மாணவர்களுக்கு மாத்திரைகளை விநியோகித்த ஆசிரியர் கைது! பெருந்தொகையான மாத்திரைகளும் மீட்பு!

November 21, 2022


தரம் 4 முதல் 8 வரையான வகுப்பு மாணவர்களுக்கு விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களை கற்பித்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தடை செய்யப்பட்ட Pregabline 150mg என்ற மாத்திரையை களுத்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேச மாணவர்களுக்கு விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை குறித்த ஆசிரியரிடமிருந்து மேற்படி மாத்திரைகள் 1299 கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


ஏனையவை:
மாணவர்களுக்கு மாத்திரைகளை விநியோகித்த ஆசிரியர் கைது! பெருந்தொகையான மாத்திரைகளும் மீட்பு! மாணவர்களுக்கு மாத்திரைகளை விநியோகித்த ஆசிரியர் கைது! பெருந்தொகையான மாத்திரைகளும் மீட்பு! Reviewed by Irumbu Thirai News on November 21, 2022 Rating: 5

கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

November 20, 2022

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரின் தற்போதைய உரிமையாளரும் உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான இலோன் மஸ்க் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020இல் தற்காலிகமாக நீக்கப்பட்டது. 

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் கொள்வணவு செய்த பிறகு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்புகள் மீண்டும் பேசப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து மீண்டும் ட்ரம்பை இணைக்கலாமா வேண்டாமா என்று கருத்து கணிப்பை இலான் மஸ்க் நடத்தினார். அதில் 51.8% ஆனோர் டொனால்ட் டிரம்ப்பை மீண்டும் இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 

எனவே தற்போது சுமார் 22 மாதங்களின் பின்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஏனையவை:


கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்! கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்! Reviewed by Irumbu Thirai News on November 20, 2022 Rating: 5

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு!

November 20, 2022

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளதுடன் தொழுநோயானது பாடசாலை மாணவர்களிடையே பரவக்கூடிய அபாயமும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசார பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.   

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) வெளியிட்டுள்ள தகவல்களின் படி 95% ஆன மனிதர்கள் தொழுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் “இலங்கையில் 02 வகையான தொழுநோய்கள் பரவுகின்றன. அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. துரதிஷ்டவசமாக, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களில் 60% ஆனோர் தொற்றக் கூடிய நோய்த்தன்மையை கொண்டுள்ளமை வருந்தத்தக்கது” என்று மருத்துவர் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் 500க்கும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் அதிகரிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 20, 2022 Rating: 5
Powered by Blogger.