செய்துள்ளது. இது தொடர்பில் நடிகர் ஷாருக்கான் செய்த டுவிட்டை கீழே பார்க்கலாம்

 
(நிவ்ஸ்வய)

ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. ரயில் நிலையத்தில் மரணித்த தாய்... குழந்தையை பொறுப்பெடுத்த ஷாரூக்கான்.. Reviewed by irumbuthirai on June 09, 2020 Rating: 5

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள்....

June 05, 2020


பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு இந்தியா எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பேக்லே தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். 
அதாவது உணவு பாதுகாப்பு, மருந்து மற்றும் விவசாய உற்பத்தி, எரிபொருள் சுத்திகரிப்பு உள்ளடங்களான பல துறைகளில் முதலீடு செய்ய இந்திய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் கூறினார். 
இதேவேளை வடக்கில் புதிய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தவதற்கும் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கும் 25 கோடி ரூபாய் நிதி உதவியை இந்தியா வழங்கியுள்ளது. இதில் மடு யாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர் 144 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு 30 கோடி ரூபாய் வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியை அடையும் போது சுற்றுலா துறைக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க இதன் போது தெரிவித்தார்.
(அ.த.தி)

இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள்.... இலங்கையில்  இந்தியாவின் முதலீடுகள்.... Reviewed by irumbuthirai on June 05, 2020 Rating: 5

பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

November 09, 2019


இந்தியா, அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், இந்திய உயர் நீதிமன்ற அரசியல் சாசன ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அதில்,

• அயோத்தியில் ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதி. அதே சமயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். 
• அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உரிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் இந்திய அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
• வக்ஃபு சபை ஏற்கும் இடத்தில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட வேண்டும். 
• நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோஹி அகாராவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 
• பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குத்தான் சொந்தம் என்பதை இஸ்லாமியர்கள்


நிரூபிக்கவில்லை. 
இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
• அலகாபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றுப் பிரிவாகப் பிரித்துக் கொடுத்தது தவறு. 
• நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை. 
• 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார். 
அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். 
• நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. 
• சர்ச்சைக்குரிய நிலத்துக்கு ஒட்டுமொத்தமாக சன்னி வஃபு வாரியம் உரிமை கோர முடியாது. 
• ஆங்கிலேயேர்கள் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது. 
• பாபர் மசூதி பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். 
• மசூதிக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று


தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது. 
• பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.
• இறை நம்பிக்கைக்குள் செல்வது நீதிமன்றத்துக்கு தேவையற்றது என கருதுகிறோம். 
• காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 
• இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன. 
• ஒரு மதத்தினரின் நம்பிக்கை, மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது.
போன்ற முக்கிய அம்சங்கள் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதி மன்றம் அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பாபர் மசூதி-ராமஜென்மபூமி தொடர்பான தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5

மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி?

September 07, 2019
அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின்போது இந்திய பிரதமரும் மலேசிய பிரதமரும் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது 
மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றுள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மலேசிய அரசு மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோதி வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இந்தக் கோரிக்கையை மலேசியப் பிரதமர் ஏற்றாரா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்தியா மற்றும் மலேசியாவின் பிரதமர்கள் இருவரும் சந்தித்துப் பேசினர் என்றும், இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மட்டுமே மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. 
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார் மகாதீர். அங்கு கியோடோ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியப் பிரதமர் மோதியுடனான பேச்சுவார்த்தையின் போது, ஜாகிர் என்ற பெயரை மட்டுமே மோதி உச்சரித்ததாகவும், மேற்கொண்டு ஏதும் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவர் (மோதி) பெயரை மட்டுமே குறிப்பிட்டாரே தவிர, என்ன பிரச்சினை என்பது குறித்தோ, அல்லது என்ன தேவை என்பது குறித்தோ ஏதும் தெரிவிக்கவில்லை. விரிவாக எதையும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு தலைவர்களும் சந்தித்த போது ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து இந்திய பிரதமர் ஏதும் வலியுறுத்தவில்லை என்றே கூறியிருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் குறித்து தெளிவுபடுத்துவதற்கே பிரதமர் மோதி அதிக நேரம் எடுத்துக் கொண்டார் என்றும், இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலைபாட்டை மகாதீர் தெளிவாக எடுத்துக் கூறினார் என்றும் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்திய மகாதீர்,"இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஐநா தீர்மானங்களின்படி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மகாதீர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த விவகாரத்துக்கு தீர்வு காண முடியும் என்றும் மலேசியப் பிரதமர் கூறினார்," என்றார் அமைச்சர் சைஃபுதின் அப்துல்லா. 
தேவை ஏற்படும் பட்சத்தில் மூன்றாம் தரப்பின் உதவியைக் கோரலாம் என்றும், இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லலாம் என்றும் பிரதமர் மகாதீர் தெரிவித்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
(பீபீசி)
மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி? மலேசிய பிரதமரிடம் ஜாகிர் நாயக் குறித்து உண்மையிலேயே பேசினாரா மோதி? Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2

September 07, 2019

பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி ட்விட்டரில், அனைவரும் தூங்க செல்லுங்கள், நிலவுக்கு செல்வதற்கு பதிலாக மும்பையில் தரையிறங்கியுள்ளது அந்த பொம்மை என்று பதிவிட்டார். 

சந்திரயான் - 2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவட் ஹுசைன் செளத்திரி கிண்டல் செய்வது போல ட்வீட் செய்தார். அதன்பின் 


#indiafailed என்ற ஹாஷ்டேகை பாகிஸ்தான் டிவிட்டர் பயனர்கள் டிரண்ட் ஆக்கினர். #indiafailed என்ற ஹாஷ்டேக் டிவிட்டர் டிரண்டிங்கில் உலகளவில் இடம் பிடித்தது. அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய தரப்பில் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் டிரண்ட் செய்யப்பட்டது. மேலும் #worthlesspakistan என்ற ஹாஷ்டேக் உலகளவில் டிரண்டிங் பட்டியலில் இடம்பெற்றது. 
பாகிஸ்தானுக்கு எதிராக விஜய், 

அஜித் ரசிகர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் பல பதிவுகள் இந்த ஹாஷ்டேகில் காணப்பட்டன. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சேர்ந்து பாகிஸ்தானை கிண்டல் செய்வது போன்ற பல மீம்களையும் இவர்கள் பகிர்ந்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்திய ட்விட்டர்வாசிகள் கடும் எதிர்வினையாற்ற தொடங்க, ஃபாவட் ஹுசைன் செளத்திரி மீண்டும் வெளியிட்ட ட்விட் பதிவில், சந்திரயான் - 2 திட்டத்தின் பின்னடைவுக்கு நான் எப்படி காரணமாவேன்? ஏன் என்னை வசைபாடுகிறார்கள்? என்றும் கேள்வியெழுப்பினார்.
(பீபீசி)
அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2 அஜித், விஜய் ரசிகர்களை ஒருங்கிணைத்த சந்திரயான் 2 Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

சந்திரயான்-2 என்ன நடந்தது?

September 07, 2019

இந்தியாவினால் அனுப்பப்பட்ட சந்திராயன் - 2 பற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் 

சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கியநிலையில், அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், 'லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்று கூறினார். இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. 


புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 20 ஆம் திகதி 'சந்திரயான்-2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை 'சந்திரயான்-2' விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த 2 அம் திகதி 'சந்திரயான்-2' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது. பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது. 

இந்நிலையில் 'சந்திரயான்-2' விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்' நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருக்கிறார்கள். 

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில், 'லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார். இன்று, அதிகாலை, 2:15 மணி அளவில், 'லேண்டர்' தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார். இங்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி , 'விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்' என கூறி, இஸ்ரோ நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
சந்திரயான்-2 என்ன நடந்தது? சந்திரயான்-2 என்ன நடந்தது? Reviewed by irumbuthirai on September 07, 2019 Rating: 5

காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

August 27, 2019


வெளிப்படையாகப் பேசுவதை தடுக்கும் இடத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன்"  காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும். ஆனால் என் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாமல் என் வேலை என்னைத் தடுக்கிறது. 

எளிமையான மக்களின் உரிமைகளுக்காக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தேன். ஆனால், நாட்டில் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், என் வேலையை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அது சரியானது அல்ல என என் மனம் சொல்கிறது,'' என்று சொல்கிறார் கண்ணன் கோபிநாத்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தபோது,அரசின் முடிவால் அதிர்ந்து போய், தனது பதவியைத் தூக்கியெறியத் துணிந்துவிட்டார் கண்ணன் கோபிநாதன். 
ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை உயரதிகாரிகளுக்கு அனுப்பினார். ஆனால், அந்த ராஜிநாமா ஏற்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளிடமிருந்து எந்தவிதத் தகவலும் வரவில்லை என்கிறார். 

33 வயதான கண்ணன் கோபிநாதன், தனது சொந்த மாநிலம் கேரள மாநிலம் கடந்த ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய நேரத்தில், தாதரா நகர் ஹவேலியில் இருந்து நிவாரணப் பணிக்கான காசோலையை அளிக்க வந்தார். மக்களின் துயரங்களை கண்டு, திரும்ப மனமில்லாமல், எட்டு நாட்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டார். யாரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளைத் தூக்குவது உள்ளிட்ட வேலையை அவர் செய்ததால், சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.
காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி Reviewed by irumbuthirai on August 27, 2019 Rating: 5

அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி

August 25, 2019

2013 ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் இருவரும் சந்தித்தபோது காதல் ஏற்பட்டது. 
4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி திருமணம் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் நடந்தது. 
தற்போது மேற்கிந்திய தீவில் விளையாடும் விராட் கோலி அங்கு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாடினார். அப்போது உரையாற்றிய கோலி,


‘அனுஷ்கா சர்மா என் வாழ்வில் கிடைத்தது கிரிக்கெட் கிடைத்ததை விட மிகப் பெரிய வரம். மிகச் சரியான துணையை தேர்ந்தெடுத்துள்ளேன். ஏனென்றால், அவரது பணிகளை அவராகவே சிறப்பாக செய்து வருகிறார். அதோடு எனக்கான இடத்தையும் சரியாக தருகிறார். என்னை சரியான பாதையில் வழிநடத்துவதும் அவர்தான். அவரிடம் இருந்து இன்னும் நிறைய கற்றுக் கொள்வேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி அனுஷ்காதான் கிரிக்கெட்டை விட மிகப் பெரிய வரம்- விராட் கோலி Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை

August 25, 2019

இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அலையன்ஸ் எயார், இன்டிகோ ஆகிய இரண்டு இந்திய விமான சேவை நிறுவனங்களும் பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கின்றன. 

இதற்குத் தேவையான குடிவரவு, குடியகல்வு வசதிகளையும், சேவைகளையும் வழங்கத் தயார் என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வேலைத்திட்டத்திற்கு இந்த நேரடி விமான சேவை உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை இந்தியாவிலிருந்து பலாலிக்கு நேரடி விமான சேவை Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? வெளியானது பிரதமரின் அறிவிப்பு

August 25, 2019

மலேசிய இந்தியர்கள், சீனர்கள் குறித்து மதப் போதகர் ஜாகிர் நாயக் அண்மையில் தெரிவித்த சில கருத்துகள் காரணமாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை அதிகரித்தது.

நாடு முழுவதும் ஜாகிர் நாயக் மீது 200 க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மலேசிய காவல்துறை அவரிடம் பல மணிநேரம் விசாரணையும் நடத்தியிருக்கிறது. இதையடுத்து இன, மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்களுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட மாட்டாது என்றும், உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் மலேசிய காவல்துறை தலைவர் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இதனால் ஜாகிர் நாயக் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பிரதமர் மகாதீரின் திட்டவட்டமான அறிவிப்பு வெளியாகியது.

ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். 
மேலும் ஜாகிர் நாயக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டாம் என்பது மலேசிய அமைச்சரவை ஒருமித்த முடிவு என அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி: பிபிசி)
ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? வெளியானது பிரதமரின் அறிவிப்பு ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? வெளியானது பிரதமரின் அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 25, 2019 Rating: 5

உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்...

August 18, 2019
சகல அம்சங்களும் வாக்கெடுப்பிற்கு உட்படும் நிலையே தற்போது காணப்படுகிறது. அந்த வகையில் உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 
பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்திருக்கிறார். Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார். 
இதுமட்டுமன்றி Chris Evans, David Beckham, Robert Pattinson போன்ற உலகப்புகழ் பெற்ற பிரபலங்களை ஹ்ரித்திக் ரோஷன் வீழ்த்தியிருக்கிறார். 
(கிசு கிசு)
உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... உலகில் அதிக அழகான ஆண் இவர்தானாம்... Reviewed by irumbuthirai on August 18, 2019 Rating: 5

மக்களுக்கு வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி

May 23, 2019
இன்று இந்தியாவில் இடம் பெற்ற பெரும் தேர்தலாக கருதப்படும் லோக்சபா aka பாராளுமன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் மோடியின் BJP கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது..

 ராகுல் காந்தி கட்சியான காங்கிரஸ் சில இடங்களில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து நாட்டு ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோர் மோடிக்கு வாழ்த்து கூறி வருனின்றனர்.


தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ‘மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்; மக்களின் முடிவை நான் மதிக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவிந்துள்ளார்..
மக்களுக்கு வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி Reviewed by Irumbu Thirai News on May 23, 2019 Rating: 5
Powered by Blogger.