அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரின் தற்போதைய உரிமையாளரும் உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான இலோன் மஸ்க் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020இல் தற்காலிகமாக நீக்கப்பட்டது.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை இலோன் மஸ்க் கொள்வணவு செய்த பிறகு டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்புகள் மீண்டும் பேசப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மீண்டும் ட்ரம்பை இணைக்கலாமா வேண்டாமா என்று கருத்து கணிப்பை இலான் மஸ்க் நடத்தினார். அதில் 51.8% ஆனோர் டொனால்ட் டிரம்ப்பை மீண்டும் இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
எனவே தற்போது சுமார் 22 மாதங்களின் பின்னர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ட்விட்டர் கணக்கில் இணைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனையவை:
கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!
Reviewed by Irumbu Thirai News
on
November 20, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
November 20, 2022
Rating:


No comments: