பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு!

December 03, 2021
 

பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாத விடுமுறை 23-ஆம் தேதி முதல் 27ம் திகதி வரை வழங்கப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது இந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 

குறித்த விடுமுறையானது ஜனவரி 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
எனவே டிசம்பர் விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலை ஜனவரி 3 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு! பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 03, 2021 Rating: 5

பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது!

December 02, 2021

பாடசாலையில் உளவியல் தொடர்பான கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் ஒருவரும் இன்னும் மூன்று பேரும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பதுளை, ஹாலி எல பிரதேச பாடசாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளது. 
 
ஏனைய 03 பேரும் குறித்த உளவள ஆலோசகரின் மெய்ப்பாதுகாவலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கருப்பு நிற ஆடை அணிந்திருந்த இவர்கள் 

துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக நேற்றைய தினம் (2) போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். 
 
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நிகழ்விற்கு வலயக்கல்வி காரியாலயத்தினதோ மாகாண கல்வி காரியாலயத்தினதோ அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. மேலும் குறித்த உளவள ஆலோசகர் 

இந்தத் துறை தொடர்பில் உரிய தகைமை இல்லாதவர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எந்த ஒரு நிறுவனத்திலும் பதிவு செய்யப்படாதவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர்களிடமிருந்து துப்பாக்கியும் 129 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! Reviewed by Irumbu Thirai News on December 02, 2021 Rating: 5

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்

December 01, 2021
 

தன்னை இனிமேல் யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழைப்பதையே நான் விரும்புகிறேன். மாறாக தல என்றோ அல்லது வேறு அடைமொழிகளை கொண்டோ அழைப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான வாழ்க்கையை நான் மனதார வாழ்த்துகிறேன். 
 
என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2001 இல் 'தீனா (Dheena)' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து அஜித் குமாருக்கு 

தல என்ற அடைமொழி மிகப் பிரபலமடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஜித்குமாருக்கு இந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நடிகர் விஜய்யை தளபதி என்றும் அஜீத் குமாரை தல என்றும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அடிக்கடி இந்த இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதும் வழமை. 
 
வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையிலேயே அஜித்குமாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு!

December 01, 2021

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் (Facilities Fees) தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ளது. 

அதாவது நீண்டகாலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும்


முழு வருடத்துக்குமான வசதிகள் சேவை கட்டணம் அறவிடப்படுவதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலைமை காரணமாக பெற்றோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்திற்கான வசதிகள் சேவை கட்டணம் அறவிடுவதை நிறுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு! பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு! Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

November 29, 2021

இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய சனத் பூஜித்த ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய பரீட்சைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்ட எல்.எம்.டி. தர்மசேன என்பவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 
 
கொழும்பு மகாநாம மற்றும் ஆனந்த கல்லூரிகளின் அதிபராகவும் 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கடமையாற்றிய தர்மசேன கல்வியமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்! புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்! Reviewed by Irumbu Thirai News on November 29, 2021 Rating: 5

சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்!

November 28, 2021

சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மக்டலேனா ஆண்டா்சன் என்பவர் தான் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
நடந்தது என்ன? 

அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் என்பவர் தோல்வி அடைந்தார். 
 
அதனைத் தொடர்ந்து ஆளும் சமூக கட்சித் தலைவராக ஆண்டர்சன் தெரிவுசெய்யப்பட்டார். இதனை அடுத்து அவரை பிரதமராக நியமிப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. 
 
இவருக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிராக 174 வாக்குகளும் கிடைத்ததுடன் 57 பேர் வாக்களிப்பை புறக்கணித்ததுடன் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. 
 
சுவீடனின் அரசியலமைப்பு விதிகளின்படி ஒருவர் பிரதமராகுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க தேவையில்லை. ஆனால் எதிராக 175 வாக்குகள் கிடைக்காமல் இருந்தால் அவர் பிரதமராகலாம். ஆண்டர்சனுக்கு எதிராக 174 வாக்குகளே கிடைத்ததால் அவர் பிரதமரானார். 

இதன் பின்னர் சிறிய கட்சியான கிரீன் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். ஆனால் இவர் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டம் தோல்வியடைந்ததால் கிரீன் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியது. 
 
பின்னர் ஆண்டர்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
அந்தவகையில் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்று சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை மக்டலேனா ஆண்டா்ச ஏற்பட்டுள்ளது.
சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! Reviewed by Irumbu Thirai News on November 28, 2021 Rating: 5
Powered by Blogger.