பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல்: ஆரம்பமானது கணக்கெடுப்பு!
Irumbu Thirai News
October 30, 2021
அரச நிறுவனங்களில் பட்டதாரிகளுக்கு நிலவுகின்ற வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சேவை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட
பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காகவே இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பயிலுனர்களாக இருக்கின்ற நிலைமையில் அதில் ஒரு பகுதியினர் பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கல்: ஆரம்பமானது கணக்கெடுப்பு!
Reviewed by Irumbu Thirai News
on
October 30, 2021
Rating: